ஏனோ ராதா, இந்தப் பொறாமை?

கல்வியாலும், கலாசாரத்தினாலும் பொறாமையின் ஒரு பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பண்பாடு, ஒன்றுமில்லாததிலிருந்தா பொறாமையைக் கொண்டு வந்திருக்கும்?நம் மனம் பதப்பட்டு, நம் கலவி இணையர் மற்றொருவருடன் கொள்ளும் உறவில் துன்பம் கொள்ளாமல், மகிழ்ச்சி அடைபவராக நாம் இருக்கிறோமா?அப்படிப்பட்ட பண்பாடுகள் இருக்கின்றனவா? உலகெங்கும் எல்லாப் பண்பாடுகளிலும் இணை வேறொருவரோடு கலவி செய்வது குறைந்த பட்சம் மனத் துன்பத்தைக் கொணராது இல்லை என்பது, இது பண்பாடுகளைத் தாண்டிய இயற்கை நியதி என்று காட்டவில்லையா?