துவாரகை வந்துள்ள யதியை பற்றிய நல்ல செய்திகளாக பலராமனின் காதுகளை எட்டுமாறு செய்தார் கிருஷ்ணர். இவர்களின் சதி ஆலோசனை பற்றி ஏதும் அறியாத பலராமனோ , யதியின் அறிவிலும் தேஜஸிலும் கவரப்பட்டு , சுபத்ராவின் தோட்டத்தில் தங்கவும், அவரது தேவைகளை கவனிக்கவும் சுபத்ராவை பணித்தான். இதற்கு கிருஷ்ணர் பலத்த எதிர்ப்பை தெரிவித்தார். இளம் வயதுடைய ஆணையும் பெண்ணையும் ஒன்றாக தங்க அனுமதிப்பது தவறு என அவர் சொல்ல, பலராமரோ கிருஷ்ணர் எதிர்பார்த்தவாறே அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
Category: மொழிபெயர்ப்புக் கதை
தொலைந்து போன பொருள்
முதலிரவன்று மனைவியுடன் முதன்முதல் சந்திப்பு ஏற்படும் முன்னர் சுதன்யா ஒரு சிட்டிகை பொடி உறிஞ்சி, தன நரம்புகளை சரியான நிலையில் வைக்க முயன்றிருக்கிறார். புது மனைவி ஹேமந்த பாலா முதன் முறையாக அருகில் வந்து மிகுந்த ஆச்சரியத்துடன் கேட்டாள். ‘நீங்கள் பொடி போடுவீர்களா?’ வெட்கமடைந்த சுதன்யா சொன்னார். ‘நடுநடுவே கொஞ்சம் போடுவேன்.’
ஒற்றைத் தலைவலி
இனிமேல் தொலைக்காட்சியே கூடாது. டீனாவை அமைதியாக இருக்கச் செய்யத்தான் ஜாய்ஸ் அதை வாங்கினாள், ஆனால் அது இனிமேல் தேவைப்படாது. அவள் தொலைவியக்கியை எடுத்தாள், பிக் அப் ட்ரக்குகளுக்கான விளம்பரத்தில் மீதிப் பகுதியைப் பார்த்தாள், பிறகு தொலைக்காட்சியை அணைத்தாள். வெற்றுத் திரை அவளுக்கு அசௌகரியமாக இருந்தது. ஏதோ அந்தத் திரை அவளைக் கண்காணிக்கிறது என்பதைப் போல இருந்து அவளை நிதானமிழக்கச் செய்தது. தொலைவியக்கியை தாழ் மேஜையில் வைத்தவள், மற்றப் பெட்டியைப் பிரிக்க ஆரம்பித்தாள்.
பழிவாங்கும் தீ – அம்பை
அந்த மாலையுடன் வலிமை மிகுந்த பல அரசர்களிடம் சென்று பீஷ்மரை தோற்கடிக்க உதவிக் கோரினாள். ஆனால் பீஷ்மரை பகைத்துக் கொள்ள எவரும் விரும்பாததால் அனைவரும் மறுத்துவிட, அம்பை துருபதனிடம் சென்றாள். துருபதனும் மறுத்துவிட, அவனின் அரண்மனை வாசலில் தாமரை மாலையை தொங்கவிட்டு காட்டுக்கு சென்றாள் அம்பை. அங்கே இருந்த சில முனிவர்கள் அவளை பரசுராமரை அணுகுமாறு கூற, பரசுராமரிடம் சென்றாள்
வக்கீலின் கடிதம்
அக்கம்பக்கத்தில் கரும்புத் தோட்டம் இருப்பதால் சிராஜ்ஜித்தௌலா சண்டையிட்ட யுத்தகளம் இப்பொழுது காடுமேடாகிக் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. அந்த மாம்பழத் தோட்டமும் இல்லை. இருந்தாலும் பலாஷி என்ற பெயர் மிகவும் சரித்திரப் புகழ் பெற்று விட்டது. ஸ்டேஷனுக்கு அருகே இந்த மீராபஜாரும் அந்தப் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது. கல்கத்தாவிற்கு நான்கு மணி நேர வழி லாங்கோலா பாசஞ்சரில். கேஷ்டநகர் போகாமல் நல்ல பொருள் கிடைப்பது மிகவும் கஷ்டம்.
மர பொம்மைகள்
“இல்லை, ஆனால் ஏன் மிக அற்புதமான அழகு என்று நீங்கள் சொன்னீர்கள்? அவை விற்பனைக்காக இல்லை. அவை என்றாவது ஒரு நாள் பயன்படலாம். என்னைப் பற்றி தெரியாதவர்கள் கையில் இந்த பொம்மைகள் கிடைக்கும் போது விலைமாதால் காட்சிப்படுத்தப் பட்ட பொருட்கள் என்று அவர்கள் அவற்றைப் பரிகாசம் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன்”
ஸ்கின்ஷிப் – பகுதி 3
என் தம்பி சி-ஓ இத்தனை வருடங்களாக மடக்கி வைத்திருந்த தன் பார்வையை முழுதுமாக என் அப்பாவை நோக்கித் திருப்பியதைப் பார்த்தேன். அது அவனுடைய அறையின் அந்தரங்கத்தில், அவனுடைய தன்னிறைவினுள் இருந்த வெற்றிடங்களில், கடினமான போராட்டத்தால் வெல்லப்பட்ட, ஒளிக்கப்பட்டிருந்த, இப்போது வெளிச்சத்துக்குள் இழுத்து வரப்பட்டு விட்ட ஒவ்வொரு சிறு பொருளையும் சேகரிக்க அவன் காட்டிய கட்டுப்பாட்டிலும் பொதிந்து இருந்து வெளியில் தெரியாமல் இருந்தது. எங்கள் அப்பா மீது முழு உணர்ச்சி வேகமும், குற்றச்சாட்டும், பழிசுமத்தும் நோக்கமும் கொண்ட ஒரு பார்வையை, முழுதுமாக அவன் திருப்பியதை நான் பார்த்தேன்
சிற்றின்பம் மற்றும் உணர்திறன்
விரைவிலேயே முதுமை அடைந்த யயாதி, தொடர்ந்து ஆட்சி செய்தான், இருந்தாலும் அவனது உணர்வுகளை அவனால் கட்டுப்படுத்த இயலவில்லை. எனவே அவனது ஐந்து மகன்களை அழைத்து ஒவ்வொருவரிடமும் தனது முதுமையை பெற்றுக் கொள்ள கூறினான். மேலும் அதற்கு ஈடாக அவன் முதுமையை ஏற்போரை அரசனாக்குவதாகக் கூறினான். அனைவரும் அதற்கு மறுத்துவிட, அவனின் இளைய மகன் புரு , தந்தையின் முதுமையை ஏற்றுக் கொள்வதாகக் கூறினான்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -1
இதைக் கண்ட ரிஷி ஆச்சர்யம் அடைந்து ”அழகான இளம் வாலிபன் நிர்வாணமாக நடந்தது உங்கள் உணர்வுகளை சீண்டவில்லை. ஆனால் முழுவதும் உடையணிந்த வயோதிகனான நான் வரும்பொழுது , வெட்கம் கொண்டு உங்களை மறைத்துக் கொண்டீர்களே.. இதற்கு விளக்கம் அளிக்க இயலுமா ” என வினவினார்.
கணப்பின் ஒளி
விலைச் சீட்டைக் குறி வைத்து நேராகப் போய்ப் பார்த்து, விலையை எப்படி ஏற்றி விட்டிருக்கிறார்கள் என்று சுற்றி இருப்பவர்கள் எல்லாருக்கும் கேட்கும்படி குறை சொல்லிக் கொண்டு தம் தலையை ஆட்டிக் கண்டனம் செய்வதை வழக்கமாகக் கொண்டவர்களும் விலைகளை ஒப்பீட்டில் சோதித்து வாங்குபவருமான சிலரைப் போன்றவர் இல்லை என் அம்மா. விலையைப் பற்றி அவருக்கு அப்படி ஒன்றும் அக்கறை இல்லை. அவரிடம் பணமும் இல்லை, ஆனால் அதை விட ஆழமானது ஒன்று இருந்தது அங்கு. அவர் பொருட்களைப் பார்வையிடுவதை விரும்பிச் செய்தார், ஏனெனில் கடைகளில் தான் இயல்பாக இருப்பதாக அவர் உணர்ந்தார்
வான வேடிக்கை
இந்த செய்தியை கேட்டு காலிதின் தந்தை மிகவும் கலக்கமடைந்தார். சில நாட்களாக நிலவும் வழக்கத்துக்கு மாறான அச்சமூட்டும் அமைதி, தலைக்கு மேல் எந்நேரமும் வட்டமிட்டுக்கொண்டிருக்கும் விமானங்கள், கடைவீதிகளில் ஆயுதம் ஏந்திய போலீசாரின் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள், மக்களின் கவலை ததும்பும் முகங்கள், ரத்த வேட்கையுடன் காத்திருக்கும் புயல் மேகங்கள், இவையெல்லாம் நடக்க கூடாத ஏதோ ஒரு விபரீதத்திற்கான முன் அறிகுறிகள் என்று அவர் திடமாக நம்பினார்.
தேவதைப் பருப்பொருளின் நெசவு
லியோ-எரிக் ஃபு ஹாங்காங்கிலிருந்து வந்திருக்கும் சுதந்திரப் போராட்டக்காரராக இருப்பாரோ என்ற ஐயத்துடன், பாட்ரிக் நிமிர்ந்து அவரைப் பார்க்கிறார். ஒரு கணத்துக்குப் பிறகு, இந்த ஊகச் சிந்தனையைத் தன் புத்திப் பக்கத்திலிருந்து அழித்து விடுகிறார். பெய்ஜிங்கிலிருந்து வருபவர் கூட சுதந்திரப் போராட்டக்காரராக இருக்கக் கூடும். ஒருக்கால் பாட்ரிக்தான் ஜனநாயக மனோபாவம் சிறிதும் இல்லாத மனிதராக இருக்கக் கூடும்.
விதைகளின் பயணம்
ஒரு முறை அவளின் தந்தை கூறிய விதைகளின் பயணம் நினைவில் வந்தது. வரண்ட பாலைவனங்கள் மற்றும் வளமான மண், வனப்பகுதிகள் வழியாக, பெருங்கடல்கள் மற்றும் ஆறுகள் வழியாக சென்டிமீட்டர்கள் அல்லது கிலோமீட்டர்கள் கணக்காக அவைகள் பயணிக்கின்றன. ஆனால், எல்லாமும் பிழைப்பதில்லை.
வாழ்க தலைவரே!
செவ்விந்தியர்களின் கசீனோவா? வடக்கு டகோடாவிலா? சரி. எத்தனை செனட்டர்கள்? பதிமூன்று? அவர்கள் நேற்றிரவு அங்கிருந்தார்களா? நீங்கள் சொல்வது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்தானா? அவர் குடித்திருக்கவில்லைதானே? அப்படியா, குடித்திருந்தாரா? சரி, இப்போது தாமதமாகி விட்டது. நான் அதிபரை அழைத்துத் தெரிவிக்கிறேன்.”
கருப்பு எஜமானி
இலக்கின்றி நடந்தாள்; தாழ்வாரம், அறைகள், சமையலறை என்று
எங்கும். ..கண்கள் பொறுமையின்றி கேட்டையே பார்த்துக் கொண்டிருந்தன,
அதற்கு அப்பாலும். சூரிய கதிர்கள் நடனமாடுகிற வயல் வெளியிலும்,
அதற்கு அப்பாலும், அவள் மனம் மட்டுமே போகிற இடமாய் ;
சிறுமியின் பாதங்கள் சிறு அடி எடுத்து வைக்கும் நடைபாதைக்கு
அப்பால், வேலிக்கு அப்பால் பரந்திருக்கும் வயல் வெளியில், தொலை
தூரத்தில் தன் மகள் நடந்து வருவதை பார்க்க முடிந்தால் எவ்வளவு
நன்றாக இருக்கும்.
ஐந்து நாற்பத்தி எட்டு
அவளுக்கு வேலைத் திறமை இருந்தது, நேரம் தப்பாது வந்தாள், நல்ல தட்டச்சாளியாக இருந்தாள், அவளிடம் அவர் ஒரே ஒரு விஷயத்தில்தான் குறை காண முடிந்தது – அவளுடைய கையெழுத்தில். அவளுடைய தோற்றத்தோடு அவளுடைய சீரற்ற கையெழுத்தை அவரால் பொருத்திப் பார்க்கவியலவில்லை. அவள் வட்டமான சாய்வெழுத்துகளில் எழுதுவாள் என்று எதிர்பார்த்திருந்தார், அவளுடைய கையெழுத்தில் ஆங்காங்கே அப்படிச் சில தடயங்கள் இருந்தன, ஆனால் அவை நேர்த்தியற்ற அச்சு வடிவ எழுத்துகளோடு கலந்து இருந்தன.
சந்திரஹாரம்
அம்மா என் தலை வீங்கும் அளவுக்கு என்னைத் திட்டித் தீர்த்தாள். “இப்போதே கழுத்து வரை கடனில் முழுகி உள்ளோம். இது வேறயா? பணம் கொடுத்து வாங்கினாலும், அது தெரியாதவர்கள் நாம்தான் பாட்டியின் சங்கிலியை பிடுங்கிக் கொண்டோம் என்பார்கள். நமக்கு எதற்கு இந்த அவப்பெயர்? நான் ஏன் சொல்கிறேன் என்று புரிந்து கொள்ளடா, சின்னா” என்றாள் அம்மா
ஹெட்மாஸ்டர்
கமலா பெட்ரூமைத் தாளிட்டு விட்டு படுத்திருந்தாள். சோர்வோடும்,
நடுக்கத்தோடும், சாவின் விளிம்பை உரசிவிட்டு வீடு திரும்பியிருந்த
அவருக்கு ஓர் அருமையான வரவேற்பைத்தான் அவர் மனைவி
தந்திருக்கிறாள். முழு இரவும் ஹாலிலேயே படுத்திருந்தார். அந்த
அமைதியான குற்றச்சாட்டு அவரை வறுத்தியெடுத்தது. அவருடன் பணி
புரியும் அந்தப் பெண்ணிற்கு உடல் நலமில்லை. நடுங்கிக் கொண்டிருக்கும்
அந்தப் பெண்ணை அவர் அணைத்தபடி அழைத்து வந்தார்
ஸ்ரீவாணி மேடம்
சுஜாதாவுக்கு எரிச்சலாக இருந்தது. இந்த தற்பெருமைக்கு ஒன்றும் குறைச்சலில்லை என்று நினைத்துக் கொண்டாள். அதை மறைத்துக் கொண்டு, “அன்றொருநாள் உன் வீட்டுக்கு போன் செய்தோம் அக்கா. அந்த நம்பரில் போன் எதுவும் இல்லை என்று பதில் வந்த்து. பாக்டரிக்கு போன் செய்தால் அங்கே மாமா இல்லை என்றார்கள். எங்கே போயிருக்கிறார்? உங்கள் போனுக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டாள் சுஜாதா.
ஈஸ்வர அனுக்ரஹம்
சிறிது காலம் முன்பு ஒரு சினிமா நடிகரை அழைத்து வந்தோம். வர போக செலவு, ஹோட்டலில் தங்குமிடம், அதைத் தவிர பணக் கவர் கொடுத்தோம் அவர் வந்து பெண்கள், பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று கூடப் பார்க்காமல் சீரழிந்த ஜோக்குகளைப் பேசினார். ஒவ்வொரு ஆண்டும் யார் யாரையோ அழைக்கிறோம். சன்மானம் செய்கிறோம்
நவதீப்
“உங்களுக்கு எந்த ஊர் தம்பி?” என்று கேட்டுக் களத்தில் புகுந்தாள் என் அக்கா. அவளுக்குக் கேள்வி கேட்கும் கெட்டப் பழக்கம் உண்டு. “எந்த ஊர்? எந்த ஜாதி? திருமணம் ஆயிற்றா? எத்தனை குழந்தைகள்? உடன்பிறந்தவர்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள்? என்று கேள்விக் கணைகளைத் தொடுத்தது வந்தவரை வாட்டுவது அவள் வழக்கம். எல்லோர் வீடுகளுக்கும் சென்று அவர்களின் விவரங்களைச் சேகரித்து அறிவுரை கூறி வருவாள். அப்படிச் செய்யாதே என்று சொன்னால் கேட்கமாட்டாள்.
பேரழகி ப்யூ
ஹாட்டெ, ஹோன்ஸ்,லெரிஷ், தங்கக் கடிகாரம் அணிந்த வியாபாரிகள், செல்வம் மிகுந்த பயணிகள், விடுமுறையில் வந்திருந்த போர்வீரர்கள், ஷெரிஃப் அலுவலக எழுத்தர்கள் என வெவ்வேறு சமூக அமைப்பைச் சார்ந்த ஆண்கள் எங்கள் தெரு வழியே கால் கடுக்க நடப்பதைக் காண முடியும். சீரான சிகை அலங்காரத்துடன் அன்ன நடையிடும் அந்தப் பேரழகு “தையல் கலைஞர்” நாநாவிடம் அவர்கள் தங்களுடன் நடனமாட, மாலைப் பொழுதைக் கழிக்க என அழைப்பதைக் காண முடியும்.
மேரா பாரத் மகான்
மணாலியில் இருந்து ரோஹ்தாங் பாஸ் வழியாக ‘லடாக் லெஹ்’ செல்லும் மார்க்கம் குளிர் காலத்தில் முழுமையாக பனியால் மூடப்பட்டிருக்கும். பிப்ரவரி மாத இறுதியில் பனியை நீக்கத் தொடங்கி ஏப்ரல் பதினைந்து தேதிக்குப் பிறகு மீண்டும் போக்குவரத்தை அனுமதிப்பார்கள். அதுமட்டுமின்றி, பியாஸ் நாலா வரை டூரிஸ்ட்டுகளை அனுமதிப்பார்கள் அங்கு வரை அனைவரும் வாகனங்கள் மீது சென்றால் தமக்கு வருமானம் இருக்காது
டெர்மினல்
ட்ராமின் ஜன்னல் கம்பிகளின் மீது கனத்த போர்வை போல தூசு படிந்திருந்ததில் நடைபாதையில் இருந்த மரம், விளக்குக் கம்பம் மற்றும் தெருவில் சென்று கொண்டிருந்த மனிதர்கள் எல்லாம் ஏதோ பழைய படத்தின் மீது படிந்திருக்கும் அழுக்கைப் போல வழுக்கியபடி மங்கலாகக் காட்சியளித்தார்கள். ஒவ்வொரு நிறுத்தத்திலும் சில பயணிகள் இறங்கினார்கள். நடத்துநர் மணி கட்டப்பட்டிருந்த கயிற்றை இழுக்கும்போதெல்லாம் ட்ராம் விக்கலுடன் முன்னால் சென்று நின்றது.
குங்கும பரணி
தேடல், பரிசோதனை இரண்டும் வேறுவேறானவை. புதிதாக ஒன்றை அறிவது தேடல். ஏற்கெனவே இருந்து மறைந்தவற்றை மீண்டும் கண்டுபிடிப்பது பரிசோதனை. இரண்டும் வேறுவேறான செயல்கள். இதுவரை யாரும் கண்டுபிடிக்காததை, யாரும் இதுவரை தொடாத ஒன்றை ஆராய்ந்து தெரிவிப்பது மனித இனத்திற்கு நவீன வெளிப்பாடாக இருக்கும்
வரிசையில் ஒரு சிநேகம்
தன் வாழ்க்கையைப் பற்றி இன்னும் கூட ஏதோ சொல்லிக் கொண்டே போனாள் தபலேய். இருவரும் தங்களுக்குள் ஏதேதோ பேசிப் பகிர்ந்து கொண்டிருந்தனர். பின்னால் நீண்டு தொடர்ந்து போய்க் கொண்டிருந்த வாகன வரிசையின் மீதும் ஒரு கண் வைத்தபடியேதான் இருந்தாள் சகி. இன்னும் நிறையப் பேர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கக் கூடும் என்றே அவளுக்குத் தோன்றியது.
குடியுரிமை 150 டன் எடைத் தொன்னில்
தோட்டாக்கள் துளைத்து இடிந்து போன சுவரின் மறைவில் சிறிதுகாலம் முன்புதான் யாரோ பயன்படுத்தியிருந்த தரையில் நான் சிறுநீர் கழித்தேன். பாதி அழிந்த ஒரு அரிசிமாவுக் கோலம் இருந்தது. அதன் மீது படிந்திருந்த கறை அநேகமாக இரத்தமாகத் தான் இருக்கவேண்டும். அதன் மீது போக சங்கடப்பட்டு சிறிது நேரம் தயங்கியதும் ‘சீக்கிரம்’ என துரிதப்படுத்தினார் கணவர். இடம் மாறி அமரக்கூட அவர் அனுமதிக்கவில்லை. இடிந்த சுவர்களுக்கும் ஜன்னல்கள் கழன்ற இடைவெளிகளுக்கும் ஊடாக வெளியே இருந்து பார்த்தால் தெரியாத அப்படியான ஒரு மறைவிடம் வேறு இருக்கவில்லை.
குவாரண்டீன்
உயரத்தில் தீச்சுவாலைகள் மாலை நேரத்தின் ஆரஞ்சு நிறம் கலந்த அடிவானத்துடன் கலக்கும் போது, இன்னும் அரைகுறை உயிருடன் இருந்த நோயாளிகள், ஏதோ உலகமே தீப்பற்றி எரிகிறதோ என்று நினைத்தார்கள். குவாரண்டீன் இப்படி மேலும் பல மரணங்களுக்குக் காரணமாக இருந்தது. ஏனென்றால் வலுக்கட்டாயமாக குவாரண்டீன் மையத்தில் அடைக்கப்படும் அச்சத்தினால் மக்கள் தங்கள் நோயின் அறிகுறியை யாருக்கும் சொல்லாமல் மறைக்கத் தொடங்கினார்கள்.
வேட்டை நாய்
முதுகிலும், கைகளிலும் பட்டிருந்த காயங்களின் வலிக்கடுமை பிரெலைப் பாதித்துக் கொண்டிருந்தது. அவர்கள் அவனை வலுவாகத் தாக்கி அடித்துப் போட்டுவிட்டுப் போயிருந்தார்கள். அவனோ ஒரு முட்டாளைப்போல் இங்கே நின்று கொண்டு தன் பிரச்சினைகளுக்கு மிக எளிதான ஒரு பதிலை யோசித்துக் கொண்டிருக்கிறான். தனது அம்மாவும் தங்கையும் வாத்துகளை விட முக்கியமில்லாதவர்களாக மாறிவிட்டிருக்கிறார்களா என்ன?
என் குழந்தைகளின் புகைப்படங்கள்
‘‘எங்கேதான் இருப்பாங்க அவங்க? ஏன் இவ்வளவு நேரம் ஆகுது? வெளியே போயிட்டா போதும், எப்ப திரும்பி வரணுங்கிறதே அவருக்குத் தெரியாது’ என்று கணவரை மனதுக்குள் குறை சொல்லிக் கொண்டிருக்கிறாள் அவள். எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்தபடி கதவருகே உட்கார்ந்து அவர்கள் எப்போது வருவார்கள் என்று தன் விழிகளால் துருவிப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
இறுதி சல்யூட்
தங்கள் கிராமத்தைப் பற்றியும், இருவரும் சேர்ந்து விளையாடிய குழந்தைப் பருவ விளையாட்டுக்கள் பற்றியும், பள்ளியில் பரிமாறிக் கொண்ட கதைகள் பற்றியும், 6/9 ஜாட் ரெஜிமெண்ட் பற்றி, அதன் தலைமை அதிகாரிகள் பற்றியும், விசித்திரமான பல நகரங்களில் அவர்கள் இருவரும் ஒன்றாகப் போய் உறவு கொள்ள நேர்ந்த விசித்திரமான பெண்கள் பற்றியும் பேசிக்கொண்டே இருந்தான். இடையில் கடுமையான வலியால் பேசுவதை நிறுத்தி உரக்கக் கதறினான்.
உள்ளும் வெளியும்
கே ஃபாரஸ்ட் ஒரு நாள் அம்மாவுடன் அமர்ந்திருக்க வந்தாள், அன்று ஹாம்பிள்டனின் அங்காடிக்கு ஜில்லியால் போக முடிந்தது, அப்போது பில்லி வைஸ்லரின் பட்டறை வழியே போனாள், அவரிடம், பொழுது போக்காக ஏதும் பொருள் செய்ய, என்ன வகைக் களிமண்ணை வாங்கலாம் என்று கேட்டாள். நம்ப முடியாதபடி கனமாக இருந்த சிறு காகிதப் பையை பில் அவளிடம் கொடுத்தார், அதில் உலர்ந்த சன்னமான பொடி மண் இருந்தது. களிமண்ணுக்கான இரண்டு கத்திகளையும், ஒரு பழைய சுழல் மேடையையும் கொடுத்தார், அவள் எது செய்தாலும் அதை அவருடைய சூளையில் சுட்டுக் கொள்ளலாம் என்றார், அவர் அதை ‘சுளை’ என்று உச்சரித்ததை அவள் கவனித்தாள், ஆனால் தடிமனான உருக்களின் உள்புறத்தைச் சுரண்டி வெறும் இடமாக்க வேண்டும், இல்லையேல் அவை சூளையின் வெப்பத்தில் வெடித்துச் சிதறும் என்றும் சொல்லிக் கொடுத்தார்
பிரசவ வரிகள்
படுக்கையருகே உள்ள சிறு மேஜைமீது உலர்ந்த கண்ணாடிக் கோப்பை இருந்தது, இரண்டு வறண்ட ரொட்டித் துண்டுகள் இருந்தன. அவள் தன் உதடுகளை உறிஞ்சினாள் – தடித்து, வெடித்திருக்கும் கீழ் உதடு முதலில், பிறகு மேல் உதடு – தன் கோரைப்பற்களால் அவற்றைப் பிடித்து மெலிதான உலர்ந்த தோலை உரிக்கிறாள். அவள் நாறிக் கொண்டிருக்கிறாள் – வேறெப்படி இருக்கும், அவளுடைய இரவாடைகளின் கீழேயிருந்து உடல் மாமிசத்தின் வாடை மேலெழுந்து வருகிறது, பாதங்களில் அழுக்கு படலமாக ஒட்டியிருக்கிறது. படுக்கையின் மேல் விரிப்புக்குக் கீழே, அரிப்பெடுக்கிற ஒரு குதிகாலை இன்னொரு காலின் நுனிவிரல்களால் சொரிகிறாள், அழுக்கு அவள் கால் நகங்களின் அடியில் சுருள்கிறது.
முது மது (நாட்படு தேறல்)
சாண்ட்ரா விழுங்குவதற்குச் சில கணங்கள் எடுத்துக் கொண்டாள். “இல்லைதான், உங்களிடம் இருப்பது ஜனங்களே பிரச்சினைகளாக இருந்தாலும், அவர்கள் தங்கள் பிரச்சினைகளிலிருந்து ஓடிப் போக வழி செய்வது.”..டாக்டர் கோல் அசைவின்றி அமர்ந்திருந்தார், … “ஆமாம், அது ஒரு பெரும் பங்கு இதிலெல்லாம். நாம் ஒரு பெரிய சிக்கலை உருவாக்கி விட்டு, அதன் விளைவுகளைச் சந்திக்காமல் அவற்றிலிருந்து பறந்து போய் விட முடியாது. கடிகாரத்தைத் திரும்பி வைத்து, நிஜ வாழ்வில் ஏற்பட்ட சேதங்களை மற்ற மனிதர்கள் மீது சுமத்த முடியாது. நீ இதைச் சரியாகப் பிடித்து விட்டாய்.”
தம்பதிகளின் முதல் கலகம்
லலிதா! உன்னை சமர்த்திசாலி என்று நினைத்தேன். ஆனால் இப்படிப்பட்ட பைத்தியக்காரி என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. உன் முட்டாள் தனத்திற்குத் தகுந்த பிராயசித்தம் அனுபவிக்காமல் போக மாட்டாய். இப்போதைய தகராறில் தப்பெல்லாம் என் பேரனுடையது தானா? அல்லது உன் தப்பு ஏதாவது உள்ளதா? உனக்கு உன் சுதந்திரம் பற்றித் தெரிந்த அளவுக்கு உன் கடமை பற்றி தெரிந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். கடமையை உணர்ந்தவர்கள் இப்படிப் பேசவே மாட்டார்கள். அவன் எத்தகைய கோபக்காரன் ஆனாலும் நீ உன் சாந்த சுபாவத்தால் அவனுடைய தாமச குணத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும்
காட்டு மல்லி
அன்று இரவு சிவநாதத்திற்கு நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை. இந்த ஊருக்கு வந்த மூன்று ஆண்டுகளில் ஆபீஸில் வேலை அதிகமானாலும் ஆபீஸர் திட்டினாலும் வீட்டில் சச்சரவுகளின் அழுத்தம் அதிகமானாலும் அந்த ஏரிக்கரைக்குச் சென்று மணிகணக்காக படுத்துக் கிடப்பதில் எல்லாவற்றையும் மறந்து போவான். அந்த ஏரிக்கரையை பார்த்த உடனேயே மனது அமைதியாகிவிடும். ஆனால் அவனுடைய அந்தராத்மா அவனைத் திருப்பி கேள்வி கேட்டது. “உனக்கு மனசாந்தி அளித்து கவலையை நீக்கியது குருவனின் குடும்பம். அவர்களுடைய மனப்பொருத்தமும் அவர்கள் திருப்தியோடு ஒருவர் மேல் ஒருவர் கொண்ட அன்பும் உனக்கு மிகப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது அல்லவா?” என்று அவனை விமரிசித்தது.
பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள்
மறுபடியும் இசை மாறியது. ஏதோ முற்றிலும் புதியதாக – எளிமையானதாகவும், களிப்பூட்டுவதாகவும்- உருமாறியது. அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டதைப் பார்த்து ஸோர்கின் குதூகலித்ததாகத் தெரிந்தது. “பிகாஸ் த வோர்ல்ட் ஈஸ் ரௌண்ட், இட் டர்ன்ஸ் மீ ஆன்,” என்று பாடினார், ஆனால் அவர் பாடியது மோசமாக இருந்தது. “பிகாஸ் த விண்ட் ஈஸ் ஹை, இட் ப்ளோஸ் மை மைண்ட்.”….“இது பீட்டில்ஸ்! யோகோ ஓனோ ஒரு நாள் ‘மூன்லைட் ஸோனாட்டா’வை வாசித்துக் கொண்டிருந்தார், ஜான் லென்னன் சொல்கிறார்: எனக்கு அந்தச் சுர வரிசையைத் தலைகீழாக் கொடு!”
கயோட்டீ கதைகள்
“வெறும் கதைகள். நீ, நான், எல்லாரும், நாமெல்லாம் கதைகளின் ஒரு கூட்டம், அந்தக் கதைகள் என்னவாக இருக்கின்றனவோ அதெல்லாம்தான் நாமாக இருக்கிறோம். பழங்குடிகளைப் போலவேதான் வெள்ளையருக்கும். ஒரு பழங்குடிச் சமூகத்துக்கும், நகரத்துக்கும், நாட்டுக்கும், உலகத்துக்குமே இதேதான் பொது. இந்தக் கதைகள் எல்லாமாகச் சேர்ந்து, எப்படிப் பின்னிச் சேர்கின்றனவோ அதெல்லாம்தான் நாம் யார், என்ன, எங்கே எப்படி இருக்கிறோம்னு சொல்லுதுங்க.”
“மறக்கிறத விட்டுட்டு நினைவுபடுத்திக்க ஆரம்பிக்கணும் நாமெல்லாம். இது வேணும், அது வேணுமின்னு கேட்கறதை நிறுத்தணும், நமக்கு வேணுமுன்னு நாம நினைக்கிறதை ஜனங்க நமக்குக் கொடுப்பாங்கன்னு காத்திருக்கறதை நிறுத்தணும். நமக்குத் தேவையானதெல்லாம் கதைங்கதான்.
தந்திரக்கை – பாகம் 3
அவள் கல்லூரியில் படிக்கப் போய், திருமணம் செய்து, ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் -அல்லது கட்டுப்பாடுகளுக்கு எந்த விருப்பமும் இல்லாமலும், அதன் பெரும் பகுதியில் ஒரு கட்டுப்பாடும் இல்லாமலும், குடும்பவாழ்வில் அமிழ்ந்து போன, அந்த நகரின் முதல் எல்லைப்புற புற நகர்களைக் கடந்தபோது விடிகாலை ஆகி இருந்தது. நகரம் அசைவற்று முன்னே கிடக்கும் நகைகளைப் போல இருந்தது, எப்போதோ ஒரு சமயம் பொலீஸ் சைரன் ஒலியும், தீயணைப்பு வண்டிகளின் ஆரவாரமும், நாய்களை ஓலமிடச் செய்தன. அவள் தன் வீட்டு நிறுத்துமிடத்தில் ப்யூயிக்கை நிறுத்தினாள், வீடு அப்படிக் கைவிடப்பட்டதான, அவாந்தரமான தோற்றம் அளித்ததைக் கண்டு துணுக்குற்றாள். நீ காணாமல் போனபோது, உன்னைத் தொடர்பு கொள்ள ஒரு வழியும் வைக்காதபோது, என்ன ஆகுமென்று நினைத்தாய்? அவள் கதவைத் திறக்க முயற்சிக்கவில்லை, ஆனால் அங்கேயே சிறிது நேரம் நின்றாள்
தேன் கூடுகளின் வீடு
என் வீட்டின் மேற்புறம் துண்டுகளாய் இருந்த கரடுமுரடான புல்வெளிகளில் என் ஆடுகளை மேய விட்டிருக்கிறேன். அதிகாலையில் முயல்களை வாசனை பிடித்தபடி சில நாய்கள் கடந்து போகும். நான் அவற்றைக் கல்லெறிந்து துரத்துவேன். நான் நாய்களை வெறுக்கிறேன், மனிதனிடம் அவை காட்டும் சுயமரியாதையற்ற நன்றியுணர்வையும் சேர்த்து. எல்லா வீட்டுமிருகங்களையுமே நான் வெறுக்கிறேன். பிசுபிசுப்பான தட்டுகளில் மீந்து போனவற்றை நக்குவதற்காக அவை மனிதனிடம் காட்டும் போலித்தனமான கருணையையும் வெறுக்கிறேன். ஆடுகள் மட்டுமே என்னால் சகித்துக் கொள்ளக் கூடிய விலங்குகள். அவை மனிதனிடம் நெருக்கத்தை எதிர்பார்ப்பதும் இல்லை. கொடுப்பதும் இல்லை.
தந்திரக் கை – 1
சவ அடக்க நிகழ்ச்சி இருந்தது- அவள் இருந்தாள், ஆனால் அங்கே இல்லை- மேலும் பொலீஸ்காரர்கள், பிறகு ஒரு வழக்கறிஞர்; ஆலனின் சகோதரி எல்லாவற்றையும் நிர்வகித்திருந்தாள், எப்போதும் போல, தலையிடுவதே வழக்கமாகக் கொண்டிருந்த அந்தக் கடங்காரிக்கு இந்த ஒரு முறை அவள் உண்மையில் நன்றியுணர்வு கொண்டாள். அதெல்லாம் இப்போது மிகத் தொலைவாகி இருந்தன, நன்றியுணர்வும், பழைய வெறுப்புணர்வும் எல்லாம், ஒரு கணம் கட்டுப்பாடு இழந்து மூடிக் கொண்ட, அந்தப் பையனின் கண்ணிமைகளால் ஒன்றுமில்லாதவையாக ஆகிப் போயின.
ஒரு இயற்பியலாளரைக் காதலித்துக் கலப்பதெப்படி?
ஒரு கருப்பினப் பெண்ணாக, வழக்கமாக இத்தகைய மாநாடுகளில் செய்வதைப் போலவே, நீங்கள், அங்கு வந்திருக்கும் நீக்ரோக்களை எண்ணும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நூறு பேர்களுக்கும் மேலானவர்கள் குழுமியிருக்கும் அந்த மாநாட்டில், அவர் பன்னிரண்டாம் நபர். மாநாட்டின் முதல் நாளன்று, நகரும் படிப் பாதையில் நீங்கள் மேலேறிச் சென்று கொண்டிருக்கும் போது, அவர் கீழே இறங்கிக் கொண்டிருப்பதை கவனிக்கிறீர்கள். எந்த சுருக்கப் பெயரால் அவரை அடையாளப் படுத்தலாம் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள். அவரது சிறிய குச்சி முடி, “கவிஞர்” அல்லது “உயர்நிலைப்பள்ளி கணக்காசிரியர்” என்னும் இரு அடையாளங்களுமே, அவருக்கு சமமாக பொருந்துவதாக எண்ண வைக்கிறது.
எரியும் காடுகள்-3
என் துப்பாக்கி ரவைகளை நான் திரும்ப அடைந்து விட்டேன். என்ன பெரிய சாதனை இது? என்னிடம் துப்பாக்கி கூட இல்லை.
கதவருகே நான் போக சில எட்டுகள் இருந்தன, அப்போது ஏதோ ஒன்று என் கண்களில் தென்பட்டது. அது கணப்பிடத்தின் மேலே இருந்த மேல் மூடியின் மீதிருந்தது. அந்த கணப்படுப்பிலிருந்து நேற்றைய சாம்பல்கள் சுத்தமாக அகற்றப்பட்டிருந்தன.
நான் அதை உற்றுப் பார்த்தேன், அப்படியானால், ரால்ஃபின் நடத்தை நேற்று திடீரென்று மாறியதற்கும், அந்தத் துப்பாக்கி ரவைகளிருந்த பைக்கும் ஒரு தொடர்பும் இருக்கவில்லை.
மல்லிகா ஹோம்ஸ்
சென்னை மாதிரியான நகரங்களிலிருந்து வருகிற என்னைப் போன்ற நகரவாசிகளுக்கு, கொஞ்சம் தனிமைப்படுத்தப்பட்டதாகத் தோன்றியது. கோயம்புத்தூருக்கு வெளியே, தம்பூர் சாலையும், தேசிய நெடுஞ்சாலை 181ம், சந்திக்குமிடத்தில், மல்லிகா ஹோம்ஸ் அமைந்துள்ளது. நடுவாந்தரமான நகரத்தை விட்டகன்று, அதன் புறநகர் பகுதிகளுக்குச் சென்றதில், மல்லிகா ஹோம்ஸை உருவாக்கியவர்களுக்கு அதிக இடம் கிடைத்த காரணத்தினால், நாங்கள் பெரிதும் பாராட்டுகிற பல வசதிகளில் அவர்களால் முதலீடு செய்ய முடிந்தது
எரியும் காடுகள் – 2
துடுப்பு என் மடியில் பத்திரமாக இருப்பதை உறுதி செய்து கொண்டேன், மிச்சமிருந்த சாண்ட்விச்சை வெளியே எடுத்தேன். ஒரு துண்டு விடாமல் எல்லாவற்றையும் சாப்பிட்டேன், பின்னர் அதைச் சுற்றி வந்த மேல் காகிதத்தைப் பயன்படுத்தி, பனித் துகளைச் சேகரித்து அதை வாய்க்குள் திணித்துக் கொண்டு சாப்பிட்டேன். நான் ஏற்கனவே நிறைய வியர்த்திருந்தேன், பசியை விட உடலில் நீரிழப்பு என்பது மோசமாகப் பாதிக்கும், நான் இருக்கும் இடத்தை உத்தேசித்தால் அப்படி நடப்பது அங்கதச் சுவை கொண்டதாகத்தான் இருக்கும். ஏரித்தண்ணீர் குடிக்கக் கூடியதாக இருந்திருக்கும், ஆனால் நான் ஏற்கனவே வேண்டுகிற அளவு ஆபத்தை மேற்கொண்டிருந்தேன்.
எரியும் காடுகள் – 1
நான் அங்கே இருந்து மூன்று வாரங்கள் ஆனபின்னரே அவர் அந்தத் தீவைப் பற்றிச் சொன்னார், என் கணக்கில் நாங்கள் உரையாடியதில் அது மூன்றாவது அல்லது நான்காவது தடவையாக இருக்கும். முதல் சில நாட்களுக்கு அவர் என்னை அணுகாமல் என் போக்கில் இருக்க விட்டார். அந்த ஓய்வு வாசஸ்தலத்தில் (அப்படி ஒரு வர்ணிப்பு பழைய காலத்து அர்த்தத்தில்தான் அந்த இடத்துக்குப் பொருந்தும். அது எங்கோ மலைகளடர்ந்த, எட்டாக்கையான ஒரு பிரதேசத்தில் இருக்கும், பாசி படர்ந்த, பழைய சிறுகுடில்களின் தொகுப்பாக இருந்தது) நான் சேர்ந்தபோது குளிராக, இருண்ட, மிக நேரமாகி விட்ட பின்மாலைப் பொழுதாக இருந்தது.
பிரம்மாஸ்திரம்
’’ஏன் உன்னாலே அது முடியாது?’’ என்றபடி கோபத்தோடு அவளைப் பார்த்து முகம் சுளித்தான் அவன்.
’’உன்னோட கௌரவம் பாழாப் போயிடும்னு நினைக்கிறே அப்படித்தானே? ஹ்ம்…கௌரவம் ! இன்னும்கூட அப்படி இங்கே ஏதாவது மிச்சம் இருக்கா? நம்மளை சுத்தி என்ன நடக்குதுன்னு உனக்குத் தெரியுதா இல்லியா? நம்ம வீடு எப்படி இருக்கு, குழந்தைங்க நெலைமை எந்த மாதிரி இருக்குங்கிறதெல்லாம் உன் கண்ணிலே படுதா இல்லியா?’’
ஓஷிமா தன்னைச் சுற்றிலும் ஒரு முறை இலக்கின்றி வெறித்துப் பார்த்தாள். வீட்டு நிலவரம்,குழந்தைகள் படும் பாடு இதையெல்லாம் சுற்று முற்றும் பார்த்துத்தானா அவள் விளங்கிக்கொள்ள வேண்டும்?
ஸர்கம் கோலா
குளிர்காலத்தில், சூரியன் மிக விரைவாக அஸ்தமித்துவிடும். மிருதுவான கம்பளித் துணிகளைத் தழுவியபடி, உற்சாகம் தரும் காற்று, கலைக்கூடங் களையும், அரங்குகளையும் நிறைத்திருக்கும். அக்காற்றில் கலந்திருக்கும் மணம், ஆண்மையற்றவர்களை, ஆண்மை நிறைந்தவர்களாகவும், ஆண்மை மிகுந்தவர்களை ஆண்மை குறைந்தவர்களாகவும் மாற்றும் வல்லமை படைத்தது. மக்கள் கலைகளிலும் கலாச்சாரத்திலும் மூழ்கிக் கிடப்பார்கள். கலாச்சாரமும் கலைகளும் மக்களுக்குள் நிறைந்து ததும்பும்.
இயற்கைப் பரிமாற்றம்
அவளுடைய பிரத்தியேகமான படுக்கையறை கதவுக் குமிழில் தொங்கிக்கொண்டிருந்த தோள் பையில், அவள் அன்றைய காலை வேட்டையில் கண்டெடுத்த பொருட்களை வைத்தாள். தோள் பையில் அவளது மகன் நீல் கண்டெடுத்த பொருட்களின் கணிசமான ஒரு பகுதியும் இருந்தன. மற்றவை அவளுடைய பெட்டிகளில் இருந்தன. அவளும் மிஷலும் பிரிவதற்கு முன்பு, அந்தப் பை அவர்களுடைய படுக்கை அறையின் கதவுக்குமிழில் தொங்கிக் கொண்டிருக்கும். அதன் கனத்தில், ஒருநாள், கதவுக்குமிழ் உடைந்து கையோடு வந்துவிடப் போகிறது என்று மிஷல் அடிக்கடி புலம்பிக் கொண்டிருப்பான. ஆனால் அப்பையை அங்கிருந்து அகற்றும்படி அவளிடம் ஒருபோதும் சொன்னதில்லை.
இருள்
வந்ததும், வழக்கம் போல, பானோ என் நெற்றியின் மீது கை வைத்துப் பார்த்தாள். அவளுடைய கை சில்லென்று இருந்தால், இன்னும் காய்ச்சல் இறங்கவில்லை என்று எனக்கு தெரிந்து விடும்.ஆனால், கை வெதுவெதுப்பாக இருந்தால் காய்ச்சல் இல்லை என்று என் மனம் உற்சாகமடையும். கண்களைத் திறந்து ஆர்வத்துடன் கேட்பேன,” பானோ நான் குணமடைந்து வருகிறேன் இல்லையா?” ஏமாற்றம் நிறைந்த குரலில், “இப்போது கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஆனால், மாலைக்குள் மறுபடியும் அதிகமாகிவிடும்” என்பாள்.
