ஒரு கருப்பினப் பெண்ணாக, வழக்கமாக இத்தகைய மாநாடுகளில் செய்வதைப் போலவே, நீங்கள், அங்கு வந்திருக்கும் நீக்ரோக்களை எண்ணும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நூறு பேர்களுக்கும் மேலானவர்கள் குழுமியிருக்கும் அந்த மாநாட்டில், அவர் பன்னிரண்டாம் நபர். மாநாட்டின் முதல் நாளன்று, நகரும் படிப் பாதையில் நீங்கள் மேலேறிச் சென்று கொண்டிருக்கும் போது, அவர் கீழே இறங்கிக் கொண்டிருப்பதை கவனிக்கிறீர்கள். எந்த சுருக்கப் பெயரால் அவரை அடையாளப் படுத்தலாம் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள். அவரது சிறிய குச்சி முடி, “கவிஞர்” அல்லது “உயர்நிலைப்பள்ளி கணக்காசிரியர்” என்னும் இரு அடையாளங்களுமே, அவருக்கு சமமாக பொருந்துவதாக எண்ண வைக்கிறது.