என் வீட்டின் மேற்புறம் துண்டுகளாய் இருந்த கரடுமுரடான புல்வெளிகளில் என் ஆடுகளை மேய விட்டிருக்கிறேன். அதிகாலையில் முயல்களை வாசனை பிடித்தபடி சில நாய்கள் கடந்து போகும். நான் அவற்றைக் கல்லெறிந்து துரத்துவேன். நான் நாய்களை வெறுக்கிறேன், மனிதனிடம் அவை காட்டும் சுயமரியாதையற்ற நன்றியுணர்வையும் சேர்த்து. எல்லா வீட்டுமிருகங்களையுமே நான் வெறுக்கிறேன். பிசுபிசுப்பான தட்டுகளில் மீந்து போனவற்றை நக்குவதற்காக அவை மனிதனிடம் காட்டும் போலித்தனமான கருணையையும் வெறுக்கிறேன். ஆடுகள் மட்டுமே என்னால் சகித்துக் கொள்ளக் கூடிய விலங்குகள். அவை மனிதனிடம் நெருக்கத்தை எதிர்பார்ப்பதும் இல்லை. கொடுப்பதும் இல்லை.
ஆசிரியர்: இடாலோ கால்வினோ
நூலகத்தில் ஒரு தளபதி
விசாரணைக் குழுவின் மாலை நேர அறிக்கையில் பரிசீலிக்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது. ஆனால் இப்போது அந்த எண்ணிக்கையில் இவை நல்லவை இவை கெட்டவை என்ற பாகுபாட்டுக் கணக்குகள் இருக்கவில்லை. பெடீனாவின் முத்திரை ஒய்வெடுத்துக்கொண்டிருந்தது. சில சமயம் தன் துணையதிகாரியின் வேலையை சரி செய்யும் போது “இந்தக் கதையில் தவறேதும் இல்லை என்று எப்படி முடிவெடுத்தீர்கள்? இது படைவீரர்களை அதிகாரிகளைவிட சிறந்தவர்களாகக் காட்டுகிறது ! இந்த ஆசிரியருக்கு அதிகாரக் கட்டமைப்பின் மேல் மரியாதை இல்லை” என்று …
கருங்காலி
எல்லோரும் மகிழ்ச்சியாக ஒன்று கூடி வாழ்ந்தனர். ஓருவர் அடுத்தவரிமிருந்து அடுத்தவர் அவருக்கு அடுத்தவரிடமிருந்து அவருக்கு அடுத்தவர் அவருக்கு அடுத்தவரிடமிருந்து, கடைசியிலிருந்தவர் முதலிலிருந்தவரிடமிருந்துமாக திருடியதால் யாரும் தோற்கவில்லை. விற்பவரும் வாங்குபவரும் ஏமாற்றுவதென்பது வியாபாரத்தில் தவிர்க்க முடியாததாயிற்று. அரசாங்கம் குடிகளிலிருந்து திருடும் ஒரு குற்ற அமைப்பாய் செயல் பட்டது. குடி மக்களும் அரசாங்கத்தை ஏமாற்றுவதையே குறியாய் கொண்டிருந்தனர். ஏழைகள் என்றும் பணக்காரென்றும் எவரும் இல்லாததால் வாழ்க்கை அமைதியாக சென்றுகொண்டிருந்தது.