தந்திரக்கை – பாகம் 3

This entry is part 3 of 3 in the series தந்திரக் கை

அவள் கல்லூரியில் படிக்கப் போய், திருமணம் செய்து, ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் -அல்லது கட்டுப்பாடுகளுக்கு எந்த விருப்பமும் இல்லாமலும், அதன் பெரும் பகுதியில் ஒரு கட்டுப்பாடும் இல்லாமலும்,  குடும்பவாழ்வில் அமிழ்ந்து போன, அந்த நகரின் முதல் எல்லைப்புற புற நகர்களைக் கடந்தபோது விடிகாலை ஆகி இருந்தது. நகரம் அசைவற்று முன்னே கிடக்கும் நகைகளைப் போல இருந்தது, எப்போதோ ஒரு சமயம் பொலீஸ் சைரன் ஒலியும், தீயணைப்பு வண்டிகளின் ஆரவாரமும், நாய்களை ஓலமிடச் செய்தன. அவள் தன் வீட்டு நிறுத்துமிடத்தில் ப்யூயிக்கை நிறுத்தினாள், வீடு அப்படிக் கைவிடப்பட்டதான, அவாந்தரமான தோற்றம் அளித்ததைக் கண்டு துணுக்குற்றாள். நீ காணாமல் போனபோது, உன்னைத் தொடர்பு கொள்ள ஒரு வழியும் வைக்காதபோது, என்ன ஆகுமென்று நினைத்தாய்?  அவள் கதவைத் திறக்க முயற்சிக்கவில்லை, ஆனால் அங்கேயே சிறிது நேரம் நின்றாள்

தந்திரக் கை – 2

This entry is part 2 of 3 in the series தந்திரக் கை

ஆனால் சிங்கங்களும் சரி, மிருகக் காட்சி சாலையும் சரி, அவளுக்குக் காண முடியவில்லை. அவள் தொலையவில்லை, இல்லவே இல்லை, ஒரு நிமிஷம் கூட இல்லை. அவள் சூரியஒளியில் சிரித்தபடி, வழியில் அவளை நோக்கிக் குதித்து வந்த நாய்களைக் கொஞ்சியபடி, நடந்து போய்க் கொண்டு மகிழ்வாக இருந்தாள். நாய்களின் சொந்தக்காரர்கள் அவளுடைய பெற்றோர் எங்கே என்று கேட்டால், அவள் போகிற திக்கில் உறுதியாகச் சுட்டி, ‘அதோ, அங்கேதான்,’ என்று சொல்லி விட்டு, அவர்கள் அதைப் பற்றி ஏதும் யோசிக்கு முன்னர், சிரித்தபடி மேலே நடந்து போனாள். ஒவ்வொரு கிளை பிரியும் சாலையிலும், அவள் நின்று கவனமாகக் கேட்பாள், என்ன ஒலி கேட்டாலும் அது சிங்கங்களெழுப்பும் ஓசை என்று எடுத்துக் கொண்டு போனாள். ஆனால் சிங்கங்கள் இருக்குமிடம் கிட்டே வரும்பாடாக இல்லை. அது கடைசியில் மிக எரிச்சலூட்டுவதாக ஆயிற்று.

தந்திரக் கை – 1

This entry is part 1 of 3 in the series தந்திரக் கை

சவ அடக்க நிகழ்ச்சி இருந்தது- அவள் இருந்தாள், ஆனால் அங்கே இல்லை- மேலும் பொலீஸ்காரர்கள், பிறகு ஒரு வழக்கறிஞர்; ஆலனின் சகோதரி எல்லாவற்றையும் நிர்வகித்திருந்தாள், எப்போதும் போல, தலையிடுவதே வழக்கமாகக் கொண்டிருந்த அந்தக் கடங்காரிக்கு இந்த ஒரு முறை அவள் உண்மையில் நன்றியுணர்வு கொண்டாள். அதெல்லாம் இப்போது மிகத் தொலைவாகி இருந்தன, நன்றியுணர்வும், பழைய வெறுப்புணர்வும் எல்லாம், ஒரு கணம் கட்டுப்பாடு இழந்து மூடிக் கொண்ட, அந்தப் பையனின் கண்ணிமைகளால் ஒன்றுமில்லாதவையாக ஆகிப் போயின.