‘திதி’ – கன்னடத் திரைப்படம் குறித்து

கி.ரா – வின் ஒரு கரிசல் நாவலை படித்து முடித்த ஒரு மனம் நிறை உணர்வு ததும்பியது படம் பார்த்து முடித்ததும். இத்தனை இயல்பாய், இத்தனை இயற்கையாய் ஒரு படம் எடுக்க முடியுமா?. படம் நெடுகிலும் கேமரா எங்கிருந்தது?. படத்தில் யாருமே நடிகர்கள் இல்லை. நோடேகொப்புலுவின் மனிதர்களையே படம் பிடித்திருக்கிறார் இயக்குநர் ராம் ரெட்டி. கதை கூட அங்கு நடந்த உண்மையான சம்பவம்தான். படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்து, இறுதிக்காட்சி வரை ஒவ்வொரு ஃபிரேமிலும் அழகும், உண்மையும், இயல்பும்…ஒரு துளியும் செயற்கை கலக்காத, துருத்தித் தெரியும் காட்சிகளில்லாத…ஒரு அசல் கிராமம் மற்றும் அதன் மனிதர்கள். படத்தில் பின்னணி இசை என்ற ஒன்று கிடையாது.

ரிச்சர்ட் தேலரின் Misbehaving: The Making of Behavioral Economics – புத்தக விமர்சனம்

மனித மனம் அங்கே ஒரு கணக்கு போடுகிறது. 1200 ரூபாய் சாமான் ஒன்று அறுநூறு ரூபாய்க்கு கிடைக்கும்போது பெரிய தொகை ஒன்று தள்ளுபடியாவதுபோல் தோன்றுகிறது. (பாதிக்குப் பாதி மிச்சம் செய்கிறோம்). ஆனால் 35000 ரூபாய் செலவு செய்யத் தயாராக இருக்கும்போது ஒப்பீட்டளவில் அதே அறுநூறு ரூபாய் நமக்கு அவ்வளவு பெரிய தள்ளுபடியாய் தெரிவதில்லை. என்றைக்கு இருந்தாலும் என்ன வாங்கினாலும் அறுநூறு ரூபாயின் மதிப்பு அறுநூறு ரூபாய்தானே? ஆனால் நடைமுறையில் மனித மனம் அப்படி யோசிப்பதில்லை.

வாய்ப்புகள் என்னவாக இருக்கும்?

பலரும் என் சகோதரியின் கைகளைப் பார்த்து அவற்றை நேசிக்கத் துவங்குகிறார்கள். அவளால் ஒரு செங்கல்லை இரண்டாக உடைக்க முடியும். எங்கள் சகோதரனுக்கு 30 வயதாகிற போது, அவன் அவளோடு தங்கி இருக்க வந்தான். தான் மணந்திருத்த பெண்ணை விட்டு விலக அவன் முடிவு செய்திருந்தான், என் சகோதரி வாழ்ந்த இடத்துக்கு அருகில் இருந்த ஒரு சிறிய ஏரியில் மூழ்கி இறக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான். அவள் சொன்னாள், “அது முழுக்க உளை சேறாக இருக்கிறது, நீ ரொம்ப தூரம் உள்ளே இறங்கி நடந்தால்தால் ஏதோ கொஞ்சம் ஆழம் கிட்டும், அதில் மூழ்குவது உனக்குப் பெரும் பாடாக இருக்கும்.” எங்கள் சகோதரன் தலையைப் பின்னே சாய்த்துப் பெருஞ்சிரிப்பாகச் சிரித்தான்.