பந்தயக்குதிரை

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் நுழையும் போது மணி நான்கு. உடனே பேருந்து கிடைத்தால் எப்படியும் விடிவதற்குள் ஊருக்குப் போய்விடலாம் என்று எண்ணிக் கொண்டான். எதிர்பார்த்தது போல, பேருந்து நிலையத்தில் எந்தவித அசம்பாவிதத்திற்கான அறிகுறியும் இல்லை. தொலைக்காட்சி செய்தி சேனல்களின் அசுர வாய்க்கு எப்போதும் பெருந்தீனி தேவைப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. சிறு சலசலப்பைக் கூட பூதாகரமாக்கி பிரளயம் போல் பிரகடனப்படுத்தி விடுகின்றனர். அதையொட்டிய வதந்திகளுக்கு கைகால் முளைத்து ஊரெங்கும் பரவி விடுகின்றன.

பாஸனின் ஸ்வப்னவாசவத்தம்

பத்மாவதிக்குத் தலைவலி வந்த ஒரு சூழல். உதயணன் – வாசவதத்தை சந்திப்புக்கு இடம் தருவதாகிறது. அது மர்மமான கனவுலகம் பத்மாவதியின் தலைவலி தீவிரம் தெரிந்த பிறகு அவள் வெம்மையைத் தடுத்து படுக்கையைக் குளிர்ச்சியாக்கி வலியின் தீவிரத்தைக் குறைக்க உதயணனும், வாசவதத்தையும் தனித் தனியாக விரைகின்றனர். உதயணன் முதலில் அவ்விடத்தை அடைகிறான். பத்மாவதியின் அறையின் குளிர்ந்த் தன்மை, அறை வசதி, அழகு ஆகியவற்றில் தன்னை மறந்து, செய்ய வந்த்தை விட்டு விட்டு அங்கேயே கட்டிலில் சாய்கிறான். தன்னை மறந்து தூங்கியும் போகிறான். விதூஶகன் வந்து பார்த்து விட்டு குளிர்ச்சியை உணர்ந்து போர்வையை உதயணனுக்குப் போர்த்தி விட்டுப் போகிறான். அந்த நேரத்தில்…

கிடா வெட்டு

பண்டிகைக் காலங்களில் ஆட்டுக்கறியோ, மாட்டுக்கறியோ, கோழிக்கறியோ கண்டிப்பாக வீட்டில் இருக்கும்.ஒன்றுமே இல்லையெனில் அப்பா மாலையில் வலையுடன் கிளம்பிப்போய் அடுத்த நாள் காலையில் காடை,கௌதாரி மற்றும் காட்டுக் கோழிகளைப் பிடித்துக்கொண்டு வருவார். சில சமயம் கறி மிகும் போது உப்புக் கண்டம் போட்டு, தினம் கொஞ்சமாக பொறித்துத்தின்றதும் உண்டு. இப்பொழுது அப்பா இல்லை. மாடுகள் இல்லை.

பயனர் அனுபவம் – 2 : தகவல் கட்டமைப்பு

ஒரு பயனர் அனுபவ வல்லுநர் தாமாகவே இந்த மாதிரி சைட் மேப்பையோ, அல்லது தகவல் கட்டமைப்பையோ உருவாக்கிவிடமுடியாது. ஒரு நிறுவனம் எந்த நோக்கத்திற்காக ஒரு வலைதளத்தை உருவாக்குகிறது என்பதைப் புரிந்துகொண்டு அந்த நிறுவனத்துடன், அவர்களின் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களுடன் (Stakeholders) கூடி ஆலோசித்து, பயனர் பிரதிநிதிகளை (User representatives) வைத்துதான் இதைச் செய்யமுடியும்.

வில்லினை எடு லட்சுமணா!

யசோதை குழந்தை கிருஷ்ணனைத் தொட்டிலில் இட்டுத் தூங்க வைக்க முயல்கிறாள்; எந்தக் குழந்தைக்குத் தான் கதை கேட்க ஆசை இருக்காது? கிருஷ்ணன் மட்டும் இதற்கு விதிவிலக்கா? “கதை சொல்லு,” என முரண்டு பிடிக்கும் தன் சுட்டிக் குட்டனுக்கு ஒரு கதை சொல்கிறாள் அன்னை யசோதை…

எண்ணெய்யும் தண்ணீரும்: அவதாரங்கள்

கட்டுப்பாட்டு அறையில், மின்னணு பேனலின் பின்புறம் அந்த விளக்கை பார்த்தபோது, அதிகம் சிவந்து ஒளிர்ந்தது அந்த ரிலேயில் இருந்த விளக்கா அல்லது என் குழுவில் இருந்த ஒரிசா மாநிலத்துக்காரரான அமுல்யகுமார் மொஹந்தியின் முகமா என்பது ஒரு பட்டிமன்றம் நடத்தி முடிவெடுக்க வேண்டிய விஷயம். சந்தேகம் இல்லாமல் ப்ரொடக்க்ஷன் குழுதான் எங்களை மாட்டி வைக்கப்பார்க்கிறது என்பதற்கு எங்களிடம் ஆதாரம் இருப்பதாக தோன்றியதால், அடுத்த அரைமணியில் என் குழு இன்னும் கோபத்துடன் பேசாமல் மும்பையில் இருக்கும் தலைமை அலுவலகத்தையே கூப்பிட்டு…

மகரந்தம்

சீனா 250 பிலியன் டாலர்களை லத்தின் அமெரிக்காவில் முதலீடு செய்வது ஏன் என்று அமெரிக்க வலதுசாரிப் பத்திரிகைகளில் ஒன்றான வாஷிங்டன் போஸ்ட் கேட்டுத் தன் பீதியை வெளிப்படுத்துகிறது. ஏகாதிபத்தியம் என்பது சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிப்பது என்பதுதான் யூரோப்பியரின் போர்த்தந்திரம், வியாபாரத் தந்திரம், காலனியத் தந்திரம். இப்படித்தான் ஆசிய, ஆஃப்ரிக்க மக்களை முன்னூறு வருடங்களாகச் சுரண்டிக் கொழுத்தனர் வெள்ளை மக்கள். சீனா அதே உத்தியைப் பயன்படுத்துகிறதா, இல்லையா என்பது அமெரிக்க வலது சாரிகளுக்குப் புரிபடாத மர்மம். சீனாவின் சின்ன மீன் 250 பிலியன் டாலர் என்றால் அது எதிர்பார்க்கும் பெரிய மீன் தான் என்ன? 1 ட்ரில்லியன் டாலர்களா? இது அமெரிக்கர்களின் அஸ்தியில் கூடப் புளியைக் கரைக்கும்.

நல் அணி மணிச் சுடர் தவழ்ந்திட நடந்தாள்

மேற்கிந்திய (முன்னாள்) பந்துவீச்சாளர் அம்ப்ரோஸ் – அவர் தோளில் இருந்து கை விரல்களை நோக்கி ஒரு எறும்பு பயணத்தை ஆரம்பிக்குமானால் வெகு தூரம், நேரம் பயணம் செய்துதான் கை விரல்களை அடையவேண்டும். மூன்று selfie stickகள் ஒன்றன் பின் ஒன்றாக கட்டிய தூரம். அந்த விரல்களின் நுனியில் சிவப்பு கிரிக்கெட் பந்து மஞ்சள் எலுமிச்சை பழம் போல் ஒட்டிக்கொண்டு இருக்கும்.
இவர் ஓடி வந்து பந்து வீசுவதை பிட்சின் பக்கவாட்டில் இருந்து பார்த்தால் என்னென்னவல்லாம் தெரியும்?

ஈராக்கில் ஜனநாயகம்

“ஜனநாயகம் வரும்வரை, அதாவது அமெரிக்கா உள்ளே புகும் முன்னர், ஒரு சில உதிரிக்குழுக்கள் தவிர பலருக்கு ஷியா மற்றும் ஸுன்னி பிரிவினர் எதிரிகள் என்பதே தெரியாது. சதாமின் இரும்புப் பிடியில் ஈராக்கியர்களுக்கு மதப்பிரிவுசண்டை போடக்கூட நேரமில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் பிழைத்திருக்கவும், குடும்பத்தைப் பட்டினியின்றி வைத்திருக்கவுமே ஓடிக்கொண்டிருந்தபோது பிரிவினைகளை பற்றி சிந்திக்க நேரமிருக்கவில்லை. ஷியா, ஸுன்னிகள், கிறிஸ்தவர்கள், அசிரியர்கள், துர்க்மான்கள் இன்னும் சில பிரிவுகள் என எல்லோரும் ஒற்றுமையாய்த்தான் இருந்தோம். நாட்டில் வளமிருந்தும் எங்கள் கைகளில் காசில்லாமல் இருந்ததாலும், அடிப்படைவாதத்தைத்தான் குரான் சொல்லிக்கொடுக்கிறது என்பதை எங்கிருந்தோ புதிதாய் வந்தவர்கள்…

வர்ணமும் ஆஸ்ரமமும்

ஆஸ்ரம அமைப்பு மனிதன் வாழக்கூடிய நியாயமான நால்வகை வெவ்வேறு வாழ்நிலைகளை வரையறை செய்கிறது. வர்ண தர்மத்தோடு ஒப்பிடுகையில் ஆஸ்ரம அமைப்பு மிகக் குறைவான கவனமே பெற்றிருக்கிறது என்றும் அவ்வளவாக விவாதிக்கப்படவில்லை என்றும் கூற வேண்டும். எனினும், கடந்த இருபது ஆண்டுகளில் மிக அதிக அளவில் இதுகாறும் புறக்கணிக்கப்பட்டு வந்த இந்தக் கருத்துருவாக்கம் சமூக, தத்துவார்த்த, சமய விவாதங்களில் சொல்லத்தக்க அளவில் வேகம் பிடிப்பதைக் காண முடிகிறது.

பழங்குடிக் கொண்டாட்டம்

அஸ்ஸாம் மாநிலத்தின் பழங்குடியினர் சுவாரி திருவிழாவை, சென்ற வாரம் கொண்டாடினார்கள். வீரதீர விளையாட்டுகளும் ஆட்டமும் பாட்டமும் யானைகளும் நிறைந்த விழாக்காட்சிகளை இங்குப் பார்க்கலாம்.

குந்தர் கிராஸ்

குந்தர் வில்ஹெம் கிராஸ் ஜெர்மன் நாவலாசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், ஓவியர், வரைகலைஞர், சிற்பி. 1999ல் இலக்கியத்திற்கு நோபல் பரிசு பெற்றவர். அவருடைய சுய சரிதையான Peeling the Onion (2007) எழுதியபோது எடுத்த பேட்டி:

தெருக்கூத்து – பகுதி 1

தொடக்கத்திலேயே சொல்லவேண்டியது, தெருக்கூத்து ஒன்றும் பழமையின் எஞ்சியுள்ள சின்னமாய் நாட்டார்கலை ஆர்வலர்கள் கருணையுடன் புத்துயிரளிக்கவேண்டிய ஒன்று அல்ல. அதன் பார்வையாளர்கள் ஒரு சிறு கூட்டமேயான கிராமத்து மக்களாகவே இருப்பினும், இக்கலைவடிவம் தமிழகத்தின் இதர மக்களால் ஏளனத்துடன் பார்க்கப்படினும், அது ஒரு வீரியமும் வாழ்வும் உடைய கொண்டாட்டமான வெளிப்பாடு. ஓர் இனத்து மக்களின் வரலாற்றுக்கு முற்பட்ட, வேட்டைக்கார, உணவு சேகரிப்பு பழங்குடி நாட்களிலிருந்து, அவ்வினத்தின் பரிணாமத்தின் ஒவ்வொரு படிநிலையினுள்ளும் ஒன்றினுள் ஒன்றாய் புகுந்து ஊடுருவி, தன் அடர்ந்த பரப்பினுள் உபகண்டத்தின் பிற பகுதிகளினின்று காற்றுவாக்கில் வந்த பாதிப்புகளையும் சேர்த்துக்கொண்டு இருக்கும் ஒரு ஆவணம், ஒரு பல்படிவச் சுவடி (palimpsest)

ஜெயகாந்தன்-ஓங்கி ஒலிக்கும் யதார்த்தத்தின் குரல்

கம்யூனிசத்தையும் ஆன்மீகத்தையும் ஒரே தளத்தில் இணைக்க எண்ணினார்.
இந்திய மரபின் மேன்மைகளை உணர்த்தினார். தனிமனித சுதந்திரம் பற்றி ஐம்பதாண்டுகளுக்கு முன்பே உரத்துப்பேசினார்.ஏனென்றால் அக்காலகட்டத்தில் மனிதர்கள் சமூகத்தில், சாதியில், குழுக்களில் கட்டுப்பட்டே இருந்தனர். சமூகத்தின் பார்வையில் தனிமனித ஒழுக்கங்களும்,கட்டுப் பாடுகளும் எத்தனை அபத்தமான கோணத்தில் நோக்கப்படுகின்றன என ஓங்கித் தலையிலடித்துக் கூறினார். கம்யூனிச சித்தாந்தங்களையும்,காந்தியின் எளிமையையும் ஒன்றாகக் கொண்டவராகவே வாழ்ந்தார்.

மொழியாக்கங்கள் குறித்த ஓர் உரையாடல் – பகுதி1

மொழிபெயர்ப்புகள், ஒரு பண்பாட்டில் உள்ளதை வேறொரு பண்பாட்டுக்குக் கொண்டு செல்கின்றன. அடிப்படை மனித உணர்வுகள் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால் புறச்சூழல்கள் மற்றும் வரலாறு சார்ந்த பல்வேறு காரணங்களால் வெவ்வேறு மக்களிடையே பல்வகைப்பட்ட பண்பாட்டு வேற்றுமைகளைப் பார்க்க முடிகிறது, அடிப்படை மானுட உணர்வுகளே வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றன. ஒரு பண்பாட்டின் செறிவு என்பது நுண்விவரங்களில்தான் இருக்கிறது. ஆனால், மனித மனம் எதையும் எளிமைப்படுத்தியே புரிந்து கொள்கிறது, பிற பண்பாடுகளைப் புரிந்து கொள்ள அது உதவாது.

குளக்கரை

சக மனிதர்களின் வற்புறுத்தலால் உலக மனிதர்களின் புத்தியே மாற்றி அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இது நடக்கிறது. சக மனிதர்கள் இத்தனைக்கும் ஒருவரின் அண்டைப் பக்கமோ, அன்றாட வாழ்வின் பல அம்சங்களிலோ பங்கெடுப்பாரே இல்லை. இது வாழ்வில் பெருகி வரும் ஊடக இடையீட்டால் நேர்வது என்றெல்லாம் பேசுகிறது இந்தக் கட்டுரை. இதை எத்தனை தூரம் நாம் பொருட்படுத்த வேண்டும்? வாசகர்களின் கருத்து இந்தக் கட்டுரை பற்றி என்ன என்று சொல்வனத்துக்கு எழுதித் தெரிவிப்பார்களா?