பாதல் சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது

தோல்வியுறாத மனத்திடத்துடன் தனக்காக அமைத்துக் கொண்ட வாழ்வுப்பாதையில் அசையா நம்பிக்கையுடன் முன்னே செல்லும் ஒரு மனிதரையே எதிர்கொண்டேன். வீட்டிற்குச் செல்லும் வழியை வரைபடமாக அனுப்பிவைத்து, தெர்மோஸ் ஃபிளாஸ்கில் டீயை எனக்காகச் சூடாக வைத்திருந்த கனிவான ஒரு முதியவரையும். லாவோசில் சமீபத்தில் நிகழ்த்திய பட்டறையை நினைவுகூர்ந்து, எவ்வளாவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு துரிதமாக மீண்டும் களத்திலிறங்குவதைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்கும் அபாரமான நாடகத்துறையாளரையும். நகரவாழ்வைப் பற்றிய சர்காரின் விமர்சனங்களின் கூர்மை காலத்தால் இன்னமும் மழுங்கடிக்கப் படவில்லை.