இக்காலங்களில் இவர் நம் வாழ்வின் அநேக முகங்களை – இலக்கியம், மரபு, புலமை, சிந்தனை, தத்துவம், சிற்பம், சங்கீதம், ஓவியம் ஆகிய அனைத்தையும் மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். மேம்போக்கான மாறுதல்களுக்கு முன் வைத்த எளிய திருத்தல் யோசனைகள் அல்ல இவை. நம் வாழ்வின் அடித்தளம் பற்றிய நம் எண்ணங்கள் இவரால் புரட்டித் தள்ளப்பட்டிருக்கின்றன. எவற்றைச் செல்வங்கள் என மதித்து, உலகில் எங்கும் காணக்கிடைக்காத ஒரு கலாச்சார வாழ்வின் அவகாசிகள் நாம் என புளகாங்கிதப்பட்டுக் கொண்டிருந்தோமோ அவற்றைப் போலிக் கனவென, வாதங்களையும் நிரூபணங்களையும் முன்வைத்து தாட்சண்யமின்றித் தாக்கியவர் இவர். சரி, இக்கருத்துகளை நம் தமிழ்ச் சமூகம் எப்படி எதிர்கொண்டது? கனவுகள், மாய்மாலங்கள், போலி லட்சியங்கள், போலி மதிப்பீடுகள், பழமைக் கிரீடங்கள், தனி இனம் என்ற மார்தட்டல்கள் எல்லாம் தாக்கப்பட்டபோது, தமிழின் பல்வேறு துறையைச் சார்ந்த காவல் நாயகர்கள்…
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
க.நா.சுவின் இலக்கியச் செயல்பாடுகள்
மேற்கத்திய மனங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாத ஒரு படைப்பாளி தமிழ் எழுத்தாளன் ஒருவரின் மனதில் இப்படி ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். தனக்கு இப்படி ஒரு வாசகன் இருக்கிறான் என்ற விஷயத்தை தெரிந்துகொள்ளாமலே ஸெல்மா லாகர்லாஃபும் இறந்து போய்விட்டிருக்கிறார் என்பதை நினைத்துப் பார்த்தபோது மிகுந்த வருத்தமாக இருந்தது. க.நா.சு தன் அபிப்ராயத்தைத் தன்னுடன் எத்தனை பேர் சேர்ந்து சொல்கிறார்கள் என்பது பற்றிக் கவலைப்பட்டதே கிடையாது.