இளைஞர் சமுதாயம் தீய வழிகளில் செல்லாமல் தங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க இப்படிப்பட்ட வடிகால்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. பல குடும்பங்களில் விளையாட்டு, இசை, கைவேலை என்று சிறு வயது முதலே ஓய்வு நேரப் பழக்கங்களாகப் பழக்கப் படுத்திவிடுவார்கள். இன்னும் சில குடும்பங்களில் கலையார்வங்களை வளர்ப்பார்கள். ஆண் பெண் பேதங்கள் இல்லாமல் பலவிதக்கலைகளிலும், விளையாட்டிலும் ஆர்வங்கள் பலவிதங்களில் வளர்க்கப்படும். இவையெல்லாமே இளம் வயது ஆர்வங்களுக்கு ஒரு வடிகால் வகுக்கும் வழிமுறைகள்தாம்.
ஆசிரியர்: அருணா ஸ்ரீனிவாசன்
உறவுக்கு ஒரு பாலம்
ஒரு நாளிதழ் கட்டுரையில் மூத்த குடிமகன் ஒருவர் எழுதியிருந்தார்; அவருடைய மனைவி காலமான பின்னர், தன் வாழ்க்கையை எப்படி சமாளிக்கிறார் என்று. மனைவி இருந்தவரை வென்னீர் வைக்ககூட மனைவியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர், பின்னர் எப்படி சமையல் கற்றுக்கொண்டு, தன் வேலைகளைப் பார்த்துக்கொண்டு சுவாரசியமாக நாட்களை வைத்துக்கொண்டார் என்பது படிக்க நெகிழ்ச்சியாக இருந்தது. எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணம் நமது மனோபாவம்தான். இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் என்று நம்மைநாமே சீர் படுத்திக்கொண்டும், பிறரின் சிறுதவறுகளை மறந்தும் மன்னித்தும், வாழ்க்கைப் பயணத்தில் தேவைப்படும்போது எதிர் நீச்சல் போட்டுக்கொண்டும்…
மனம் ஒரு குரங்கல்ல…
இவைகளை சரி அல்லது தவறு என்று தராசில் பார்ப்பதைவிட எண்ண அலைகளின் சக்தியை புரிந்து கொள்ளும் கோணத்தில் பார்த்தால் தெளிவாகும்.. உலகில் எத்தனையோ பேர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக எத்தனையோ சாகசங்களை செய்யவதும் இது போன்ற என்ணங்களின் வலிமையால்தான். ஆழ்கடலில் குதிப்பது, நெருப்பை விழுங்குவது, பாம்பு தேள்களை உடலில் விடுவது, அதள பாதாளத்தில் பாய்வது, அந்தரத்தில் தொங்குவது… இவர்களை இப்படி செய்யத்தூண்டும் எண்ண அலைகள்தாம்…
நம் நலன்…..நம்மைச் சேர்ந்தவர் நலன்…..சமூக நலன்….
பேரிடர் என்பது சொல்லி வைத்து வருவதில்லை. இயற்கையோ அல்லது மனித வெறுப்பில் உருவான தீவிரவாதத் தாக்குதலோ, எதிர்பாராமல்தான் நம்மைத் தாக்குகிறது. கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம். நமக்கு ஐந்து நிமிடம் தரப்படுகிறது. அதற்குள் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு வெளி வர வேண்டும். அதன் பின்னர் உங்கள் வீடு உங்கள் எதிரேயே தரைமட்டமாக்கப்படும். இது வேண்டும் அது வேண்டும் என்று வீடு நிறைய காலங்காலமாக சேர்த்துவைத்துள்ளவற்றில் எதை விடுவது?
கொடுக்கும் கலை
இருபது வருடங்களுக்குப் பின் இவருடைய கிளினிக்குக்கு ஒரு ஆலோசனைக்காக சென்றிருந்தேன். அவருக்கு வயதாகியிருக்கும்; அவரது சந்ததியினர் யாராவது இருப்பார்கள் என்ற எண்ணத்துடன் உள்ளே சென்றால், சாட்சாத் அவரே வழக்கம்போல் அதே நாற்காலியில் உட்கார்ந்து வரவேற்கிறார். இன்று அவர் வயது 73. “நீங்கள் முன்பே என்னிடம் பலவருடங்கள் முன்பு வந்தீர்கள் போலிருக்கிறதே….” என்று கேட்கும் அளவு ஞாபக சக்தி. எப்படி இவரால் இந்த வயதிலும் இப்படி எப்போதும் ஒரு புத்துணர்வுடன் வேலை செய்ய முடிகிறது? அவர் சொன்னார்: “ இரண்டு வருடம் முன்பு கிட்னியில் கான்சர் இருப்பது எனக்குத் தெரிய வந்தது.
தீர்வுகள் விரல் சொடுக்கில் கிடைக்காது…
மொத்தத்தில், ஒரு குழந்தையை நீங்கள் எப்படி கையாளுகிறீர்களோ அந்தத் தாக்கம்தான் அந்தக் குழந்தையின் சுபாவமாக இருக்கும். மனித சமுதாயம் உருவாவதில் பெற்றோர்களின் பங்கு சாமான்யமானதல்ல. பரிட்சை நேரங்களில் தோல்வியைத் தாங்காமல் விபரீத எல்லைகளுக்குப் போகும் சில இளைஞர்களை ஆரோக்கியமான திசையில் திருப்புவது பெற்றோர்கள் கடமை.
நம் ஏமாற்றத்தின் பாரத்தையும் குழந்தைகள் மீது காட்ட வேண்டுமா என்ன?
சக்தி… மனசில் நிறையும்போது…
1970 களில் கிழக்கு ஆப்பிரிக்க நாடு ஒன்றில் நாங்கள் குடியிருந்தபோது நவராத்திரி சமயத்தில் நம் மண் பொம்மைகள் கிடைக்காமல் குழந்தையின் விளையாட்டு பொருட்களையும் பத்திரிகைகளிலிருந்து சில படங்களைக் கத்தரித்து அட்டையில் ஒட்டி, படிகளில் நிற்க வைத்து கொலு வைத்தேன் . அப்படி நான் கத்தரித்து ஒட்டிய படங்களுள், காஞ்சிப் பெரியவர், கடவுள் படங்கள் இவற்றுடன் மோனோலிஸா படமும் ( அழகாக இருந்ததே..!)என் கொலுவில் இருந்தன. தாம்பூலத்திற்கு அழைத்திருந்த பெண்களில் அக்கம் இருந்த ஐரோப்பியர் மற்றும் ஆப்பிரிக்க பெண்களும் உண்டு. வந்திருந்த பெண்களில் ஒருவர் கேட்டார்: “பூஜை என்றீர்கள். சரிதான். ஆனால் மோனோலிஸா படத்தையும் இந்த பஸ், விமானம் போன்ற பொம்மைகளையும் கடவுள் படங்களுடன் ஏன் வைத்துள்ளீர்கள்?” என்றார்.
உறவுகள் மேம்பட
முன் காலத்தில் பெண்கள் வெகு இளம் வயதில் திருமணம் செய்து வைக்கப்படுவார்கள்.(அந்த காலத்தில் பெரும்பாலும் திருமணங்கள் செய்து வைக்கப்படும்; செய்து கொள்ளப்படுவதில்லை. இதில்தான்எத்தனை வித்தியாசம்?!) தங்களுக்கென்று இன்னும் ஆழமாக கருத்து ஏதும் உருவாகாத நிலையில் திருமணம் செய்துவைக்கப்படும்போது புதிய மனிதர்கள், புதிய சூழ்நிலையில் புகும்போது சட்டென்று அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டார்கள் அந்த தலைமுறை பெண்கள்.
குணம் நாடி, குறை தவிர்த்து
கற்றுகொள்வதும் உதவிகள் பெற்றுகொள்வதும் ஒரு கலை. கற்பது என்பது நம்மைவிட வயதானவர்களிடமிருந்துதான் என்றில்லை; நல்ல விஷயங்கள் யாரிடமிருந்தாலும் கற்றுகொள்வதில் தவறில்லை.
கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு என்பார்கள். இருந்தாலும் சிலருக்கு சட்டென்று உதவி கேட்கவோ அல்லது உதவி செய்யவோ தோன்றாது. உதவி கேட்பது சுய கௌரவத்திற்கு இழுக்கு என்பது இவர்கள் நினைப்பு. தெரியாததைத் தெரியாது ; ஆனால் கற்றுகொள்கிறேன் என்பதற்கும், தனக்கு உதவி தேவை படும் சமயத்தில் கௌரவம் பார்க்காது ஏற்றுகொள்வதற்கும், ஒரு விசாலமான மனம் வேண்டும். பிறரிடமிருந்து தேவைப்பட்டபோது உதவி பெறும்போது நமக்கும் சட்டென்று பிறருக்கு உதவும் மனப்பான்மை வரும். கொடுக்கல் வாங்கல்; பரிவர்த்தனைகள் இல்லாமல் இருந்தால் அங்கே வளர்ச்சிக்கு இடம் ஏது?
மல்லிகைப் பூவின் திகட்டாத மகிமை
கோடையின் வரவேற்கத்தக்க அம்சங்களில் ஒன்று, மல்லிகைப்பூ சீசன். சாலைகளில் ஆங்காங்கே ஒரு மரப் பெட்டியைக் கவிழ்த்துப் போட்டு பூத்தொடுத்துக்கொண்டு இருக்கும் பெண்கள் சென்னையின் அடையாளங்களில் ஒன்று. வருடம் முழுவதுமே ஓரளவு கிடைக்கும் மலரென்றாலும், இந்த சீசனில் கிடைக்கும் மல்லிகையின் – அதுவும் குண்டு மல்லிகையின் – அதிலும் மதுரை மல்லியின் வாசனையே அலாதி. தெருவில் “மல்லிகைப் பூவின் திகட்டாத மகிமை”
பசுமைக் கட்டிடங்கள்
பசுமைக் கட்டிடங்கள் நிறைய எழும்ப ஊக்கமளிக்கும் வகையில் LEED எனப்படும் ( Leadership in Energy and Environmental Design ) விருது இந்திய Indian Green Building Council அளிக்கிறது. இந்தியாவில் பல மாநில அரசுகளும் இப்படிப்பட்ட பசுமைக் கட்டிடங்களுக்கு நிறைய ஊக்கமளிக்கின்றன. தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் மழை நீர் சேமிப்பு கட்டிடங்களில் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
மன அழுத்தம்
வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் மன அழுத்தம் தற்காலத்தில் அதிகமாகதான் இருக்கிறது. உலகில் நிலவி வரும் வியாபாரப் போட்டியே காரணம். ” சின்னதாக சறுக்கினாலும் அதள பாதாளத்தில் விழுவோம் என்ற நிலையில்தான் இன்றைய வேலை செய்யும் இடங்கள் இருக்கின்றன. இதற்கு முன்னாள் எவ்வளவு திறமையாக வேலை செய்தோம் என்பதெல்லாம் காணாமல் போய்விடும்,” என்கிறார் ஒரு கணிணிப் பொறியாளர்.
நியூ மீடியாவின் தாக்கம்
We Media” என்ற அதிகார பூர்வமான அறிக்கை ஒன்றைத் தயாரிக்கும்படி அமெரிக்கன் பிரஸ் சென்டர், ஷேய்ன் போமேன், க்ரிஸ் வில்லிஸ் என்ற இரு பத்திரிகையாளர்களிடம் பணித்திருந்தது. செய்திகள் பரவும் அல்லது அளிக்கப்படும் முறைகளில் ஒவ்வொரு நுகர்வோரும் பங்களித்துக்கொண்டிருக்கின்றனர் என்று இந்த பேப்பர் கூறுகிறது. ஆன்லைன் ஜர்னலிஸம் ரெவ்யூ ஆசிரியர் ஜே. டி.லசிகா எடிட் செய்த இந்தப் பேப்பர், பொது மக்களின் பங்களிக்கும் ஜர்னலிஸம் இன்று மக்களின் வாழ்முறையையும் மாற்றி வருகிறது என்று குறிப்பிடுகிறது. இன்றைய தலைமுறையின் வாழ்க்கையும் இணையத்தைச் சுற்றியே பிணைந்திருந்து பயனீட்டாளரே பங்களிப்பவராகவும் மாறிவிடும் காலக்கட்டத்தை இந்த ஆராய்ச்சி விளக்குகிறது.
கடலில் எண்ணெய்க் கசிவு
கடலில் எண்ணெய்க் கசிவினால் ஏற்படும் விளைவுகள் என்ன? எண்ணெயில் இருக்கும் எடையில இலேசான பொருட்கள் ஆவியாகி காற்றில் கலந்துவிடும். அல்லது இயற்கையான உருமாற்றம் மற்றும் உயிரியல் தரவீழ்ச்சி (bio degradation) ஏற்பட்டு மறைந்துவிடும். ஆனால் அதிலுள்ள கனமான பொருட்கள் கடலிலேயே தங்கி, கடல் வாழ் உயிரினங்களின் உடலில் எண்ணெய்ப் பூச்சாகப் படிந்து விடுவதால், சுலபமாக நகர முடியாமலும், உணவு தேட முடியாமலும், மூச்சு முட்டியும் பல உயிரினங்கள் மடியும். அதுவும் பெட்ரோலியத்தில் பலவித நச்சுப் பொருட்கள் (toxic components) இருப்பதால் அவற்றை உட்கொள்ளும் உயிரினங்கள் இறந்து போவதொடல்லாமல் புதிய உயிர்கள் பிறப்பதையும் அவை தடுத்துவிடும். இதனால் பல உயிரினங்கள் நாளடைவில் மறைந்து போகும் அபாயம் இருக்கிறது.
முத்து – ஆழ் கடலில் ஓர் அமைதியான அழகு
இன்று இயற்கை முத்தெடுக்க முத்து குளிப்பது அறவே நின்றுவிட்டது. தமிழ் நாட்டில் தூத்துக்குடியில்தான் கடல் முத்து எடுக்க முத்துக்குளிப்பது வழக்கமாக இருந்தது. இன்று அங்கும் இந்தத் தொழில் அடியோடு காணாமல் போய்விட்டது. முத்து நகரம் என்ற பெயர் மட்டும் எஞ்சியுள்ளது.
தடம் சொல்லும் கதைகள் – 14
பழைய கலைப் பொருளில் வேலை செய்யும்போது அதன் ஒரிஜினல் தன்மை கெடாமல் சீரமைப்பது மிக அவசியம்,” என்கிறார் புனரமைப்பு மற்றும் அரும்பொருள் காட்சியகம் துறையில் பேராசிரியராக இருக்கும் டாக்டர் பட்நாகர். “எங்கள் மாணவர்களுக்கு முதலில் நான் சொல்வது, பழுதுகளை மட்டும் முதலில் சரி செய்ய வேண்டும் என்பதுதான். ஒரு அழகிய சிலையில் அல்லது ஓவியத்தில் இருக்கும் ஓட்டைகள், கறைகள் இவை அந்தப் பொருளின் அழகை கெடுக்கின்றன. இப்படிச் சரி செய்யும்போது ஒரிஜினல் அழகு கெடாமல் இருக்கிறதா என்று பார்ப்பது மிக முக்கியம். நாங்கள் போடும் ஒட்டுகள் வெளியே தெரியாமலும் இருக்க வேண்டும்.
தேநீர் மகாத்மியமும் ஜப்பானியர்களும்
காலையில் எழுந்ததும் பில்டர் காபியுடன் செய்தித்தாளில் தலையை மூழ்கி வெளிவந்தால்தான் நம்மவர்களுக்கு அன்றைய பொழுது ஒழுங்காக ஆரம்பித்தது என்று ஆகும். இந்த இரண்டில் எது ஒன்று சரியாக இல்லையென்றாலும் பிரளயமே வந்தாற்போல் இருக்கும். நம் ஊர் பக்கம் இப்படியென்றால் வட இந்தியாவில் காபி இடத்தை தேநீர் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். சிங்கப்பூரில் இருந்தபோது ஒரு முறை ஜப்பானில் தேநீர் போடும் முறைகள், தேநீர் ரகங்கள், மற்றும் அதற்கு உபயோகிக்கப்படும் உபகரணங்கள் என்று ஒரு கண்காட்சியைப் பார்க்கப் போயிருந்தேன். அந்த சமயத்தில்தான் சென்னையில் பரவலாக டீ மட்டுமே குடிக்கும் வட இந்திய தகவல் தொழில் நுட்ப இளைஞர்களும் அதிகமானார்கள்.
திம்புவின் சோர்டன்கள்
சில ஓவியங்களில் அதை வரைந்தவர் தன் கற்பனை வளம் முழுவதையும் கொட்டி வரைந்திருப்பார். சொர்க்கம் போன்று ஒரு இடத்தைக் கற்பனை செய்தால் அங்கே காவல்காரர்கள் உட்பட அனைத்து விவரங்களும் அந்த வேலைபாட்டில் இருக்கும். பூடான் அரசரின் மாளிகையில் கழுகு முகத்துடன் கூடிய ஒரு கடவுள் தோற்றம் இடம் பெற்றிருக்கும். ராவண் என்றொரு உருவமும் உண்டு. ஆனால் இது ராமாயணத்தின் வில்லன் ராவணன் அல்ல.
கம்போடிய அங்கோர் வாட்டில் இந்தியத் தொல்பொருள் ஆய்வகம்
1992 ம் வருடம் கம்போடிய நாட்டின் புகழ்பெற்ற புராதன கோவிலான அங்கோர் வாட்டில் பழுது பார்த்து சரி செய்யும் பணியை இந்திய தொல்லியல் ஆய்வகம் மேற்கொண்டிருந்தது. ஆனால் அந்த பணிகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்று விமர்சனம் எழுந்தது. அதைப் பற்றி விசாரித்து எழுதும்படி ஒரு தினசரி என்னிடம் கேட்டிருந்தது.
ஜீவனாம்சம் – ஆண், பெண் சம உரிமை
மேலை நாடுகளில் பணக்கார மனைவி கணவனுக்கு ஜீவனாம்சம் கொடுப்பது நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான். நடிகை எலிசபெத் டெய்லர் மாதா மாதம், பெரும் தொகையை ஜீவனாம்சமாக தன் முன்னாள் கணவர் லேரி ஃபொர்டென்ஸ்கிக்கு (Larry Fortensky) கொடுக்கிறார். மேலை நாடுகளில் இது வழக்கம் என்று ஒதுங்கிவிடுவோமே தவிர, நம் மூக்குக்கு கீழ் ஆசியாவில் நடக்கும் என்று நினைக்க மாட்டோம். ஆனால்…
சிங்கப்பூர் அரசியலில் பெண்கள்
பல திறமையுள்ள பெண்கள் தங்கள் திறமையால் எந்த துறையிலும் பிரகாசிக்கலாம் என்று இருக்கும்போது கஷ்டங்கள் நிறைந்த அரசியலில் நுழைவானேன் என்று நினைக்கிறார்கள். தவிர பெரும்பாலோர் தங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தையும், தங்கள் தனி வாழ்க்கையையும் மிக மதிக்கிறார்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தங்கள் தனிமனித சுதந்திரத்தை இழக்க விரும்புவதில்லை. சிங்கப்பூரின் அரசியல் கலாசாரப்படி, மக்கள் ஆதரவினால் மட்டுமே அரசியல் தலைவர்கள் உருவாவதில்லை. ஒரு கட்சியினுள்ளே அழைக்கப்பட்டு ஆரம்பத்திலிருந்து பல பொறுப்புகளில் உழைத்து படிப்படியாகவே மேல் நிலைக்கு வந்து அரசியல்வாதியாக முடியும்.
ஜப்பானில் இந்திய வணிகம்
கடந்த சில வருடங்களாக நிறைய இந்திய மென்பொருள் வல்லுனர்களை அமெரிக்காவும் ஐரோப்பாவும் தங்கள் நாடுகளில் வரவழைத்துள்ளன. இந்திய மென்பொருள் மற்றும் சேவைகள் வாங்குபவர்கள் வரிசையில் இப்போது ஜப்பான் போன்ற கிழக்கு நாடுகளும் சேர்ந்துள்ளன. ஏற்கனவே அரசு ரீதியில் இந்திய ஜப்பானிய அரசுகளுக்கிடையே நிறைய பரிமாற்றங்கள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவிற்கு போட்டியாக, பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவிலிருந்தும்…
இணையமும், இணையத்தில் தமிழும் – ஆரம்ப நாட்கள்
இப்படி இணையத் தமிழுக்கு முக்கியப் பங்காற்றியவர்களில், மறைந்த சிங்கப்பூர் தமிழர் நா. கோவிந்தசாமி, பல வருடங்களாக ஸ்விட்சர்லாந்தின், லொஸான் (Lausanne) நகரில் பணியாற்றும் கல்யாணசுந்தரம், மலேஷியத் தமிழர் முத்து நெடுமாறன், மற்றும் தமிழக மென்பொருள் வல்லுனர்கள் பலரும் தமிழ் இணையச் சரித்திரத்தில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் நான் அந்த சமயம் சிங்கப்பூரில் இருந்ததால் நா. கோவிந்தசாமியுடன் நல்ல பழக்கம் இருந்தது. அவர் செய்யும் முயற்சிகளை எல்லாம் ஆர்வத்துடன் என்னுடன் பகிர்ந்து கொள்வார்
உலக வர்த்தக அமைப்பு மாநாடு
கடந்த ஜூலை 31ந் தேதி ஜெனிவாவில், உலக வர்த்தக அமைப்பின் சந்திப்பில் பேச்சு வார்த்தை முறிந்ததற்கு இந்தியா காரணமாயிற்று. இந்தியாவின் நிலையை இதர உறுப்பினர் நாடுகள் கண்டித்தாலும் உள்ளூரில் பொதுவாக வரவேற்பு இருந்தது. உறுப்பினர் நாடுகளுக்கிடையே வர்த்தகம் மேம்படும் வகையில் சுங்க வரிகளைத் தளர்த்தி நாடுகளுக்கிடையே பொருட்கள் தடையில்லாமல் இறக்குமதி ஏற்றுமதி செய்ய இந்த உடன்பாடு வகை செய்திருக்கும். ஆனால், இந்த உடன்பாட்டின் ஷரத்துகள் பெரும்பாலும் வளர்ந்த நாடுகளுக்கு சாதகமாகவே இருப்பதாக இந்தியாவும் இதர வளரும் நாடுகளும் கருதின. கடைசியில் இந்தியா ஒரு நிபந்தனை விதித்தது. இந்த உடன் பாட்டில் இந்தியா கையெழுத்திட வேண்டுமென்றால், இந்தியாவின் மற்றொரு நிலைபாட்டிற்கு இதர நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் அது.
ஹாங்காங் கைமாறியபோது…
ஒரு கலவையான சூழ்நிலையில்தான் ஹாங்காங் 1997 ஜூலை முதல் தேதியன்று இங்கிலாந்திடமிருந்து சீனாவிற்கு கை மாறிற்று. வரலாற்றுப்படி, 19ம் நூற்றாண்டில் முதலாம் அபின் போருக்குப் பின், சீனா பல பிரதேசங்களை இங்கிலாந்திடம் இழந்தது. 1898 ம் ஆண்டு ஹாங்காங் தீவுகள் இங்கிலாந்திடம் 100 வருட குத்தகையில் அளிக்கப்பட்டு, ஹாங்காங் இங்கிலாந்தின் காலனிகளில் ஒன்றாகத் திகழ்ந்து வந்தது.1984ல் சீனாவும் இங்கிலாந்தும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அந்தக் குத்தகை முடியும் தருவாயில், 1997 ம் ஆண்டு ஜூலை முதல் தேதி இங்கிலாந்து ஹாங்காங்கை திருப்பித் தந்தது.
எம். வி. வெங்கட் ராம்
அதீதக் கற்பனையாக இருந்தாலும், தற்கால சமூகப் பின்னணியைக் கருத்தாகக் கொண்டு எழுதியிருந்தார். பெண்கள் சம உரிமையை அந்தக் கதை மூலம் தான் வலியுறுத்துவதாகக் கூறினார். “நம் சமுதாயத்தில் பெண்கள் சம உரிமையும், பெண்கள் முன்னேற்றமும் மிக அவசியம் என்று நினைத்துதான் அந்தக் கதையையே உருவாக்கினேன். பெண்களுக்கு எதிராக எத்தனையோ அநீதிகள் நம் சமுதாயத்தில் நடக்கின்றன. ஒரு எழுத்தாளராக என்னால் செய்ய முடிந்தது அதைப் பற்றி எழுதி விழிப்புணர்வை உண்டாக்குவதுதான்.”
தில்லியிலிருந்து லாகூருக்கு பஸ்
தொலைக்காட்சி ஸ்தாபனங்கள் இப்படி செய்தியைத் தோண்டி வெளிக்கொண்டு வந்தால், அதன் முன்னோடியான பத்திரிகையுலகம் அந்த செய்திகளுக்குப் பின்னால் புதைந்துள்ள செய்திகளை ஆராய்ந்து போட்டி போட்டுகொண்டுவெளியிடுவதைப் பார்க்கும்போது இன்று தகவல் சாதனங்கள் சரித்திரம் எழுதுகின்றன என்றுதான்சொல்லத்தோன்றுகிறது.
தினம் ஒரு புதையல்
மெள்ள காட்சியில் வைக்கப்படிருந்த ஒவ்வொரு டைனொசொரையும் உள்ளுக்குள் கொஞ்சம் உதறலுடன் பார்த்துக்கொண்டு வந்தேன். நிஜம் இல்லை என்று அறிவுக்குத் தெரிந்தாலும் மனதென்னவோ அடித்துக்கொள்ளதான் செய்தது. அத்தனை தத்ரூபம். தொழில் நுட்பம் மூலம் உயிரோட்டமாக அசைவுகளும் கொண்ட அந்த டைனொசொர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காடுகளில் நாம் உலவுவது போன்ற பிரமையை ஏற்படுத்தி விட்டன.
தடம் சொல்லும் கதைகள்
“அது சிறு புள்ளியாகும் வரையில் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு பாக்கி இருந்த நாங்கள் – 26 பேர் கொண்ட குழு – அவரவர் முகாமிற்கு அமைதியாக திரும்பி வேலை பார்க்க ஆரம்பித்தோம். மனசு கொஞ்சம் கனத்துதான் இருந்தது. வெளி உலகுடன் எங்களுக்கு அந்த ஹெலிகாப்டர்தாம் கடைசி இணைப்பு. அதுவும் போய்விட்டது. இனி அடுத்த 6 மாதத்திற்கு – அடுத்த வேனிற்காலம் வரும்வரையில் வெளியுலகுத் தொடர்பே எங்களுக்கு கிடையாது.” என்று அவர் விவரிக்கையில் என் மனம் அந்த சூழ்நிலையை கற்பனை செய்து பார்த்தது – 6 மாதம், அந்தக் கடும் குளிர் பிரதேசத்தில் பெங்குவின்கள் மட்டுமே துணையோடு – எப்படி இருக்கும்?
ஆர். ஏ. மஷேல்கர்
பாஸ்மதி அரிசி என்றாலே புலாவ் ஞாபகமும், வட இந்தியாவும் நினைவில் வந்து போகும். இப்படி இருக்கையில் திடீரென்று அமெரிக்க நிறுவனம் ஒன்று பாஸ்மதி அரிசியின் மேல் காப்புரிமை கோரினால் இந்தியா சும்மா இருக்குமா? 1998 ம் வருடம்; டில்லி. பாஸ்மதி காப்புரிமை குறித்து சர்ச்சை ஆரம்பித்தவுடன் இது பற்றி இந்தியாவின் நிலை மற்றும் பின்புலம் பற்றி செய்தி அனுப்பும்படி கேட்டிருந்தார்கள். பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருக்கும் விஞ்ஞானி ஆர். ஏ. மஷேல்கரை அப்போதுதான் சந்தித்தேன்.