மரணத்தின் பல வண்ணம்

பிறப்பு என்பதே மரணத்தோடுதான் பிறக்கிறது என்பதை அறிந்தாலும் அந்த எண்ணத்தை மனதிற்குள் அழுத்தியபடி இல்லையில்லை தன் வாழ்வு நித்யமானது என்று வீறிட்டபடியே ஓடுகிறார்கள் மனிதர்கள். மரணம் என்பது பயப்பட வேண்டியதல்ல, இயல்பாக ஏற்றுக்கொள்ள வேண்டியது என்பதை பல்வேறு மரணங்களின் மூலமாக காட்டுகிறது இந்நாவல்.

காளியின் குழந்தை ராம்பிரசாத்

சிறுவயதில் கல்வி, கேள்விகளில் தேர்ச்சிபெற்ற ராம்பிரசாத் ஆயுர்வேதத்தில் ஆர்வம் காட்டவில்லை. 22 வயதில் சர்வாணி என்ற பெண்ணை அவருக்கு மணம் முடித்தார்கள், நான்கு குழந்தைகளும் பிறந்தன. ஆயினும் ராம்பிரசாத் வழக்கமான லௌகீக குடும்பஸ்தர்போல “பொறுப்பாக” இல்லாமல், நதிக்கரைகளில் திரிதல், குலகுருவிடம் பெற்ற மந்திர தீட்சையின்படி, தனிமையில் அமர்ந்து தியானித்தல் என்று விட்டேற்றியாக இருந்தார்.

வங்க இலக்கியத்தின் சிலமுகங்கள்

எந்த மொழியிலும் இலக்கியத்திற்குப் பலமுகங்கள் உண்டு. வங்க இலக்கியமும் இதற்கு விலக்கல்ல. ஒரு நாகரிகத்தை, கலாச்சாரத்தை, அதன் சரித்திரத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், அந்த மொழியிலுள்ள இலக்கியங்கள் என்றென்றும் அதற்குத் துணைநிற்கும். எத்தனை மொழிகள் நமது இத்தேசத்தில், எத்தனை அரிய எழுத்துக்கள், அற்புதமான படைப்பாளிகள், நேற்றும், இன்றும், நாளையும் “வங்க இலக்கியத்தின் சிலமுகங்கள்”

அபத்த நாடகத்தின் கதை

சசியின் தந்தை கோபால்தாஸ் ஒரு தரகர். அந்த வேலைகளுக்கே உரிய சூட்சுமங்கள் நிறைந்தவர். அந்த யுக்தியைப் பயன்படுத்தித் தன் வீட்டில் தங்கவரும் நந்தலால் என்ற பெரிய வியாபாரியை மகளுக்குத் திருமணம் செய்விக்கிறார்.

வி. ராமஸ்வாமி: நேர்காணல்

This entry is part 2 of 13 in the series வங்கம்

1. உங்கள் பின்னணி பற்றி கொஞ்சம் பகிர்ந்துகொள்ள முடியுமா? நீங்கள் எப்போது வங்க இலக்கியத்தை வாசிக்கத் தொடங்கினீர்கள்? நான் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றேன், அதன் பிறகு கல்கத்தாவின் வீடற்றவர்களின் வீட்டு உரிமைகளுக்காக சமூக செயற்பாட்டில் என்னை நான் அமிழ்த்திக் கொண்டேன். உயர்நிலை வகுப்பு, கல்லூரி, பட்ட மேற்படிப்பு “வி. ராமஸ்வாமி: நேர்காணல்”

நீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை

This entry is part 12 of 13 in the series வங்கம்

மதவெறியாலும் சுயநலத்தாலும் இயக்கப்பட்டு இந்த விரோதம் பகிரங்க யுத்தமாக ஆக நேரமாகவில்லை. ‘முஸ்லீம் குடியானவர்கள் ஆனந்தமயீ கோயிலுக்கடுத்த நிலத்தில் தொழுகை நடத்தப் போகிறார்களாம்.’ அது மசூதியல்ல. அது ஒரு பண்டைய கால இடிந்த கோட்டை – அது ஈசாகானுடையதாக இருக்கலாம் அல்லது சாந்தராயோ கேதார்ராயோ கட்டியதாகவுமிருக்கலாம். அந்த இடததில் தொழுகை நடத்தும்படி முஸ்லீம்கள் தூண்டப் படுகிறார்கள்.
…. நாவல் முன்னேற முன்னேற இன்னும் பல அழகிய காட்சிகள் தம் கண் முன்னே விரிகின்றன. தர்முஜ் வயல், பாக்குப்பழம், சீதலக்ஷா நதியின் நீர், அந்த நீருடன் உவமிக்கத் தக்க வானத்தின் பிரவாகம், பறவைகளின் கூட்டிசை, மிருகங்கள்… அது ஒரு தனி உலகம்.

தன் வெளிப்பாடு – முன்னுரை

This entry is part 13 of 13 in the series வங்கம்

நாவலின் கருப்பொருள் நமக்கு நாலா பக்கத்திலும் இருக்கிறது என்பதை முதன் முதலில் உணர்த்தியது. … அவருடைய உறுதியற்ற, தயக்கம் நிறைந்த கண்ணியமான ஆண்பாத்திரங்களுக்கு மாறாக அவர் படைத்த, உயிர்த் துடிப்பு மிக்க பெண்பாத்திரங்கள் விதிக்கு சவால் விடுபவர்களாக இருக்கிறார்கள் … இந்தியத் தன்மை என்பது இந்துத் தன்மை அல்லது பிராமணியம் அல்ல; அது மனிதத்துவத்தின் சுயநிறைவு பெற்ற இந்தியப் பகுதி.

என்றும் புதிய புதுமையான தாகூரின் நித்திய ஒளி!

தாகூர் விரிவாகச் சொல்கிறார்: “நம்முடைய ஆன்மாவின் வளர்ச்சி என்பது கச்சிதமான ஒரு கவிதையைப் போன்றது. அது எல்லையற்ற கருத்துருக்களைக் கொண்டிருக்கிறது; இது ஒருமுறை உணரப்படும்போது, அனைத்து இயக்கங்களையும் அர்த்தமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக ஆக்குகிறது.”

விஷ்வ சாந்தி

பல வருடங்களுக்குப் பிறகு தாகூரை மீண்டும் படிப்பது பதட்டமாகத்தானிருந்தது. என்னால் அதை அணுகிப் படிக்க முடியுமா? என்னை அது ஈர்த்தால் மட்டுமே படிக்க வேண்டுமென்று எனக்கு நானே நிபந்தனை விதித்துக் கொண்டேன். முடிக்க வேண்டிய அவசியத்திற்காகப் படிப்பது என்பது எனக்கு ஒத்து வராதது. என்னிடம் அந்தளவு பொறுமை மீதமில்லை.

20ஆம் நூற்றாண்டின் வங்காளப் பத்திரிகை உலகம்

This entry is part 6 of 13 in the series வங்கம்

சூரபுத்திகாரர்களின் புண்ணியத்தால், இந்த உலகத்தில் நிறைய பெரும் ஏரிகள் இருக்கின்றன. அந்தத் தடாகங்களில் குளித்தும் குடித்தும், சிந்தைக்கான நம் தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம். எனினும், அன்றாடத் தேவைக்கு குழாய்த் தண்ணீர் வசதியாக இருக்கிறது… செய்தித் தாள்கள், துணுக்கு விமர்சனக்கள் போன்ற க்ஷண சாஹித்யங்கள் — குழாய்த் தண்ணீரின் வேலையை செய்கின்றன.

தமிழில் வங்க எழுத்துகள்

This entry is part 7 of 13 in the series வங்கம்

தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட படைப்புகளும் படைப்பாளர்களும் வெள்ளை உறை (வங்க நாவல்): மோதி நந்தி – லக்ஷ்மி நாராயணன் (சாகித்திய அகாடெமி) மணி மகேஷ் (வங்காள பிரயாண நூல்) : உமா பிரசாத் முகோபாத்தியாய் – எஸ். கிருஷ்ணமூர்த்தி (சாகித்திய அகாடெமி) சாம்பன் (வங்க நாவல்) : சமரேஷ் “தமிழில் வங்க எழுத்துகள்”

சித்தார்த் வெங்கடேசன் – பேட்டி

வாசிக்கும் பழக்கம் அம்மாவின் மூலமாகவே வந்தது. அம்மா ஒரு நல்ல கதைசொல்லி. கதை கேட்டலின் வழியாகத்தான் அனைவருக்குமே வாசிப்பு துவங்குகிறது என நம்புகிறேன். ஒரு கட்டத்தில் நம் கதைசொல்லிகளின் எல்லைகளை உணரும் பொழுது அல்லது அது ஒரு போதாமையை நமக்கு தரும் பொழுது வேறு கதைசொல்லல் ஊடகத்தை தேர்ந்தெடுக்கிறோம். நான் வளர்ந்த காலத்தில் காட்சி ஊடகம் பெரிதாக இல்லாததால் வாசிப்பு இயல்பான அடுத்தக்கட்டமாக இருந்தது.

பால் டம்ளர்

நம் மொழிபெயர்ப்பாசிரியர் ராஜி அவர்கள், சில சமுதாயப் பிரச்னைகளை வித்யாசமாக அலசித் தெலுங்கில் அற்புதமாக எழுதிப் பல வாசகர்களைக் கவர்ந்த சிறப்பான சிறுகதைகளையே தம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு தமிழில் மிக நுண்ணிய முறையில் தம் உயரிய எழுத்தால் செதுக்குகிறார்.

பேராசிரியர் சு. பசுபதி – பேட்டி

1. உங்களைப் பற்றி அறிமுகக் குறிப்பு தர முடியுமா? என் அப்பாவுக்குச் சொந்த ஊர் கரூருக்கு அருகில் உள்ள வாங்கல் கிராமம்.  என் அம்மா பிறந்தது வெங்கரையில். நான் பிறந்து, வளர்ந்தது சென்னையில். பள்ளிப் படிப்பு தி.நகரில்  உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி (வடகிளை)யில். பிறகு கல்வி லயோலா “பேராசிரியர் சு. பசுபதி – பேட்டி”

“கலையின் மாயத்தைப் பற்றி எழுதுகிறேன்”

ரா கிரிதரன் பேட்டி ரா. கிரிதரனின் அம்மா ஊர் திண்டிவனம். அப்பாவுக்கு புதுச்சேரி. புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பட்டப்படிப்பு. அதன்பின் தகவல் தொழில்நுட்பத்தில் எம்.டெக். படிப்பு. சென்னை, பெங்களூர், பூனா போன்ற நகரங்களில் வேலை செய்தபின் 2006 ஆண்டு முதல் இங்கிலாந்து வாசம். ““கலையின் மாயத்தைப் பற்றி எழுதுகிறேன்””

கத்திகளின் மொழி

உடலின் சுத்தம் மிகவும் முக்கியமானது. ஒரு சிறு கண்ணீர்ச் சொட்டு அந்தப் படையலைக் கெடுக்கக்கூடும். ஒற்றை முடிகூட கடவுள்களுக்கு அர்ப்பணிக்கப்படும் அந்த ஆத்மாவைக் குலைக்கக்கூடும்.…

“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”

மிகச் சிறிய இடத்தில் எழுத்தாளர் திலீப் குமாரும் ராமகிருஷ்ணனும் சிகரெட் புகைசூழ வேலை செய்துகொண்டிருப்பார்கள், நானும் என் மாமாவும் அடுத்த அறையில் புத்தகங்களை மேய்ந்து கொண்டிருப்போம். க்ரியா ஒரு கண் திறப்பு அனுபவமாய் இருந்தது. அங்குதான் நான் சுந்தர ராமசாமியின் புத்தகங்களையும் ஸ்ரீராமின் மொழியாக்கங்களையும் அறிந்துகொண்டேன். தார்கோவ்ஸ்கியின் Sculpting in Time என்ற புத்தகத்தின் தமிழாக்கமும் அங்கேதான் கிடைத்தது.

இனிய நினைவு

இயற்கையிலேயே மகாபாரதக் கதையின் மீது எனக்கிருந்த ஆர்வமே பர்வ நாவலை மொழிபெயர்த்ததற்கான முதல் காரணம். பைரப்பாவின் கதைப்பின்னல் எப்போதும் உணர்ச்சிகரமானதும் வேகமும் கொண்டது. அதன் மீது எனக்கு எப்போதும் விருப்பமுண்டு. எங்கோ நடைபெற்ற கதையாக அன்று, நம் கண் முன்னால் நடைபெறுகிற ஒரு கதையாக நம்பகத் தன்மையுடன் அவர் படைப்புகளைப் படிக்கலாம்.

வங்கச் சிறப்பிதழ் அறிவிப்பு

சொல்வனம் தன் 12 ஆண்டுக் கால இயக்கத்தில் பல மொழிபெயர்ப்புகளைக் கொடுத்திருக்கிறது. ஒரு பருந்துப் பார்வையில் கவனித்தால், அவற்றில் பெருமளவும் இங்கிலிஷிலிருந்து பெறப்பட்டவையாகவே இருப்பது தெரியும். இந்தியாவைப் போன்ற முன்னாள் காலனிய நாடுகளின் ஒரு பேரவதி என்ன என்றால், அவற்றின் நெடுங்கால காலனியாதிக்கத்தின் சுவடுகள் வரலாற்றில் துவங்கி சமூகத்தின் “வங்கச் சிறப்பிதழ் அறிவிப்பு”

யதார்த்தங்களின் சங்கமம் – நீலகண்டம் நாவல்

This entry is part 46 of 72 in the series நூறு நூல்கள்

சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம் நாவலை ஒவ்வோர் அத்தியாயமாக அவர் அனுப்பும்போது படித்திருந்தேன். முழு நாவலாக வெளியான பின்னர், ஒரு முறை முழுவதாகவும் சில பகுதிகளைத் தனித்தனியேயும் படித்திருக்கிறேன். சுனிலின் சிறுகதைகளையும் தொடர்ந்து படித்துவந்ததிலிருந்து அவரது கதைசொல்லும் பாணி எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக ஆகியிருக்கிறது. அதற்கான அடுத்தகட்டச் சாட்சியாக “யதார்த்தங்களின் சங்கமம் – நீலகண்டம் நாவல்”

பாசுரங்களில் கசியும் வாழ்க்கை

நானும் இப்பாசுரங்களைப் படிக்கும்போது, திருமங்கையாழ்வாரின் திருமொழி வரிசையில் தமிழ் நனைந்த உவமைகளாக ஆற்றங்கரைவாழ் மரம்போல (2022), காற்றத்திடைப்பட்ட கலவர் மனம்போல (2023), பாம்போ டொருகூரையிலே பயின்றாற்போல் (2024), இருபா டெரிகொள்ளியினுள் எறும்பேபோல் (2025), வெள்ளத் திடைப்பட்ட நரியினம் போலே (2026) ஆகியவற்றைக் கண்டு ஆச்சர்யமாக இருந்தது. இவற்றுள் பல உவமைகள் தற்போது வழக்கில் இல்லாமல் தமிழுக்கே சம்பந்தமில்லாத வாய்ச்சொற்கள் நிரம்பி வழியும் வழக்கத்தைக் கொண்டு பாசுரங்களின் தமிழ்மீது ஆர்வம் குறைவது வருத்தத்துக்குரியது.

அ.வெண்ணிலாவின் நாவல்- கங்காபுரம்-குறித்து ஒரு வாசகப்பார்வை

முதல் பகுதியில், சரியான இடத்தில் இந்தப் புதினத்தை துவங்க, திருமதி. வெண்ணிலா அதிகம் உழைத்திருக்கிறார். மார்கழி திருவாதிரை நாள், தில்லை, திருவாரூர், கிள்ளை, தஞ்சை என்று பல இடங்களில் எப்படி இருக்கிறது என்பதை சொல்லி, அரசியல் ரீதியாக எப்படி இருந்திருக்கும் என்ற பார்வையை முன்வைக்கிறார்.

ஆற்றுப்படுத்தல்!

எவ்வாறு முருகப்பெருமானை வணங்குவது என இறையருள் பெற்ற ஒருவன் மற்றொருவனுக்குச் சொன்னான்: ‘இன்னிசை முழங்க வெறியாட்டயர்ந்து, அந்த வெறியாடிய களத்தில் ஆரவாரமாகப்பாடி, வாயில்வைத்துக் கொம்புகளை ஊதி முழக்கி, முருகப்பெருமானின் பிணிமுகம் எனும் யானையை வாழ்த்தி வணங்குவர்.

இலக்கியத்தில், தொலைபேசிக்கு ஓர் இரங்கற்பா

ஒரு தொலைபேசி செய்யும் வித்தைகள்- நாடகத்தனமான திருப்பங்கள், அர்த்தங்களின் உள்ளீடு, அழைப்பை ஏற்று பதிலளிக்கும் முன்னரே சாவின் நிழலோ என தகிக்கும் மனம் போன்றவையோ? நிலத்தடித் தகவல் வடம் (நம்ம தொலைபேசி தானுங்க) மர்மத்தின் கூறாகவும், சின்னதும் பெரியதுமான நிகழ்வுகளின் ஊற்றாகவும் இருக்கிறது. அது, வெளியுலகின் சத்தங்களை அமானுஷ்யமாக அறைக்குள் கடத்தும் கருவி. புனைவுலகில், அது கொண்டாடப்பட்டும், மெதுவாக மறைந்தும்கொண்டிருக்கும் கருவி.

கல்யாணி ராஜன் கவிதைகள்

நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளுடன் கலந்து
புது சூத்திரங்களைப் படைக்கிறது
அது ஓடியபடி இடையிடையே நிறுத்தங்களை உண்டாக்குகிறது.
அகவயமாக புறவயப் பார்வையைச் சிந்தவைக்கிறது
குறைந்த அளவு மின்தேக்கி மூலம் அதிக அளவு சக்தியை
அது உந்த முயலும்போது
அதன் குறிக்கோள்கள் தடுக்கிவிழத்தான் செய்கின்றன.

பாவண்ணனின் ‘கிருஷ்ண ஜெயந்தி’ – அழியாத வெண்பாத சுவடுகள்

கர்ணன் பற்றி அறிய வேண்டுமெனில், ‘கர்ணன்’ திரைப்படம் சிறந்த தேர்வன்று என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அத்தகைய தவறான தேர்வுகளே தர்மம் உள்பட சரியான கற்பிதங்களைத் திசை திருப்பி விட்டுவிடுகின்றன. தர்மம் என்னும் பெயரில் அதர்மம் போலி வேஷம் கொண்டு திரிவதை உலகம் பாராட்டுவதால் தர்மம் என்ற பொருள் திரிந்து விடுவதில்லை.

பொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே?

வாசகர்கள் பொலான்யோ பற்றிய இந்தக் கட்டுரையின் முதல் பகுதியை மேம்போக்காகவாவது பார்த்துவிடுவது உத்தமம், அவரது வாழ்க்கை குறிப்புகளில் சிலவற்றைப் பற்றிய விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்ளவும் பொலான்யோவின் புனைவில் உள்ள கிறுக்குத்தனத்தின் முறைமையைப் புரிந்து கொள்ளவும் அது உதவக்கூடும். மேலும், ‘சாவேஜ் டிடெக்டிவ்ஸ்‘ பற்றிய இந்தக் கட்டுரையை ‘துப்பறியும் கதை’ “பொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே?”

தோல்வியுற்ற கவிஞர்களின் நாவல்

‘The Savage Detectives’ 54 கதைசொல்லிகளின் கதையாடல் “நான் ஒரு தோல்வியுற்ற கவிஞன். ஒரு வேளை ஒவ்வொரு நாவாலாசிரியனும் முதலில் கவிதையையே எழுத முயற்சிக்கிறான், அவனால் முடியவில்லை என்பதை உணர்ந்தபின் சிறுகதையை முயற்சிக்கிறான். அதுவே கவிதைக்குப் பிறகு சவாலான வடிவம். அதிலும் தோல்வியுற்ற பிறகு மட்டுமே அவன் நாவலை “தோல்வியுற்ற கவிஞர்களின் நாவல்”

டாக்டர் முக்தேவி பாரதி – ஓர் அறிமுகம்

இலக்கிய உலகில் தற்போது காணப்படும் பெண்ணீயம், தலித் படைப்புகள், இடதுசாரி இலக்கியம், வலதுசாரி இலக்கியம் போன்ற அனைத்து வாதங்கள், இயங்கள், பிரிவுகள் பற்றி அறிந்திருந்தாலும் அவை எதிலும் சேராமல் மனிதாபிமானத்தோடு கூடிய படைப்புகளே தன்னுடையவை என்ற அவர் கூற்று, அவருடைய சிறு கதைகள், நாவல்கள், கவிதை, கட்டுரை நூல்கள், பத்திகள், விமரிசனக் கட்டுரைகள் போன்ற அனைத்திலும் பிரதிபலிப்பதைக் காண முடிகிறது. எத்தகைய படைப்பாயினும் தனக்கான முத்திரையோடு வாசகர்களை சென்றடைவது அவருடைய தனித்திறமை.

“நிரந்தரம் எழுதிக்கொண்டே இருக்கிறேன்!” – முக்தேவி பாரதியுடன் ஒரு நேர்காணல்

நேர்காணல் – ராஜி ரகுநாதன் எழுத்தாளர் முக்தேவி பாரதியைப் பற்றிய அறிமுகம் கேள்வி: அம்மா! உங்கள் சிறுவயது வாழ்க்கை, உங்கள் ஊர், பள்ளிப் படிப்பு பற்றி கூறுங்களேன்: பதில்: நான் பிறந்தது 1940ல் கிருஷ்ணா ஜில்லாவில் ‘பெடனா’ என்ற கிராமம். அங்கு என் தாத்தா சப் ரிஜிஸ்ட்ரார் ஆக ““நிரந்தரம் எழுதிக்கொண்டே இருக்கிறேன்!” – முக்தேவி பாரதியுடன் ஒரு நேர்காணல்”

சுஜாதாவின் “நகரம்”- ஒரு வாசிப்பனுபவம்

“Patient பேரு என்ன?” என்ற கேள்விக்குத் தன் கணவனின் பெயரைக் கேட்கிறார்கள் என நினைத்துக்கொண்டு அவர் இறந்துவிட்டதாகக் கூறும் இடத்திலும், “எத்தன ரூபா மாசம் சம்பாதிப்பே?” எனும் கேள்விக்கு “அறுப்புக்குப் போனா நெல்லாக் கிடைக்கும், அப்புறம் கம்பு, கேழ்வரகு!” என்று கூறும் இடத்திலும் வள்ளியம்மாளின் அப்பாவித்தனத்தையும், அறியாமையையும், அன்றாடங்காய்ச்சி நிலைமையையும் எளிதில் உணர்த்தி விடுகிறார் சுஜாதா.

கேதார்நாத் சிங் கவிதைகள்

தரை மேல் என் காலை அப்போது தான் தூக்கியிருந்தேன்
குறுஞ்சிறு வார்த்தையொன்று
குருதியில் குளித்து
எங்குமில்லாததிலிருந்து
என்னை நோக்கி மூச்சிரைக்க
ஓடி வந்து உரைத்தது-
”வா, உன்னை நான் அழைத்துச் செல்கிறேன் வீட்டுக்கு ”

தத்வமஸி: புத்தக அறிமுகம்

This entry is part 13 of 72 in the series நூறு நூல்கள்

நடுவுநிலைமையாக இருக்கவேண்டுமானால் வேத காலம் என்பது கி மு 2000 – 2500 என்று கொள்ள வேண்டியிருக்கிறது. பாலகங்காதரத் திலகர் கி மு 4500 என்று கூறுகிறார். அதற்கு முன்பு என்று கூறும் ஆராய்ச்சியாளர்களும் பலர் உள்ளனர்.இந்தியாவில் உருவான அளவு சிந்தனையாளர்களான ஆச்சார்யர்களின் திருக்கூட்டப்பெருக்கம் வேறொரு நாட்டில் இருந்திருக்கவேண்டும் என்று கருதினால், அது கிரேக்கம் மட்டுமே. ஆனால் கிரேக்கத்தில் தேல்ஸ், ஹெராக்ளிட்டஸ் போன்றவர்கள் உண்டாவதற்கு எவ்வளவோ முன்னதாக இந்தியாவில் வாமதேவரும், யாக்ஞவல்கியரும் தோன்றி முடிந்திருந்தார்கள்.

வங்கக்கடலின் அலைகள்

வாழ்க்கையின் அடிகளால் மனம் விழும் போது, எங்கோ ஒரு மனமும் கையும் சேர்ந்து எழுதிய இலக்கியங்கள், தோளில் தட்டி தலையில் கைவைத்து என்னன்னாலும் இந்த ஜீவிதம் இனிது என்று தூக்கிவிடுகிறது. படைப்பாளன் என்ற சொல் எத்தனை பொருத்தமான சொல்.

மதுமலர்த்தார் வாங்கி நீ வா..

“பயில்” என்றால் கற்பது என்பது நாம் அறிந்ததே. தூதுப் பாட்டின் பொருளை கற்றுத் தரும் வண்ணம் ஏற்றப்பட்ட கலிவெண்பாவினாலே…என்ற நேர் பொருள் நாம் கொண்டாலும், இன்னொரு அர்த்தமும் நம்மால் உண்டாக்க இயலும். “பயில்” என்பதற்கு “சைகை செய்வது” என்ற பொருளும் உண்டு. தூதின் உட்பொருளை சைகை செய்யும் வண்ணம் ஏற்றப்பட்ட கலிவெண்பாவினாலே…என்று சொன்னால் இன்னும் நயம் கூடுகிறது அன்றோ?

கலி வெண்பா என்பதை ஏன் களி வெண்பா என்று பெயரிடாமல் விட்டார்கள் என்றெண்ணும் அளவு உற்சாகம் ஊட்டும் வாசிப்பு எழில் கொண்டது இன்னிசை கலிவெண்பாவும் நேரிசை கலிவெண்பாவும்.

முறுக்குக்கம்பிகளும் ஷாம்புக்களும் கோ ஸ்பான்ஸர்ட் பை தருணங்களும் – கவிஞர் இசையின் கவிதை குறித்து.

கவிதையாக்கம் குறித்து நமக்கிருக்கும் மயக்கங்களைத் தாண்டி கவிஞர் இசையின் வரிகளைப் பார்க்க வேண்டியுள்ளது. இவை வார்த்தைகளின் வரிசை மீதும், கவிதை இலக்கணம் மீதும் மதிப்புள்ள கவிதைகள அல்ல. இயல்புக்கும் கற்பனைக்கும இடையே சஞ்சரிக்கும் வேடிக்கை உலகத்தைப் பற்றிப்பேசுபன. மரபு வழி மனது கொண்டவர் என்றாலும் அதை மறுதலித்து சற்றேனும் தளர்த்திக்கொள் என எதிர் தரப்பிலிருந்து தன் கவிதை உலகை அமைத்துக்கொள்பவராகக் கவிஞர் தெரிகிறார். அவர் மனம் இயங்கும் முறை அப்படி இருக்க வேண்டும், இல்லாவிட்டால் ஏதேனும் ஒரு சொல்லேனும் நீ எங்கள் உலகவாசி அல்ல எனத் தள்ளிவிட்டுவிடக்கூடும்.

துயரத்தில் முடிந்த சுந்தரராமசாமியின் காவியம்

சென்றமாத அம்ருதாவில் லட்சுமி மணிவண்ணன் எழுதிய தொடர் பத்தியைப் பிடிக்க நேர்ந்தது. அதில் கமலா அம்மா, ‘நீங்கள் எல்லாம் அவரிடமிருந்து விலகிப்போகாமல் இருந்திருந்தால் இன்னும் சிலகாலம் வாழ்ந்திருப்பார்’ என்று சொன்னதாக எழுதியிருந்தார். என் மனம் கலங்கிவிட்டது. அப்படிப் பிரிய நேர்ந்ததும் இயல்பானதுதான் என்றும் எழுதியிருந்தார். கமலா அம்மாவிற்கு என்னை நினைவிருக்குமானால் – எனக்கு அச்சு அசலாக நினைவிருக்கிறது. அந்த அன்னமிட்ட இதயத்தை நோக்கி ஒன்றை சொல்லிவிடு வேணு என்று என் அந்தராத்மா துடிக்கிறது. அம்மா, சுந்தர ராமசாமி போல இலக்கியக் களத்தில் நான் தனித்துவமாக வளர்ந்திருக்கிறேன். அப்படி வளர்வதைத் தான் அவரின் கட்டுரைகளும், படைப்புகளும் உணர்த்தின என்று மட்டும் இவ்விடத்தில் சொல்லிக்கொள்கிறேன். இந்தத் தமிழ்நாட்டில்தான் தன் சக படைப்பாளிகளை, இளம் படைப்பாளிகளை ரொம்ப கண்ணியத்துடன் வரவேற்றார். நிரம்ப அக்கறையுடன் அவர்களிடம் உரையாடினார். காது கொடுத்துக் கேட்டார். தன் தரப்புப் பார்வையைத் தெளிவாக முன்வைத்தார். கடிதங்கள் எழுதினார். அதற்கெல்லாம் மேலாக மிகுந்த அன்புடன் உபசரித்தார். இது தமிழ்ச்சூழலில் அபூர்வமானது. ஆனந்தமானது. இந்த இலக்கிய ஆனந்தத்தைத் தந்ததில் கமலா அம்மாவிற்கு அதிகப் பங்குண்டு. அவர் புன்னகையுடன் விலகிநின்று செய்தார். சு.ரா.விற்கு இருந்த பிடிவாதத்தைப் போன்றே அவரிடம் இலக்கியம் கற்று எழுதவந்த இளம் படைப்பாளிகளுக்கும் சில நியாயமான பிடிவாதங்கள் ஏற்பட்டன. எப்படியாயினும் சுந்தர ராமசாமி தமிழ் இலக்கியச் சூழலில் ஜென்டில்மேன்தான். அந்தப் பேறு இன்னொருவருக்கு இப்போதைக்கு இல்லை.

கவிதைகளில் ஆண்பார்வை

நிச்சயம் போய் விட்டிருக்கும்: இல்லை
நிச்சயம் இருக்கும்: ஈ போய்விட்டிருக்கும்

சி சு செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு – நிறைவுப் பகுதி.

வேடிக்கையாகத் தான் இருக்கிறது. இன்று செல்லப்பா காலமாகி பத்து பதினைந்து வருடங்களுக்குப் பிறகு, அவரைப் பற்றி நினைப்பவர்கள் – நினைப்பவர்கள் இருக்க மாட்டார்களா என்ன? எட்டு கோடி தமிழரில் அவரிடம் பழகிய அவருக்கு பத்திருபது வயது இளையவர்கள், அந்த தலைமுறையில் அவர் பெயரைக் கேள்விப்பட்டவர்கள் சிலராவது இருக்க மாட்டார்களா என்ன? இருப்பார்கள் தான் – அவர்கள் முதலில் அவரை விமர்சகராகத் தான் நினைவு கூறுவார்கள். அவர் சுதந்திரப் போராட்ட உணர்வு கொண்டதும் சிறை சென்றதும் கடைசி வரை காந்தி பக்தராகவே இருந்ததும் தவிர அவர் வாழ நினைத்தது ஒரு எழுத்தாளராக. எழுத்தாளராக வாழ்வது சாத்தியமாகத்தான் அவர் சென்னைக்கு வந்ததும். அவர் பழகியதும் உடன் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ்ந்ததும் எழுத்தாளர்களோடு தான். சிறு கதைகள் அவர் மனத்தை ஆக்கிரமித்திருந்தன. க.நா.சு. அந்த காலகட்டத்தில் விமர்சனத்தின் தேவையை வலியுறுத்திப் பேசி வந்த காலத்தில் எல்லாம் அவர் பிச்ச மூர்த்தி போல், இன்னும் மற்ற சக எழுத்தாளர்கள் போல் அதை ஏற்க மறுத்தே வந்திருக்கிறார். க.நா.சு. குளவியாகக் கொட்டிக் கொட்டித் தான் செல்லப்பாவும் குளவியானார்.

கவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில

கவிதையைக் கலையின் அரசி என்பார்கள். கல்லாத கலை என்பார்கள். கவிதை என்றால் என்ன? யாப்பிலக்கண விதிகளைக் கவனித்து வார்த்தைகளைக் கோர்த்து அமைத்து விட்டால் கவியாகுமா? கவிதையின் இலட்சணங்கள் என்ன? கவிதைக்குப் பல அம்சங்கள் உண்டு, ஆனால் அவற்றின் கூட்டுறவு மட்டும் கவிதையை உண்டாக்கி விடாது. கவிதையின் முக்கிய பாகம் அதன் ஜீவ சக்தி. அது கவிஞனது உள்மனத்தின் உணர்ச்சி உத்வேகத்தைப் பொருத்துத்தான் இருக்கிறது.

அய்ன் ராண்ட் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதம் – இறுதிப் பகுதி

யோசித்துப் பாருங்கள், உங்கள் பசிக்காகவும் உங்கள் குழந்தைகளின் நோய்க்காகவும், குடும்பத்தின் வறுமைக்காகவும் உங்களுக்கு ஒரு பணி வழங்கப்பட்டால் அது எப்படி உங்களுக்கு வழங்கப்பட்ட பணியாக இருக்க முடியும் ? அது பசிக்கும், நோய்க்கும், வறுமைக்கும் கிடைத்த வெற்றியே அன்றி மனிதனுக்கு கிடைத்த வெற்றி அன்று. இந்த பசியோ, நோயோ, வறுமையையோ நீங்கள் சாராதிருந்தால் உங்களுக்கு அந்த வேலை கிடைத்திருக்காது. உங்கள் திறமைக்கு வழங்கப்படும் பணியில் தான் உங்களால் சுய கௌரவத்தோடு தலை நிமிர்ந்து பணியாற்ற முடியும்.

ஆட்டோவில் போன அசோகமித்திரன்

சுஜாதா காலமான போது, அஞ்சலி செலுத்த அசோகமித்திரன் வந்திருந்தார். இரண்டாம் முறையாகப் பார்த்தேன். மத்தியான வேளையில் சென்னை வெயிலுக்குக் களைத்துப் போயிருந்தார். வீட்டுக்கு கிளம்பியவர், முடியாமல் மயக்கத்தில் அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டார். உடனே சிலர் அவருக்கு தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தார்கள். கொடுத்தவர்களுக்கு நிச்சயம் அவர் அசோகமித்திரன் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தண்ணீர் அருந்திவிட்டு சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “வேளச்சேரிக்கு போகணும், பஸ்டாண்ட் வரை யாராவது கொண்டு விட முடியுமா ?” என்று கூட்டத்தைப் பார்த்து கேட்டதை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. அங்கிருந்த ஒரு பிரபல டைரக்டர், “இவர் தமிழ்நாட்டின் Hemingway. இவருக்கா இந்த நிலமை ?” என்றார்.

அய்ன் ராண்ட் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதம் – பகுதி 2

அந்த அறிவுப்பசியே மனிதனுக்கு எந்த வகையிலான தடையையும் தகர்த்தெறிவதற்கான உந்துதலைத் தர முடியும். இல்லையென்றால் கும்பகோணத்தில் ஏதோ ஒரு மூலையிலிருந்த ராமானுஜன் ஹார்டிக்குக் கடிதம் எழுதியிருக்க முடியாது. சைவ உணவை மட்டுமே சாப்பிடும் இளைஞன் உடலை வாட்டும் குளிரைப் பொறுத்து உடல் நிலை தேயும் காலத்திலும் கணிதத்தைப் பற்றியே சிந்தித்தது எதிர்காலத்தில் பெரும் பணமோ புகழோ பெறப்போகிறோம் என்று நினைத்தல்ல.

அய்ன் ராண்ட் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதம் – ஓர் அறிமுகம் – பகுதி 1

மனிதர்களை ஒரு பொதுவான தளத்தில் வைத்து எடை போடும் போது இரண்டு நிலையினராக பிரிக்க முடியும். அறிவு சார்ந்து இயங்குபவர்கள், உணர்வு சார்ந்து இயங்குபவர்கள். பெரும்பாலும் நாம் அனைவருமே இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையில் பல்வேறு விகிதாசாரங்களில் இயங்குகிறோம்.

அக்ரகாரத்தில் பூனை

தங்கசாலைத் தெருவில் ஏகாம்பரேஸ்வர் கோயிலுக்குப் பின்புறம் தெப்பக்குளத்தைச் சுற்றி ஏகாம்பரேஸ்வர் அக்ரஹாரம் ‘ப’ வடிவில் இருந்தது. பொதுவாக ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்தில் பூனைகளே நுழைவதில்லை. அக்ரஹாரவாசிகளும் பூனைகளை அவ்வப்போது தங்கசாலைத் தெருவிலோ கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலோ அல்லது…