கவிதைகளில் ஆண்பார்வை

இவ்விதழில் இணைய உரையாடலில் சில இலக்கியப் படைப்புகள் பற்றிப் பேசப்பட்டது. அவை நாவல்களாகவோ, கதைகளாகவோ இருந்தன. கவிதைகளிலும் இது அடிக்கடி புலப்படுகிறது. தன்னுணர்வில்லாத ஆண் பார்வையாகவோ, எள்ளலாக தன்னை உணர்ந்த ஆண் பார்வையாகவோ, பிறரின் பார்வையை இளக்காரப்படுத்தும் விதமாகவோ பற்பல அணுகல்கள் கிட்டுகின்றன.

சில எடுத்துக் காட்டுகளாகக் கொடுத்தால் ‘ஆண் பார்வை’ என்று எதைச் சொல்லலாம் என்பது உடனடியாகப் புலப்படும் என்று கருதினோம். அந்த நோக்கில், சில கவிதைகளை இங்கு கொடுத்திருக்கிறோம். ஒன்று தமிழில் சென்ற நூற்றாண்டின் இறுதிக் கால் பகுதியில் வெளியான கவிதை. ஞானக் கூத்தன் அவர்களின் கவிதைத் தொகுப்பில் காணக் கிட்டிய கவிதை இது.

கண்ணைக் கவரும் மார்பகங்கள்pablo_picasso
பார்ப்பதரிதாகப் போய்விட்டதென்று
சுற்றிலும் பார்த்தேன்:
உயர்ந்த வெள்ளைத் துணிக்குள்
இரண்டில் வலது பொதிந்திருந்தது
அதன் மேல் ஆனால் ஒரு ஈ
சாமரம் போல மார்பசைந்தது
அசையாதிருந்தது நான்
இடத்தை விட்டுப் போக நேர்ந்தது
போய் விட்டிருக்குமா ஈ
நிச்சயம் போய் விட்டிருக்கும்: இல்லை
நிச்சயம் இருக்கும்: ஈ போய்விட்டிருக்கும்
ஈ போய்விட்டிருக்கும் நிச்சயம் கூடப்
பார்க்கப்படாத ஈ யூகத்தளவு தான்:
கண்ணால் எடுத்துச் செல்லப்பட்ட
கண்ணைக் கவர்ந்த மார்பகத்தின் மேல்
என்றும் இருக்கிறது ஈ.
ஞானக் கூத்தன் (1982)

oOo

இனி சமீபத்தில் வெளிவந்த ஒரு அமெரிக்கக் கவிதை.

கவலைப்படுத்தும் நிலையிலொருவன்

ஒன்றுமில்லாததைக் கற்பனை செய்வதில் மோசமாகத் தோற்றுப் போனேன்.
ஏதோ எப்போதும் வந்து எனக்குத் துணையாயிற்று.
மேஜையின் குறுக்கே கடக்கும் அடையாளம் புரியாத ஒரு சிறுபூச்சி,
என் அம்மாவின் நினைவு, என் காதில் ஒலிக்கும் ரீங்கரிப்பு.
நான் அலைக்கழிந்தேன், புரியாமல் திகைத்தேன்.
ஒரு துளை என்பது தப்பாமல் எதிலோதான் ஒரு துளையாகிறது.
 
சுமாராக ஏழுமணிக்கு இன்று காலை, தனியான ஒரு பிச்சைக்காரன்
எனக்காகக் காத்திருந்தான், தன் சிறிய, நோய்ப்பட்ட நாயோடு
அதன் கண்கள் என்னைக் கண்டதும் பெரியதாயின.
அங்கே போகிறான், அதன் கண்கள் சொல்லின, அந்த அருமையான மனிதன்
அவனுக்கு (அவனின் புறத்தோற்றங்கள் காட்டுவது போலன்றி)
மொத்த உலகில் ஏதும் புனிதமல்ல.
 
ரொட்டிக்கடையில் நுழையவும் என் மனம் துணுக்குற்றது
முன்னறியாத பெண்ணொருத்தி உதவவெனப் பின்னிருந்து
வெளியே வந்தவள் நகரில் இரவைக்
களிப்புடன் கழிக்கவென அணிந்த உடையிலிருந்தாள்
முன்புறம் தாழ்த்தி வெட்டிய, இறுக்கமான கருப்பு ஆடை.
இறுகிய முகம், சந்திப்பைத் தவிர்த்த கண்களுடன் அவள்
என் கையிலொரு மஃபினை வைத்தாள் ஏதோ,
நானென்ன நினைத்துக் கொண்டிருந்தேனென்பது
அத்தனை நேரமும் அவளுக்குத் தெரிந்திருந்தது போல.
சார்ல்ஸ் ஸிமிக்

இவை இரண்டிலும் ஆணொருவனின் பார்வைதான் பேசப்படுகிறது.

தமிழ்க் கவிதையில் நேரடியாகவே அது கருதப்படுகையில் மறைமுகமாக இழிக்கவும் படுகிறது. மேற்கின் இந்தக் கவிதை ஆணின் பார்வைக்குப் பின்னிருக்கும் கற்பனையைப் பெண்ணொருத்தி மௌனமாகவே விமர்சிப்பதைச் சுட்டுகிறது.

இரு கவிதைகளையும் ஒப்பிட்டுப் பேச அதிக நேரம் பிடிக்காது. ஆனால் வாசகர் கற்பனையில் ஊடுருவ மனமில்லாது விலகுகிறோம். உங்கள் மறுவினைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

oOo

ஆங்கில மூலம் கீழே. இது சார்ல்ஸ் ஸிமிக் என்ற அமெரிக்கக் கவிஞரின் கவிதைகளில் பலவற்றைச் சேர்த்துத் தொகுத்த ஒரு புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. சார்ல்ஸ் ஸிமிக்கின் இன்னும் சில கவிதைகளும் இவ்விதழில் இடம் பெற்றூள்ளன.
புத்தக விவரம்:
New and Selected Poems 1962-2012: by Charles Simic
(Houghton Miffin Harcourt: 2013)
 
The One To Worry About
I failed miserably at imagining nothing.
charles-simic-Poets_Writers_AuthorsSomething always came to keep me company:
A small nameless bug crossing the table,
The memory of my mother, the ringing in my ear.
I was distracted and perplexed.
A hole is invariably a hole in something.
 
About seven this morning, a lone beggar
Waited for me with his small, sickly dog
Whose eyes grew bigger on seeing me.
There goes, the eyes said, that nice man
To whom (appearances to the contrary)
Nothing is this whole world is sacred.
 
I was still a trifle upset entering the bakery
When an unknown woman stepped out
Of the back to wait on me dressed for a night
on the town in a low-cut, tight fitting black dress.
Her face was solemn, her eyes averted,
While she placed a muffin in my hand,
As if all along she knew what I was thinking.
 
– Charles Simic

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.