நான் கல்லூரியில் படித்த காலத்தில் கணினித் திரையில் ஆரஞ்சு அல்லது பச்சை கலர் எழுத்துக்கள் மட்டும் தெரியும். பேராசிரியர்கள் உபயோகிக்கும் திரை ஒரு மாதிரி திருச்சி மைகேல் ஐஸ்கிரிம் வண்ணத்தில் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். கலர் கம்யூட்டர் ஆர்.இ.சி போன்ற கல்லூரிகளில் பார்த்திருக்கிறேன். கல்லூரியில் செயற்கை அறிவாற்றல் ( Artificial Intelligence ) மீது ஒரு எனக்கு ஒரு மோகம் இருந்தது.
ஆசிரியர்: சுஜாதா தேசிகன்
ஓட்டையின் உள் ஓர் ஓட்டை
இந்த மோபியஸ் துண்டால் என்ன பயன் என்று யோசிக்கலாம். ஏர்போர்ட்டில் கன்வேயர் பெல்ட் மோபியஸ் தான். எல்லா இடங்களும் ஒரே மாதிரியான தேய்மானம் கிடைக்க இந்த ஏற்பாடு. ஒரு காலத்தில் ரிப்பன் வைத்த தட்டச்சு இயந்திரங்கள், மற்றும் கணினி பிரிண்டர்களின் ரிப்பன்கள் மோபியஸ் முறையில் தான் இருந்தது. நாம் தான் அதைக் கவனிக்கவில்லை! இன்னொரு மிகச் சுவாரசியமான விஷயம் இருக்கிறது. தொடர்ச்சியாகப் பதிவு செய்ய இரண்டு பக்கமும் பதிவு செய்யக்கூடிய டேப் மோபியஸ் உத்தியை வைத்துத் தான் செய்கிறார்கள்.
பயணங்கள், புத்தகங்கள்
“இது என்ன?” என்று ஆர்வமாகக் கேட்க, “முதலைக் கறி,” என்றார்கள். கஜேந்திர மோட்சம் நடந்த இடம் இதுவாகக் கூட இருக்கலாம். என்னுடன் கூட இருந்தவர் நான் முழிப்பதை பார்த்து “மே ஐ ஹெல்ப் யூ?” என என்று விசாரிக்க, “நான், வெஜிடேரியன்” என்றேன் அப்பாவியாக. அதனால் என்ன என்று சாம்பாரில் நீந்திக்கொண்டு இருந்த முதலையைப் பாத்திரத்தில் கரையோரம் தள்ளிவிட்டு சாம்பாரை மட்டும் எடுத்து என் தட்டில் போட வந்தார். ‘ஆதிமூலமே!’ என்று நடுங்கியேவிட்டேன்.
காதலாவது கத்தரிக்காயாவது
கத்தரிக்காய் வாங்கும்போது, அதில் பூச்சி இருக்கிறதா என்று பார்த்து வாங்குவீர்கள் தானே? நான் எவ்வளவுதான் பார்த்துப் வாங்கி வந்தாலும், வீட்டில் வந்து அதை வெட்டும்போது, மனைவியிடம் திட்டு நிச்சயம். பல கத்தரிக்காய்கள் உள்ளே சொத்தையாக இருப்பதைப் பார்க்கலாம். இனிமேல் இந்தப் பிரச்சனை இருக்காது. வந்துவிட்டது மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்- BT-Brinjal!
பூவா தலையா
ஒருவழியாக ராத்திரி பத்து மணிக்கு பேனரில் இருந்த தலைவர் உயிர்பெற்றுப் பேசத் தொடங்கினார். பேனரில் இருந்த அனைவரின் பெயரையும் குறிப்பிட்டபின், “தாய்மார்களே, பெரியோர்களே… அலைகடலென திரண்டு வந்திருக்கும் அன்பு நெஞ்சங்களே… வாழ்த்துச் சொன்ன.. ” என்று ஆரம்பித்துவிட்டு, எதிர்கட்சிக்கு ஏகப்பட்ட சவால் விட்டு, ஏதேதோ பேசிவிட்டு இத்துடன் என் உரையை முடித்துக்கொள்கிறேன்” என்று சொன்னபோது பதினொன்றை. கூட்டம் மெல்ல கலையத் தொடங்கிய போது, கோயிலுக்குப் பின்புறம் பிரியாணி வாசனையை சாராய வாசனை அடிக்கத் தொடங்கியது.
சுஜாதா தேசிகன் – பேருக்கு ஒரு முன்னுரை
சமீபத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களைச் சந்தித்தபோது, “உங்களுக்குக் கிட்டத்தட்ட ஐம்பது வயசு இருக்கும் என்று எதிர்பார்த்தேன்” என்றார். “நான் வேண்டும் என்றால், இன்னும் பதினொரு வருஷம் கழித்து உங்களை வந்து பார்க்கிறேன்” என்றேன். முன்பு ஒரு முறை எழுத்தாளர் ஜெயமோகன் புத்தகக் கண்காட்சியில் பார்த்தபோது “ஓ, அந்த தேசிகன் நீங்க தானா?” என்றார். எப்படியோ தேசிகன் என்ற சிறிய பெயருக்கு வயசான பிம்பம் பலரின் மனதில் வந்துவிட்டது. நல்ல வேளை என் அப்பா “வேதாந்த தேசிகன்” என்று பெயர் வைக்கவில்லை.
நம்பி தெரு, நம்பிக்கை விநாயகர்
நம்பி தெருவில் அந்த பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் சென்றபோது பல கேஸ் சிலிண்டர்கள் அடுக்கப்பட்டு பிள்ளையார் ஒளிந்துக்கொண்டு இருந்தார். கோயில் பக்கத்தில் ஒரு பழைய கட்டிடம் மூடியிருந்தது, பக்கத்தில் இருந்தவரிடம் அது என்ன என்று கேட்டேன் “அது ஏதோ பழைய மண்டபம், இப்ப அது உரம் வைக்கற கோடவுனாக இருக்கிறது” என்றார். அந்த கோடவுன் மீது ஏதோ 3வது வட்ட தலைவர் பெயர் எழுதியிருந்தது.
கல்யாணி
வயலின் கச்சேரி செய்றது அவ்வளவு சுலபம் இல்லை. வாய்ப்பாட்டுனா பரவாயில்லை வயலினில் எல்லாம் ஜனங்களுக்குத் தெரிஞ்ச பாட்டா வாசிக்கணும். தெரியாத பாட்டு வாசிச்சா கேண்டீன் பக்கம் காப்பி சாப்பிடவோ, அல்லது சபா வாசல்ல கொடுக்கற மாம்பலம் டைம்ஸ், சென்னை டைம்ஸ் படிக்க ஆரம்பிச்சுடுவா. ஒரு மணி நேரத்துல ராகம் தானம் பல்லவி எல்லாம் நோ சான்ஸ். டைம் கொடுத்தாலும் எனக்கு வாசிக்கத் தெரியாது.
ராக்கெட் வண்டுகள்
தேன்கூட்டை உற்றுப் பார்த்தால் அதில் பல தேனீக்கள் டான்ஸ் ஆடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த டான்ஸும் ஒரு வகை தகவல் பரிமாற்ற உத்தி. “என்ன நீ இன்னும் சாப்பிடலையா?” இன்னிக்கு காலைல குப்புசாமி வீட்டுக்குப் பக்கத்திலதான் பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டேன்” என்று வீட்டுக்குத் திரும்பிவரும் தேனீக்களூக்கு வாகிள் டான்ஸ்(Waggle Dance) மூலம் எங்கே உணவு இருக்கிறது என்று சொல்லுகிறது.
பெங்களூர் to பெங்களூரு
எம்.ஜி.ரோடு, கமர்ஷியல் ஸ்ட்ரீட் பிளாட்பாரங்களில் சன்னாவை தட்டையாக்கி, எலுமிச்சை சாறு வெங்காயம், கொத்துமல்லியுடன் கலந்து, பேப்பரை ஜோக்கர் குல்லா மாதிரி செய்து சென்னா மசாலா என்று தருகிறார்கள். சாப்பிட நன்றாக இருக்கும். சாப்பிட்டபின் நாக்கின் மேல் பகுதி சதை கொஞ்சம் உரியும் அவ்வளவு தான். வீட்டில் கிளி வளர்த்தால் இதை கொடுக்கலாம் சீக்கிரம் பேச்சு வரும்.
சென்னையில் அட(டை) மழை!
இருபது அடிக்கு ஒரு குடையை கவுத்துவைத்து அதில் குடை வியாபாரம் செய்துக்கொண்டிருந்தார்கள். “அறுபது, எழுபது” என்று விற்ற குடைவியாபாரிகள் எல்லோரும் சொட்ட சொட்ட நனைந்திருந்தர்கள். அந்த மழையிலும் “அதோ அந்த பச்சை கலர் கொடுங்க” என்று மக்கள் வாங்கிக்கொண்டிருதார்கள். குடை அன்று சென்னை மக்களின் கை, கால் மாதிரி ஒரு புதிய உறுப்பானது.
ஆட்டோவில் போன அசோகமித்திரன்
சுஜாதா காலமான போது, அஞ்சலி செலுத்த அசோகமித்திரன் வந்திருந்தார். இரண்டாம் முறையாகப் பார்த்தேன். மத்தியான வேளையில் சென்னை வெயிலுக்குக் களைத்துப் போயிருந்தார். வீட்டுக்கு கிளம்பியவர், முடியாமல் மயக்கத்தில் அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டார். உடனே சிலர் அவருக்கு தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தார்கள். கொடுத்தவர்களுக்கு நிச்சயம் அவர் அசோகமித்திரன் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தண்ணீர் அருந்திவிட்டு சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “வேளச்சேரிக்கு போகணும், பஸ்டாண்ட் வரை யாராவது கொண்டு விட முடியுமா ?” என்று கூட்டத்தைப் பார்த்து கேட்டதை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. அங்கிருந்த ஒரு பிரபல டைரக்டர், “இவர் தமிழ்நாட்டின் Hemingway. இவருக்கா இந்த நிலமை ?” என்றார்.