ஆனந்த்-40 – ஒரு ரசிகானுபவம்

ஆனந்தின் சிறப்பு அவரது வேகம். அந்த வேகத்துக்குக் காரணம், அவருக்கு இருக்கும் அபாரமான உள்ளுணர்வு. ஒரு நகர்த்தலை, அதன் ஆழங்களுக்குச் செல்லாத போதும் கூட சரியானதா, இல்லையா என்று உணரச் செய்யும் உள்ளுணர்வு அபாரமானது. இந்த முறையில் விளையாடுவது, ஒரு சாதாரணனுக்கு மிகவும் அபாயகரமாக முடியக் கூடும்.

பரிணாமமும் பரோபகாரமும்!

வீட்டில் தம்பி தங்கைகளுடன் சாக்லெட்டைப் பகிர்ந்து கொள்ள முன்வராத குழந்தைகள் கூட, பள்ளிக்கூடத்தில் சடையப்ப வள்ளல் மாதிரி நடந்து கொள்வதும் கவனிக்கப்பட்டிருக்கிறது. குழந்தை வளர வளர, அதுவும் நம்மைப் போல் மாற ஆரம்பிக்கிறது; உதவி செய்யும் மனப்பான்மை குறுகத் தொடங்குகிறது.

சுந்தரம் ஐயங்காரின் கருணை

ஒரு வருடத்தில் அநேகமாக எல்லா சைக்கிள்களும் தத்தம் அடையாளங்களை இழந்து வெள்ளைச் சேலை கட்டிக் கொண்டன. வாத்தியாரின் மகன் என்பதால் ‘இந்த செறுக்கியுள்ளைய அப்படியே பொத்தாமரைக் குளத்துல கொண்டு தள்ளீறணும்ல’ என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டு வெளியே சொல்ல தைரியமில்லாமல் ‘ஒனக்கில்லாத சைக்கிளா, எடுத்துக்கோடே’ என்று ரத்தக் கண்களோடு அந்த மாணவர்கள் சைக்கிள் சாவியைக் கொடுத்துவிட்டு மனதுக்குள் குமுறினர்.

Y2K நெருப்பும், தொடரும் புகைமூட்டமும்

வெகுஜன மக்கள் பொதுவாக எந்த ஒரு விஷயத்தையும் எளிமைப்படுத்தி சொல்வதையே விரும்புகிறார்கள். இதன் முக்கிய விளைவு? துறைசார் அறிவு, துறை சாராதவர்களிடமிருந்து பெறப்படும் நிலை. உதாரணம் : இனம்/இந்திய வரலாறு குறித்த பாடம் எடுத்த அரசியல்வாதிகள், சினிமா உட்பட அனைத்தும் அறிந்தவனாக அறிவித்துக் கொள்ளும் கலைஞானிகள், விஞ்ஞானத்துடன் இணைத்துக் கொண்ட மதவாதிகள். இப்படி நீண்டபடியே இருக்கிறது இந்தப் பட்டியல். இதனால் சொல்பவர்களுக்கு காலப்போக்கில் ஒரு ஒளிவட்டமும், அதிகார பீடமும் நிச்சயம். கேட்பவர்களுக்கு? காதுல பூ!!

புரிந்து கொள் – 4

அண்டப் புளுகை அவிழ்த்து விடும் விளம்பரங்கள் மனிதர் அறிவை முடக்கப் பயன்படுத்தும் உத்திகளைப் போன்ற புத்தியைக் கட்டுப்படுத்தும் சக்திகளை நான் வளர்த்துக் கொண்டிருக்கிறேன். முழுக்க உடல் வழியே மட்டும் வெளிப் போகும் அலைவீச்சுகளை நான் கட்டுப் படுத்தி இருப்பதால், பிறரிடம் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி கச்சிதமான மறுவினைகளை உசுப்பி எழுப்ப என்னால் இப்போது முடிகிறது. ஃபெரொமொன்களாலும்(வாசமுள்ள உடல் கசிவுகள்), தசை இறுக்கங்களாலும் என்னால் பிற மனிதரைக் கோபமூட்ட முடியும், பாலுறவுணர்வை அவரிடம் தூண்ட முடியும், பரிவுணர்வை அவரிடம் எழுப்ப முடியும். நண்பர்களாக்கவும், அவர்களை வசப்படுத்தவும் நிச்சயமாகவே முடியும்.

ட்யூஷன் ஆசிரியரின் கவிதை

விடிகாலையில் பாடங்களை மீட்டும் வகுப்பு
ஒன்பது மணிக்கு குழு வகுப்பு
இரவில் விடைதிருத்தும் வேலை
சிவப்புப் பேனையிலிருந்து வழிவது
மனைவியின் முறைப்பு

இறந்த குழந்தைகள்

நீ பனிக்கட்டி மரங்களுக்குக் கீழ் நடக்கிறாய்
ஆனால் நீ பனிக்கட்டி பூக்களை விட அதிகம் ஜொலிக்கிறாய்
எனக்கு நாய்களின் குரைப்பு உன் அமைதியை விட
ஒன்றும் சத்தமாயில்லை.

மகரந்தம்

பொதுவாக நரமாமிசம் உண்ணும் காட்டுமிராண்டிகள் குறித்த ஜோக்குகளில் அவர்கள் ஆப்பிரிக்கர்களாகவே காட்டப்படுவது காலனிய பிரச்சாரத்தின் எச்சமாக பொதுபுத்தியில் இன்றும் வாழ்கிறது. ஆனால் அண்மையில் தெற்கு ஜெர்மனியில் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டடைந்த விஷயம் 7000 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு வாழ்ந்த மக்கள் பெரிய அளவில் மனித மாமிசத்தை சடங்கு ரீதியாக உண்டார்கள் என்பதே.

வடூவூரார் படைப்புகள்

வடூவூராரின் நாவல்கள் மட்டுமின்றி அந்தக் காலத்திலும் பின்னர் அறுபதுகள் வரையிலும் கூட தமிழ் நாட்டில் நிலவி வந்த தேவதாசி முறையும், தாசிகளும் எழுத்தாளர்களின் நினைவுகளையும் கதைகளையும் பெரும் அளவில் ஆக்ரமித்திருக்கிறது. அந்தக் காலக் கட்டத்தில் தாசிகளின் நிலை குறித்தும், தாசிகளினால் ஏற்படும் சமுதாயக் கேடுகள், சமுதாயத்தில் அதனால் ஏற்படும் இழிவுகள், குடும்பங்களில் ஏற்படும் சீரழிவுகள் என்று தாசிகளைச் சுற்றியே அந்தக் காலத்தில் நிறைய நாவல்களும் நாடகங்களும் புனையப் பட்டுள்ளன.

அய்ன் ராண்ட் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதம் – இறுதிப் பகுதி

யோசித்துப் பாருங்கள், உங்கள் பசிக்காகவும் உங்கள் குழந்தைகளின் நோய்க்காகவும், குடும்பத்தின் வறுமைக்காகவும் உங்களுக்கு ஒரு பணி வழங்கப்பட்டால் அது எப்படி உங்களுக்கு வழங்கப்பட்ட பணியாக இருக்க முடியும் ? அது பசிக்கும், நோய்க்கும், வறுமைக்கும் கிடைத்த வெற்றியே அன்றி மனிதனுக்கு கிடைத்த வெற்றி அன்று. இந்த பசியோ, நோயோ, வறுமையையோ நீங்கள் சாராதிருந்தால் உங்களுக்கு அந்த வேலை கிடைத்திருக்காது. உங்கள் திறமைக்கு வழங்கப்படும் பணியில் தான் உங்களால் சுய கௌரவத்தோடு தலை நிமிர்ந்து பணியாற்ற முடியும்.

யுவனின் பகடையாட்டம் – ஒரு பார்வை

வார்த்தைகளால் சொல்லி சொல்லி மாய்ந்து போய்விட்ட ஒரு விடயத்தை சொல்ல முயன்று தோற்று போகிற துயரம் ஒரு எழுத்தாளனுக்கு சுகமானதுதான். இயற்கையிடமும், பிரபஞ்சத்திடமும் கலை உணர முயன்று தோற்று போய்க்கொண்டேயிருக்க பிரபஞ்சம் வார்த்தைகளின்றி விரிந்து கொண்டேயிருக்கிறது. இவ்வளவுதான் சொல்லிவிட்டோம் என்று அவன் சாயும்போது அது விரிந்து அதன் புதுப்பகுதிகளை காட்டிக்கொண்டே நீள்கிறது.

எழுத்தோவியம்

ஆப்பிரிக்காவின் எல்லையற்ற பாலைவனங்களின் நடுவே திடீரென்று அதிசயங்கள் தோன்றுகின்றன. உள்ளே ஓடும் நதி கசிகிறது என்பார்கள். சிலர் ஆண்டவனின் அருட்கொடை என்பார்கள். விளைவு என்னவோ, நாற்புறமும் முகத்தில் அடிக்கும் வெண்மையான வெய்யலின் நடுவே ஒரு குளமும் அதனை சுற்றி மரங்களும் கொண்ட பாலைவனச் சோலை. குளம் பெரியதாகவோ அல்லது ஆழமானதாகவோ இருந்துவிட்டால் அதனை சுற்றி நகரம் உண்டாகிவிடுகிறது. நகரத்தில் மக்கள் நெருக்கமும் உண்டாகிவிடுகிறது.குளம் போதாமல் ஆகிவிடுகிறது. அடர்ந்த வீடுகளுக்கு நடுவே குறுகிய ஓடை போல தெரு ஓடுகிறது. இந்த பக்கத்து ஜன்னலிலிருந்து கையை நீட்டினால், எதிர்ப்புறத்திலுள்ள வீட்டை தொட்டுவிடலாம். மேலே நிழலாக துணிப்படுதா. அது போன்றதொரு தெருவில்தான் ஜன்னம் பிறந்தான்.

ராக்கெட் வண்டுகள்

தேன்கூட்டை உற்றுப் பார்த்தால் அதில் பல தேனீக்கள் டான்ஸ் ஆடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த டான்ஸும் ஒரு வகை தகவல் பரிமாற்ற உத்தி. “என்ன நீ இன்னும் சாப்பிடலையா?” இன்னிக்கு காலைல குப்புசாமி வீட்டுக்குப் பக்கத்திலதான் பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டேன்” என்று வீட்டுக்குத் திரும்பிவரும் தேனீக்களூக்கு வாகிள் டான்ஸ்(Waggle Dance) மூலம் எங்கே உணவு இருக்கிறது என்று சொல்லுகிறது.

சொற்களின் நடனம்

குழந்தைகளின் உலகத்தில் தண்ணீருக்கு எப்போதும் முக்கியமான இடமுண்டு. தண்ணீரில் ஆடவிரும்பாத குழந்தையே உலகத்தில் இல்லை. குழந்தை மனத்தைத் தொட்டசைக்கிற சக்தி தண்ணீருக்கு இருக்கிறது. தண்ணீரை அள்ளிஅள்ளி நாலாபுறங்களிலும் சிந்தமுடியும் என்பதே குழந்தைக்கு பேரானந்தமாக இருக்கிறது.

உலக எய்ட்ஸ் தினம்

ஒவ்வொரு வருட டிசம்பர் ஒன்றாம் தேதி “உலக எய்ட்ஸ் தினம்”-ஆக கடைபிடிக்கப்படுகிறது. உலகமெங்குலும் இக்கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்பட தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

அனுஷ்கா ஷங்கர் – சங்கம இசை

அனுஷ்கா ஷங்கர், பிரபல சித்தார் கலைஞரான ரவிஷங்கரின் மகள். இவரது இசை ஆக்கங்கள் இவருக்கு உலகளாவிய புகழை பெற்றுத்தந்திருக்கிறது. ஒரு உலக விழவில் அவர் நிகழ்த்திய சங்கம இசை நிகழ்ச்சி

யானை வேட்டை

நிராயுதபாணியான உள்ளூர் வாசிகளுக்கு முன் நான் ஒரு வெள்ளைக்காரனாய், கையில் துப்பக்கியை வைத்துக் கொண்டு இங்கே நிற்கிறேன். பார்ப்பவர்க்கு நான் ஒரு கதாநாயகன். உண்மையில் நான் ஒரு முட்டாள் பொம்மை. என்னை ஆட்டுவிக்கும் கயிறு பின்னால் நிற்கும் மஞ்சள் முக பொம்மலாட்டக்கார்களிடம் உள்ளது! ஒரு வெள்ளைக்காரன் சர்வாதிகாரியாகும் போது அவன் பறிப்பது மற்றவர்களின் சுதந்திரத்தை அல்ல; தன் சுதந்திரத்தை என்று அப்போது அறிந்து கொண்டேன்.

வாழ்க்கையெனும் ஓடம்

சுவர்கள் இல்லா அறைகளுக்கு கதவுகள் எதற்கு? ஆனாலும் கதவுகளை திறந்தே செல்ல வேண்டுமென்பது இங்கும் மரபாக இருக்கின்றது. அந்த மரவீட்டில் இரண்டு ஜென் துறவிகள். ஒருவர் வயதானவர். இன்னொரு துறவிக்கு ஆறு வயது‌ இருக்கலாம்.சுற்றி மலைகள். ஒரு ஏரி. நடுவே மரவீடு. இவர்கள் இரண்டே பேர். 103 நிமிடங்க‌ள் ஓடும் திரைப்படத்தில் அதிகம் போனா‌‌‌ல் இவர்கள் பேசும் வசனம் இரண்டே பக்கம்தான் வரும். தென்கொரிய இயக்குநர் கிம் கி டக்கின் முத்திரைப் படைப்பான இந்தப் படத்தின் திரைக்கதை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது.