ராஹுல் திராவிடின் ஓய்வினால் இந்தியா நம்பர் 3 பேட்ஸ்மேனை மட்டுமே இழந்திருக்கிறது, இந்திய கிரிக்கெட்டின் தூதுவரை இழந்து விடவில்லை. இந்திய கிரிக்கெட்டின் தூதுவர் என்று நான் அவரைச் சொன்னதன் காரணம் புரிய, சமிபத்திய ஆஸ்திரேலியத் தொடரின் போது அவர் நிகழ்த்திய பிராட்மேன் உரையை நீங்கள் முழுவதுமாகக் கேட்கவேண்டும். இன்றைய தேதியில், இந்திய கிரிக்கெட் வீரர்களின் பலதரப்பட்ட முகங்களை இந்த அளவுக்குத் துல்லியமாக எந்த பத்திரிக்கையாளரும், எழுத்தாளரும் முன்வைக்கவில்லை என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள்.
ஆசிரியர்: சந்திரசேகரன் கிருஷ்ணன்
சென்னையில் ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட்
இது நடந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. இன்றைக்கு கிரிக்கெட் உலகில் முதலாம் இடத்தில் இருக்கும் இந்தியா, இந்த இடத்திற்கு வருவதற்கு காரணமான ஒரு திருப்புமுனை தொடர் ஒன்று உண்டு. இந்தியாவில் 2001ஆம் ஆண்டு நடந்த பார்டர் கவாஸ்கர் தொடர்தான் அது. இந்தியாவே பார்த்திராத, ஒரு புதிய கேப்டனாக கங்குலி உருப்பெற்றார். ஒரு போராடும் இந்தியாவை, பணியாத இந்திய அணியை உருவாக்கியதில் கங்குலியின் பங்கு அதி முக்கியமானது.
நவீன கால கிரிக்கெட் – விளையாட்டல்ல
இந்த ஊழல் விவகாரங்கள் இத்தோடு களையப்பட்டுவிடுமா என்றால் இல்லை என்பதுதான் சோகமான நிதர்சனம். கிரிக்கெட் இப்போது இருக்கும் தன்மையில் தொடர்ந்து விளையாடப்படுமானால் இந்த பிரச்சனைக்கு முடிவு கிடையாது. கிரிக்கெட்டின்சூழமைப்பே முற்றிலுமாக மாறிவிட்ட நிலையில் ஆட்டத்தின் விதிகளும் தன்மைகளும் அப்படியே இருப்பதில் என்ன நியாயம்?
முதலாளித்துவத்தின் மூலம் வறுமையை ஒழிக்க நினைத்த இந்திய மனம்
பிரஹலாத் முன்வைத்தது சமுக சேவை செய்வது எப்படி என்ற சிந்தனையை அல்ல. வறுமையை, லாபகரமான வியாபாரம் செய்வதன் மூலம் எப்படி ஒழிப்பது என்பது தான். அவர் உலத்தின் வியாபாரிகளுக்கு அது வரை யாரும் கவனிக்காத ஒரு சந்தையை காட்டினார். அந்த சந்தைக்கு சேவைகளையும் பண்டங்களையும் எப்படி லாபகரமாக தயார் செய்து விநியோகம் செய்யலாம் என்று காட்டினார். உலகின் ஏழை சமுகம் என்பது வேகமாக கீழ் மட்ட நடுத்தர வர்க்கமாக மாறிக்கொண்டிருக்கிறது. நிச்சயமாக இந்த உலகத்தின் கடைசி ஏழைக்கும் வாழ்வாதார தேவைகளை எந்த தடையுமின்றி பூர்த்தி செய்து கொள்ளும் காலம் விரைவில் வரும். அதைப் பார்க்க பிரஹலாத் இல்லாது தான் சோகம். இவரது மறைவு இந்தியாவிற்கு மட்டுமல்ல மேலாண்மை சமுகத்திற்கே மிகப்பெரிய பெரிய இழப்பு.
அகிரா குரோசவா – நூற்றாண்டுக் கலைஞன்
அகிரா குரோசாவின் திரைப்படங்களின் மிகவும் முக்கியமான சிறப்பம்சம் காட்சிகளின் அமைப்புகள். அவரது காட்சியமைப்புகளில் இரண்டு பிராதன அம்சங்கள் – ஒன்று நிலப்பரப்பு குறித்த காட்சியமைப்பு; இரண்டாவது ஒரு கதாபாத்திரம் போலவே வந்து போகும் காலம்.
அய்ன் ராண்ட் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதம் – இறுதிப் பகுதி
யோசித்துப் பாருங்கள், உங்கள் பசிக்காகவும் உங்கள் குழந்தைகளின் நோய்க்காகவும், குடும்பத்தின் வறுமைக்காகவும் உங்களுக்கு ஒரு பணி வழங்கப்பட்டால் அது எப்படி உங்களுக்கு வழங்கப்பட்ட பணியாக இருக்க முடியும் ? அது பசிக்கும், நோய்க்கும், வறுமைக்கும் கிடைத்த வெற்றியே அன்றி மனிதனுக்கு கிடைத்த வெற்றி அன்று. இந்த பசியோ, நோயோ, வறுமையையோ நீங்கள் சாராதிருந்தால் உங்களுக்கு அந்த வேலை கிடைத்திருக்காது. உங்கள் திறமைக்கு வழங்கப்படும் பணியில் தான் உங்களால் சுய கௌரவத்தோடு தலை நிமிர்ந்து பணியாற்ற முடியும்.
அய்ன் ராண்ட் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதம் – பகுதி 2
அந்த அறிவுப்பசியே மனிதனுக்கு எந்த வகையிலான தடையையும் தகர்த்தெறிவதற்கான உந்துதலைத் தர முடியும். இல்லையென்றால் கும்பகோணத்தில் ஏதோ ஒரு மூலையிலிருந்த ராமானுஜன் ஹார்டிக்குக் கடிதம் எழுதியிருக்க முடியாது. சைவ உணவை மட்டுமே சாப்பிடும் இளைஞன் உடலை வாட்டும் குளிரைப் பொறுத்து உடல் நிலை தேயும் காலத்திலும் கணிதத்தைப் பற்றியே சிந்தித்தது எதிர்காலத்தில் பெரும் பணமோ புகழோ பெறப்போகிறோம் என்று நினைத்தல்ல.
அய்ன் ராண்ட் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதம் – ஓர் அறிமுகம் – பகுதி 1
மனிதர்களை ஒரு பொதுவான தளத்தில் வைத்து எடை போடும் போது இரண்டு நிலையினராக பிரிக்க முடியும். அறிவு சார்ந்து இயங்குபவர்கள், உணர்வு சார்ந்து இயங்குபவர்கள். பெரும்பாலும் நாம் அனைவருமே இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையில் பல்வேறு விகிதாசாரங்களில் இயங்குகிறோம்.