நான் எனது அனைத்து கட்டுகளும் அறுபட, மூச்சு திணற “இங்கு நடப்பது ஆசிரமம் அல்ல. பணம் மற்றும் அதிகாரத்தை உருவாக்கும் ஒரு இடம். அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் மிஸ்டர் லீ-யைக் கொண்டு நாம் வடிவமைக்கும் கட்டிடம் மனிதர்களை ஏமாற்றி பணம் பிடுங்க. இதுவா நான் பன்னிரெண்டு ஆண்டுகளாக இங்கிருந்து சென்று அடையும் இடம்?” என்றேன்.
ஜெய் ஜகந்நாத்!
மரக் கம்பங்களை நட்டு, அவற்றை தெய்வமாகப் பாவித்து, அந்தத் தெய்வங்களைச் சுற்றி ஒரு சிறு சந்நிதியை நிறுவி வழிபடுவது என்பது இந்தப் பிராந்தியத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தொல்குடிகளின் மரபு என்கின்றனர் சரித்திர ஆய்வாளர்கள். ஸ்தம்பேஷ்வரி (ஸ்தம்பம் – கம்பம்) காந்துணிதேவி என்று பல பெயர்கள் கொண்டுள்ள இந்த மூர்த்தங்கள் இன்றும் வழிபாட்டில் உள்ளன. இப்படி நெடுங்காலமாக திரண்டு வரும் நம்பிக்கையின் ஒரு வெளிப்பாடு தான் பூரி ஜகந்நாதரின் அமைப்பு என்பது ஆய்வாளர்களின் பார்வை
அதிஜனநாயகம் -2
குரல் கேட்கக்கேட்க என் முகத்தருகே எதோ கரிய அமிலம் படர்வதைப் போல உணர்ந்தேன். முகத்தில் வியர்வை கொட்டியது. என் கதையில் எழுதியது போல வான்குடியினராக இவர்கள் இருக்கக்கூடாதா என ஒரு கணம் எண்ணினேன். அப்படியிருந்தால் இவர்களை நாம் அழித்திருப்போம். மனிதர்களுக்கு என முடிவெடுக்க ஒரு பேரரசு அமைந்திருக்கும். அவர்கள் சொல்வதைக் கேட்டு நாம் நடக்கலாம். முடிவெடுக்கும் அதிகாரம் நமக்கு இல்லாதது எத்தனை பெரிய விடுதலை
பாரதியின் காளி
காசியில் இருந்த சமயம் பாரதிக்கு சுதேசி இயக்கம் அறிமுகமாகிறது. பொருளாதாரத்தின் சிக்கலான சமன்பாடுகளைக் கொண்டு தேசம் என்பதையும், அதனால் அது எதிர்கொள்ளும் அபாயம் என்பதையும் தாதாபாய் நௌரோஜி மிகச் சாதுர்யமாக விளக்குகிறார். அதை பாரதி கவனிக்கிறார். அதுவரை பண்பாட்டுப் பரப்பாக மன்னர்களும் மக்களும் கருதிக் கொண்டிருந்த காலத்தில், ஜாதிமைய அடையாளம், அதிகாரம் போன்றவற்றையே அறிந்திருந்தவர்கள் மத்தியில் பொருளாதாரப் பார்வையை நௌரோஜி முன்வைத்து அபாயத்தை எச்சரிக்கிறார்.
படிக்கட்டு
வசதி படைத்த சமூகத்தினர் சிலர் ,எங்கள் அடிமை நிலை குறித்து வெளிப்படையாகப் புலம்பி அலட்டிக் கொண்டிருந்தபோதும் எங்களைப்போன்ற புத்திசாலிகளுக்கு அது ஒரு பொருட்டாகவே படவில்லை. மாதம் பிறந்ததும், முதல் தேதியன்று சம்பளக்கவரோடு நான் வீட்டுக்குள் நுழையும் நேரத்தில் இந்த உலகத்தையே ஆண்டு கொண்டிருக்கும் ஒரு பேரரசனைப் போன்ற ஓர் உணர்வே எனக்கு ஏற்படும்.
அன்பின் ஐந்தாம் பரிமாணம்: காலவெளி தரிசனம்
கார்கன்சுவா குறித்த சித்தரிப்பானது, சுழலும் கருந்துளைகளைப் பற்றிய பொதுச் சார்பியல் கோட்பாட்டின் தீர்வுகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது. சுழற்சியற்ற கருந்துளைகளைக் காட்டிலும், மெய்யான வானியல் கருந்துளைகள் கோண உந்தம் கொண்டவையாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்தச் சுழற்சியானது அவற்றின் கட்டமைப்பை அடிப்படையிலேயே மாற்றியமைக்கிறது. இங்கே கருந்துளையின் சுழற்சியால் கால-வெளியே நூல் இழை போல முறுக்கப்படுகிறது
பரகாயம்
ஒரு உளவியல் மருத்துவராக என்னால் இதை நம்ப முடியவில்லை என்றாலும் என் கண்கள் பார்த்து மூளை உணர்ந்து பதிவு செய்த அந்த ஒரு நொடிக் காட்சி உண்மை நிகழ்வு என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இதனை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டி அவரை இன்னொரு முறை செய்து காட்டச் சொன்னேன். கண்களைச் சிமிட்டாமல் உற்றுப் பார்த்தேன். மீண்டும் பத்மாசனம். பாபா முத்திரை. ஏதோ புரியாத தமிழில் மந்திர முணுமுணுப்பு. வலிப்பு வந்தது போன்ற முகக் கோணல். இப்போது ஓரளவு தெளிவானது
4. வகையறச் சூழ்ந்தெழுதல்
அத்வைத வேதாந்தம் மற்றும் குமாரில பட்டரின் பட்ட மீமாம்சம் ஆகிய இரு தத்துவப்பள்ளிகள் மட்டுமே அனுபலப்திப் பிரமாணத்தை சுதந்திரமான ஓர் அறிதல் வழிமுறையாக ஏற்றுக் கொள்கின்றன. இந்த முறையில் பெறப்படும் அறிவில் சத்ரூபம் (நேர்மறை) மற்றும் அசத்ரூபம் (எதிர்மறை) இரண்டுமே சரியானதும், செல்லுபடியாகக் கூடுவதுமாகும் என்பது அவர்களது கணிப்பு. பிற பிரமாணங்கள் தோல்வியுறும் இடங்களில் அனுபலப்திப் பிரமாணத்தைப் பயன்படுத்த முடியும் என்பது அவர்களது வாதம்.
காந்தா பாடலும் கல்லிடைக்குறிச்சி ஐயர்களும்
பக்திங்கிறது நாம பாடற விதத்தில் வரணும். ராமரைப் பத்திப் பாடும் போது கேட்கறவாளுக்கு என்ன பக்தி வரதோ அதே பக்தி நான் டேபிள் சேரைப் பத்திப் பாடினா வரணும். அதுதான் சங்கீதம்ன்னு சொன்னா. அதுதான் சரிங்கறேன். பக்தி சங்கீதத்தில் இருக்கணும்
டி எஸ் எலியட்டின் – The Wasteland – ஓர் கண்ணோட்டம்
அவள் அமர்ந்த இருக்கை, மெருகேற்றிய சிம்மாசனத்தைப்போல்
மின்னியது பளிங்கில், நெளியும் கொடி சூழ் கண்ணாடி
விளிம்பிலிருந்து இரண்டு குபிட் சிசுக்கள் எட்டி பார்க்க
ஏழு இதழ் மெழுகு விளக்கின் ஒளியை ரெட்டித்து
அவள் அணிந்த ஆபரணங்களுக்கு ஒத்த,
மேஜையில் வீசியது விளக்கின் ஒளியை.
மௌனத்தின் சுமை
தன் வேலைகளில் அவளுக்கு இலேசில் திருப்தி வருவதில்லை. எதையும் மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுவாள். ஆனாலும், கடைசி நேரம்வரை தள்ளிப்போட்டுக் கொண்டேயிருப்பாள். என்றாலும்கூட, அவளின் அந்தப் பழக்கம் அவள் பாடசாலையில் இருந்தபோது எந்தப் பிரச்சினையையும் அவளுக்குக் கொடுக்கவில்லை. எப்படியோ நிறையப் புள்ளிகளும் பாராட்டுகளும் வாங்கிவிடுவாள். பல்கலைக்கழகத்துக்குப் போனபின் அது எப்படிப் பிரச்சினையானதென்று எனக்கு விளங்கவேயில்லை.
உரூப்-ன் ‘உம்மாச்சு’
மனம் நொய்மையடைந்து வாழ்வில் சலிப்புற்றிருந்த மாயன் மலைக் காட்டுப் பகுதியில் ஒரு மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொள்கிறான். ஊரிலிருந்து வரும் மரக்காரும், ஹைத்ரோஸும் ஹஸ்ஸனுடன் மாயனின் உடலை லாரியில் ஊருக்கு எடுத்துப் போகிறார்கள். அப்பாவின் சாவிற்கு அப்துதான் காரணம் என்றெண்ணும் மரக்காரும், ஹைத்ரோஸும் அப்துவின் மேல் வன்மம் கொள்கிறார்கள். உம்மாச்சு நடைப் பிணமாகிறாள்.
தேவதை கடந்த கணம்
“இருபது வருடங்களுக்கு முந்தைய பாடப்புத்தகங்களில், ஒரு நாளைக்கு எட்டு முறை கவனம் சிதறினால் வேலையில் கவனம் செலுத்த முடியாது என்று போட்டிருக்கும். ஆனால் இன்று? காலையில் எழுந்து கழிப்பறைக்குச் செல்வதற்குள் எட்டு முறை கவனம் சிதறிவிடுகிறது. வழியிலேயே மின்னஞ்சல், குறுஞ்செய்தி, ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டு தலைப்புச் செய்திகளையும் மேய்ந்து விடுகிறோம்.”
லக்கி குளோவர்!
ஐரோப்பாவையும் மத்திய ஆசியாவையும் பூர்வீகமாகக் கொண்டது இந்த மூவிலைக் குளோவர். உணவாகவும் கால்நடைத் தீவனமாகவும் இதன் பயன்களைத் தெரிந்துகொண்ட ஐரோப்பியக் குடியேறிகள் இதன் விதைகளை வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா,ஜப்பான் மற்றும் நியூசிலாந்துக்கு கொண்டு வந்து சாகுபடி செய்தார்கள். மேலும் உலகின் பிற பகுதிகளுக்கு ஐரோப்பியர்களின் கால்நடைகளின் உடலில் ஒட்டிக்கொண்டிருந்த குளோவர் விதைகள் அறிமுகமாகின.
றெக்கை – அத்தியாயம் 13
maidin mhaith dochtúir அய்ரிஷ் மொழியில் காலை வணக்கம் சொல்லி சிரித்தபடி இருக்கையிலிருந்து எழ முயல, தலை குப்புற விழுந்தாள் -பள்ளிக்கூடம் ஹெட்மிஸ்ட்ரஸ் பிள்ளை மாதிரி. நிர்மலா பதறிப்போய் விரைந்து ஒநெல்லி பாட்டியம்மாளைத் தூக்கி நிறுத்தப் பார்த்தாள். கிழவி நல்ல கனமான உடம்பு கொண்டவள் என்பதால் அவள் தரைக்கு வழுக்கிக் கொண்டு போனாள். இதெல்லாம் அவளுக்கு வேடிக்கை காட்ட நடத்தப்படும் நிகழ்ச்சி என்று தோன்ற, நிறுத்தாமல் சிரிக்கத் தொடங்கினாள்.
உயிர் கட்டமைப்பின் நுட்பமான வரைபடம்
எந்த பகுதி மூடப்பட்டு இருக்கும்? எந்த இடத்தில் டி.என்.ஏ சுலபமாக வளைந்து, சுற்றிப் போகும்? – இவை எல்லாவற்றையும் குரோமாட்டின்அமைப்பு தீர்மானிக்கும். சில பகுதிகள் தண்ணீர் போல எளிதாகக் கலக்கும், நகரும் என்ஜைம்கள் வந்து வேலை செய்யும் இடம். சில திடமான பகுதிகள் – சற்று மந்தம், நெருக்கம், வலுவாக அடுக்கப்பட்ட, அணுக முடியாத இடம்.
காற்றில் உறை மனிதன்
இப்போது அது
பணிவான நம் தீவை மூழ்கடிக்கிறது.
விளக்குகள் ஒளிரும் சிறு துறைமுகங்கள்
கப்பல்கள், அடுக்ககங்கள், மின்தூக்கிகள்,
ஊசிக் கோபுரங்கள், அஸ்திவாரங்கள்
நிறைந்த சொத்தை வான்வெளி
எல்லாவற்றையும்
அவனது இறுதி தொடுவானத்தோடு
ஒரு மாசில்லா முடிவிற்கு அடித்து சென்றது.
ஒரு கொலையிலிருந்து உருவாகும் புதிய அரசியல் மதம்
அவர் இறந்த பிறகு அவர் மனைவி எரிக்காவுடன் சேர்ந்து நிறுவிய Turning Point USA என்ற அமைப்புடன் இணைந்து ட்ரம்ப் அரசே ஒரு பிரமாண்ட நினைவஞ்சலி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. மிகுந்த உணர்ச்சிப் பொழிவுடன் இயேசு கிறிஸ்துவை நினைவூட்டும் மதப் படிமங்களுடன் அரசியல் எதிரிகளைக் குறிவைக்கும் கடுமையான போர்முனை பேச்சுகளுடன் நடைபெற்றது. ‘சார்லி கிர்க்’ ஒரு தியாகியாக உருவகப்படுத்தப்பட்டார்.
குமரேசன் கிருஷ்ணன் கவிதைகள்
இரவில் ஊறும் நத்தைகள்
தொடர் சாரலில்
குளிர்ந்து கிடக்கும்
நிலத்தை விட்டு
வெளிவருகின்றன.
செல்லும் பாதைகளில்
அடுத்தப் பாதத்தை வைப்பதற்கு
இடமின்றி ஊறும் நத்தைகள்
காணக் கிடைக்கையில்
உணர்க்கொம்பின்
அலைவரிசையில்
சிக்கிக் கொள்கிறது உலகு.
புதிய நாணயம்
நேர்மைத் திறனின்றி, அமெரிக்க அரசு பல நாடுகளின் கைகளைக் கட்டிப் போட்டது. மக்களாட்சி கொண்டு வருகிறோம் என்ற பெயரில், பெட்ரோ டாலர்களில் வர்த்தகம் நடத்தாத ஈராக், லிபியா, வெனிஸ்சுவேலா பல இடர்களைச் சந்தித்தன/ சந்தித்தும் வருகின்றன.
வாளைத் துறந்த சாமுராய்
ஒரு சாமுராய்க்கு முக்கியம் வாள். வாளைத் தீட்டுவதும், கூர் பார்ப்பதும், இமைக்கும் நேரத்தில் அதை உறையிலிருந்து எடுத்து வீசுவதும், பின்னர் உறையைக் கண்ணால் பார்க்காமல் கைகளால் உணர்ந்து வாளை மீண்டும் உறையில் செருகுவதும், சாமுராய் மேற்கொள்ளும் பயிற்சிகள். வாளின் திறனைப் பின்னிறுத்தி அறிவால் ஆளுமையை நிரூபித்த சாமுராய் உண்டென்றாலும், அது விதிவிலக்கு.
தேரோட்டியான நளன்
மனதை சமாதானப் படுத்திக் கொண்டான். ‘ஒரு வேளை அவளால் தாங்க முடியாமல் போயிருக்கும். அல்லது என்ன உசுப்பி எழுப்பவே கூட செய்திருக்கலாம். ஆ! வேறு விதமாக விதர்ப ராஜ குமாரி நினைத்திருந்து என்னை விலக்கி விட்டால் என்ன செய்வேன். நான் அவளுக்கு இழைத்த துரோகத்தை விடவா? என் பாப செயல்கள், அறிவில்லாமல் நடுக் காட்டில் கை விட்டது – இவைகளை எந்த அளவு தான் பொறுக்க முடியும், உலகில் சாதாரண பெண்கள் செய்யலாம், இவளுமா?’
விளையாட்டுப் பொருள்கள்
குழந்தையின் விளையாட்டும் அதனால் அவன் அடையும் சந்தோஷமும் தகப்பனுக்கும் மகிழ்ச்சியைத் தருகிறதோ? ஆகவே ‘இவனாவது கவலைகளில்லாது தனது குழந்தைப் பருவத்தைக் கழிக்கட்டும்,’ எனும் அர்த்தம் நிறைந்த புன்னகைதான் எனக்கூட எண்ணத் தோன்றுகிறது.
தெய்வநல்லூர் கதைகள்- 32
அன்று மாலை சந்திப்பில் யக்கா கொதித்தார் – “பிரிக்காஷன், டிக்காஷன்னு .. அறிவில்லாதவன விட தனக்குதான் அறிவிருக்குன்னு நெனக்கறவன் நாக்குலதான் இபிலீஸ் எறங்குவான்னு நம்ம உப்புக்கண்டத்தோட பெரிய அத்தா சொல்லுவாரு. சரியாத்தாம்ல இருக்கு, சும்மா ரெண்டு வரிக்கு ஒருக்கா இங்லீசுல பேசுனா அறிவாளின்னு நெனப்பு அவருக்கு. இங்க்லீசுதாம்ல இவருக்கு இபிலீசு. மீச சார், தமிழ் சார்லாம் அதுக்கப்பறம் ஒரு வார்த்த பேசுதாங்களா அதப்பத்தி? புதுசா வந்த வேல்முருகன் சார் கூட அத மறந்துட்டு படிப்பைப் பாருடேன்னு அன்பாத்தான சொன்னாரு. நீ ஏம்டே பிரேம் அவர் முன்னாடி அழுத?”
பொதுநலக் கொள்கைகள்- 101
பொதுநலத் துறையின் அடிப்படைப் பணி என்பது சமூகத்தின் சுகாதார நிலையைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதாகும். ஒரு பகுதியில் வாழும் மக்களின் உடல் மற்றும் மனநலத்தை அறிந்து கொள்வதுடன், அவர்களின் நல்வாழ்வைப் பாதிக்கும் காரணிகளை முன்கூட்டியே கண்டறிய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் புதிய காரணிகளைத் தேடி கருத்துக்கணிப்புகளையும் ஆய்வுகளையும் நடத்துவது அவசியம்.
