எந்த ஒரு நல்ல படைப்பினை நாம் ருசித்து அனுபவிக்கிற போதும் நம் வாழ்வின் அனுபவத்தோடு எங்கேனும் அது பொருந்திவிட்டால் நமக்கு இன்னும் மேலான ஒட்டுதலை அது தந்துவிடுவது இயல்பு. அப்படித்தான் ‘நிலம் + நீதி = கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்’ என்ற தலைப்பில் அண்ணன் ரவிசுப்பிரமணியன் இயக்கிய ஆவணப்படத்தைக் கண்டபோது, “‘பாலை இறக்கலையோ… பாலகனைத் தூக்கலையோ…’”
Category: திரைப்பட விமர்சனம்
அன்பின் ஐந்தாம் பரிமாணம்: காலவெளி தரிசனம்
கார்கன்சுவா குறித்த சித்தரிப்பானது, சுழலும் கருந்துளைகளைப் பற்றிய பொதுச் சார்பியல் கோட்பாட்டின் தீர்வுகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது. சுழற்சியற்ற கருந்துளைகளைக் காட்டிலும், மெய்யான வானியல் கருந்துளைகள் கோண உந்தம் கொண்டவையாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்தச் சுழற்சியானது அவற்றின் கட்டமைப்பை அடிப்படையிலேயே மாற்றியமைக்கிறது. இங்கே கருந்துளையின் சுழற்சியால் கால-வெளியே நூல் இழை போல முறுக்கப்படுகிறது
குருதி
வழக்கமாக மடிததுக் கட்டிய மல் வேஷ்டியும் முண்டும் துண்டுமாகததான் அறவே மேக்கப் இல்லா சேட்டன்களும் சேச்சிகளும் இன்னமும் பச்சைப் பசேல் கேரளத்துக் கொல்லைகளிலும் காடுகளிலும் திரிகிறார்கள். ஆனாலும், கதை என்கிற ஒரு வஸ்துவை மட்டும் தீர்க்கமாக அவர்கள் பிடித்துக் கொண்டு விட்டார்கள். அதில் அவர்கள் காம்ப்ரமைஸ் செய்து கொள்வதில்லை. கதையோட்டத்தைத் தடை செய்யும் பாட்டுகளையும் அறவே குறைத்துக்கொண்டு வருகிறார்கள்…. கிறித்துவ வெறித்தனமோ, இஸ்லாமிய பயஙகரவாதாமோ, ஹிந்துதுவ ரஸவாதமோ, எதுவாக இருந்தாலும் கதை தான் ஆணிவேர்.
‘Luce’ -திரைப்பட விமர்சனம்
நாம் சற்றேனும் சிந்தித்துப் பார்க்காத அவ்வுண்மைகள்தான் என்ன? இவ்வுலகம் அருட்தொண்டர்களாலும் சூனியக்காரர்களாலும் நிரப்பப்பட்டதல்ல. சாதாரண மனிதர்களே நிரம்பியிருக்கிறார்கள் அவர்கள் எல்லோருமே எல்லா துறைகளிலும் மேன்மையடைந்தவர்களல்ல. சில துறைகளில் உயர்ந்தும் பல துறைகளில் தாழ்ந்தவர்களுமாகவே இருக்கிறார்கள். அவர்களின் நடத்தையும் அவர்களை ஊக்குவிக்கும் காரணங்களைப் பொறுத்து, நேர்வழியையோ, குறுக்குவழியையோ பின்பற்றுகிறது.
ஆடை – குழம்பிய குட்டையில் பிடிக்க நினைக்காத மீன்
இளைஞர்களால் ரசிக்கக்கூடிய ஒரு படம்; முற்போக்கான கருத்தை முன்வைக்க விழையும் ஒரு படம்; அதேநேரம் சமூக ஒழுங்கைச் சீர் குலைக்காத ஒரு படம்; சமுதாயத்திற்கு ஒரு கருத்தைச் சொல்லும் படம்; இன்றைய முதலாளித்துவ அரசியல் மனோபாவத்தை பகடி செய்யும் ஒரு படம்; பொதுவெளியில் ஆபாசம் என்று கருதுபவை பெரும்பாலும் நெருங்கிய வட்டாரங்களில் மிக இயல்பாக எடுத்துக்கொள்ளப் படுபவை. அவற்றை மூடி மறைக்காமல் பொதுவெளியில் போட்டு உடைக்கும் ஒரு படம்; விளிம்புநிலை மக்களை விலக்காத ஒரு படம் என்று ஒரே நேரத்தில் பல கம்பிகள் மேல் நடக்க முயற்சித்திருக்கிறார் கதாசிரியர்.
சாதலும் புதுவது அன்றே: An Elephant Sitting Still
ஏராளமான அண்மைக் காட்சிகள், Medium Shot-கள். தேவைப்பட்டாலொழிய, சட்டகத்தின் தெளிக்குவி நடுவத்தில் ஏனைய கதாபாத்திரங்கள் காட்டப்படுவதில்லை. பிரதான கதை மாந்தர்களுடனான உரையாடலின் போது கூட துணைக் கதாபாத்திரங்கள் மங்கலான குவியத்திலேயே (Shallow Focus) விலக்கி வைக்கப்படுகிறார்கள். இசைவான தொலைவிலிருந்து கொண்டு இயங்குகிறார்கள். காமெரா நகர்வுகளில் மந்தமான செயலூக்கமின்மை நிறைந்திருந்தாலும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்கையில் அது முனைப்பு கொள்கிறது. அத்தகைய தருணங்களில் மட்டும் அவர்களது உருத்தோற்றங்கள் தெளிவு பெறுகின்றன.
