விஜயநகரம் என்றாலே விருந்து, பண்டிகை, இனிப்புகள், சிற்றுண்டிகள் என்று ஒரே வட்டத்திற்குள் மறுபடி மறுபடி போய் இணைந்து கொள்கிறதை பரமன் கவனித்தார். அவருடைய மனமும் உடலும் பல நூறாண்டுகள் முன்னால் போயிருக்க, சூழல் அவர் இதுவரை அனுபவித்தே இராத காலத்தில் தொங்கிக் கிடக்கிறது. இந்தச் சூழலுக்கு அவர் எப்படியோ வந்திருக்கிறார். தான் இரண்டு பேராக வாழ்கிறதாக மனம் சொல்ல, புத்தி ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
Tag: இரா. முருகன்
இரா. முருகனின் நளபாகம்
முருகன் சொற்பமான இவ்வரலாற்றுத் தரவுகளைச் சாரக்கட்டாகப் பயன்படுத்தி நானூறு ஆண்டுகள் தொலைவில் அமைந்திருக்கும் இரு நூற்றாண்டு முடிவுகளில் (பதினாறாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் இறுதி) அரசியல், ராஜதந்திரம், வஞ்சகம், போர், பொது மக்கட்கருத்துத் திரிபு, தீவிரவாதம், மதச்சார்பு, நட்பு போன்றவற்றை பாவிழையாகவும் உணவையும் காமத்தையும் அவற்றிற்கு மேலும் கீழும் ஓடும் ஊடு நூலாகவும் பின்னிப் பிணைத்து ஒரு மாபெரும் கதையாதலை நெய்கிறார். பதினாறாம் நூற்றண்டிலிருந்து திரண்டு வரும் இக்கதையாடல்கள் பரமன் என்ற பாத்திரத்தின் வழியே இருபதாம் நூற்றாண்டிறுதியில சன்னமாக எதிரொலித்து புது அர்த்தங்கள் கொள்கின்றன.
மிளகு – அத்தியாயம் இருபத்துநான்கு
நான்கு நாள் மழிக்காத தாடியை தெருக்கோடி நாவிதர் கத்தி வைத்து மழித்து, காசு வேண்டாம் என்றது. சோப் பூசிக் குளிக்காமல் வெறும் நீரில் அரப்புப்பொடி கலந்து தேய்த்துக் கொண்டது. விரித்த கைகள் போல் அகலம் அதிகமான தாமிரப் பாத்திரத்திலிருந்து எடுத்து எடுத்து மேலே பொழிந்து கொண்டு குளித்தது. மேலே துர்நாற்றம் இல்லாமல் சன்னமான பூ வாடை. மறக்க முடியாதது எல்லாம். இந்த சவரமும் குளியலும் பிடித்துப் போனது பரமனுக்கு. சோப்பின் முரமுரப்பும் சுத்தமான மேல் தோல் தரும் புத்துணர்ச்சியும் அரப்புப் பொடி தருவதில்லை தான். சோப்புக்கு எங்கே போக இந்த பழைய பாணி ஊரில்?
மிளகு அத்தியாயம் இருபத்திமூன்று
மருது முசாபரை அனுப்பி வைத்து விட்டு, தில்லியில் பகவதிக்கு ஃபோன் செய்ய, அதிகாலைக்கும் முந்திய புலரிப் பொழுதான மூன்றரை மணி தில்லியில். அவளும் அவள் அம்மா வசந்தியும் ராத்திரி சாப்பிடக் கூடப் பிடிக்காமல் காப்பி மட்டும் யாரோ போட்டுத்தரக் குடித்து தில்லியின் அதிகார வம்சத்தை அசைத்து உதவி கேட்டபடி இருக்கிறார்கள் என்று தெரிய வந்தது. வீடே நண்பர்களும் அண்டை வீட்டுக்காரர்களும் வந்து வந்து போய்க்கொண்டிருக்க சந்தடி மிகுந்து இருந்ததாக பகவதி சொன்னாள்.
மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு
அவர் விமானம் ஏறும்போது கல்பா, மருது இன்னும் மருதுவின் ஆப்பிரிக்க நண்பர்கள், தோழிகள் என்று ஒரு கூட்டமே ஹீத்ரோவ் விமான நிலையத்துக்கு அவரை வழியனுப்ப வந்தது. “போய்த்தான் ஆகணுமா, அதுவும் இந்த சங்கடமான நேரத்திலே?” என்று கல்பா கேட்டாலும், அவளுடைய அப்பா திலீப் ராவ்ஜிக்கும், தம்பி அனந்தனுக்கும் சிறுசிறு பரிசுகள் அடுத்த வாரம் வரும் புத்தாண்டுக்காக பிஷாரடி வைத்தியர் மூலம் தான் அனுப்பி வைக்கிறாள்.
மிளகு அத்தியாயம் இருபத்தொன்று
பரமனுக்கு தாகம் எடுத்தது. பசி வேறே. விமானத்தில் கொடுத்த ரொட்டித் துண்டுகளும், சின்ன பாட்டில் ஜாமும், பொங்கலுக்கும் உப்புமாவுக்கும் இடைப்பட்ட ஏதோ இந்தி ஆகாரமும் பரமனின் கைப்பையில் இருப்பதால் பசி விஷயம் அவ்வளவு பெரிய உடனடிப் பிரச்சனை ஆகாது. என்றாலும் தாகத்துக்குத் தண்ணீர்? இந்தத் தாங்கு கட்டைகள் வேறே, எங்கே போனாலும் எடுத்துப் போக வேண்டியிருக்கிறது. அவை இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.
மிளகு அத்தியாயம் பத்தொன்பது
நானும் அகல்யாவும் மட்டும் இருந்தவரைக்கும் பம்பாய் பாண்டுப் சால் குடித்தனத்தைத்தான் நடத்திட்டு இருந்தோம். அதுனாலே பெரும்பாலும் மராட்டி தான் பேசினது. கூடவே பம்பாய் இந்தியும். குழந்தைகள் ஏற்பட்டு, ஸ்கூல் போக ஆரம்பிச்சதிலே இருந்து அக்கம் பக்கத்திலும் ஸ்கூல்லேயும் பேசிப் பேசி பசங்களுக்கு வாயிலே மலையாளம் சர்வசாதாரணமாக வந்துடுத்து. நானும் அகல்யாவும் கொஞ்சம் சிரமப்பட்டு ஒரு வழியா மலையாளி ஆகிட்டோம். இன்னும் தமிழ் உச்சரிப்பிலே தான் மலையாளம்.
மிளகு அத்தியாயம் பதினெட்டு
அப்பக்காவும் சென்னாவும் கூட நல்ல நண்பர்கள் ஆனதால் சென்னாவுக்கும் அந்தத் தம்பதிகளுக்கும் இடையில் மிக நல்ல உறவு உலவியது. இப்போது வீராவும் அப்பக்காவும் பிரிந்து இருந்தாலும் சென்னா மறுபடி அவர்கள் ஒன்று சேர இன்னும் முயற்சி செய்கிறாள். மிளகை சென்னாவும் வெல்லத்தையும் சாயம் தேய்த்த கைத்தறித் துணியையும் அப்பக்காவும் இந்த வடக்கு கன்னடப் பிரதேசத்திலிருந்து ஏற்றுமதி செய்வதை ஒருங்கிணைத்து பிரம்மாண்டமாக வியாபாரம் வளர்த்தால் விஜயநகரப் பேரரசு கூட பிரமித்துப் போய் பார்க்கலாமே தவிர வேறேதுவும் செய்ய முடியாது.
மிளகு – அத்தியாயம் பதினேழு
உங்களில் எத்தனை பெயர் உலகைத் துறக்க, உணவுச் சுவை துறக்க, உறவுச் சுமை துறக்க, ஆடை துறக்க மனம் ஒப்புகிறீர்கள்? யாரும் மாட்டீர்கள். மனம் பக்குவப்படும் வரை”.
மிளகு -அத்தியாயம் பதினாறு
தாங்கனீகாவிலே முதல் நாள் ஆபீசுக்குப் போனபோது கட்டை ரெண்டையும் வாசல்லே விட்டுட்டுப் போகணும்னுட்டாங்க. போயிருப்பேன். நாலாவது மாடி. லிப்ட் கிடையாது. உள்ளூர் மகா ஜனங்கள் மாடிப்படி ஏடி இறங்கறது கவர்மெண்ட் கூட தொடர்பு கொள்றதிலே ஒரு அம்சம்னோ என்னமோ, சளைக்காமல் காகிதங்களைத் தூக்கிண்டு ஒரு நாளைக்கு எத்தனை தடவை வேணும்னாலும் படி ஏறுவா.
மிளகு: அத்தியாயம் பதினைந்து
சமணர்கள் ஒரு பூச்சி புழுவுக்குக்கூடத் துன்பம் உண்டாவதைப் பார்க்கவும் சகியார். இரவில் ஊரும் ஜந்துக்கள், பறக்கும் பூச்சிகள் நிறைய இருக்கும், ஆகாரம் பண்ண வாயைத் திறந்தால் உள்ளே போய் இறந்துவிடக் கூடும் என்பதால் சூரிய அஸ்தமனத்துக்கு அப்புறம் எதுவும் சாப்பிட மாட்டார்கள்.
மிளகு அத்தியாயம் பதின்மூன்று
உடம்பு வாகு அல்லது ஏதாவது சுரப்பி சம்பந்தப்பட்ட கோளாறாக இருக்கும் என்று நினைத்தபடி சாரதா உபசாரமாகச் சொன்னது இது – ”அந்த உயரத்துக்கு உடம்பு இன்னும் கூட கொஞ்சம் சதை போட்டிருக்கலாம். அமிக்கு என்ன கவலை? முசாபர் நல்லா கவனிச்சுப்பான். அவன் இல்லேன்னாலும் நீயே கவனிச்சுக்க மாட்டியா என்ன?”
”நானாக என்னை கவனிச்சு கவனிச்சுத்தான் இப்படி சதை போட்டுடுத்து. அதுக்கு மேலே சுரப்பி சரியா வேலை செய்யாம சாப்பிடறது எல்லாம் சதையாகிட்டிருக்கு.”
மிளகு – அத்தியாயம் பனிரெண்டு
“மிளகுக் கொடி எல்லாம் வயசாகி நிக்குது கோழிக்கோடு தொடங்கி மலபார் வரை பதிமூன்று வயசான கொடி அவை எல்லாம். பூக்கத் தயாராக ஆறு வருஷம், பூத்தது அடுத்த ஆறு வருஷம்னு பந்த்ரெண்டு வருஷம் போயாச்சு. இன்னும் ஒரு வருஷம் அந்த மிளகு சாகுபடி ஆகும். அப்புறம் சாகுபடிக்கு புதுக்கொடிகளை பதியன் பண்ணி வச்சிருக்காங்களான்னு கேட்டால், கார்பரேட் தோட்டங்களிலே மட்டும் செஞ்சிருக்காங்க அதுவும் ரொம்ப பந்தோபஸ்தோடு கூட. இனி குறைஞ்சது அடுத்த ஏழு வருஷம் மிளகு வித்துக் காசு பார்க்கறதை மறந்துடலாம்”.
மிளகு: அத்தியாயம் ஐந்து
புராதன மாளிகைகளும், வியாபார நிறுவனங்களும் அணிவகுத்து நிற்கும் கருங்கல் பாவிய அகலமான வீதிகளில் மிக விரிவானது அந்த ரதவீதி. அங்கே போர்த்துகீஸ் அரசப் பிரதிநிதி இம்மேனுவல் ராபர்ட்டோ பெத்ரோ Immanuel Roberto Pedro வசிக்கும் விசாலமான மாளிகை. வழக்கமான போர்த்துகீஸ் காலை உணவான சீராக வெண்ணெய் தடவி அனலில் சுட்ட டொர்ரடா (toast), மசித்த காய்கறியும், பன்றி மாமிசமும் இடையில் வைத்த ரொட்டித் துண்டுகள், ஆரஞ்சு பழக்கூழும் தேனும் நிறைத்த பாபோ செகோஸ் (bun), பால் அதிகம் சேர்த்த காப்பி என்று பசியாறிப் பயணத்துக்குச் சித்தமானார் பெத்ரோ.
மிளகு – மிர்ஜான் கோட்டை
”புராதன ரோம் நகரத்தில் துணிகளை வெளிரென்று சலவை செய்து தர நிறுவனங்கள் இருந்தன. அதற்கான வாயு வேண்டுமே? அந்தக் காலத்தில் ஏது? ஆகவே அந்தக் குறிப்பிட்ட வாயு நிறைந்த சிறுநீரை இந்தக் காரியத்துக்காக உபயோகப்படுத்தினார்கள். சலவைக்கடை வாசலில் பெரியதாகப் பள்ளம் தோண்டி, ’இங்கே சிறுநீர் கழிக்கவும்’ என்று அறிவிப்புப் பலகை வைத்து, நகர மக்களை வேண்டி விரும்பி அழைத்தார்கள்”.
மிளகு
சென்னபைரதேவி நாற்பத்து நான்கு வருஷங்களாக அரசாங்கம் நடத்தி வந்தாலும், ஆட்சியிலும் வாழ்க்கையிலும் சகல வெற்றியும் பெற்ற ஒரு அரசியாக இருந்தாலும், ஒரு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று விருப்பம் ஏனோ தோன்றியதில்லை. பெண்ணாகப் பிறந்தவள் பதினாறு வயதில் மண மண்டபத்தில் அக்னி வளர்த்துக் கைப்பிடிக்கக் காத்திருப்பவனோடு புது வாழ்க்கை தொடங்குவது எங்கும் வழக்கமாக இருக்க, சென்னா பதினாறு வயதில் அரசாள ஆரம்பித்து விட்டாள்.
