”விலை கொஞ்சம் குறைவுன்னாலும் கூடுதல் மிளகு ஏற்றுமதி. அதை அனுப்ப தயார்ப்படுத்த அதிக பேருக்கு வேலை. பயிரிட்டு அறுவடை செய்ய அதிகப் பேருக்கு வேலை. எல்லா வாசனை திரவியங்களுக்கும் இப்படி அதிகப் பேருக்கு வேலை. வெடியுப்பு தயார் செய்ய, அனுப்ப அதேபடி. துணி நெய்ய, சாயம் தோய்க்க, சீராக்கி லிஸ்பன் அனுப்ப அதிகப் பேருக்கு வேலை. அதிகம் வேலை. அதிகம் பணப் புழக்கம். அதிகம் பணம் செலவழிக்க. சேமிக்க. நகை வாங்க. யார் வேணாம்னு சொல்லப் போறாங்க மகாராஜா?”
Tag: தமிழில் வரலாற்றுப் புதினங்கள்
மிளகு அத்தியாயம் பத்தொன்பது
நானும் அகல்யாவும் மட்டும் இருந்தவரைக்கும் பம்பாய் பாண்டுப் சால் குடித்தனத்தைத்தான் நடத்திட்டு இருந்தோம். அதுனாலே பெரும்பாலும் மராட்டி தான் பேசினது. கூடவே பம்பாய் இந்தியும். குழந்தைகள் ஏற்பட்டு, ஸ்கூல் போக ஆரம்பிச்சதிலே இருந்து அக்கம் பக்கத்திலும் ஸ்கூல்லேயும் பேசிப் பேசி பசங்களுக்கு வாயிலே மலையாளம் சர்வசாதாரணமாக வந்துடுத்து. நானும் அகல்யாவும் கொஞ்சம் சிரமப்பட்டு ஒரு வழியா மலையாளி ஆகிட்டோம். இன்னும் தமிழ் உச்சரிப்பிலே தான் மலையாளம்.
மகரந்தம்
2012-ல் நடைபெற்ற உலகப் புகழ் பெற்ற சோதனையில் கண்டறிப்பட்ட ஹிக்ஸ்-போசான் துகளுக்குக் ‘கடவுள்-துகள்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஹிக்ஸ் என்பது பீடர் ஹிக்ஸ் என்பவரையும், போசான் என்பது நமது சத்யேந்த்ர நாத் போஸையும் குறிக்கும். போசான்களைப் பற்றி மிகத் தெளிவாக மிகவும் முன்னதாக ஆய்வு செய்து அடிப்படைகளை அமைத்தவரின் பெயர் பின்னர் வருகிறது-மேலும் குவாண்டம் துறையில் நடைபெற்ற ஆய்வுகளுக்காக நோபல் பரிசுகள் பலருக்குக் கிடைத்துள்ளன -ஆனால், இவருக்குக் கிடைக்கவில்லை.
