மிளகு அத்தியாயம் அறுபத்தேழு

அது பேய் மிளகை நானூறு வருடத்துக்கு அப்புறம் கர்னாடகத்தில் இருந்து கேரளத்துக்குக் கொண்டு வருகின்றது. மிளகு சம்பந்தமாக எல்லோர் வாழ்க்கையிலும் ஏதோ நடத்திப் போகிறது. ஒரு குழந்தைக் குரலில் அப்பா அப்பா என்று அழைக்கிறது. அந்தக் குழந்தை வீட்டில் இருந்து கடைவீதிக்குத் தனியாக போகிறான்.  சின்னப் பையன், மஞ்சுநாத், ரோகிணியின் மகனா? அப்பா அப்பா என்று பரமனைக் கூப்பிடுகிறானா?

மிளகு  அத்தியாயம்   நாற்பத்தெட்டு   

மறுபடி தண்ணீர்க் குளியல். அடுத்து புது மஞ்சளை விழுதாக அரைத்துப் பூசி மஞ்சள் அபிஷேகம். சுத்தமான நீரால் திருமஞ்சனம் செய்வித்தல் அடுத்தது. ஸ்ரீகோவிலும் பிரகாரமும் சந்தன வாசத்தில் மூழ்கி இருக்க, களப அபிஷேகம் அடுத்து, தொடர்ந்து தூய்மையான தண்ணீரால் மஞ்சனம். அடுத்து மல்லிகை, ஜவந்தி, முல்லை, கனகாம்பரம், ரோஜா மலர்கள் கூடை கூடையாக உயர்த்திச் சொரிந்து ஸ்ரீகோவிலையே பூவிதழ்களாலும் நல்ல மலர் மணத்தாலும் மூழ்கியிருக்கச் செய்து புஷ்பாபிஷேகம். 

மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு

அவர் விமானம் ஏறும்போது கல்பா, மருது இன்னும் மருதுவின் ஆப்பிரிக்க நண்பர்கள், தோழிகள் என்று ஒரு கூட்டமே ஹீத்ரோவ் விமான நிலையத்துக்கு அவரை வழியனுப்ப வந்தது. “போய்த்தான் ஆகணுமா, அதுவும் இந்த சங்கடமான நேரத்திலே?” என்று கல்பா கேட்டாலும், அவளுடைய அப்பா திலீப் ராவ்ஜிக்கும், தம்பி அனந்தனுக்கும் சிறுசிறு பரிசுகள் அடுத்த வாரம் வரும் புத்தாண்டுக்காக பிஷாரடி வைத்தியர் மூலம் தான் அனுப்பி வைக்கிறாள்.

மிளகு -அத்தியாயம் பதினாறு 

தாங்கனீகாவிலே முதல் நாள் ஆபீசுக்குப் போனபோது கட்டை ரெண்டையும் வாசல்லே விட்டுட்டுப் போகணும்னுட்டாங்க. போயிருப்பேன். நாலாவது மாடி. லிப்ட் கிடையாது. உள்ளூர் மகா ஜனங்கள் மாடிப்படி ஏடி இறங்கறது கவர்மெண்ட் கூட தொடர்பு கொள்றதிலே ஒரு அம்சம்னோ என்னமோ, சளைக்காமல் காகிதங்களைத் தூக்கிண்டு ஒரு நாளைக்கு எத்தனை தடவை வேணும்னாலும் படி ஏறுவா.