மேலுள்ள விளக்கம் உங்களுக்கு உபயோகமாகலாம். உதாரணமாய், ” இன்னாராகிய பாடகர் பாடிய திரையிசையை கேட்டிருக்கிறேன், அவருக்கு குரல் போகுங்க” என்று ஒருவர் சொன்னால், அது உண்மையென்றால் இதுவரை அப்பாடல்களை கேட்டவர்கள் அப்படிச் சொல்லவில்லையே, ஒருவேளை அவர்களனைவருக்கும் காது லேதா, இல்லை இசையின் புறவய அங்கத்தை, அகவயமாய் அள்ளித்தெளிக்கும் குறைசொல்பவரின் இசையறிவு செம்மையடையவில்லையா என்பதை பாகுபடுத்தி நீங்களே உணர்ந்துகொள்லலாம். நீங்களே உங்கள் கேள்திறன், அறிவை வைத்துக் கேட்டுச் சரிபார்த்தும் கொள்ளலாம்.
Category: இதழ்
ஆயிரம் தெய்வங்கள் – பகுதி 2
சொர்க்க லோகத்தைக் கண்டுபிடித்த எகிப்திய மதமாகட்டும், கிரேக்க மதமாகட்டும் மன்னர்களுக்கு மட்டுமே சொர்க்கவாசல் தருகிறது. கடவுள் மன்னனை தண்டிப்பதில்லை. மன்னனே கடவுள். இப்படிப்பட்ட அகங்காரத்தைத் தட்டிக்கேட்டதால் தகராறு வந்தது. தவறு செய்தால் மன்னனுக்கும் தண்டனை உண்டு. ஆண்டவனின் ராஜ்ஜியத்தில் ஏழை பணக்காரன் இல்லை. இப்படியெல்லாம் பேசியதால் ஏசுவுக்கு தண்டனை கிடைத்தது.
ஹாலிவுட் உருவாக்கிய மனநோய்
MPD என்பது உண்மையாலுமே ஒரு மனநிலை பிறழ்ச்சி நோய்தானா அல்லது வெறும் ஹாலிவுட் ‘பில்டப்’தானா? அல்லது அதைவிட மோசமாக தங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் மனசிகிச்சையாளர்களே இந்த நினைவுகளை உள்செலுத்துகிறார்களா? அன்னியன் திரைப்படத்தில் வருவதுபோன்ற மனப்பிறழ்ச்சிக்கு சாத்தியக்கூறுகள் உண்டா?
மிருதங்கம் – தஞ்சாவூரும் புதுக்கோட்டையும்
மிருதங்கத்தில் கண்கள் உண்டு. வலந்தலையையும் தொப்பியையும் இணைக்கும் எட்டு ஜோடி இடங்களை கண்கள் என்று குறிப்பதுண்டு. அனைத்து கண்களிலும் ஒரே விதமாய் ஸ்ருதி சேர்ந்தால்தான் கேட்க இனிமையாக இருக்கும். நடைமுறையில் அத்தனை கண்களிலும் சீராய் ஸ்ருதி சேர்வது கடினம். அழகநம்பிக்கோ ஒரு கண்ணில் ஸ்ருதி சேர்ந்தாலே, நாதம் வெகு சௌக்யமாய் வெளிப்படுமாம். ஒரு கண்ணில் மட்டுமே பார்வை இருந்த அழகநம்பியைப் பற்றி சிலேடையாய், “அழக நம்பிக்கு ஒரு கண்ணே போதும்”, கூறியுள்ளனர்.
தெரியாதது
பிரபஞ்சத்தை அறிய முயற்சி. மண்ணாங்கட்டி. ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்தாலே சரி என்றுதான் தோன்றுகிறது. என்ன வித்தியாசம்? ஒன்றும் இல்லை. நான் SETI ஆய்வுக்கூடத்தில் வேலை பார்க்கிறேன். அந்த ஆய்வுக்கூடத்தில் ஒரு கழிவறை இருக்கிறது. அதை சுத்தம் செய்யும் ரோபோவிற்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? எதற்கு இருக்கிறோம்? இந்த உலகமே ஒரு அபத்தமா? absurd piece of crap? oh God, தலைவலி… I need a painkiller”
பியானோ
பியானோவுடனான கலைஞனின் உறவென்பது மிகவும் நெருக்கமானது. இருவருக்கும் இடையில் நிகழும் உரையாடலே இசையாக நிகழ்கிறது. பீத்தோவன் தன் காதலியின் நினைவாக உருவாக்கிய இந்த இசைக் கோர்வை தன் காதலியுடனான காலம் தாண்டியும் நிலைத்த உரையாடலாக கருதமுடியும். இசையின் நுணுக்கம் அறிந்தவர்கள் இந்த உரையாடலின் மெல்லிய அந்தரங்கங்களை ரசிக்க முடியும். “பியானோ”
ஆவி கதை
பதினொரு மணி இருக்கும். மெழுகுவர்த்தியைப் பற்ற வைத்து டம்பளரைத் தேடினேன். கிடைக்கவில்லை. பாட்டில் மூடியை போர்டின் நடுவில் வைத்து என் விரலை நடுக்கத்துடன் அதன் மீது வைத்தேன். நகரவில்லை. கண்களை லேசாக மூடிக்கொண்டேன். சாமியை வேண்டிக்கொள்ளலாம் என்று யோசித்தேன். சாமிக்கும் பேய்க்கும் என்ன சம்பந்தம்? சாமிக்கும் ஆவிக்கும் ஆகாது என்பதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டேன்.
கார்ட்டூன் இதழ் 35
காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி
பேரரசர் இராஜராஜ சோழன் தஞ்சையில் தமது பெயரால் ஸ்ரீராஜராஜீஸ்வரம் என்ற சிவன் கோயில் எடுப்பித்து 1,000 ஆண்டுகள் நிறைவுறுகின்றன. இதனையொட்டித் தமிழக அரசின் முன்முயற்சியால் மிகப்பெரும் கேளிக்கைகள், இராஜராஜனோடு தம்மை ஒப்பிட்டுக்கொள்ளும் ஆட்சியாளர்களின் அகம்பாவத்தைத் திருப்தி செய்யும் கூத்து அரங்கேற்றங்கள் எல்லாம் நிகழ்ந்து முடிந்துள்ளன. இந்நிலையில் தமிழக வரலாற்றில் இராஜராஜ சோழன் தொடக்கிவைத்த சில போக்குகள், அவை சுட்டிக்காட்டும் நுண்ணரசியல் ஆகியவை பற்றி விவாதிக்கும் ஆய்வே இக்கட்டுரை.
உலைகலனாகுமா தமிழகம்? – இறுதிப் பகுதி
அரசியல் கொள்கைகள் காரணமாக தொழிற்துறை முடங்கிக் கிடந்த நிலையில் ஓரளவு படித்த வங்காளிகள் கூட வெளிநாடுகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் வேலை வாய்ப்பை நாடியும் வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொள்ளவும் சென்றனர். இதர வங்கத் தொழிலாளர்கள் ஆளும் அரசின் செல்லப் பிள்ளைகளாய் உற்பத்தியைப் பெருக்காமலேயே உண்டி பெருக்கி ஒரு வகையில் வீணான வாழவு வாழ்ந்தனர்.
வாசகர் மறுமொழி
சொல்வனத்தில் வரும் தொடர்கள் சிறப்பாகவே இருக்கின்றன. நான் மிகவும் விரும்பிப்படித்த நாஞ்சில்நாடனின் ‘பனுவல் போற்றுதும்’, அருண் நரசிம்மனின் ‘ராகம் தானம் பல்லவி’ இரண்டும் திடீரென்று நின்றுபோனது எனக்கு மிகப்பெரிய வருத்தத்தைத் தந்தது. தொடர்கள் இடைவெளியில்லாமல், திடுதிப்பென்று நிறுத்தப்படாமல் வெளிவருவது ஒரு இதழின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும். தொடரிலும் தொய்வில்லாமல் இருக்கும். ஆசிரியர் குழு கவனிக்கும் என நினைக்கிறேன்.
வழி
கணம்தோறும் நடந்துவிடும்
செயல்களைத் திருத்திக்கொள்ளும்
வாய்ப்பு மறுக்கப்படும்
வழியென்றறிந்து
கவனமாக அடி வைக்கிறேன்
மகரந்தம்
மானுட முயற்சிக்குப் பூமி அளவில் தாக்கம் இருப்பதால்தானே எத்தனையோ மிருகங்கள், ஜீவராசிகளை நாம் அழித்திருக்கிறோம், அது தெரிந்தும் மானுடரால் பூமி அளவில் பாதிப்பில்லை என்ற கருத்து இருக்க என்ன காரணம், எல்லாம் வல்ல கடவுள் என்ற ஒரு கற்பிதம் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை இதில் எத்தனை பங்கு வகிக்கிறது?
அனிமேஷன் திரைப்பயணம்: 05 – கல்வி வாய்ப்புகள் மற்றும் எதிர்காலம்
இளைஞர்களுக்கு ஒரு சின்ன யோசனை. வெறும் 3DS Max தெரியும், Maya தெரியும். ஆகவே தன்னை அனிமேஷன் வித்தகர் என்று நினைக்க வேண்டாம். பொதுவாக, நம் இளைஞர்கள், மேல் வாரியாக மேலைநாட்டுத் (அதனால் தான் மேல்வாரி என்ற சொல் வந்ததோ?) தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதிலேயே காலத்தை செலவழிக்கிறார்கள். மென்பொருள் உபயோகத்திறன் மிகவும் முக்கியம் – ஆனால் அதுவே குறிக்கோளாகக் கூடாது. மென்பொருள் அம்சங்களுக்கு (feature/function) பின்னால் உள்ள நுட்பத்தையும் முறையாகக் கற்க வேண்டும்.
தரிசனம்
இப்போது மண்டபத்தின் மத்தியில் சன்னதியை நோக்கியவாறு கூப்பிய கரங்களோடு ராஜா நின்றார். இரண்டு படி கீழே ராஜாவைப் பார்த்தவாறு பூசாரிகள் இருவரும் நின்றனர். இன்னும் சன்னதி திறக்கவில்லை. சில சடங்குகள் முடிந்ததும்தான் திறப்பார்கள் போலும். ஒரு பூசாரியின் கையில் இருந்த தட்டில் பன்முக விளக்கும் கற்பூரமும் எரிந்தன. மற்றொருவர் தட்டில் என்ன இருந்தது என்று தெரியவில்லை. எதிர் பிரகாரத்தில் இருந்தவர்கள் தாமே ஒருவர் பின் ஒருவராக சீரான வரிசையில் முற்றத்தில் இறங்கி மண்டபம் நோக்கி நகர்ந்தனர்.
மில் – ஒரு பார்வை
முற்போக்கு என்கிற பெயரில் எழுதப்படுகிற நாவலில் அறிவுக்கொலைகள் சர்வ சாதாரணம். மற்ற பக்கத்தின் மீதான அறிவின்மை, சகபுரிதல், ஒட்டுமொத்த புரிதலின்மை போன்றவற்றால் எழும் வெற்றிடத்தை மனித நேயக்குரல், மார்க்கீசியம் என்கிற வெறும் ஓலி அலைகளால் நிரப்புதலே முற்போக்கு இலக்கியம் என்கிற காலகட்டத்தை பின் தள்ளி எழுத்துக்கள் நகர்தல் அவசியம்.
வெடித்துக் கிளம்பும் விக்கிலீக்ஸ் – இறுதிப் பகுதி
விக்கிலீக்ஸின் கசிவினால் அமெரிக்காவின் பாக்கிஸ்தான் கொள்கைகளில் பெருத்த மாற்றமோ விளைவுகளோ ஏற்படாவிட்டாலும் கூட இந்த கசிவு ஒரு புதிய விவாதத்தை குறைந்த அளவிலேனும் துவக்கி உள்ளது ஒரு வரவேற்கத்தகுந்த மாற்றமே. இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் கூட விஸில் ப்ளோயர்கள் பலரும் கொல்லப் படுகிறார்கள் அல்லது அரசாங்கத்தினால் கைது செய்து சித்ரவதை செய்யப் படுகிறார்கள்.
Beatles – காலத்தில் சிறிது பின்னோக்கி….
1960-70 களில் உலகத்தை தங்கள் இசையால் மயக்கிய Beatles இசைக்குழுவினரின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு. மக்களிடையே அவர்களுக்கு பெற்றிருந்த செல்வாக்கை பறைசாற்றும் படங்கள் இவை. குழு உறுப்பினர்களின் சில சுவரசியமான புகைப்படங்களைக் கொண்ட நல்லதொரு தொகுப்பை இங்கே பார்க்கலாம். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள். Beatles குழுவின் பின்னால் “Beatles – காலத்தில் சிறிது பின்னோக்கி….”
பின்னணி இசை – தேசிய அங்கீகாரம்
இந்தியத் திரைப்படங்களுக்கான தேசியவிருதுப் பட்டியலில் இந்த வருடத்தில் புதியதாக சிறந்த பின்னணி இசைக்கான விருதும் சேர்க்கப்பட்டுள்ளது. உலகெங்கும் திரைப்படங்களில் இசை என்றாலே பின்னணி இசை என்றிருக்கையில் இத்தனை வருடங்களாக தேசியவிருதுக்குழுவினர் வெறும் பாடல்களை மட்டுமே முன்வைத்து இசைக்காக விருது அளித்து வந்துள்ளனர். இப்போதாவது இதை அறிமுகப்படுத்தி முக்கியத்துவம் தருகிறார்களே “பின்னணி இசை – தேசிய அங்கீகாரம்”
பனிப்போரின் இரகசிய பரிசோதனைகள்
ஆனால் பனிப்போர் யுகத்திலோ அதி-உளவியல் மற்றும் ஆழ-உளவியல் பரிசோதனைகள் என்கிற பெயரில் பல மூர்க்கத்தனமான மற்றும் முட்டாள்தனமான பரிசோதனைகளில் வல்லரசுகள் பணத்தை செலவிட்டன. சில நேரங்களில் எதிரியை இப்படி வீணாக செலவழிக்க வைக்க தம் பக்கத்து முட்டாள்தனங்களுக்கு உண்மை முலாம் பூசி பெரிதுபடுத்தி மறு முகாம்களில் பரவ்விடவும் இரு வல்லரசுகளும் தயங்கவில்லை.
கார்ட்டூன் இதழ் 34
சின்னஞ்சிறு கிளியே
அப்படிப்பட்ட எம்.எஸ்.விஸ்வநாதன் அப்பாடலின் ஆண் குரலுக்கு, செம்பை வைத்தியநாத பாகவதரின் சிஷ்யரும், கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவருமான கே.ஜே.யேசுதாசைத் தெரிவு செய்கிறார். அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் அப்பாடல் தொடங்குவதே பெண் குரல்தான். அந்தப் பெண்குரல் பகுதிக்கு பதினான்கு வயதே நிரம்பிய ஒரு புதிய பெண் பாடகியைப் பாடவைக்கிறார். அப்படியென்றால் அவருக்கு அந்தப் பெண் குரல் மீது எத்தனை நம்பிக்கையும், அங்கீகரிப்பும் இருந்திருக்க வேண்டும்! ‘சின்னஞ்சிறு கிளியே’ என்று பல்லவியை அனுபவித்துப் பாடித் துவக்கிய அந்த இளம்பாடகியின் பெயர் ஸ்வர்ணலதா.
கண்ணாடி அணிந்தவனின் நிலவு
என் பார்வையின் விளிம்புகளில்
படித்த எழுத்துக்கள்
நிரம்பிப் பிராகசிக்கின்றன.
அத்தனை பாவனைகளுக்கும்
அத்தனை விளிம்புகளை
மாற்றிக் கொள்ளலாம்.
உலைகலனாகுமா தமிழகம்? – கோவை நிகழ்வை முன்வைத்து
இன்னும் பத்து ஆண்டுகளில் தமிழகமெங்கும் கோவை நகரச் சம்பவங்கள் நிகழ்ந்து, அதன் பின்விளைவாக தொழில் முடக்கமும், வேலை வாய்ப்பின்மையும் சமூகக் கொந்தளிப்பும் ஏற்படுவதைத் தடுக்க நாம் என்ன செய்யப் போகிறோம்? இப்படி முன்கூட்டி நாசம் ஏற்படவிருப்பதை நமக்கு உணர்த்தும் வகையில் சமூகத்தில், பொருளாதாரத்தில், பண்பாட்டில் என்ன விதமான சக்திகளை நாம் உருவாக்க வேண்டும்?
Oktapodi – அனிமேஷன் குறும்படம்
இரு அழகிய ஆக்டபஸ்களின் காதல் வாழ்க்கையில் நேரும் திடீர் திருப்பம். பிரிந்த ஆக்டபஸ்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தனவா? இந்திய வணிக சினிமாவுக்கு ஏற்ற கதை தான். இந்த கதையை அற்புதமான அனிமேஷனை கொண்டு உருவாக்கிய கலைஞர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இந்த குறும்படம் பல திரைப்பட விழாக்களில் கலந்து “Oktapodi – அனிமேஷன் குறும்படம்”
எழுதுவதென்பது ஒரு சுய இன்பச்செயல்
அப்பாவின் மெளனம், இயன் மெக்கீவனின் (Ian McEwan) ‘பிராயச்சித்தம்’ (Atonement) நாவலில் வரும் ஒரு பத்தியை நினைவுபடுத்தியது. அக்கதையின் முக்கிய கதாபாத்திரம், தான் ஐம்பது வருடத்திற்கு முன் வசித்த லண்டனிலுள்ள ப்ளூம்ஸ்பரி என்ற இடத்தை ஒரு டாக்சியில் கடப்பாள். அப்போது அவள் மனதில் இந்த சிந்தனைகள் ஓடும், “ஓரு வயதுக்குப் பிறகு நகரத்தினூடே பயணம் செய்தல் துயரமிக்க நினைவுகளை கொண்டு வருகின்றது. இறந்தவர்களின் முகவரிகள் குவிந்துகொண்டே போகின்றன… ஒரு நாள் நானும் ஒரு வழிப்போக்கனின் மனதில் நொடி நேர நினைவைத் தோற்றுவிப்பேன்.”
’கதை என் மீது துள்ளியபடி இருக்கும்’
ஆம் என் தலைக்குள் பல எண்ணங்கள் ஓடியபடி இருக்கும். இருந்தும் எந்த புதிய எண்ணங்களும் இல்லாததைப் போல பல தினங்கள் வெறுமே கழியும். ஆனால் எதையாவது எழுத துவங்கிவிட்டால் பித்து பிடித்ததைப் போல் ஒரு வாரத்தின் ஏழு நாட்களிலும், ஒரு நாளைக்கு பத்து அல்லது பதினைந்து மணிநேரங்கள் உழைப்பேன். இப்படி நடக்கும் நிகழ்வுகளே என் கதைகளை தீர்மானிக்கும்.
மகரந்தம்
ஒரு தனி உயிர் தன்னுடைய நேரத்தை தன் இனப்பெருக்க சாத்தியங்களை ஓரளவாவது துறந்து தன் உயிரினக் கூட்டத்துக்கு நேரத்தையும் தன் சக்தியையும் கொடுப்பதற்கு பின்னால் இயங்கும் ஆதாரமான பரிணாம விதிகள் என்ன? ஈ.ஓ.வில்ஸன் தன் வாழ்க்கையையே இந்த ஆராய்ச்சியில் செலவழித்திருக்கிறார்.
ஆண்பெண் போட்டி
பெண் வீட்டுக்குவந்தா செல்லுலே அரட்டை, இல்லாட்டா காதிலே ஐ-பாட். நாலுதடவை கத்தினாத்தான் திரும்பிப் பாப்போ. பையன் கம்ப்யூட்டர் முன்னாலே உக்காந்தான்னா ஒரே இரைச்சல். ரெண்டுபேரும் எது கேட்டாலும் நீ பேசறது ஒண்ணும் புரியலியேன்னு முகத்தை வச்சுப்பா. ஷேக்ஸ்பியர்லேர்ந்து பெர்னாட் ஷா வரைக்கும், நாம படிக்காத இங்க்லீஷா?
ராக்கெட்டில் போனவர்களின் ராஜ வைத்தியம்!
அமெரிக்க ராணுவத்தினர் அடாவடி ஆக்கிரமிப்புக்களுக்காக வெளி நாடு செல்லும்போது MRE (அப்படியே சாப்பிடத் தகுந்த உணவு) என்ற பட்டைச் சாதப் பொட்டலங்களைக் கொண்டு போவார்கள். போர் முனையில் ஃபிரிட்ஜ் இல்லாத இடத்தில்கூடக் கெட்டுப் போகாமல் இருக்க, அதிகக் காற்றழுத்தத்தில் சூடாக்கிக் கிருமி நீக்கம் செய்வார்கள். இந்த டெக்னாலஜியையும் நாசா உபயோகித்துக் கொள்கிறது. அமெரிக்க நாக்கு போர் முனையில் கூட சுடச்சுட சாப்பாடு கேட்கிறது போலிருக்கிறது.
கார்ட்டூன் – இதழ் 33
ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தினர்
ஒரு நாளின் எந்த மணித்துளியிலும் வெடிகுண்டு வெடிக்கலாம். கலவரம் நிகழலாம். நிச்சயமற்ற தருணங்கள். வலி கொடுக்கும் நிகழ்வுகள். இந்த புகைப்படங்களை பார்க்கையில் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையின் பலியாடுகள் ஈராக்கியர்கள் மட்டுமல்ல என்று புரியும்.
இரண்டு கவிதைகள்
பால் மறக்காது
பசியும் அடங்காது
பற்றி உறிஞ்ச முன்னும்
பிஞ்சு உதடுகளைப்
பதறப் பதற
முலையினின்றும் பிடுங்கி
மூலையில் எறிந்த தாய்
அக்கமகாதேவியின் வசனங்கள்
நிலையான வாழ்வுக்கு மல்லிகார்ஜூனனே அடைக்கலம் என்று சொல்வது எளிதாக இருக்கலாம். ஆனால் அவ்விதமான எண்ணத்தோடு வாழ்க்கையை எதிர்கொள்வது எளிதான செயலல்ல. வேதனையானது. நெருப்பில்லாத சூட்டில் வெந்து கருகுவதுபோல. வடுவில்லாத காயத்தல் நொந்து கலங்குவதுபோல. எவ்விதமான புவியியல் இன்பமும் இல்லாமல் வாடிவதங்குவதுபோல.
அனிமேஷன் திரைப்பயணம்: 04 – தொழில்நுட்ப வரலாறு
மனித சினிமாக்களின் மிகப் பெரிய எதிரி ஹீரோ மற்றும் இமேஜ் சமாச்சாரங்கள். அப்படி, இப்படி இருந்தாலும் கூட ஷாருக்கான் மற்றும் ரஜனிக்காக படம் ஓடுவதைப் போல அனிமேஷனில் எதிர்பார்க்க முடியாது. அனிமேஷன் பாத்திரங்களுக்கு ஸ்டார் வால்யூ எல்லாம் கிடையாது. முதல் விஷயம் ’திரைக்கதை’. அனிமேஷன் திரைப்படங்களில் வழக்கமான திரைப்படங்களை விட மிகத் தெளிவாகக் கதை சொல்லப்பட வேண்டும்.
மகரந்தம்
தோரியத்தின் ஒரே பிரச்சினை அதில் மிஞ்சும் பொருள்களை வைத்து அணுகுண்டு தயாரிக்க முடியாது. இந்த ஒரு காரணத்துக்காகத்தான் உலக அணுசக்தியில் தேர்ச்சி பெற்ற நாட்டின் அரசுகள் தோரியத்தைப் பயன்படுத்தாமல், அதைவிட பன்மடங்கு கடினமான முயற்சியிலேயே கிட்டக் கூடிய யுரேனியத்தைத் துரத்தினார்கள். இப்போது நம் தேவை குண்டுகள் அல்ல, மின்சக்தி.
பெண்ணின் நெருப்பு
கண்ணகி கற்பனையும் வரலாறும் கலந்து ஒரு நீங்காத தொன்ம நினைவாக தமிழ் மனதில் வாழ்கிறாள். சலேம் சூனியக்காரி விசாரணைகளையும், சந்தையையும், அடிப்படைவாத கிறிஸ்தவத்தையும் கொண்ட அமெரிக்கப் பண்பாட்டில் ஒரு கண்ணகி வழிபாட்டை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அதன் மலினப்படுத்தும் பண்பாட்டில் அடக்கப்படும் பெண்மையின் மீதான ஆண்-சமுதாயத்தின் அச்சப்பார்வை, கூடிப்போனால் க்கேரி அல்லது ஃபயர்ஸ்டார்ட்டர் போன்ற பயமுறுத்தும் திரைப்படங்களாக மட்டுமே வர முடியும்.
வெடித்துக் கிளம்பும் விக்கிலீக்ஸ் – 3
விக்கிலீக்ஸ்ஸீன் கசிவுகள் அமெரிக்காவில் பெரும் மாற்றத்தையும், அரசின் கொள்கைகளில் பெரும் மாறுதலையும், ஒரு பெரும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என்று நம்பிக் கொண்டிருந்த ஜூலியன் அசாங்கேயின் எண்ணத்தில் மண் விழுந்ததும் இல்லாமல், அவர் மீது பாலியல் வன்கொடுமை சட்டம் வேறு பாய்ந்திருக்கிறது. கற்பழிப்புக் குற்றச்சாட்டில் அவரைப் பிடித்து உள்ளே வைப்பதும் வெளியில் விடுவதுமாக ஸ்வீடன் அரசு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது. ”நான் நம்பிய நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள் அரசின் சார்பாக அடக்கி வாசித்து மக்களை வஞ்சித்து விட்டார்கள் நாங்கள் மோசம் போய் விட்டோம்” என்று விக்கிலீக்கினர் தனியாகப் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இசைமேதையின் புகைப்படம்
பிற்பாடு இசைவகுப்புகளில் ஹார்மோனியம் வாசிக்கும் போது ராகங்களை இனங்கண்டு எளிதாக பயில முடிந்ததற்கு சிறுவயதிலிருந்தே கேட்டுக் கேட்டுப் பழகியிருந்த ஜி.ராமனாதனின் பாடல்களே காரணமாயிருந்தன. குறிப்பாக சாருகேசி. ’ஆடமோடிகலதே’ என்னும் தியாகராஜ கீர்த்தனையை பாடமாக எழுதிக் கொண்டு மலைத்தபடியே சாருகேசியை வாசிக்க முயலும் போது மெல்ல பிடிபட ஆரம்பித்தது. என்ன ராகமென்றே தெரியாமல் ஏற்கனவே வாசித்துப் பழகியிருந்த ‘வசந்தமுல்லை போலே வந்து’ பாடலின் ஸ்வரங்களுக்குள் விரல்கள் சென்று திரும்பின. வெற்றிலை புகையிலையைத் துப்பிவிட்டு வந்து உட்கார்ந்த இசையாசிரியர் கிருஷ்ணன்ஸார் சொன்னார். ‘அப்பிடியே மன்மதலீலையை வென்றாரும் வாசிச்சுரு. வெளங்கிரும்.’ நிமிர்ந்துப் பார்க்க தைரியமில்லாமல் ஹார்மோனியத்திலேயே தலையைக் கவிழ்ந்தபடி உட்கார்ந்திருந்தேன்.
நாசகார வலை
அன்று இரவு வீடு திரும்பியதும் கம்ப்யூட்டரை ஆன் செய்தேன். பிரபல இணையதளம் ஒன்றில் அவள் செய்திருந்த விளம்பரத்தைக் கண்டதும் எனக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. ”ஆரோக்கியமான இளம் பெண்ணின் உடல் உறுப்பு(கள்) விற்பனைக்குத் தயார். கார் வாங்க இருப்பதால், காரை ஓட்டுவதற்கு இடைஞ்சல் இல்லாத வகையில் எந்த ஓர் உறுப்பும் விற்கப்படும். தொடர்பு கொள்ளுங்கள், பேசுவோம்..”
ஐம்பது மனிதர்கள், ஒரு கேள்வி
பல்வேறு தளங்களைச் சேர்ந்த ஐம்பது மனிதர்களிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி. பதில்களில் தொனிக்கும் உணர்வுகளும் பலதரப்பட்டவை. அந்த கேள்விக்கான உங்கள் பதில் என்ன?
02. மீண்டெழுந்த நாட்டுப்புற இசை
செல்லோவை இசைக்கும் முறையும் மிக வித்தியாசமானதுதான். இரண்டு கால்களுக்கு நடுவே வயலினைத் தலைகீழாகப் பிடிப்பது போல் பிடிக்க வேண்டும். செல்லோவைப் பிடிப்பது மட்டுமல்ல இசைப்பதும் ஆரம்பகட்ட ரசிகர்களுக்குச் சிக்கலானதுதான். கிட்டத்தட்ட நம் முகமிருக்கும் உயரத்துக்கு எந்தவித பிடிமானமும் இல்லாமல் இடது கை அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும். தந்தியை இசைக்கத் தொடங்கினால் முழு கையை அங்குமிங்கும் ஓடிப் பிடிப்பது போல் தோற்றமளிக்கும். ஒரு ஸ்டைலான வாத்தியக்கருவியைப் போல் பார்த்தவுடன் நம்மை ஈர்க்காதது என்னவோ உண்மைதான்!
வாசகர் எதிர்வினை
ஏ.ஆர்.ரஹ்மான் இப்போட்டிகளுக்காக அமைத்திருக்கும் பாடல் மிகவும் மோசமாக இருக்கிறது, அதை மீண்டும் வடிவமைக்கவேண்டும் என்று வெளிப்படையாகவே சொல்கிறார் காமன்வெல்த் போட்டிகளின் கமிட்டியில் பணியாற்றும் வி.கே.மல்ஹோத்ரா. இதைவிட ஒரு கலைஞனை அவமானப்படுத்தவே முடியாது. ரஹ்மானின் பாடல்கள் கேட்டவுடனே பிடிக்கக்கூடியவை இல்லை. ஆனால் தொடர்ந்து கேட்பதன் மூலம் அப்பாடல்கள் பெரிய வெற்றியைப் பெறக்கூடியவை.
வெறும் பலகையும், இரும்புத் திரையும்
மனித இயல்பு அடிப்படையில் களங்கமில்லாதது: எதுவும் போதிக்கப்படாத குழந்தைப் பருவத்திலும், நாகரீகத்தின் சுவடுகள் பதிக்கப்படாத வனவாசத்திலும் மனிதன் உள அளவில் அடையக்கூடிய வல்லமைகள் அளவிறந்து இருக்கின்றன என்ற கருதுகோளை நம்மில் பலர் ஏற்றுக் கொள்வோம் என்று நினைக்கிறேன். தரமில்லாத கல்வி அவனது அறிவை மேம்படுத்தத் தவறுகிறது, நாகரீகமயமாதல் தொழில்நுட்பச்சார்பை அதிகரிக்கின்ற காரணத்தால், அதன் தீவினையாய் அது மனித மனதை வக்கிரப்படுத்துகிறது என்ற வாதம் இந்தக் கருதுகோளின் நீட்சியே.
நவீன கால கிரிக்கெட் – விளையாட்டல்ல
இந்த ஊழல் விவகாரங்கள் இத்தோடு களையப்பட்டுவிடுமா என்றால் இல்லை என்பதுதான் சோகமான நிதர்சனம். கிரிக்கெட் இப்போது இருக்கும் தன்மையில் தொடர்ந்து விளையாடப்படுமானால் இந்த பிரச்சனைக்கு முடிவு கிடையாது. கிரிக்கெட்டின்சூழமைப்பே முற்றிலுமாக மாறிவிட்ட நிலையில் ஆட்டத்தின் விதிகளும் தன்மைகளும் அப்படியே இருப்பதில் என்ன நியாயம்?
மிருதங்கம் – ஒரு பறவைப் பார்வை எழுப்பும் பல கேள்விகள்
இன்றிருக்கும் தரவுகளை வைத்துப் பார்க்கும் போது, சங்க காலம் முதலே தமிழகத்தில் தாள இசைக் கருவிகள் பல இருந்தன என்பதும், அவை ஆடலுக்கும், திருமணம் போன்ற விழாக்களிலும் உபயோகப்படுத்தப்பட்டன என்பதும் தெளிவாகின்றன. மராட்டியர் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் தோலிசைக் கருவிகளும், அவற்றை முழக்கும் முறைகளும் பெரும் வளர்ச்சியை அடைந்திருந்தன.
வார்த்தைகள் – குறும்படம்
நாம் வாழும் உலகில் நம்மை சூழ்ந்திருக்கும் பல்வேறு உயிர்கள் பேசும் வார்த்தைகள் குறித்த ஒரு குறும்படம்.
காலம்
ஏன் இன்னும் வரவில்லை? அவனுக்கு ஆயாசமாக இருந்தது. இந்த வாட்டி வயிற்று வலியோடு ஜுரம் வந்துவிட்டது. குளிர் வேறு. பனியன், முழுக்கைச் சட்டை, லுங்கி, மேலே போர்வை. எல்லாவற்றையும் மீறி குளிரியது. கையைச் சட்டைக்குள் விட்டுக் கொள்ளலாம் என்றால் அசைக்கவே முடியவில்லை. நடு நெஞ்சில் என்னவோ உறுத்தியது, நீளமான பல்லி மாதிரி. அது ரொம்ப காலமாக நகராமல் அங்கேயே இருந்த மாதிரி தோன்றியது.
துப்பு
ஊருக்கெல்லாம் துப்பு சொல்லி திருமணம் நடத்தி வைக்கும் முனியப்ப தாத்தாவின் மனைவி அவருடன் வாழ்ந்தது ஒரு சில வருடங்கள்தான். பெரும் பணக்காரியான அவர் இவரிடம் விவாகரத்து வாங்கிக் கொண்டு தன் மகனுடன் தனியே வாழ்ந்து வருகிறார். மகன் மீது கொள்ளைப் பாசம் முனியப்ப தாத்தாவுக்கு. அவன் கல்லூரிக்குச் செல்லும் போது எதிரே இவர் வந்தால் தன் தாயின் வளர்ப்பு காரணமாக சிரிக்கக் கூட செய்யாமல் பாராமுகமாகச் சென்றதை ஒருமுறை என்னிடம் கண்கலங்கிச் சொல்லியிருக்கிறார்.
வாசகர் எதிர்வினை
பத்ரியின் கருத்துகள் சிலவற்றில் நான் மாறுபடலாம். மாறுபடும் கருத்துகளைக் கடுமையாகவே நான் முன்வைக்கவும் செய்யலாம். ஆனால் பத்ரி என்கிற தனிமனிதர் மீதும் அவரது ஆளுமை மீதும் எனக்கு மிகுந்த மரியாதைதான் இருக்கிறது. அவர் தமிழ்ப்பதிப்புத்துறையில் செய்து வரும் சாதனைகள் குறித்து எனக்கு என்றைக்குமே வியப்பும் மதிப்பும் உண்டு.
