இருபதாம் நூற்றாண்டை விடவும் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் சூழல்விழிப்புணர்வு தொடர்பான பேச்சுக்கள் அதிகம். சூழல் விழிப்புணர்வு ஊர்வலம், மராத்தான் ஓட்டம், பள்ளிச் சிறுவர்கள் பங்கேற்பு என்று எவ்வளவோ சொல்லலாம். கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், எம் எல் ஏ, எம்.பி க்கள், சூழல் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். பற்றாக்குறைக்கு பாரத பிரதமரின் “தூயபாரதம்” கோஷமும் நல்ல பக்கபலம். இவ்வளவு இருந்தும் கூட தூய்மையான குடிநீருக்கு வழியில்லை.
Author: ஆர்.எஸ்.நாராயணன்
வளம் – வாழ்வு – வளர்ச்சி
தற்சார்பு விவசாயம் வளர வேண்டும். ரசாயன உரப்பயன்பாட்டை நிறுத்திவிட்டு இயற்கை இடுபொருட்களை விவசாயிகள் அவரவர் தோட்டங்களில் இயற்கை இடுபொருள் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். உபரி உரங்களை முழுக்க முழுக்க அரசுத்துறை உற்பத்தி செய்து யூரியா, பாஸ்பேட், பொட்டாசியம் என்று தனியார் வழங்கலுக்கு மாற்றாக பாக்டீரியா, சூடோமோனஸ் போன்ற பாக்டீரியா காளான் உரங்களை திரவ வடிவிலோ கரிப்பொடி கலந்தோ விநியோகிக்கலாம்.
உங்கள் கேள்விக்கு என் பதில்கள் – 8
இன்று ஆடு மாடு வளர்ப்பை விடக் கோழி வளர்ப்பே பெருகிவிட்டது. பெரிய பெரிய கூண்டுகளில் குஞ்சுகளை 10,000, 20,000 என்று வாங்கி எடை உயர்ந்த கோழிகளாக வளர்க்க அக்குஞ்சுகள் மீதே ஆண்டிபயாடிக் பூச்சி மருந்துக்கலவையை மழை போல தெளிக்கப்படுகிறது. கோழிகள் எடை கூடியதும் விற்பனைக்கு வரும். கொதிக்கும் நீரில் கோழியை அமிழ்த்தி இறகுகள் நீக்கப்பட்டு முழுக்கோழி உரித்த நிலையிலும் கிடைக்கும். துண்டுகளாகவும் கிடைக்கும்.
உங்கள் கேள்விக்கு என் பதில்கள் – 7
தூரத்தில் பனங்காடு தெரிந்தது. இரண்டு பர்லாங்கு நடந்தால் ஊர் வந்துவிடும். சித்துக்காடு சாலை வந்தபோது இருட்டி விட்டது. பனங்காட்டைத் தாண்டி அக்ரகாரம் செல்ல வேண்டும். நடுவில் ஒற்றையடிப் பாதை. பனங்காட்டைத் தாண்டி விட்டால் பயமில்லை. கொள்ளிவாய்ப் பிசாசு நடமாடுவதாக வேறு பேச்சு. யாராவது அரிக்கேன் விளக்கோடு நடந்தால் அது பிசாசாகதான் தெரியும். “ராமா, ராமா, ராமா,” என்று ஜெபித்தால் பிசாசு ஓடிவிடும் என்று அம்மா சொல்லிக் கொடுத்திருந்தார். அதுதான் வழி.
உங்கள் கேள்விக்கு என்ன பதில்? – 6
இயற்கையில் நெல் விதைக்கும்போது பச்சை கட்டிப் பயிர் எழும்பத்தாமதமாகலாம். இதைத் தசிர்க்க தொழு உழவு செய்யும்போதே பலவகையான மரத்தழைகளை வெட்டிப் போட்டு குலை மிதித்து 2 நாட்கள் அழுகியபின் பரம்பு ஒட்டி விதைக்க வேண்டும்.
உங்கள் கேள்விக்கு என்ன பதில் – 5
குப்பியில் அடைத்து திரவ வடிவில் விற்கப்படும் நுண்ணுயிரிகளின் ஆற்றல் கேள்விக்குரியவை. வர்த்தகரீதியில் ஏதோ ஒரு பிராண்ட் பெயரில், சக்தி, சமந்தா, சத்தியம், ஆச்சி, பேச்சி என்று விற்கப்படுகின்றன. உள்ளே இருக்கும் நுண்ணுயிரிகள் பற்றிய விபரம் இருக்காது. ரசாயன நுண்ணூட்டங்களான போரான், தாமிரம், துத்தநாகம் போன்றவை கலக்கப்பட்டிருக்கலாம். எந்தப் பயிருக்கு எந்த நுண்ணுயிரி தேவை என்ற விபரம் இல்லாமல் இருக்கும். பணம் உள்ளவர்கள் விளம்பரத்தை நம்பி வாங்கிச் செல்லலாம்.
உங்கள் கேள்விக்கு என்ன பதில் – 4
அபினி விஷயம் இன்னும் விஸ்தாரமானது. சுருங்கக் கூறினால், கஞ்சாவுடன் ஒப்பிட்டால் அபினி சித்த-ஆயுர்வேத-யுனானி மட்டுமல்ல அலோபதியிலும் பயன்படும் அற்புத மூலிகை. இதன் விஞ்ஞான பெயர் பபாவர்சோம்னிஃபெரம். ‘சோம்னி’ என்ற லத்தீன் சொல்லுக்கும் ‘சோம’ எனும் சம்ஸ்க்ருத சொல்லுக்கும் தொடர்பு இருக்கலாம். “சோமபானம்” என்பது அபினியா? கஞ்சாவா? இதற்கு ரிஷிகள்தான் பதில் சொல்லவேண்டும். அபினிஸ் செடியில் விளைவது போஸ்த்தக்காய். போஸ்த்தக்காய் முற்றினால் கசகசா விதைகள் கிட்டும். கசக்சா இந்திய சமையல் ருசிக்கு அரும்பங்கு ஆற்றுகிறது. கசகசா இல்லாமல் குருமா செய்ய முடியாது. கசகசாவும் மருந்து. லாகிரி வஸ்து அல்ல.
உன் கேள்விக்கென்ன பதில்? – 3
பாட்டிமார் சொல்லும் கதைகளிலும் அம்புலிமாமா பஞ்சதந்திர கதைகளிலும் ராஜா ராணி கருப்பு வெள்ளை திரைப்படங்களிலும் காணப்படும் காடுகள் ஊர்க்காடுகள். அந்தக்காலத்தில் இரு ஊர்களுக்கிடையே பல மைல் இடைவெளி இருக்கும், பெரிய பெரிய காடுகள் இருந்திருக்கும். இப்போது இடைவெளி குறைந்து குடியிருப்புகள் பெருகி விட்டன. ஆகவே ஒரு பஞ்சாயத்துக் கிராமம் குறைந்தபட்சம் ஐந்து ஏக்கர் நிலத்தில் ஊர்த்தலைவர் பொறுப்பின்கீழ் காடு வளர்ப்புத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.
உன் கேள்விக்கென்ன பதில் – 2
பாம்புகளுக்கு எலி, தவளை, மூஞ்சூறு முதலானவை முக்கிய உணவுகள். பூனை வளர்க்கலாம், ஆனால் பூனைகளைப் பார்த்தால் பாம்புகள் ஓடிவிடும். ஏனெனில் பூனை எலிகளை மட்டுமல்ல, பாம்புகளையும் பிடிக்கும். எனவே அந்தக் காலத்தில் வயல்வெளிகளில் ஏராளமான பாம்புகள் இந்த வேலையைச் செய்து வந்தன. மனிதர்கள் பாம்பை அடித்துக் கொல்லாதவரை பாம்புகள் இந்த வேலையைச் செய்கின்றன.
உன் கேள்விக்கு என்ன பதில்?
இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டிய இயற்கை விவசாயிகளும் ஆர்வலர்களும் என்னிடம் பல கேள்விகளைக் கேட்டுள்ளனர் – அவற்றுக்கு நான் வழங்கிய பதில்கள் ஆக்கம் தரக்கூடியவை மட்டுமல்ல, சுவாரசியம் நிறைந்தவையும்கூட. சில கேள்விகள் பத்திரிக்கைகளில் வந்தவை, பிற தொலைபேசிமூலம் கூறப்பட்ட பதில்கள்.
மதுவின் பல்கலைக்கழகம்
“பேரின்பம் என்பது வனிதையரின் அழகல்ல. ஏராளமான மரங்களுடன்கூடிய வனம் தருவதே இன்பம். பெண்கள் தம் அழகில் கர்வம் கொண்டு இன்ப உணர்வில் ஏங்கும்போது இன்பத்தை அள்ளித்தரும் இன்ப ஊற்றான வனம் நீண்ட தடாகங்களைக் கொண்டு அதில் தாமரை மலர, வண்டுகள் ரீங்காரமிட மரங்களுடன் வாழ்வதே பேரின்பம்”,
மண்புழு மன்னர்
உடுமலைக்கு அருகில் சுண்டைக்காய்ப் பாளையம் உள்ளது. அங்கு சுண்டைக்காய் கிடைக்காது, செல்வராஜ் நாயுடு கிடைப்பார். தமிழ்நாட்டின் தலைசிறந்த இயற்கை விவசாயிகள் பத்து பேரைக் குறிப்பிட வேண்டுமென்றால் அப்பட்டியலில் இவர் நிச்சயம் இடம் பெறக்கூடியவர்.
பசுக்காவலரின் காணி நிலத் திட்டம்
முதியோர்களுக்கு இல்லம் உள்ளதுபோல் இந்த வாயில்லா ஜீவன்களுக்கும் ஆங்காங்கே கோசாலைகள் நிர்மாணிக்கும் யோசனையுடன் சுய ஓய்வுத் திட்ட அடிப்படையில் ரிசர்வு வங்கி வேலையை உதறித்தள்ளிவிட்டு தான் மொத்தமாகப் பெற்ற தொகையைக் கொண்டு கோவர்த்தன் அறக்கட்டளை நிறுவி, கால்நடை நலவாழ்வு குழுமத்தின் அங்கீகாரம் பெற்று கோவில்களில் ஏலம் விடப்பட்ட மாடுகளையும் காவலர்களால் மீட்கப்பட்ட மாடுகளையும் பராமரிக்கத் தொடங்கினார் நடேசன்.
சாதனை மன்னர் கரும்பாழ்வார்
இந்த படிக்காத பட்டிக்காட்டு விஞ்ஞானி, ஒரு கிலோ சர்க்கரை எடுக்க 1800 லிட்டர் தண்ணீர் போதும் என்று புள்ளிவிவரம் தந்துவிட்டு, வேளாண்துறை யோசனைப்படி ரசாயனக் கரும்பு விவசாயி ஒரு கிலோ சர்க்கரைக்கு 22000 லிட்டர் தண்ணீர் செலவழிப்பதாகக் கூறும் இவர், இந்த முறையில் தண்ணீர் 8 சதவிகிதம் மட்டுமே போதும் என்கிறார்! நீர்ச்சிக்கன வழிகாட்டியாக நிற்கும் இவரைப் பார்த்துவிட்டு தமிழ்நாட்டில் பல விவசாயிகள் கரும்புப் பயிருக்குச் சொட்டு நீர் விட்டுவிட்டனர்..
புளியங்குடிப் பெரியாழ்வார்
நான் இயற்கை விவசாய முன்னோடிகள் பலரையும் பத்திரிக்கைகளில் பேட்டி எடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் எனக்கு மறக்க முடியாத தாக்கத்தை இவர் ஏற்படுத்தியுள்ளார். நம்மாழ்வாரை விட வயதில் மூத்தவர். எண்பது பிராயத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த இளைஞர் மாபெரும் சிந்தனையாளர். தொழில்ரீதியாக இவர் ஒரு பள்ளி ஆசிரியர். உலக அறிவு மிக்கவர். மகாத்மா காந்தி வகுத்தளித்த ஆதாரக்கல்விப் பயிற்சி ஆசிரியராக இருந்ததால் காந்திஜியின் நிர்மாணத்திட்டங்களில் ஆர்வம் நிரம்பியவர். என்னுடன் இருபதாண்டுத் தொடர்புடைய கோமதிநாயகத்தைப் புளியங்குடியில் நான் பல முறை சந்தித்த அனுபவம் உண்டு. முதல் தடவையாக நான் தினமணி சார்பாகப் பேட்டி எடுக்க எண்ணியபோது முழுமையாக ஒரு நாள் வழங்கியதுடன் முதல் நாள் இரவு அவர் வீட்டு விருந்தினராகத் தங்கியபோது அவர் குடும்பத்தில் ஒருவனாகவே எண்ணி உபசரித்ததை மறப்பதற்கில்லை.
அரியன்னூர் கலசப்பாக்க அற்புதங்கள்
ஜெயச்சந்திரன் பெருமையாகக் கூறும் விஷயம் அரியன்னூர் ஆல மரங்கள். அரியன்னூரின் தனிச்சிறப்பு பறவைகளால் உருவாக்கப்படும் பல்லுயிர்ப் பெருக்கத்தால் ஏரிகளில் நீர் வற்றுவதில்லை. எல்லாம் திறந்தவெளிக் கிணறுகளே. அந்த ஊரில் யார்ம ஆழ்துளை கிணறு இறக்காமல் மழை நீர் செமிப்பால் கிணறுகள் ரீசார்ஜ் ஆகின்றன. இவர் தலைவராயிருந்தபோது அரியன்னூர் உயிர்ச்சூழல் கிராமமாக அறிவிக்கப்பட்டு மாநில அரசு பாராட்டு பெற்றுள்ளது.
முகுந்தன் – முரளி: புலியின் வாரிசுகள்
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு நம்மாழ்வார் செங்கற்பட்டு ஏரியின் எதிர்வாயிலில் ’கார்ட்’ என்கிற தொண்டு நிறுவனத்தில் ஒரு சக்தியாக இயங்கி வந்த காலகட்டத்தில் ஓர் இயற்கை விவசாயக் கருத்தரங்கை நடத்தினார். பசுமைப்புரட்சியின் கரிய விளைவுகளைப் பற்றி அங்கு எனக்குப் பேச வாய்ப்பு வழங்குமுன், என் சரியானபடி இயற்கை விவசாயிகளிடையே அறிமுகமும் செய்தார் அதுதான் எனது முதல் மேடைப்பேச்சு.
பயின்ற பாடங்கள் – சுந்தரராமன், சித்தர்
சரியான தடம் புரியாமல் தத்தளித்து வந்த சூழ்நிலையில் அதிர்ஷ்டவசமாக ஒரு நாள் சன் டி.வி. “வணக்கம் தமிழகம்” நிகழ்ச்சியில் எனது பேட்டியைக் கண்டு கவனமாகக் கேட்டார். இயற்கை விவசாயத்தின் தேவையையும் எப்படி கொண்டு செல்ல வேண்டுமென்றும் சற்று விவரமாகப் பேசினேன். ஒரு மணி நேர நிகழ்ச்சி என்பதால் நிறைய பேசும் வாய்ப்பு இருந்தது. பேட்டி முடிந்த மறுகணமே என்னைத் தேடி வந்து சந்திக்க ஆர்வமாக இருந்தார்.
வாழ்வியல் ரகசியங்கள்
“நாம் வாழும் இந்த உலகத்தில் நல்ல கருத்துகளைக் கூறும் தலைவர்களுக்கும் அணிகளுக்கும் பஞ்சமே இல்லை. ஒப்பற்ற ஒரே லட்சியத்தை நோக்கி, இணையாத இரு கோடுகளாக இயக்கங்கள் செல்வதைக் கவனிக்க முடிகிறது. ஒன்றாக இயங்கத் தயக்கம் காட்டுவதும் புரிகிறது. ஒருங்கிணைந்து செயலாற்றி ஒரு வலைப்பின்னலை உருவாக்கி சாதனை செய்வது அவசியம். இயற்கை விவசாயத்தில் மாறுபட்ட சிந்தனையுள்ளவர்களை ஒருங்கிணைத்துச் செல்ல இந்த நூல் உறுதுணையாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நூல் காலத்தால் அழியாத ஒரு கருத்துப் பெட்டகமாகவும் விளங்குகிறது. இயற்கை விவசாயத்திற்குப் பாடுபட்டு வரும் முன்னோடிகளுக்கும் ஒப்புதலை இந்த நூல் வழங்குவதும் ஒரு சிறப்பு. “
இயற்கை வேளாண்மைக் களஞ்சியம் – ஆர். எஸ். நாராயணன்
நம்மாழ்வாரை நான் சந்தித்தபோது எனக்கு தாடி இல்லை. நான் வேட்டியும் அணிவது இல்லை. அரசு அலுவலர் பாணியில் பேண்ட், ஷர்ட், கிராப்புத் தலை வைத்திருந்த என்னோடு நம்மாழ்வார் நட்பு பாராட்டினார். அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களிலும் நடத்தும் மாநாடுகளிலும் என்னை முதல் பேச்சாளராகப் பேச அனுமதித்தார். அவர் ஏன் சிகை வளர்க்கிறார், தாடி வைத்துள்ளார் என்று எனக்குத் தெரியாது.
மாடியில் ஒரு உணவுத் தோட்டம்
அடுத்த கட்டமாக பூந்தொட்டிகளுடன் சிமெண்டு சாக்கில் மண் நிரப்பி பயிர் எழுப்பும் யோசனை வந்தது. சிமெண்டு சாக்கு உயரத்தைக் குறைத்து – அதாவது, உட்புறமாக மடித்து பாதி சாக்காக மாற்றி, உள்ளே நிறைய காய்ந்த சருகுகளை அடைத்துவிட்டு அடிப்பாகத்தைச் சற்று கிழித்துவிட்டு போதிய மண் நிரப்பி இரண்டு செங்கல் வைத்து அதன்மீது வைத்தேன். நீர் வடியும். தளத்திற்கும் பாதிப்பு வராது. அவ்வாறு சிமெண்டு சாக்கில் மண் நிரப்பி பயிரிடும்போது மரப்பயிர்களைத் தேர்ந்தெடுத்தேன்.
சுரபாலரின் விருட்சாயுர்வேதம்
நிலத்தின் அடிப்படை வேற்றுமைகள் மூன்று. சதுப்பு நிலம், வறட்சி நிலம், சாதாரண நிலம் என்று பிரித்துள்ள சுரபாலர் மண்ணின் நிறம் மற்றும் ருசியைப் பொருத்து 12 வகைகள் என்கிறார். முவ்வகை நிலத்துக்கு ஏற்றாற்போல் மொத்தம் 36 வகைப்பட்டதாக மண்வளத்தைப் பிரிக்க முடிகிறது. மண்ணின் ஆறு நிறங்களாவன : கருப்பு, வெள்ளை, வெளிர், கரிநிறத்துக் கருமை, செம்மை, மஞ்சள். அறுசுவையான இனிப்பு, புளிப்பு, உப்பு, உரைப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகியவை மண்ணின் குணங்கள்.
மண்புழு உறவு – நம் வழி வேளாண்மை
ஒரு காலகட்டத்தில் நன்கு வளர்ந்த ஒரு மண்புழு ஒரு ரூபாய் என்ற விலைக்கு விற்கப்பட்டது. எனக்கு இந்த விவரமெல்லாம் தெரியாது. எல்லாருக்கும் இலவசமாக வழங்கினேன். 2001-ல் சத்தியமங்கலம் சுந்தரராமன் என் வீட்டுக்கு வந்தார். என்னிடமிருந்து புழுக்களைப் பெற்றுக் கொண்டு யாருக்கும் புழுக்களை இலவசமாக வழங்காதீர்கள், அவர்கள் அதன் மதிப்பும் தெரியாமல் வளர்க்கவும் தெரியாமல் அவற்றை சாகடித்து விடலாம் என்றுகூறி எனக்கு பணம் தர முன்வந்தார்.
பல்லுயிர்ப் பெருக்கம் (நிலைக்கும் வேளாண்மையின் அறிமுகம்)
மனதிற்கு நிறைவு தரும் பணி என்றாலும் இதன் முக்கியத்துவம் உரிய மதிப்பைப் பெறவில்லை. தமிழ்நாட்டில் உள்ள விளைபொருள் அங்காடிகளுக்குச் சென்று விலைவாசி நிலவரம், வரத்து, வழங்கல் போன்ற புள்ளிவிவரங்களுடன் அறிக்கை வழங்கி பயிர் நிலவரம் மற்றும் உற்பத்தி மதிப்பீடு செய்வதுதான் பணி. அலுப்பு சலிப்பு இல்லாமல் 33 ஆண்டுகள் ஒரே மாதிரியான வேலையிலிருந்து மாறும் திருப்பமாக அவ்வப்போது எழுதும் பணி தோல்விகளுக்கு மருந்தாக அமைந்தது.
குளோரியா பண்ணை
பூச்சி மருந்து என்பது உயிரைக் குடிக்கும் விஷம் என்பதும் அதைத் தேவையில்லாமல் பயிர் மீது தெளிக்கும்போது பயிர் மட்டுமல்ல, மண், விண் எல்லாமே விஷமாகி அதன் தாக்கம் தாய்ப்பால் வரை சென்று இன்று தமிழ்நாட்டில் வரும் புற்றுநோய் மிகுந்துள்ளதே சாட்சியாக உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் இருந்தும் இறந்தும் வருகின்றனர்.
பசுமை நிறைந்த நினைவுகளே…
இப்போது தொடங்குவது எனது பசுமை நினைவுகளுடன் கூடிய பல பசுமை பயணங்கள். 1990ஆம் ஆண்டிற்கு முன்னும் பின்னுமான ஒரு காலகட்டம். அப்போது நான் சென்னையில் பணிபுரிந்து வந்தேன். நான் வேளாண்மை சார்ந்த பொருளியல் துறை சம்பந்தமான கட்டுரைகளை தினமணி பத்திரிக்கையில் 1980லிருந்து வழங்கிக் கொண்டிருந்த நேரம். பி.பி.எஸ்.டி என்று சொல்லப்பட்ட, “தேசபக்தி மாணவர்கள் மக்கள் இயக்க அறக்கட்டளை” என்ற அமைப்பில் உறுப்பினரான திரு முகுந்தன் என்பவர் ஒரு நாள் வீடு தேடி வந்தார்.
புண்ணாக்கிய மண்ணைப் பொன்னாக்கும் விவசாயம்
கி.பி.2012-ல் வாழும் நாம் மண்ணை நேசிப்பதனை மறந்து மண்ணை மாசுகளால் புண்ணாக்கி விட்டோம். ரசாயனங்களைக் கொட்டி மலடாக்கிவிட்டோம். விஷ உணவை உற்பத்தி செய்து விஷத்தை உண்டு உடலும் மனமும் விஷமான மனிதனுக்கு வாழ்க்கைப் பார்வையும் போய் கருத்துக்குருடன் ஆகிவிட்டான். விஷமான மனிதர்கள் வாழ்கைப் பார்வை இல்லாததால்தான் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளைப் புறக்கணிக்கின்றனர். செலவு குறைந்த இயற்கை விவசாயத்தைப் புறக்கணித்துவிட்டுச் செலவை உயர்த்தும் ரசாயனத் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கபட்டு வருகிறது.
நல வாழ்வுக்கு விவசாயம்
முற்காலத்தில் நோய் என்றால் தொற்றும் தன்மையுள்ள பிளேக், அம்மை, க்ஷய ரோகம் ஆகியவற்றுக்கு மட்டுமே அஞ்ச வேண்டியிருந்தது. அவற்றுக்கெல்லாம் கூட மருந்துண்டு. ஆனால் தொற்றிக் கொள்ளாத நோய்கள் இன்னும் பயங்கரமானவை. இவை 19, 20 ஆம் நூற்றாண்டில்தான் அதாவது விவசாயத்தில் ரசாயனப் பயன்பாட்டுக்குப்பின் தோன்றியவை.
ஆயிரம் தெய்வங்கள்
இந்திய புராண வழக்கில் மகாபாரதம் எப்படியோ அப்படியே ஹோமரின் இலியத் – ஒடிஸ்ஸே. ஏறத்தாழ இலியமும் பாரதமும் கொண்டுள்ள ஒருமித்த கருத்துகள் வியப்பாக உள்ளன. பாரதப் போரின் தொடர்ச்சியாக ஸ்ரீமத் பாகவதத்தில் வரும் கதைகளில் உள்ள ஆன்மிக வாசனையை ஒடிஸ்ஸேயின் தொடர்ச்சியில் காண்பதரிது. சோகரசங்களில் ஒற்றுமை காணப்படும். பாரதப் “ஆயிரம் தெய்வங்கள்”
ஆயிரம் தெய்வங்கள் – ஈராஸ் – சைக்கே காதல்
கிபி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த தெய்வக்கதை மற்ற கிரேக்க புராணங்களிலிருந்து மாறுபட்டு விளங்குகிறது. அபூலியஸ் பிளாட்டோவின் சீடர். பிளாட்டோவை ஒரு பகுத்தறிவாளராகக் கருத இயலாது. அவர் புறப்பொருட்களுக்கு முக்கியத்துவம் தரும் உயர்ந்த குறிக்கோள்வாதி என்றாலும், உயர்ந்த குறிக்கோளின் உன்னத நிலையை அழியாத ஆன்மாவாக ஏற்றுக் கொண்டவர். மேலோட்டமாகப் பார்த்தால் பிளாட்டோவோ, அபூலியஸோ கண்ணால் பார்க்க முடியாத இரவுப் பிராணியுடன் மானுடப் பெண் உறவு கொள்ள முடியும் என்பது அறிவுக்குப் பொருந்தாது என்றாலும் சில உண்மைகளை மனித உணர்வுகளுடன் வெளிப்படுத்த தெய்வங்களைக் கையாள்கின்றனர்.
ஆயிரம் தெய்வங்கள் – கிரேக்க சோகக்கதை ஆடிப்பஸ்
தம் வளர்ப்புப் பெற்றோர்கள்தான் தன் தாய் தந்தையர் என்று நம்பி வளர்ந்து ஆளாகிறான் ஆடிப்பஸ். ஆனால் ஒரு குடும்பத் தகராறில் அவனது பிறப்பின் ரகசியம் வெளிப்பட்டு விடுகிறது. ஆடிப்பஸ் தன் பெற்றோரைத் தேடிச் செல்கிறான். கொரிந்த் நாட்டை விட்டு வெளியேறும் ஆடிப்பஸ் ஒரு நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டு பல கிராமங்கள் நகரங்கள் தேசங்கள் என்று தன் தேடலைத் தொடர்கிறான். தன் பயணங்களில் டெல்ஃபி என்ற ஊர் வந்து, அங்கு அருள்வாக்கு கேட்கும்போது “விரைவில் நீ உன் தந்தையைக் கொன்று தாயைத் தாரமாக்கிக் கொள்வாய்” என்று பதில் வந்தது.
ஆயிரம் தெய்வங்கள் – ஓடிஸ்ஸஸ் ஊர் திரும்பிய கதை
கிரேக்க ஓடிஸ்ஸஸ் லத்தீன் வழக்கில் யூலிஸ்ஸஸ் ஆயிற்று. ஆங்கில கவிஞர், டென்னிஸனா எபைரனா என்று சரியாக நினைவுக்கு வரவில்லை, யூலிஸ்ஸஸ் ட்ராயிலிருந்து ஊர் திரும்பும்போது ஃபாசி என்ற தீவில் போதை மயக்கத்தில் சிக்கிக்கொண்ட விவரத்தை மையமாக வைத்து ‘லோட்டஸ் ஈட்டர்ஸ்’ என்ற கவிதை எழுதியிருக்கிறார். நயமான கவிதை. இலியத் போர் முடிவுற்றபின் ட்ராயிலிருந்து ஓடிஸ்ஸஸ் தன் சொந்த தேசமான இதாகாவுக்குத் திரும்பிய கதை இலியத் காவியத்தின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது.
ஆயிரம் தெய்வங்கள் – மரக்குதிரையும் ட்ரோஜன் படுகொலையும்
ட்ராய் வெற்றிக்குப்பின் கிரேக்க வீரர்கள் கப்பல்களில் தாயகம் திரும்பிக் கொண்டிருந்தனர். கப்பல்கள் யூபோயோ தீவுக்கு வந்தபோது நாப்னையஸ் நள்ளிரவில் தன் நண்பர்களுடன் கப்பல்களைத் தீயிட்டுக் கொளுத்தினான். அவற்றில் இருந்த கிரேக்க வீரர்களும் எரிந்து சாம்பலாயினர். ஆனால் மெனலாஸ், அகமெம்னான், ஒடிஸ்ஸஸ் மூவரும் ட்ராயில் தங்கிவிட்டதால் உயிர்தப்பினர். அவர்களை விதி வேறுவிதமாக தண்டித்தது.
ஆயிரம் தெய்வங்கள் – இலியத் – ஒடிஸ்ஸே
ஸீயஸ் மனம் குளிரும்படி ஸீயஸ்ஸுக்கு யாகம் நடத்தினார். நிறைய பலிகளை வழங்கினார். ஸீயஸ் மனம் மகிழ்ந்து நல்ல சகுனங்களைத் தோற்றுவித்தார். யாகம் நிகழ்ந்தபோது, ஹோம குண்டத்திலிருந்து ஒரு சர்ப்பம் வெளிவந்து அருகில் உள்ள மரத்தில் மேல் சென்று தாய்ப் பறவையையும் அதன் ஏழு குஞ்சுப் பறவைகளையும் உண்டுவிட்டு கீழிறங்கி கல்லாய் மாறியது. இதற்கு விளக்கம் அளித்த கல்காஸ், இலியத் முற்றுகை பத்தாண்டுகள் நிகழும் என்றும், ட்ரோஜன்கல் மடிவர் என்றும் இறுதி வெற்றி கிரேக்கர்களுக்கே என்றார்.
ஆயிரம் தெய்வங்கள் – ஜேசன்
பாம்புப் பற்களை உழுத வயலில் விதைத்ததும் நாகாசூரர்கள் மண்ணிலிருந்து வெளிப்பட்டு ஜேசனைத் தாக்கத் தொடங்கினர். அவர்களிடமிருந்து தப்பி ஓடிய ஜேசன் ஒரு புதரின் மறைவில் ஒளிந்து நின்று கற்களைக் கொண்டு திருப்பித் தாக்கினான். தாக்குதல் எங்கிருந்து நடைபெறுகிறது என்று குழப்பமடைந்த நாகாசூரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு மரணமடைந்தனர்.
ஆயிரம் தெய்வங்கள் – ஜேசனும் ஆர்கோஸ் வீரர்களும்
கிரேக்க இலக்கியத்தில் வீர சாகசக் கதைகளில் ஜேசனும் ஆர்கோநாட்ஸும் மிகவும் சுவை நிரம்பியது. ஹெலன் ஆஃப் ட்ராய் போல் ஜேசன் அண்ட் த ஆர்கோநாட்ஸ் என்றொரு ஹாலிவுட் திரைப்படம் அந்த நாளில் வந்திருக்கிறது.அயோல்கஸ் நகரை ஆண்டு வந்த ஏசன் வஞ்சிக்கப்பட்டுக் கொல்லப்படுகிறான். க்ரீத்தியாவுக்கும் டைரோவுக்கும் பிறந்த ஏசனின் தாய்மீது மோகம் கொண்ட பாசிடான், பீலியஸ் என்ற மகனையும் டைரோவுக்கு வழங்கினான். பீலியஸ் தன் அண்ணனைக் கொன்று அவனது அரசைக் கைப்பற்றி ஏசனின் மகனான ஜேசனை அனாதையாக்கினான்.
ஆயிரம் தெய்வங்கள் – தேசீயஸ்
ஹீராக்ளீஸ் தெய்வத்திற்கு எவ்வளவு வலிமை உள்ளதோ அதே அளவு வலிமையும் வல்லமையும் உள்ள தேசீயஸ் ஏதேன்ஸின் ஹீராக்ளீஸ் என்று அழைக்கப்படுகிறான். தேசீயஸ் ஜனனத்தைப் பற்றிய மாறுபட்ட கதைகள் உண்டு.
ஆயிரம் தெய்வங்கள் – 21
ஹீராக்ளீசின் தங்க வேட்டை சுயநலத்துக்கு இல்லையென்றாலும் இதில் பெற்ற வெற்றியின் முடிவு இருபதாம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட ‘மேக்கென்னாஸ் கோல்டு’ போன்ற பல ஹாலிவுட் படங்களுக்குரிய கதைக்கருவை வழங்கியுள்ளதாகவே கவனிக்கலாம். நீரியஸ் காட்டிய பாதை அப்படிப்பட்டது.
ஆயிரம் தெய்வங்கள் – கிரேக்க இந்திரன்
டி.டி. கொஸாம்பி, ஏ எல் பாஷ்யம் போன்ற வரலாற்று அறிஞர்கள் யதுகுல வீரனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய சாகசங்களும் ஹீராக்ளீஸின் சாகசங்களும் ஒப்பிடத்தக்கவை என்று கூறினாலும் ஜனனக்கதை வேறுபடுகிறது. ஹீராக்ளீஸ் முதல் நிலை தெய்வமல்ல. சக்தி குறைவான தெய்வமே.
ஆயிரம் தெய்வங்கள் – ஹேடஸின் நரக சாம்ராஜ்ஜியம்
இறந்தவர்களின் ஆன்மாக்கள் ஹேடஸ் நரக சாம்ராஜ்ஜியத்தில் நீதி விசாரணைக்கு ஆளாகின்றன. மூன்று நீதிபதிகள் கொண்ட டிரிப்யூனல் – அதாவது மைனாஸ், அயாக்கஸ், ராடமைந்தஸ் ஆகிய மூவரும் தீர்ப்பு வழங்கும் உரிமை உள்ளவர்கள். வரலாற்றில் ராடமைந்தஸ் பெயரில் கோட் ஆப் க்ரீட்டன் லாஸ் என்று புராதன கிரேக்க நகர அரசுகளில் நீதி பரிபாலனச் சட்டங்களாகச் செயல்பட்டன.
ஆயிரம் தெய்வங்கள் – 18
பாசிடான் ஸீயஸ்ஸின் அண்ணன். மண்ணுலகையும் விண்ணுலகையும் ஸீயஸ் ஆண்டான். ஆழி சூழ் உலகைப் பாசிடோன் ஆண்டான். சமுத்திரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு அவன் பெற்ற விதிப்பயன். சிறுவனாயிருந்தபோது அவன் டெல்சைனஸ் பொறுப்பில் விடப்பட்டான். டெல்சைனஸ் உலோகங்களை வளைத்து ஆயுதங்களைச் செய்வதில் வல்லவன்.டெல்சைனஸின் தங்கை ஹலியாவைப் பாசிடான் மணந்துகொண்டு ஆறு புதல்வர்களையும் ஒரு புதல்வியையும் பெற்றுக் கொண்டான். அப்புதல்வியின் பெயர் ரோடஸ். அதே பெயரில் அவன் நினைவாக கிரேக்கத் தீவு உண்டு.
ஆயிரம் தெய்வங்கள் 17
இலியத் போரில் சாகசம் புரிந்த பெண் வீராங்கனைகளில் அமேசான் அரக்கியர் பிரபலமானவர்கள். இவர்களின் வீரத்திற்குக் காரணம் ஆர்ட்டமிஸ் மீது கொண்ட அளவுகடந்த பக்தியே. அன்றைய ஆசியாமைனரில் எஃப்சஸ் என்ற இடத்தில் இவர்கள் ஆர்ட்டமிசுக்குக் கோவில் கட்டி வழிபட்டனர். பின்னர் ரோமானியர்களால் வெல்லப்பட்ட பின்னர் ஆர்ட்டமிஸ் தெய்வத்தை ரோமானியர்கள் டயானா என்ற தெய்வமாக அடையாளப்படுத்தி வணங்கினர்.
ஆயிரம் தெய்வங்கள் – 16
ஸீயஸ் லெட்டாவுக்கு வழங்கிய தெய்வக்குழந்தையே அப்போல்லோ. கர்ப்பவதியான லேட்டாவுக்கு ஹீரா வழங்கிய துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல. பூமியில் குழந்தையை விழச்செய்ய ஒரு துளி இடத்தைக்கூட ஹீரா வழங்கவில்லை. பல இடங்களில் அலைந்து திரிந்து கடைசியாக குவாயில் தீவில் தலைமறைவாய் வாழ்ந்து இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.
ஆயிரம் தெய்வங்கள் – 15
கிரேக்க தெய்வங்களில் மிகவும் சக்திவாய்ந்த தாய் தெய்வம் ஹீரா. இவர் ஸீயஸ்ஸின் சட்டப்பூர்வ மனைவி. நிறைய அதிகாரம் உள்ளவள். ஸீயஸ்ஸின் தங்கை முறை என்றாலும் கிரேக்க நாடோடி வழக்கிலும், பிராந்தியத் திரவிழாக்களிலும், ஹோமரின் இலியத்திலும் ஸீயஸ் ஹீரா திருமணம் தெய்வத் திருமணமாகப் போற்றப்படுகிறது.
ஆயிரம் தெய்வங்கள் – 14
மனிதர்களுக்கு தண்டனையை வழங்க ஒரு உத்தியை யோசித்த ஸீயஸ், மோகினியைப் படைக்க முடிவுசெய்தார். புரோமீத்தியாசுக்கு வழங்கப்பட்ட தண்டனை தோல்வியானதால் மோகினியாட்டம் யோசிக்கப்பட்டது. ஹெஃபெஸ்ட்சையும் எத்தீனாவையும் அழைத்து ஒரு அழகான பெண்ணைப் படைத்தார். அந்த அழகியைப் பார்த்த மாத்திரத்தில் தெய்வங்கள் அவளை அடைவதற்குப் போட்டி போட்டுப் பரிசுகளை வழங்குவார்கள். அப்பரிசுகளில் ஒன்று பண்டோராபெட்டி. அந்த அழகியும் பண்டோரா என்று அழைக்கப்பட்டாள்.
ஆயிரம் தெய்வங்கள் – 13
ஒலிம்பிக் யுத்தம் முடிவுக்கு வந்தபின் சைக்ளோபன் ஸீயஸ் வசம் வஜ்ராயுதம் ஒன்றைப் பரிசாக வழங்கினார். அதைப் பயன்படுத்தினால் நினைத்த இடத்தில் மழை, புயல், இடிமுழக்கம் செய்யும். ஸீயஸ் தரப்பில் போரிட்ட அண்ணன் ஹேடசுக்கு சைக்ளோப்ஸ் ஒரு மாயக்கவசத்தைப் பரிசாக வழங்கினார். அதை அணிந்ததால் அடுத்தவர் கண்ணுக்குத் தெரியமாட்டார். அண்ணன் பாசி டோனுக்கு ஒரு வகை சூலாயுதத்தை வழங்கினார். அந்த சூலாயுதம் எப்படிப்பட்ட பகைவரையும் தோற்றோடவைக்கும்.
ஆயிரம் தெய்வங்கள் – 12
உலக வரலாற்றில் நதிப்புற நாகரிகங்கள் – எகிப்து – மெசப்பட்டோமியா – சிந்து போன்றவை – செல்வாக்கிழந்த பின்னர் மத்திய தரைக்கடல் தீவுகளில் புதிய நாகரிகங்கள் வேர்விட்டன. இவற்றில் கிரேக்க – ரோம நாகரிகங்கள் படைத்த தெய்வங்கள் பற்பல. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கிரேக்க நாகரிகம் “ஜனநாயகம்” என்ற கருத்தை வழங்கயதைப் போல் ரோமின் வழங்கல், குடியரசு. எனினும் கிரேக்கர்களின் வழங்கலில் கலை, தத்துவம், விஞ்ஞானம் போன்ற பல்கலைக்கழகப் படிப்புகள் சிறப்பானவை. தென்கிழக்கு ஐரோப்பாவில் மத்திய தரைக்கடலில் சங்கமமாகும் ஒரு குறுகிய குறிஞ்சி நிலப்பகுதியில் வளர்ந்த கிரேக்கக் கலாச்சாரமே மேலை நாடுகளின் கலாச்சாரங்களுக்கு அடிப்படையாக உள்ளது.
ஆயிரம் தெய்வங்கள் -11
கி.மு. 1000-1100 காலகட்டத்தில் செமிட்டிக் மொழி சிரியாவில் லிபி- அகரவரிசை எழுத்துகளாயிருந்தன. கி.பி. 1929-இல் பிரஞ்சுக்கார அகழ்வராய்ச்சிக்குழு ரஸ்வும்ரா என்ற இடத்தில் தோண்டியபோது புராதன உகாரித் நகரைக் கண்டுபிடித்தனர்.
இந்த அகழ்வாராய்ச்சியின் சிறப்பு எதுவெனில் அங்கு கண்டெடுக்கப்பட்ட கியூனிபார்ம் கல்வெட்டுகள் மூலம் செமிட்டிக் அகரவரிசை புலனாவதுடன் செமிட்டிக் தெய்வீக உறவு பற்றிய புதிர்களுக்கு விளக்கம் கிடைத்தது
ஆயிரம் தெய்வங்கள்-10
எந்த தெய்வம் முதல் தெய்வம் என்பதில் போரும் சண்டையும் தெய்வங்களையும் விட்டுவைக்கவில்லை. எந்த தெய்வம் பெரிது? என்ற கேள்விக்கு சரியான விடை இல்லையென்றாலும் மெசப்பட்டோமியாவிலும் பின்னர் பாரசீகத்திலும் நிகழ்ந்த போட்டிக்கு இந்தியாவில் தீர்வு காணப்பட்டது.
ஆயிரம் தெய்வங்கள் – 9
கில்காமேஷ் என்ற புராதன செமிட்டிக் இலக்கியம் 12 களிமண் பலகைகளில் அக்கேடிய மொழியில் எழுதப்பட்டுள்ளது. ஆசிரிய மன்னர் அஷ்டர் பனிப்பால் (கி.மு. 668-627) அரண்மனைப் பொக்கிஷமாக இது கண்டுபிடிக்கப்பட்டது. இதை ஒரு புராதன முதல் நாவல் என்று பழைமை ஆங்கில இலக்கியவாதிகள் மதிப்பிட்டுள்ளனர்.