கதிர்மதியம் போல் முகத்தான்

மூலவர் ‘கதிர்மதியப் பெருமாள்’. “ஆண்டாள் ‘கதிர்மதியம் போல் முகத்தான்’ என்று பாடிய பெருமாள்” என்பார் அர்ச்சகர் ரங்கசாமி. கிருஷ்ணதேவராயர் ஒரு முறை இந்தக் கோயிலுக்கு வந்த போது நிறைய காணிக்கை தந்தார் என்பதால் பெருமாள் பெயருக்குக் கடைசியில் ‘ராயன்’ தொற்றிக்கொண்டு உற்சவர் ‘ஸ்ரீரங்கராயன்’ ஆகிவிட்டான்.

தாத்தாவுக்குக் கடிதம்

மின்னஞ்சல், செல்பேசி, வீட்டுக்கு வீடு தொலைப்பேசி என்று எதுவும் இல்லாத அந்தக் காலத்தில் செகந்திராபாத்தில் இருக்கும் என் தாத்தாவுக்கு மாதம் ஒருமுறை ‘இன்லாண்ட்’ கடிதம் எழுதுவேன். இன்லாண்டில் நிறைய சௌகரியங்கள்; ஸ்டாம்ப் ஒட்ட வேண்டாம்; எழுத நிறைய இடம் இருக்கும்; முக்கியமாக தாத்தாவைத் தவிர வேறு யார் கையில் கிடைத்தாலும் போஸ்ட் கார்ட் மாதிரி பிரிக்காமலே படிக்க முடியாது.

துக்கடா

வீட்டுக்கு வருபவர்கள் குழந்தையை பாட சொல்லி கேட்க “என்னமா பாடறா… இன்னும் கொஞ்ச நாளில் உன்னை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடுவா” என்பதை வெளியே புன்னகையுடன் எதிர்கொண்டாள். கூட அம்மவுடன் சேர்ந்து காத்தால சாதகம் செய்வாள். நிறைய பாட்டு கேட்பாள், என்ன பாடினாலும் ஸ்வரப்படுத்துவாள்.

‘லைட்ஸ் ஆப்’ – ரா.கி.ரங்கராஜன்

எழுத்தாளர், சாதனையாளர் ரா.கி.ரங்கராஜன் இன்று (18-08-2012) காலமானார். இந்த தருணத்தில் சொல்வனம் ஆசிரியர் குழு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது: பல முறை அவருடன் தொலைபேசியில் பேசியிருந்தாலும் ஒரே ஒரு முறைதான் அவரை நேரில் சந்தித்திருக்கிறேன். அந்த முதல் சந்திப்பிலேயே அவரிடம் பல நாள் பேசியது போன்ற உணர்வு. 80+ வயதிலும் மூன்று மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தார்.

நம்பி இருந்த வீடு

திருக்கோட்டியூர் நம்பி பிறந்து இன்றைக்கு 1024 ஆண்டுகள் ஆகின்றன. இவருடைய இயற்பெயர் திருக்குருகைப்பிரான். குருகேசர் என்றும் அழைப்பர். ஆளவந்தார் பிறந்து பதினோரு வருடங்களுக்குப்பின் பிறந்தவர். இராமானுஜரிடம் அளவு கடந்த அன்பு கொண்டவராக விளங்கியவர். எப்போது எல்லாம் இராமானுஜரைக் காணவேண்டும் என்று விரும்புகிறாரோ அப்போதெல்லாம், “நான் கோயிலுக்குச் சென்று வருகிறேன்” என்று வீட்டில் சொல்லிவிட்டு திருவரங்கத்தில் இராமானுஜரை சந்திக்கச் சென்றுவிடுவாராம்.

வீடு வாங்கிய கதை

திருமணம் ஆன பிறகு “மாப்பிள்ளை, எப்போது குழந்தை?” என்ற கேள்விக்கு விடைகிடைத்தபின்பு வீட்டுக்கு வருபவர்கள் “எப்போது சொந்த வீடு?” கேள்விக்கு மாறிவிட்டார்கள். “சரி நாமளும் ஆணி அடிக்க சொந்த வீடு வாங்கலாமே” என்ற எண்ணம் எட்டு வருடம் முன் உதித்தது. பிளாட்(Plot) வாங்கி நம் இஷ்டத்துக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற நினைப்பில், சனி ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் காலி வீட்டு மனை கிடைக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்தேம்.

பேட்மேன் பேல்பூரி

தமிழர்களுடைய குணம் பொட்டுக்கடலை, வேர்கடலை, பொரியை பார்த்தால் உடனே அதில் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக்கொள்வது. ஆனால் பேட்மேன் கடையில் அப்படி நாம் எடுத்துப் போட முடியாது. உடனே பேல்பூரியைக் கலக்கும் கரண்டியால் அடித்துவிடுவார். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்பதைப் போல அவரிடம் தாரளமாகக் கடன் வைக்கலாம், மறுநாள் மறந்துவிடுவார்.

துப்பாக்கி நண்பர்கள்

தொட்டிக்குள் இறங்கிப் பார்க்க வேண்டும் என்று முடிவுசெய்து இறங்கியபோது காலில் பாம்பு ஒன்று விரல் இடுக்கில் மாட்டிக்கொள்ள, பதறி தொட்டிக்குள் விழுந்தேன். அது பாம்பு இல்லை, வெறும் தோல் பெல்ட் என்ற அத்வைத ஞானம் பெற்றபிறகு உயிர் வந்தது. அந்த பெல்டை இழுத்துப் பார்த்தபோது எனக்கு அடுத்த அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. பெல்ட்டின் மறு முனையில் துப்பாக்கி ஒன்று உறையுடன் இருந்தது

பீடுநடை போடும் கியூபாவின் புரட்சி

1959க்கு முன்னால், கியூபா உலத்திலேயே மிக அதிக அளவு சர்க்கரை ஏற்றுமதி செய்யும் விவசாய நாடாக இருந்தது. ஆனால், தற்போது 80 சதவீத உணவு இறக்குமதி செய்யப்படுகிறது. இத்தனைக்கும் கியூபாவில் 30 சதவீத நிலங்கள் விவசாய நிலங்கள். நாட்டில் ஐந்தில் ஒரு பங்கு குடிமக்கள் விவசாயத்திலேயே ஈடுபடுத்தப்படுகிறார்கள். இருப்பினும் விளைச்சல் போதுமானதாக இல்லை. அனைத்து அரசாங்க நிலங்களில் வேலை செய்யும் மக்கள் உல்லாசமாக பொழுது போக்குவதால் விளைச்சல் எப்படி இருக்கும்?

பிப்ரவரி மழை

மஞ்சுநாத் அவளை தினமும் பனர்கட்டா சாலையில் மீனாக்ஷி கோயிலுக்கு பக்கம் இருக்கும் ஹுல்லிமாவு என்ற இடத்தில் அவளது வீட்டில் விடும் டிரைவர். எஃப் எம் போட்டுவிட்டு, ரியர் மிரர் வியூவை சரிசெய்து பார்த்த போது திவ்யா போட்டிருந்த உள்ளாடை மீது அவன் கண்கள் சில வினாடிகள் அதிகப்படியாகத் தங்கியது. திவ்யா செல்பேசியில் பேசிக்கொண்டு ஒரு சாக்லெட் பட்டையை தின்றுகொண்டு இருந்தாள்.

எஸ்.வி.ராமகிருஷ்ணன்

இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு, என் கைபேசியில் இருக்கும் எண்களைச் சரிபார்க்கும் போது எஸ்.வி.ராமகிருஷ்ணன் என்ற பெயர் பார்த்து, “அட இவரிடம் பேசி ரொம்ப நாள் ஆச்சே. பேச வேண்டும்” என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் பேசவில்லை. “பேசியிருக்கலாமே” என்று இனி ஆயுளுக்கும் வருத்தப்படப்போகிறேன். இலக்கியச் சர்ச்சை, மற்ற எழுத்தாளர்களைப் பற்றி தேவையில்லாத விமர்சனம் போன்றவை அவரிடம் கிடையாது. அவருடன் பேசிய சமயங்களில் இதை நான் உணர்ந்திருக்கிறேன். அவருடையவை, தொப்புள் சமாசாரம் இல்லாத இதழ்களில் பெரும்பாலும் கடந்தகால இந்தியாவைச் சித்தரிக்கும் வகைக் கட்டுரைகளும், nostalgia-வையும் சார்ந்தவை.

ஆவி கதை

பதினொரு மணி இருக்கும். மெழுகுவர்த்தியைப் பற்ற வைத்து டம்பளரைத் தேடினேன். கிடைக்கவில்லை. பாட்டில் மூடியை போர்டின் நடுவில் வைத்து என் விரலை நடுக்கத்துடன் அதன் மீது வைத்தேன். நகரவில்லை. கண்களை லேசாக மூடிக்கொண்டேன். சாமியை வேண்டிக்கொள்ளலாம் என்று யோசித்தேன். சாமிக்கும் பேய்க்கும் என்ன சம்பந்தம்? சாமிக்கும் ஆவிக்கும் ஆகாது என்பதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டேன்.

கை நிறைய காண்டம்

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், அல்லது விஜயகாந்தை கூப்பிடலாமா என்று கூட தோன்றியது. நான் என் அலுவலகத்துக்கு போன் செய்து இப்படி நடக்கிறது, யாராவது பெரிய மேனேஜர் கட்டாயம் இங்கே வர வேண்டும் என்றேன். “அதுக்குத்தானே உன்னை அனுப்பினோம் யூ ஹாண்டில் த சிச்சுவேஷன்,” என்று இங்கே நடப்புப் புரியாமல் பேசினார்கள். நிறைய பட்டுவிட்டதால், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று சின்ன வயதில் படித்த கதை ஞாபகத்துக்கு வந்தது. ஒரு பிளான் போட்டேன்.

கலர்க் கனவுகள்

அனுமாருக்கு பார்டர் எல்லாம் போட்டு கெட்டி அட்டையில் ஒட்டி அதை பெருமாள் அறையில் மாட்டினேன். பாட்டி ஏதோ வேண்டிக்கொண்டு காலெண்டர் அனுமாருக்கு வடையை மாலைகோத்து சாத்தினாள். வடையை நாங்கள் சாப்பிட்டோம். அதில் இருந்த எண்ணையை அனுமார் சாப்பிட்டார். வடையில் இருந்த எண்ணெய் படத்தில் இறங்கியது. ஒரு சமயம் கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் கொடுத்த செந்தூரத்தை அந்த காலெண்டர் அனுமார் மீது தடவ புதிதாக அந்த அனுமாருக்கு ஒரு தேஜஸ் கிடைத்து, ஆஞ்சநேயர் ஆகிவிட்டார். பல வருடங்களாக இருந்த அந்தப் படம் வெள்ளை அடிக்கும் போது எங்கோ போய்விட்டது. ரொம்ப நாள் மலையைச் சுமந்தவருக்கும் ரெஸ்ட் வேண்டாமா?

ஆயகலைகள் – கிரேக்கம் முதல் கிரேவிட்டி வரை

கடைசியாக நீங்கள் வானில் நட்சத்திரம் பார்க்கும் பழக்கம் உள்ளவரா? என்றாவது ராத்திரி மேலே பார்க்கும் போது அதிசயமாக ஏதாவது பார்த்தால் கடவுள் வருகிறார் என்று நினைக்க வேண்டாம். அது கழிவாக கூட இருக்கலாம். 2009-ல் வானில் ஒளித்தோற்ற அதிசயம் ஒன்றைப் பார்த்தார்கள். பார்த்தவர்களுக்குத் தெரியாது அது மேலே சென்ற விஞ்ஞானிகளின் சிறு(நீர்த்)துளிகள் என்று!

தோசை

எப்போதும் போல அன்று பள்ளிக்கு சென்றேன். எல்லோரும் ஏதோ பரீட்சைக்கு படித்துக்கொண்டு இருந்தார்கள். ஸ்கூல் மணி அடித்த போது தான் இயற்பியல் வகுப்பு தேர்வு என்று முந்திய வாரம் வாத்தியார் சொன்னது என் மண்டையில் ஒலித்தது. வீட்டுக்குச் சென்றுவிடலாம் என்றால் முடியாது. மயக்கம் வந்தால் தான் அனுப்புவார்கள். மயக்கம் வருவதற்குள் தேர்வு ஆரம்பித்துவிடும்!

மேல்கோட்டையில் ஒரு நாள்

ராஜவீதி என்னும் கடைத்தெருவில் திருவிழாக் கூட்டம். முதலில் என் கண்களில் பட்டது இனிப்புக்கடைதான். செங்கலை விடக் கொஞ்சம் பெரிசாக மைசூர் பாக் இருப்பதைப் பார்க்க வியப்பாக இருந்தது. அவரிடம் ஒரு மைசூர் பாக் என்ன கிலோ இருக்கும் என்று கேட்க நினைத்துக் கிட்ட போக உடனே அவர் நான் ஏதோ வாங்க வந்திருக்கும் கஸ்டமர் என்று நினைத்து, நம்ப மாட்டீர்கள், ஒரு பாதி மைசூர் பாக்கை என்னிடம் சாம்பிளுக்குச் சாப்பிடக் கொடுத்தார். பயந்து கொண்டு ஓடிவிட்டேன்.

பில்லா

மெதுவாகத்தான் படியில் ஏறினேன். ஏறும் போது காலுக்கடியில் என்னவோ இருக்கிறதே என்று நினைப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. வாலை மிதித்திருக்கிறேன். பில்லா அப்படியே ‘குபீர்’ என்று என் மீது பாய்ந்தபோது நான் “ஐயோ” என்று கத்திக்கொண்டு ஓடப் பார்த்தேன். பயத்தில் தடுக்கி விழுந்துவிட்டேன். பில்லா கடித்துவிட்டது.

கூட்டம்

கூட்டங்களுக்கு ஒரு விதமான anonymity கிடைத்துவிடுகிறது. Anonymity கிடைத்த இவர்கள் யாரை வேண்டுமானாலும் அடிக்கிறார்கள், உடைக்கிறார்கள். குடித்திருப்பதால் இவர்களுக்குக் குறி தவறுவதில்லை.