தாலிபானின் மறுநுழைவு – பொருளாதார விளக்கம்

கந்தல் துணி அணிந்த, அடிமட்டத்திலுள்ள, இறையியல் பள்ளியினர் கூட்டு சேர்த்த, முறையான போர்ப் பயிற்சி சிறிதளவும் இல்லாத, மத அடிப்படைவாதக் கூட்டம், பிரிட்டன், சோவியத், சமீபத்தில் அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் உலகிலேயே வல்லமை வாய்ந்த படைகளினால் அடக்க முடியாத நிலப்பகுதியை எவ்வாறு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது? ஏன் முன்னிருந்த ஆப்கான் அரசாங்கம் அத்தகைய வேகத்தில் நொறுங்கியது?

பாசிசத்தை நிறுத்த முடியாமல் போவது எப்போது?

ஹிட்லரின் முக்கியத்துவத்தை துவக்கத்திலேயே கணக்கில் கொள்ளத் தவறிய தன்னையும் தன் சமகால அறிவுஜீவிகளையும் ஸ்வைக் தன் சுயசரிதையில் மன்னிக்கவில்லை. “எழுத்தாளர்களில் சிலர் ஹிட்லரின் புத்தகத்தை சிரத்தையெடுத்து வாசித்திருந்தாலும் அவர்கள் அவரது செயல்திட்டத்தை எதிர்கொள்வதற்கு மாறாய் அதன் உயிரற்ற உரைநடையின் பகட்டைக் கேலி செய்தனர்,” என்று அவர் எழுதினர். அவர்கள் அவரையும் பொருட்படுத்தவில்லை, அவர் சொல்லின் நேர்ப்பொருளையும் எதிர்கொள்ளவில்லை. 1930களிலும்கூட, “முக்கியமான ஜனநாயக செய்தித்தாள்கள், தம் வாசகர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு மாறாய், ஒவ்வொரு நாளும் அந்த இயக்கம்… கணப்பொழுதில் அழிந்து விடுவது தவிர்க்க முடியாதது,” என்று உறுதியளித்தன. தம் ரசனை மற்றும் உயர்கல்வி அளித்த ஆணவத்தால், அறிவுஜீவி வர்க்கங்கள் “கண்ணுக்குத் தெரியாத சூத்ரதாரிகள்” தயவால் – தன்னலமிக்க குழுக்களும், தனி மனிதர்களும், தனித்து நிற்கும் கவர்ச்சி மிகுந்த இந்தத் தலைமையைத் தம் விருப்பத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததால் – கல்வியறிவற்ற இந்த “சாராயக்கடை கலவரக்காரன்”, அதற்குள் மிகப்பெரிய அளவில் ஆதரவு பெற்றுவிட்டதை சீரணித்துக் கொள்ள முடியாதவர்களாய் இருந்தார்கள்.

அமெரிக்கா எனும் பீஷ்மரும் சவுதி எனும் சகுனியும்

நவீன யுகத்தில் மத்திய கிழக்கு என்றுமே அமைதிப் பூங்காவாக இருந்ததில்லை. ஆனால், இன்றைய நிலைமை போல் படு மோசமான நிலை எப்போதுமே இல்லை. ஈராக்கிலும், லிபியாவிலும் சிரியாவிலும், யேமனிலும் உள்நாட்டுப் போர், முழுவீச்சில் கொழுந்துவிட்டெரிகிறது. எகிப்திலும், தெற்கு சூடானிலும், துருக்கியிலும் ஆங்காங்கே கலவரங்களும் கிளர்ச்சிகளும் முளைத்து தழைத்தோங்கி வளர்கின்றன. சென்ற பல ஆண்டுகளில் வந்து போன, உள்நாட்டு கலகங்களின் எச்சங்கள் இன்றைய அள்விலும் அல்ஜீரியாவிலும், ஜோர்டானிலும், லெபனானிலும், சவூதி அரேபியாவிலும், டூனிஸியாவிலும் ஸ்திரமின்மையை நிரூபித்து அஸ்திவாரத்தை ஆட்டிக் கொண்டிருக்கின்றன. ஈரானிற்கும் சவுதி அரேபியாவிற்கும் நடுவில்…

கல்லறையின் மீதொரு தேசம் – 2

இந்தப் படுகொலை துவங்கிய முதல் ஆறு வாரங்களில் கிட்டத்தட்ட 8 லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். இது நாஜிக்கள் யூதர்களைக் கொன்று குவித்ததை விட ஆறு மடங்கு அதிக வேகம். ஏன் இந்த வேகம்? ஹூட்டு அடிப்படை வாத ரவாண்டா அரசுப் படைகள் (Rawanda Government Forces (RGF)) – பால் ககாமேயின் ரவாண்டா தேச பக்த சக்தியை (Rwanda Patriotic Forces (RPF)) அஞ்சின என்பது ஒரு காரணம். முழுமையான போர்க்களத்தில் ககாமேயின் படைகளை எதிர்த்து வெல்லும் என்னும் நம்பிக்கை RGF தளபதிகளுக்கு இல்லை. எனவே, ககாமே கைப்பற்றும் முன், முடிந்த வரை டூட்ஸிகளைக் கொல்வோம் என்பது ரவாண்டா ராணுவத்தின் நிலையாக இருந்தது. RGF இன் இந்த போர்த் தந்திரத்தை, பால் ககாமே தமக்கு மிகச் சாதகமாக உபயோகித்துக் கொண்டார். RGF டூட்ஸிகளைக் கொல்வதில் மும்முரமாக இருக்க, பால் ககாமே, ரவாண்டாவைக் கைப்பற்றுவதில் மும்முரமாக இருந்தார்.

குர்திஸ்தான் – ஈராக்கின் காஷ்மீர்

ஈராக்கின் காஷ்மீர் என ஏன் சொன்னேன் என்றால், குர்திஸ்தானின் மலை முகடுகளும் எர்பில் நகரமும் பனிப்பொழிவுடன் பார்க்கவே ரம்மியமாக இருக்கும். மலைவாழிடங்களின் தொழில்களான மாடுவளர்ப்பு, ஆடுவளர்ப்பு, கார்பெட்டுகள் செய்தல் என குளிர்காலத்தில் எர்பில் நகரமும் அதன் சுற்றுவட்டாரங்களும் அழகாகி விடுகின்றன. மேலும் குளிர்காலச் சுற்றுலா நடத்தும் அளவுக்கு சுற்றுலாத் துறையையும் வலிமையாக வைத்திருக்கின்றனர்.
டூரிஸ்ட்டுகள் வருவதற்கு முக்கியக் காரணம் தட்பவெப்பம். மேலும் ரம்மியமான இயற்கைச் சூழல். மெயின்லேண்ட் ஈராக்கில் தங்குவதற்குப் பயப்படும் ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் தங்குவதற்கு பாதுகாப்பான வசதியான இடமாக இருப்பதால் எர்பிலுக்கு எப்போதும் கூட்டம் உண்டு.

ஈராக் – ஓர் அறிமுகம்

ஈராக்கின் வரலாற்றை முடிந்தவரை சுறுக்கினால் மேலுள்ள அளவே சொல்ல முடியும். ஈராக்கில் நான் 2012 செப்டம்பரில் முதன்முதலாய் வந்தேன். நாளொரு குண்டுவெடிப்பும், பொழுதொரு கடத்தலுமாய், அரசாங்கம் என்ற ஒன்றிருக்கிறதா என்ற ஐயம் ஏற்படும் வகையிலும், எங்கெங்கு காணினும் லஞ்ச, லாவண்யங்கள் தலைவிரித்தாடும் ஒரு தோற்றுப்போன நாட்டையே கண்டேன்…
நம்மூரில் தனியார்ப் பேருந்துகள் வாடிக்கையாளர்களை அழைப்பதுபோல நஜஃப், கர்பெலா, பாஸ்ரா, எர்பில் எனப் புறப்பட தயாராக இருக்கும் வண்டிகளில் இருந்து இன்னும் ஒரு சீட்டுதான் பாக்கி, இரண்டு சீட்டுதான் பாக்கி என கூவிக்கூவி அழைத்துக்கொண்டிருப்பார்கள். ட்ரைவர் அருகில் உள்ள சீட்டில் வசதியாக அமரவேண்டுமெனில் பின்னாலிருக்கும் இருக்கைகளைவிடக் கூடுதலாக எட்டு டாலர் வசூலிக்கப்படும். என்னைப்போன்ற வெளிநாட்டவர்களே பெரும்பாலும் அந்த சீட்டுகளில் அமர்வார்கள். இல்லையெனில் பின்னால் இருக்கும் சீட் எல்லாம் நிரம்பிவிட்டால் வேறு வழியின்றி அதே காசுக்கு அழைத்துச் செல்வார்கள். பாக்தாத்திலிருந்து பஸ்ரா செல்ல கட்டணம் 35,000 ஈராக்கி தினார். (30 டாலர்கள்.) தூரம் 540 கிலோமீட்டர்.

சிரியாவும் இன்ன பிறவும்…

ஏராளமான முஸ்லிம்கள் மிச்சிகன், மின்னியாபொலிஸ் போன்ற பகுதிகளில் பெருமளவிற்குக் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது வலதுசாரி அமெரிக்கர்களை எரிச்சலில் தள்ளியிருக்கிறது… உலகில் வஹாபிய சுன்னி இஸ்லாமியத் தீவிரவாதம் பரவக் காரணமாயிருக்கிற சவூதி அரேபியா பிற இஸ்லாமிய பிரிவுகளைச் சேர்ந்த ஷியா, அல்லாவைட் போன்றவர்கள் வாழும் இராக்கிய, இரானிய, குர்து, சிரிய நாடுகள் மீது பயங்கரவாதத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் அமெரிக்கா அதனைத் தடுக்க முயலாமல் அவர்களுக்கு மறைமுகமாக உதவுகிறது என்னும் குற்றச் சாட்டிற்கு அமெரிக்கா இன்றுவரை பதிலளிக்கவில்லை. மானுடகுலம் இதுவரை கண்டிராத குரூரத்துடன் நடந்து கொள்ளும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ரஷ்ய தாக்குதல்களால் சிதறடிக்கப்படுகையில் அதனை ஆதரிக்காமல் எரிந்து விழும்…

இன்றைய ஈராக் – ரம்மாதி நகரம் வீழ்ந்தபின்

ஐஎஸ் பிடியில் இருக்கும் யசிதி இனப்பெண்கள் படும் கொடுமைகளைத்தவிர. குர்துகள் குறித்து சமீபத்தில் செய்திகள் எதையும் படித்திருக்க மாட்டோம், ஏனெனில் குர்திஸ்தானின் பெஷ்மெர்கா படைகள், ஐஎஸ் படைகளை அடித்து நொறுக்கி வருகின்றனர். அவர்களின் பகுதிக்குள் (குர்திஸ்தான்) நுழைய முயலும் எந்த ஐஸ் படையும் சுத்தமாக அழிக்கப்படுகிறது. ஐஎஸ் செய்த அத்தனை கொடூரங்களையும் பெஷ்மெர்காவும் தன்னிடம் சிக்கும் ஐஎஸ் படைகளுக்குச் செய்கிறது. அதனால், குர்திஸ்தானை ஒட்டிய பகுதிகளில் எந்த புது நிலப்பகுதியும் இழக்கப்படவில்லை. ஓரளவுக்கு ஈராக்கின் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன பெஷ்மெர்கா படைகள்.

ஈராக் எனும் குருக்ஷேத்திரம்

ஈராக்கில் ஆபத்துக்கு அஞ்சாமல் அங்கு மிகச் சமீபகாலம் வரை தொடர்ந்து பணியாற்றியவர் ஜெயக்குமார். இக்கட்டுரை அவரின் நேரடி அனுபவங்களையும், கிட்டிய தகவல்களையும் சார்ந்து எழுதப்படுகிறது. இனி கட்டுரையின் ஒரு பகுதி: ‘உலகம் முழுக்க இருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத எண்ணம் கொண்டோர் அனைவரும் அணி அணியாக தங்களை ஐ எஸ் ஐ எஸ்ஸில் இணைத்துக்கொண்டு வருகின்றனர். இந்தக்கூட்டத்தில் சேர்பவர்கள் உலகின் இந்தப் பகுதியில்தான் என்றில்லாமல் உலகம் முழுக்க இருந்து வந்து சேர்கிறார்கள். இந்தியாவிலிருந்தும்கூட ஆட்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள். மும்பை கல்யானைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இந்த வாழ்க்கைமுறை பிடித்திருக்கிறது, இனி இந்தியாவுக்கு திரும்பப்போவதில்லை எனச் சொல்லி இருக்கிறார்.’

குளக்கரை

அதே நேரம் இஸ்ரேலில் என்னவென்று பார்த்தால், அங்கு ஆட்சி புரிந்த வலது சாரி அரசுடைய அரசியலை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் ஒரு எதிர்க்கட்சி வேட்பாளர் சொல்கிறார், பயத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தை வெல்லும் அரசியலை ஒழித்துக் கட்டி, மக்கள் சுதந்திரமாக உலவும் அரசியலைப் பீடமேற்றுவோம் என்று குரல் கொடுக்கிறார். அதாவது இஸ்ரேலைப் பயங்கரவாதிகளுக்கும், இஸ்லாமிசத்தின் யூத வெறுப்பு அரசியலுக்கும் தாரை வார்ப்போம் என்கிறார் என்று வைத்துக் கொள்ளலாம்.

குளக்கரை

இப்போது யூரோப்பில் பரவலாகத் தெரிய வரும் சொல் – பாகனியம். எப்போதோ கிருஸ்தவம் தன் இரும்பு ஆணி கொண்ட காலணிகளால் நசுக்கிக் கொன்றுவிட்ட ஒரு இசம் இது. ஆனால் குற்றுயிரும் குலையுயிருமாகப் பல மூலைகளில் இருந்திருக்கிறது. சமீபத்து ஹாலிவுட் ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களின் உபயமா அல்லது உலகில் பெரும் பணபலத்துடன் பரப்பப்படும் எவாஞ்சலியக் கிருஸ்தவத்துக்கு ஒரு எதிர் வினையா என்று சொல்ல முடியவில்லை. ஐஸ்லாந்தில் மறுபடி பழைய பாகன் தெய்வமான தோர் என்பாருக்குப் பெரும் செலவில் ஆலயம் ஒன்று கட்டப் போகிறார்கள்.

வெடித்துக் கிளம்பும் விக்கிலீக்ஸ் – இறுதிப் பகுதி

விக்கிலீக்ஸின் கசிவினால் அமெரிக்காவின் பாக்கிஸ்தான் கொள்கைகளில் பெருத்த மாற்றமோ விளைவுகளோ ஏற்படாவிட்டாலும் கூட இந்த கசிவு ஒரு புதிய விவாதத்தை குறைந்த அளவிலேனும் துவக்கி உள்ளது ஒரு வரவேற்கத்தகுந்த மாற்றமே. இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் கூட விஸில் ப்ளோயர்கள் பலரும் கொல்லப் படுகிறார்கள் அல்லது அரசாங்கத்தினால் கைது செய்து சித்ரவதை செய்யப் படுகிறார்கள்.

வெடித்துக் கிளம்பும் விக்கிலீக்ஸ் – 3

விக்கிலீக்ஸ்ஸீன் கசிவுகள் அமெரிக்காவில் பெரும் மாற்றத்தையும், அரசின் கொள்கைகளில் பெரும் மாறுதலையும், ஒரு பெரும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என்று நம்பிக் கொண்டிருந்த ஜூலியன் அசாங்கேயின் எண்ணத்தில் மண் விழுந்ததும் இல்லாமல், அவர் மீது பாலியல் வன்கொடுமை சட்டம் வேறு பாய்ந்திருக்கிறது. கற்பழிப்புக் குற்றச்சாட்டில் அவரைப் பிடித்து உள்ளே வைப்பதும் வெளியில் விடுவதுமாக ஸ்வீடன் அரசு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது. ”நான் நம்பிய நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள் அரசின் சார்பாக அடக்கி வாசித்து மக்களை வஞ்சித்து விட்டார்கள் நாங்கள் மோசம் போய் விட்டோம்” என்று விக்கிலீக்கினர் தனியாகப் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

வெடித்துக் கிளம்பும் விக்கிலீக்ஸ் – 2

எந்த பாகிஸ்தான் மக்களின் நலனுக்காக அமெரிக்க அரசு மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஆண்டுக்கு 1.5 பில்லியன் டாலர்கள் தானமாக வழங்கி வருகிறதோ, எந்த பாகிஸ்தானின் பாதுகாப்புக்காக ஆண்டுக்கு 1 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கி வருகிறதோ, அதே பாகிஸ்தான் ஒருபுறம் அமெரிக்காவிடமிருந்து ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர்களை வாங்கி முழுங்கிவிட்டு, யாரைப் பிடிப்பதற்காக அமெரிக்கா அந்த நிதியை வழங்கியதோ அதே பயங்கரவாத அமைப்புகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு தானம் கொடுத்த அமெரிக்காவின் அடி மடியிலேயே கை வைக்கிறது என்பதுதான் அமெரிக்க அரசின் பல்வேறு அமைப்புகள் ஆதாரபூர்வமாக கண்டுபிடித்த உண்மைகள்.

பாகிஸ்தான் உறவு – பத்ரிக்கு ஓர் எதிர்வினை

பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நிகழ்த்த பல காரணங்கள் இருக்கலாம்- அமெரிக்காவின் அழுத்தம் உட்பட. ஆனால் அவை எல்லாவற்றிலும் நம் தேசியப்பாதுகாப்பு முதன்மையாய் இருக்க வேண்டும். இதைத்தான் இந்தியா சரியாகவே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பயங்கரவாத முகாம்களை அழிக்காமல், பாக்- அரசே தெளிவாக ஆதரித்து வளர்த்து விடும் கொலைக்கும்பல்களை ஒழிக்காமல் காஷ்மீரையோ வேறு எந்தப்பிரச்சனையையோ பேச முற்படுவது என்பது, மென்மையாகச்சொன்னால் – மடத்தனம்.