அஞ்சலி: கர்நாடக சங்கீதக் கலைஞர் அனந்தலக்ஷ்மி சடகோபன்

கேள்வி ஞானத்தில் பாடத்துவங்கிய அனந்தலக்ஷ்மி, எம். எஸ். சுப்புலட்சுமியின் திரைப்பாடல்களை வீட்டில் பாடிக்காட்டுகையில், “பாப்பா அப்படியே குஞ்சம்மாவைப் போலவே பாடுகிறதே” என்று சண்முகவடிவு உச்சிமுகர்வாராம். ஹிந்து நாளிதழில் 2006இல் அளித்த பேட்டியில் அனந்தலக்ஷ்மி இதைக் குறிப்பிட்டுள்ளார். 1939இல் தன் முதல் மேடைப்பாட்டை வழங்கிய அனந்தலக்ஷ்மி, தொடர்ந்து பன்னிரெண்டு வயதில் சென்னை வானொலியில் பிரதானமான பாடகியாய் ஸ்தாபித்துக்கொண்டார். 1943இல் ‘மியூசிக் அகடெமி’ நடத்திய போட்டியில் நடுவர்களான ஜி. என். பாலசுப்ரமணியன் மற்றும் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, பதினைந்து வயதான அனந்தலக்ஷ்மிக்கு எச். எம். வி. நிறுவனத்தின் தங்கப்பதக்கத்தை பரிசளித்தனர்.

ஸ்ரீரங்கம் களை

பிரதானக் கூடத்தின் கூரையில், எடுத்துக்கட்டி எனப்படும், நான்கு சுவர்களிலும் பெரிய சாளரங்களுடனான சதுரமான சிறு கோபுர வடிவம் கொண்ட வீடுகள் ஸ்ரீரங்கம் பிரதான சித்திரை, உத்திரை வீதிகளில் இயல்பு. எடுத்துக்கட்டி வழியே பக்கவாட்டில் சூரிய ஒளி வீட்டினுள் மிதமாய் விழுந்து ஒளியூட்டும். வாசல் ஒரு வீதியிலும், கொல்லை பின் வீதியிலும் முடியும் இவ்வகை வீடுகள் இயற்கையான காற்றுப்போக்கும் குளிர்ந்த நிலையிலும் இருப்பவை. வசித்துப்பார்த்தவர்களுக்குத் தெரியும் அருமை.

பேய், பிசாசு, ஏலியன்கள்: அறிவியலா புரட்டா?

பேய் பிசாசுகள் மனிதர்கள் இல்லை என்பது திண்ணம். அவைகளை உலகில் அநேகர் தினநிகழ்வாய் பார்க்காதிருக்கையில், நான் பார்த்தேன் என்றால், அது அசாத்தியமான நிகழ்வு. அதற்கான நம்பகத்தன்மையை உயர்த்த அசாத்தியமான சாட்சியங்கள் வேண்டும். இதுவரை நமக்குக் கிடைக்கக்கூடிய சாட்சியங்கள் அவ்வளவு அசாத்தியமானது அல்ல என்று நிரூபிக்கமுடிகிறது. பேய் பிசாசுகளை பார்த்ததற்கான தருணங்களை வேறு எளிய காரணங்களால் விளக்கமுடியும் என்று தெரிகிறது.

குழலினிது யாழினிது என்பார்… (2012 மார்கழி இசை விழா அனுபவம்)

இசை விழாவில் பல காலிப் பெருங்காய டப்பிகள் கேட்கின்றன. என்றுமே இவ்வாறுதானா என்பது இருபது வருடங்கள் மட்டுமே இசைப் பரிச்சயம் உள்ள எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் ஒன்று மனதில் சுடுகிறது. அகடெமியும் இன்னசில சபாக்களும் முடிந்தவரை பல மாவட்டங்கள், மாநிலங்கள் என்று கூட்டிவந்து கலைஞர்களை மேடையேற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் ‘வருடத்தில் ஒருமுறை’ போதாது என்பது கோலப்பன் நேரிடையாக தமிழ்நாட்டின் உள்ளே பலபகுதிகளுக்குச் சென்று, வருடா வருடம் மார்கழி இசைவிழா சமயத்தில் பேட்டி எடுத்துப் போடும் கலைஞர்களின் வாழ்க்கை நிலையை கவனிக்கையில் தெரிகிறது. அகடெமியில் ஒரு நாள் ஸ்பெஷல் பாஸிற்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொடுப்பவர்கள், சொந்த ஊரில், அருகிவரும் ‘குந்தளம்’ போன்ற வாத்யங்களை வாசிக்கும், வறுமையால் மதம் மாறும் கலைஞர்களை ஆதரிக்க அதை அளிக்கலாம்.

2012 டிசெம்பர் சங்கீத விழா: ஒரு நூற்றாண்டு நினைவு விழா அனுபவம்

மறைந்த விழா நாயகரின் சிறப்பு குணம் ஒன்று உண்டு. உடன்வாசிப்பவர்களை எப்போதும் உற்சாகப்படுத்துபவர் என்பதை விழாவில் பேசியவர் குறிப்பிட்டுச் சொன்னதை முற்பகுதியில் விவரித்தோம். நம் பாடகரும் அதற்கு பேர் போனவர்தான். சமயத்தில் பாடுவது பத்து நிமிஷம் உற்சாகப்படுத்துவது கால் மணி நேரம் என்று கூட அவர் கச்சேரிகளில் நடந்துவிடுவதுண்டு. நேற்றைக்குப் பாவம் உடன் வாசித்தவருக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் இல்லை. தன்னிச்சையாய் வராத பாராட்டு சமயத்தில் ஃபுல்டாஸான யார்க்கராகிவிடுவதுண்டு. பாடகர் பாடிய ஸ்வரத்தை உடனே கிரகித்துக் கொள்ள முடியாமல் திணறி எடுப்பை குத்துமதிப்பாய் அணுகி சற்றே தப்பி சாஹித்யத்தை அவர் எடுக்கும் போது துல்லியமாய் எழுந்தது பாடகரின் ‘பலே’.

அறிவியலும், சந்தை அறிவியலும்

என்னதான் பொதுமக்களிடம், முன்பு எப்போதுமில்லாத வகையில், உடனுக்குடன் பல அறிவியல் தளங்களில் நடக்கும் ஆராய்ச்சி முடிவுகளைக் கொண்டு சேர்க்கிறது என்றாலும், இவ்வகை மிகைகளும் சார்ந்த மீள்-மிகைகளும் சந்தை அறிவியலின் முக்கியமான இடர். கைசொடுக்கும் நேரத்தில் ஒற்றை வரிச் செய்தி மிகைகளை வாசித்துத் ‘தெளிந்து’ தீர்க்கதரிசன மதிப்பீடுகளை கிடைக்குமிடத்தில் (இணையத்தில்) அரைபண்டித அறைகூவலாய் அழற்றுவதும் தவிர்க்க இயலாது.

துருவ நட்சத்திரம் – பழநி சுப்ரமணிய பிள்ளை – மதிப்புரை

பழநி சுப்ரமண்யத்தின் இடதுகை பழக்கத்தில் தொடங்குகிறது நூலின் தனி ஆவர்தனக் கச்சேரி. கற்பனைச் சித்தரிப்பாய் சென்ற நூற்றாண்டின் முப்பது நாற்பதுகளில் கோலோச்சியிருந்த செம்பை வைத்தியநாத பாகவதருக்கும், உடன் வாசித்துவந்த வயலின் வித்வான் மைசூர் சௌடய்யாவிற்கும், இடது கை மிருதங்க வித்வானான சுப்ரமண்யத்தை மேடையேற்றுவதில் இருந்த கருத்து வேறுபாடுகளையும் (மிருதங்கம் நன்கு ஒலிக்க மேடையில் இடம்மாற்றி உட்கார வேண்டும்), செம்பையின் ஆதரவையும், சௌடய்யாவின் மனமாற்றத்தையும், வரலாற்று சம்பவத்தை சிறுகதை வடிவில் அருமையாய் விவரிக்கிறது.

பூனை குறுக்கே நடந்தால்… : மேக்னெட்டோரிஸப்ஷன்

பூனை குறுக்கே நடந்தால் அபசகுனம். வடக்கே தலை வைத்து படுத்தால் உடல் நலத்திற்கு கேடு. இவ்விரண்டு சமூக நம்பிக்கைகளை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். எனக்களிக்கப்பட்ட இவற்றின் அன்றாட ’விளக்கங்களும்’, சார்ந்த என் அறிவியல் தேடல்களையும், புரிதல்களையும் அனுபவக்கல்வி தடவி இக்கட்டுரையில் விவரிப்போம்.

ஹப்பர்ட் சிகர உச்சியிலிருந்து…

அமெரிக்காவின் எண்ணைவளம் பற்றி வெளியான செய்தி போலவே, உலக எண்ணைவளத்தைப் பற்றிய செய்தியை ஓப்பெக் குழு 2004இல் சந்தடியின்றி வெளியிட்டது. அதிகரித்துவரும் எண்ணைத் தேவையின் கணிப்பு சவுதி அரேபியாவின் சோர்வடைந்த எண்ணைக்கிணறுகளுக்கு சவால்: இதுதான் பிப்ரவரி 24, 2004 அன்று வெளியான நியூயார்க் டைம்ஸ் செய்திக்கட்டுரையின் தலைப்பு. இக்கட்டுரையில் உலகில் அதுவரை எண்ணை உற்பத்தியில் முன்னனியில் இருந்த சவுதி அரேபியாவின் எண்ணைக்கிணறுகள் காலியாகிவருவது குறிப்பிடப்பட்டது; அதாவது அவை நூறு சதவிகித உற்பத்தி அளவை தொட்டுவிட்டன.

எட்டணாவில் உலக ஞானம்

மாற்றான் மனைவியை இச்சித்தல் கூடாது என்பது ராமாயணத்தின் சாரம். அதனால் அனைத்தையும் திருமணத்திற்கு முன்பே முடித்துக்கொள்ளவேண்டும். சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட் என்பது சார்லஸ் டார்வினின் பரிணாம தத்துவத்தின் சாரம். அதனால் மனிதருள் உஸ்தாதாய் இருப்பது அவசியமாகிறது. கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பது கீதையின் சாரம். இதை வியாஸரோ கிருஷ்ணரோ, யார் சொல்லியிருந்தாலும், நாம் மேற்படி உஸ்தாதாய் அனைவரிடமும் எடுத்துரைப்பது அவசியம். இல்லை கடமையைச் செய்யும் அனைவரும் பலனுக்கு ஆசைப்படுவார்கள்.

கர்நாடக சங்கீத வருங்கால நட்சத்திர நம்பி(க்கை)கள்

இளம் வித்வானாய் இன்றைக்கு சீஸன் சர்க்கியூட்டில் உள்ளே வருவதும் கடினமே. பாரம்பர்யம்மிக்க சில சபாக்களே திறமையை மட்டுமே வைத்து அழைப்புவிடுக்கின்றனர். பல சபாக்கள் இங்ஙனம் செயல்படுவதில்லை. இளம்கலைஞர்கள் மேலெழும்ப ஆரபி, தேவகாந்தாரி என்று மட்டும் சஞ்சரிக்காமல், இவ்வகை நுண்ணரசியல், நரஸ்துதி, முகஸ்துதி என்று நிஜத்திலும், ஃபேஸ்புக், டுவிட்டர் என்று அநேகர் “லைக்” செய்ய இணையத்திலும் சஞ்சாரம் செய்யவேண்டிய நிர்பந்தம் உள்ளது. போதாததற்கு, பொதுவில் வைக்கமுடியாத சில தேவைகளும் உள்ளது. கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள வியாஸர்பாடி கோதண்டராமனை இவ்விடத்தில் மீண்டும் உங்களிடம் குறிப்பிடுகிறேன்.

2011-12 சென்னை மார்கழி இசைவிழா பல்லவிகள்

இந்த டிசம்பர் சீஸனில் (2011 -12) கேட்ட ராகம்-தானம்-பல்லவிகளைப் பற்றி விரிவான அலசலைத் தருவதோடு, ராகம்-தானம்-பல்லவியின் பல்வேறு பரிமாணங்களையும் விளக்குகிறார் அருண் நரசிம்மன்:

தமிழிலேயே பாடினாலும், இசையாய் கேட்கையில் மனதிற்கு ரம்யமூட்டுவதற்கு பொருள் செறிவின் பங்களிப்பும் முக்கியம் என்றுணர முடிந்தது. வருடாவருடம் உழைத்து எதையாவது வித்தியாசமாய் செய்யமுனையும், இன்றைய முன்னனி வித்வான்களான கிருஷ்ணா சஞ்சய் இருவருக்கும் இடையே நிலவும் ஆரோக்யமான போட்டியில், இவ்வருட அகதெமி வின்னர் சஞ்சய். சரி இதுதான் 2011 சீசனுக்கு சூப்பர் கச்சேரி என்று நினைத்திருந்தேன். வேதம் சிரித்தது. என் பாட்டியின் வயதையொத்த வல்லியின் உருவில்.

வண்ணத்துபூச்சியின் நிறமற்ற வானவில்

உத்திரத்தில் ஆடும் ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்திலும் பாட்டியின் அந்தக்கால நவரத்தின பெண்டண்ட்டில் மற்ற கற்களைக்காட்டிலும் வைடூர்யம் மட்டும் டாலடித்து ஜுவலிக்கிறதேன்? தோகை இளமயில் ஆடி வருகையில் வானில் மழைவராவிட்டாலும், தோகை நிறங்கள் அசாதாரணமாய் ஒளிருவதேன்? சாலையிலுள்ள மழைநீர்தேங்கிய குட்டைகளில் பெட்ரோல் டீஸல் ஒழுகிப் படர்ந்து, தாண்டிச்செல்கையில் நாம் பார்க்கும் கோணத்திற்கேற்ப பல நிறங்களில் தெரிவதேன்? கணினி மென்தகட்டை வெளிச்சத்தில் அப்டி இப்டி திருப்பினால் பல நிறங்களாய் தெரிவதேன்? அநேக வண்ணத்துபூச்சியின் இறகுகள் பளபளப்பதேன்?

ஏன் பல்லி கொன்றீரய்யா

பத்து வருட ஆராய்ச்சியில் பல பல்லிகளை சந்தித்து, க்ளவுஸ் அணிந்து கைகுலுக்கி, நுண்னோக்கி, சிந்தித்து, பல்லியின் கால் படம் மட்டும் வரைந்து, நுண்ணோக்கியில் தெரியும் பல பாகங்களை குறித்து… என்.சி.வசந்தகோகிலம் இன்றிருந்து இப்பல்லி ஆராய்ச்சியை கேள்விப்பட்டிருந்தால், தான் ரங்கனாதர் மேல் பாடியதை சற்றே திருத்தி, “ஏன் பல்லி கொன்றீரய்யா” என்று மோஹனத்தில் பொருமியிருப்பார்.

தாமரை இலையும், மகா நீரொட்டா பரப்புகளும்

வைரஸ் நுண்ணுயிர்களின் எளிய செயல்பாடுகளையே கணிணிவகை பைனரி செய்திகளாய் பாவிக்கும் நேனோபாட் எனும் நுண்ணுடுருவிகளிலிருந்து, ஆட்டோவைவிட சற்றே பெரிதான ஊர்த்தியை நேனோ என்று பெயரிடும் அளவிற்கு நேனோ என்றதும் அறிவியலாளர்களுடன் நேனு நேனு என்று வர்த்தகவித்தகர்களும் கைகோர்க்கும் நேனோ டெக்னாலஜி என்கிற அறிவியல் துறை இன்று பிரபலம். இயற்கையை அறிதலுக்கு அறிவியல்சிந்தை ஒரு உகந்தவழி என்றால், அவ்வறிதலின் வெளிப்பாடான தொழில்நுட்பங்களுக்கும் இயற்கையே முன்னோடி. நேனோ டெக்னாலஜி விஷயத்திலும் இது உண்மையே. பல நேனோ பொருட்கள், டெக்னாலஜிகள், இயற்கையில் நம்முலக ஜீவராசிகளிடையே ஏற்கனவே படைப்பில், உபயோகத்தில் இருக்கிறது. இக்கட்டுரைத் தொடரில் இயற்கை தரும் நேனோடெக்னாலஜி சிலவற்றை எனக்குப்புரிந்த அறிவியல் எல்லைக்குள் விளக்கமுற்படுகிறேன். மற்றபடி, கட்டுரையின் வசனநடையும் கோமாளி உடையும், தீவிரத்தை உள்வாங்க ஏதுவாக்கும் குதூஹல மனநிலைக்கான பாவனைகளே.

கற்க கசடற

பல வருடங்களாய் கல்வி என்று பயின்ற அறிவியல் பாடங்கள், முதலில் நம்மை கேள்விகளை இயல்பாய் (நமக்குள்) கேட்கச்செய்யவேண்டும். அறிவியல் சிந்தையுடன் பதில்களை விடைகளை அணுகும் மனநிலையை வளர்த்திருக்க வேண்டும். தற்காலிகமாக கிடைக்கும் பதில்களை ஆராய்ந்து சரிபார்க்கும் பகுத்தறிவை வளர்த்திருக்க வேண்டும். படித்த அறிவியலின் தகவல்களை மறந்திருக்கலாம். அறிவியலின் நோக்கை உணர்ந்து மனதில் ஊறி நிலைத்திருக்கவேண்டும். அறிவியல் கல்வி, அனுபவக் கல்வியாகாமல் போகலாம். அனுபவத்திற்கு வேண்டிய கல்வியை சிந்தையை கொடுக்க முடியாமல் ஏட்டுச்சுரைக்காயாக நின்றுவிடக்கூடாது. தனிமனிதன் படித்திருந்தும் கல்வியறிவு தந்திருக்கவேண்டிய தீர்க்கமும் மனத்திடமும் வளராமல் படித்தால் மட்டும் போதுமா என்று வாழ்வின் பல தருணங்களில் எள்ளலுக்குள்ளாகும் நிலைக்கு பல காரணங்கள் கூறலாம்.

ராகம் தானம் பல்லவி – பாகம் ஏழு

இதே வேகமாற்ற விஷயத்தை, தாளத்தின் காலப்பிரமாணம் மாறாமல், பல்லவியை மட்டும் ஸ்பீடு குறைத்து, தாளத்தின் இரண்டு ஆவர்தத்திற்கு ஒருமுறையோ நான்கு ஆவர்தத்திற்கு ஒரு முறையோ முழுவதும் வருமாறு, ”ஸ்லோ” மற்றும் ”ஸ்லோ ஸ்டாப்” வகை சுருள் பந்துவீச்சாளராகி பல்லவி பந்து வீச முடியும். இப்படி மத்தியகாலத்தில் அமைந்த பல்லவியை, அதற்கு இரண்டு குறைவான வேககாலத்தில் பாடுவதும் அனுலோமம்தான். ஆனால் இதற்கு பெயர் கீழ்கால அனுலோமம் அல்லது விலோம அனுலோமம்.

ராகம் தானம் பல்லவி – பாகம் ஆறு

நிரவல் என்பதே இசை வைத்து நிரப்புதல் என்கையில் புரியவேண்டியது, ஒரிஜினல் பாடல் வரிகள் முதலில் அதற்கேற்றவாறு தாளத்தினுள் நிறைய அவகாசங்களுடன் சுருக்கமாகப் பொருந்தியிருக்கவேண்டும். இடைவெளிகள் இருந்தால்தானே நிரப்பமுடியும். பல்லவி உருவாக்குகையில் இதை மனதில்கொண்டு நிரவல் செய்வதற்கு தகுந்தவாறு வரிகளை வார்த்தைகளுக்கிடையே வேண்டிய அவகாசங்கள், அருதிகள் வைக்க முடியுமாறு அமைக்கவேண்டும்.

உயிர், மாற்று உயிர் – 4

நம் உயிரணு, மரபணுக்களுக்கும் ஆர்செனிக்கென்றால் ரொம்பப் பிடிக்கும். உடனே பாஸ்பரஸை தூக்கிவிட்டு ஆர்சனிக்கை ஒட்டிக்கொள்வோம். அதனால்தான் அது நமக்கு டாக்சின். விஷம். ஒட்டிக்கொண்ட பிறகுதான் விபரீதம். உயிரணு மரபணு வைத்து அடுத்தடுத்து தன்னிச்சையாக நடக்கவேண்டிய, ஜீவிப்பதற்கு உடலுக்கு தேவையான ஆற்றல் உற்பத்திசெய்யவேண்டிய, அனைத்து ரசாயன மாற்றங்களிலும் ஆர்செனிக் குளறுபடிசெய்துவிடும்.

உயிர், மாற்று உயிர் – 3

நேச்சர் என்னும் பிரசித்திபெற்ற ஆராய்ச்சி சஞ்சிகையில் இதுவரை வெளிவந்துள்ள ஒரே விஞ்ஞானப் புனைக்கதை, ஆர்தர் கிளெர்க்கின் கடைசி சிறுகதை. கதை ஒரே பக்கம்தான். நம் ஆகாச கங்கை காலக்ஸியில் வேறு சமுதாயத்தினர் பூமியின் அழிவிற்குப்பிறகு அதைப்பற்றி ”பாவம்பா நல்ல மனுஷன் போயிட்டான், ஆனா தேவைதான் அவனுக்கு” என்கிற ரீதியில் பேசிக்கொள்ளும் சிறு உச்கொட்டல் போல எழுதியிருப்பார். இது எதற்கு இப்பொது என்றால், அந்த சமுதாயத்தினரை ஜெர்மானியம் மூலக்கூறை ஆதாரமாகக்கொண்ட உயிரினமாக சித்தரித்திருப்பார்.

உயிர், மாற்று உயிர் – 2

பூமியின் உயிர்களில் சக்கரை வலப்புறம் சுழற்சி, அமினோ அமிலங்கள் இடப்புறம் சுழற்சி. நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் உயிர் தோன்றும் சாத்தியம் இருந்திருக்கையில், உயிர் தோன்றியதே தற்செயல்தான் என்றால், ஏன் ஒரே ஒரு முறை மட்டும் சாதா உயிர்கள் தோன்றியிருக்கவேண்டும். இன்று ஒரு வகை சாதா உயிர், சில வருடங்கள் கழித்து மற்றொரு வகை சாதா உயிர் என்று தோன்றியிருக்கலாமே.

உயிர், மாற்று உயிர் -1

உயிர் அல்லது ”உயிருடன் இருப்பவை” என்றால் என்ன? நம் உலகிலேயே நாம் அல்லாத உயிர்கள், மாற்று உயிர்கள் (alternate life) பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாம் கரிமவேதியியல் பாதி பரிணாம உயிரியல் மீதி என்று கடவுள் பாதி மிருகம் பாதியாய் கலந்து செய்த கலவை. இன்று ஹோமோஸேப்பியன்ஸ் என்று அறியப்படும் நம் மனிதகுலத்தின் மூதாதையரும், மனிதக்குரங்கின் மூதாதையினரும் ஒரே பொது ஆதி-மனித-குரங்கு-மூதாதையினரிடமிருந்து தோன்றியவர்கள். இந்த உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியின் புரிதலை (கொம்பேறித்தாவும்) குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்கிற சினிமா பாட்டில் விளக்கியுள்ளோம்.

ராகம் தானம் பல்லவி – பாகம் ஐந்து

மேலுள்ள விளக்கம் உங்களுக்கு உபயோகமாகலாம். உதாரணமாய், ” இன்னாராகிய பாடகர் பாடிய திரையிசையை கேட்டிருக்கிறேன், அவருக்கு குரல் போகுங்க” என்று ஒருவர் சொன்னால், அது உண்மையென்றால் இதுவரை அப்பாடல்களை கேட்டவர்கள் அப்படிச் சொல்லவில்லையே, ஒருவேளை அவர்களனைவருக்கும் காது லேதா, இல்லை இசையின் புறவய அங்கத்தை, அகவயமாய் அள்ளித்தெளிக்கும் குறைசொல்பவரின் இசையறிவு செம்மையடையவில்லையா என்பதை பாகுபடுத்தி நீங்களே உணர்ந்துகொள்லலாம். நீங்களே உங்கள் கேள்திறன், அறிவை வைத்துக் கேட்டுச் சரிபார்த்தும் கொள்ளலாம்.

ராகம் தானம் பல்லவி – பாகம் நான்கு

முதலில் கூன் போடாமல், நிமிர்ந்து சம்மனம் போட்டு (சப்ளாமூட்டி) உட்காருங்கள். முகத்தை சீரியஸாய் வைத்துக்கொள்ளுங்கள். முதலில் உள்ளங்கையால் தொடையில் செல்லமாக ஒரு தட்டு (நம் தொடையில் கொசு உட்கார்ந்திருந்தாலோ, தொடை அடுத்தவரதென்றாலோ படார் என்று அடித்துக்கொள்ளலாம்). பிறகு சுண்டுவிரலில் தொடங்கி மூன்று விரல்களை கட்டைவிரலால் தொட்டு எண்ணிக்கொள்ளுங்கள்.

ராகம் தானம் பல்லவி – பாகம் மூன்று

இப்படியாப்பட்ட கர்நாடக சங்கீத கலைஞர்கள் சாதாரணமாய் அப்படி ஆட்டோவில் வந்திறங்கி அலட்டிக்கொள்ளாமல் பாடிவிட்டு கொடுப்பதை வாங்கிகொண்டு போவார்கள். உழைக்கத்தெரிந்த பிழைக்கத் தெரியாதவர்கள். உழைக்கசோம்பும் பிழைக்கத்தெரிந்த பல அல்பசங்கதிகள் அரைமணி (ஏதோ ஒரு) மேடையேற ஆங்கிலத்தில் பேரம்பேசி ஆயிரக்கணக்கில் முன்பணமாய் கேட்கிறது. கொடுக்கிறோம். பாரம்பர்யம்மிக்க ப்ரத்யேகமான கலையின் உண்மையான உன்னதமும், அதை நாம் இன்று போஷிக்கும் விதமும் நிதர்சனமாகுகையில் கண்களில் ஜலமும் மனதில் ஆங்காரமுமே மிச்சம்.

ராகம் தானம் பல்லவி – பாகம் இரண்டு

முன்னர் குறிப்பிட்டபடி வேதவல்லி மத்தியமகால தானத்தில் நிரம்ப அப்பியாசம் பெற்று தேர்ந்தவர், சிறந்தவர். கேட்கையில் நம்மை அறியாமல் கண்ணைமூடியபடி எழுந்து ஆடவைத்துவிடுவார். ராகங்களுக்கு ஏற்றவாறு தானத்தின் வெளிப்பாடு சற்று மாறும். நாட்டை ராகத்தை உடைத்து உடைத்து ஸ்வரத்துண்டுகளாய் தானம் பாடுவது நன்று. எளிது. ஆனால் வராளியை இழுத்து இழுத்துதான் பாடவேண்டும்.

ராகம் தானம் பல்லவி – பாகம் ஒன்று

ஜி.என்.பி. காலத்தில் ஷண்முகப்பிரியா ராகத்தில் முக்கால் மணிநேரம் இருந்திருக்கிறது. இன்று இத்தெம்பு இள வித்வான்கள் பலரிடம் இல்லை. அப்படியே ஒரு 15 நிமிடம் உழைத்துப் பாடினாலும் ரசிகர்கள் சிலரிடமே ஒருமுகப்படுத்தி கேட்கும் தெம்பும் இருக்கிறது. தலை ஆடுவது நின்று, கால் ஆடி, பிறகு கை நடுங்கி, வாவ், ஃபுல் ஸெட் மா என்று எஸ்ஸெம்மெஸ்ஸிக் கொள்கிறார்கள். இல்லை தரஸ்தாயியில் ஆசுவாசிக்க பாடகர் சற்று மூச்சுபிடித்து நின்றால், அவசரமாய் கைதட்டி நடுக்கத்தை குறைத்துக்கொள்கிறார்கள்.