கவிதையும், கருணையும் – தேவதேவனின் படைப்புலகம்

தனிமனிதன் தன்னை மையமாகக் கொண்டு உலகை மதிப்பிடும்போது உண்டாகும் ஏமாற்றம், அவநம்பிக்கை, உளவியல் நெருக்கடி அதனால் ஏற்படும் துக்கம் மற்றும் இழப்புணர்வு போன்றவை நவீனத்துவ ஆக்கங்களின் சில பொதுப் பண்புகள். இன்றளவும் தமிழ்ப்புதுக் கவிதைகளில் இப்பண்புகளை பேரளவு காணலாம் ஆனால் தேவதேவனின் கவிதைகள் இத்தன்மைகளினின்றும் வெகுவாக மாறுபட்டவை.