திருமண ஏசல் பாடல்கள்

மரபு வழிப்பட்ட நிலவுடைமை சார்ந்த குடும்ப அமைப்பில் மகளிர்க்கு உரிய பங்கு வரையறுக்கப்பட்டிருந்தது. இல்லத்தரசியர் என்ற பாத்திரத்தை வகிக்கின்ற மகளிரே குடும்ப கௌரவம் குலப்பெருமிதம் போன்றவற்றின் பாதுகாவலராகக் கருதப்பட்டனர். மேலும் குலம், கோத்திரம் பார்த்து நிச்சயம் செய்யப்படுகிற திருமணங்களில் மணமகனும் மணமகளும் முதல் முறையாகச் சந்தித்து விரைவில் அவர்களுக்குள் நெருக்கமான உறவு ஏற்படவேண்டுமெனில் அவர்களுக்கு இடையில் உள்ள மனத் தடைகள் நீங்கினால்தான் அது சாத்தியம். அத்தகைய மனத் தடைகள் நீங்கி இயல்பாகவும் தயக்கமின்றியும் அவர்கள் அந்நியோந்நிய உணர்வை அடைவதற்கு இத்தகைய குழுப்பாடல்கள் உதவிகரமாக இருந்தன.

சிலப்பதிகாரத்தின் காலம்

சிலப்பதிகாரம் ஒரு முழுமையான கட்டுக்கதை என்று சொல்லிவிட இயலாது. சிலப்பதிகாரக் கதைக்கு அடிப்படையான சில நிகழ்வுகள் உண்மையில் நிகழ்ந்தேறி இருக்கவேண்டும். பூம்புகாரைச் சேர்ந்த கண்ணகி என்ற வணிகர் குலப்பெண் ஒட்டுமொத்தத் தமிழ்ப் பெண் இனத்தின் அடையாளமாக உருவாகி இருக்கிறாள். கற்பின் அடையாளமாகவும், பத்தினித் தன்மையின் அடையாளமாகவும் அவளை முன்னிறுத்துகிற காவியமே சிலப்பதிகாரம் ஆகும்.

திருமெய்யம் கல்வெட்டு: பரிவாதிநி

புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வட்டம் மலையக்கோயில் என்ற ஊரில் உள்ள சிவன் கோயிற்குடைவரையின் கிழக்கு நோக்கிய நுழைவாயிலையொட்டி, தென்புறச் சுவரில் ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. மேலே செவ்வக வடிவில் கட்டம் கட்டி, பல்லவ கிரந்த எழுத்துகளில் “பரிவாதிநிதா” எனப் பெரிய வடிவில் பொறிக்கப்பட்டுள்ளது. கீழே, சிறிய வடிவில் பல்லவ கிரந்தத்திலும், தமிழிலும்

” என்னே ப்ரமாணம்
செய்த வித்யா பரிவாதினி கற் [க] “

என்றும், அதனையடுத்துத் தமிழில் சற்றே பெரிய வடிவில்…

குமரி மாவட்டச் சான்றோர் சமூக வரலாற்றில் ஆராயப்பட வேண்டியவை

கி.பி. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மார்த்தாண்ட வர்மன் வேணாட்டு (திருவிதாங்கோடு) அரசாட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்பு நிகழ்ந்த பூசல்களை விவரிக்கின்ற ஒட்டக்காரன் கதையில் மாறச்சன், அனந்த பத்மநாபன் என்ற சான்றோர் குல வீரர்கள் முதன்மையான இடம்பெறுகின்றனர். அதேபோன்று மார்த்தாண்ட வர்மனுக்கு எதிரிகளான பப்புத் தம்பி, ராமன் தம்பி ஆகியோருக்குப் படைத்துணை புரிந்தவர்கள் வலங்கைச் சான்றோர் என்று தம்பிமார் கதைப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் வலங்கை உய்யக்கொண்ட ரவிகுல க்ஷத்திரியர்கள் என்று அழைத்துக்கொண்ட சான்றோர் குலப் பிரிவினர் ஆவர்.

காலனி ஆதிக்கமும், கால்டுவெல் திருப்பணியும்

ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் காலனியாதிக்கக் கண்ணோட்டத்திற்கு எல்லிஸின் நிர்வாக நடவடிக்கைகள் உகந்தவையாக இல்லை. குறிப்பாக இந்திய நாட்டு மண்ணின் மரபுகள் மீது மக்கள் கொண்டுள்ள மரியாதையை நீடிக்கச் செய்கின்ற வகையிலான நடவடிக்கைகளும் கல்விக் கொள்கைகளும் கிழக்கிந்தியக் கும்பினி நிர்வாகத்தின் தலைமை இடமாகிய கல்கத்தாவில் இருந்த இயக்குநர் குழுவுக்கும் எல்லிஸுக்கும் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தின.

காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி

பேரரசர் இராஜராஜ சோழன் தஞ்சையில் தமது பெயரால் ஸ்ரீராஜராஜீஸ்வரம் என்ற சிவன் கோயில் எடுப்பித்து 1,000 ஆண்டுகள் நிறைவுறுகின்றன. இதனையொட்டித் தமிழக அரசின் முன்முயற்சியால் மிகப்பெரும் கேளிக்கைகள், இராஜராஜனோடு தம்மை ஒப்பிட்டுக்கொள்ளும் ஆட்சியாளர்களின் அகம்பாவத்தைத் திருப்தி செய்யும் கூத்து அரங்கேற்றங்கள் எல்லாம் நிகழ்ந்து முடிந்துள்ளன. இந்நிலையில் தமிழக வரலாற்றில் இராஜராஜ சோழன் தொடக்கிவைத்த சில போக்குகள், அவை சுட்டிக்காட்டும் நுண்ணரசியல் ஆகியவை பற்றி விவாதிக்கும் ஆய்வே இக்கட்டுரை.

தொல்காப்பியத்தில் இடைச்செருகல்களா?

தொல்காப்பிய உரையாசிரியர்கள், தங்களின் உரைகளில் வர்ணாஸ்ரமக் கோட்பாட்டைப் புகுத்திவிட்டார்கள் என்றால் தொல்காப்பியத்தில் அக்கருத்துகள் இல்லை என்று பொருள். ஆனால், தொல்காப்பியப் பதிப்புகள் அனைத்திலுமே அக்கருத்துகள் காணக் கிடைக்கின்றன.

தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்

ஆய்வாளர்கள் எஸ். இராமச்சந்திரன் மற்றும் அ. கணேசன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள “தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்” என்ற தலைப்பிலான புத்தகம் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனத்தினால் இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டில், தென் தமிழகத்தில் நடந்த குறிப்பிடத்தக்க சமூக வரலாற்று நிகழ்வான தோள் சீலைக் கலகம் பற்றிய பல அரிய உண்மைகளை வெளிக்கொணரும் இப்புத்தகத்தின் அறிமுக அத்தியாயத்தை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது. “தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்” என்ற இந்த ஆய்வு நூல் கி.பி. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இடைப்பகுதி வரை திருவிதாங்கோடு சமஸ்தானத்தில் நாயர் சமூகத்தவருக்கும் நாடார் சமூகத்தவருக்கும் இடையில் நிகழ்ந்த கலவரம் தொடர்பானதாகும்.