சொல் மறைப்பதென்ன

உதாரணத்திற்கு கேரட். அதைப் பார்த்தவுடன் நம்மில் பலரைப் போல் அனிச்சையாக, அவரால் கேரட் என அடையாளம் கண்டு சொல்ல இயலவில்லை. மாறாக அதை ஒரு புதிய பொருளாக பார்க்கிறார். நீளமான, சற்று ஒல்லியான ஒரு பொருள், அதன் ஒரு முனையில் இழைக்கொத்து. என்னவாக இருக்க முடியும்? பெயிண்ட் பிரஷ் என தவறாக ஊகிக்கிறார்.

தேடல்

கணிணிகள் பொய் சொல்வது இல்லை. மறைமுகமாகப் பேசுவது இல்லை. அதனால் அவைகளுடன் தர்க்கம் செய்வது சுலபம். அதே நேரம் அவைகளுக்கு மனிதரின் எந்த உணர்ச்சியும் இல்லை. வஞ்சகமும் இல்லை. நேர்மையும் இல்லை. கருணையும் இல்லை, முதுகில் குத்துவதும் இல்லை. நீங்கள் மனிதர்களையும் கணிணியைப் போன்று இருக்க எதிர்பார்த்து விட்டீர்கள். அதுவும் ஒரு பாரபட்சமான கோணத்தில். மனிதன் கருணை காட்டினால் அதை நீங்கள் பெரிதாக எடுத்துகொள்வதில்லை என நினைக்கிறேன். ஆனால், நேர்மை, சரி என்று நீங்கள் நினைப்பவற்றில் இருந்து அவன் இம்மி விலகினாலும் உங்களுக்கு அது உறுத்திக் கொண்டு தெரிகிறது. கோபம் வருகிறது.

தெரியாதது

பிரபஞ்சத்தை அறிய முயற்சி. மண்ணாங்கட்டி. ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்தாலே சரி என்றுதான் தோன்றுகிறது. என்ன வித்தியாசம்? ஒன்றும் இல்லை. நான் SETI ஆய்வுக்கூடத்தில் வேலை பார்க்கிறேன். அந்த ஆய்வுக்கூடத்தில் ஒரு கழிவறை இருக்கிறது. அதை சுத்தம் செய்யும் ரோபோவிற்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? எதற்கு இருக்கிறோம்? இந்த உலகமே ஒரு அபத்தமா? absurd piece of crap? oh God, தலைவலி… I need a painkiller”