சின்ன விஷயங்கள்

குழந்தை முகம் சிவக்க அலறி அழுதது. அவர்களின் சிறிய கைகலப்பில் அடுப்பிற்குப் பின்னால் தொங்கிக் கொண்டிருந்த பூச்சட்டியைக் கீழே தள்ளிவிட்டார்கள். அவன் அவளைச் சுவரோடு சேர்த்து அழுத்தி, அவள் பிடியை விடுவிக்க முயன்றான். குழந்தையை பிடித்துக்கொண்டு அவளை முழுபலத்தோடு தள்ளினான்.

நடனம் ஆடுவீர்களா?

இளைஞனும் பெண்ணும் ஒருவருடன் ஒருவர், ஒரு கரம் கோர்த்து இன்னொரு கரத்தால் அணைத்து உடல்கள் அழுந்தி உரச மெல்ல நடனம் ஆடினார்கள். இணைந்து ஆடியபடியே அந்த முற்றத்தில் இங்கும் அங்கும் நகர்ந்தார்கள். அந்த இசைத்தட்டு ஓடி முடிந்ததும், அதையே மறுபடியும் சுழல விட்டு தொடர்ந்து ஆடினார்கள்.

எங்கிருந்து அழைக்கிறேன் நான்?

கண்ணிமைக்கும் நேரத்தில் ஜேபி அவளை பின்தொடர்ந்து முன்வராந்தாவுக்குச் சென்றான். வராந்தாவின் திரைச் சீலைக் கதவை அவளுக்காக அவன் திறந்துவைத்தான். அவளுடன் படிகளில் இறங்கி அவள் தன்னுடைய டிரக்கை நிறுத்தியிருந்த இடத்துக்குச் சென்றான். அவனுடைய கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றாக இருந்தது அது. உலகத்தில் வேறு எதுவுமே ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. கால்களை நடுநடுங்கச் செய்யும் ஒருத்தியை அவன் சந்தித்திருக்கிறான் என்பதை அவன் அறிந்துகொண்டான். அவளது முத்தம் இன்னும் அவன் உதடுகளில் எரிந்துகொண்டிருப்பதை உணர்ந்தான்.

பேராலயம்

கருவிழிகள் ரெம்ப வெள்ளையா இருக்கும், கட்டுப்படுத்த முடியாததப்போலவும், நிறுத்த முடியாததப்போலவும் தன்னிச்சையா சுத்திகிட்டிருப்பதப் போலிருக்கும். அறுவருப்பா! அவனப் பார்த்துகிட்டேயிருந்தப்ப, அவனுடைய இடது கருவிழி அவன் மூக்க நோக்கி நகர்ந்துச்சு, இன்னொண்ணு அப்படியே நின்ன இடத்திலேயே நிக்க முயற்சி செய்துச்சு, முயற்சி மட்டும்தான், ஏண்ணா அதுவும் தெரியாம, முடியாம அலைஞ்சுகிட்டிருந்துச்சு.

’கதை என் மீது துள்ளியபடி இருக்கும்’

ஆம் என் தலைக்குள் பல எண்ணங்கள் ஓடியபடி இருக்கும். இருந்தும் எந்த புதிய எண்ணங்களும் இல்லாததைப் போல பல தினங்கள் வெறுமே கழியும். ஆனால் எதையாவது எழுத துவங்கிவிட்டால் பித்து பிடித்ததைப் போல் ஒரு வாரத்தின் ஏழு நாட்களிலும், ஒரு நாளைக்கு பத்து அல்லது பதினைந்து மணிநேரங்கள் உழைப்பேன். இப்படி நடக்கும் நிகழ்வுகளே என் கதைகளை தீர்மானிக்கும்.