அவர் என்னிடமிருந்து இம்மாதிரியான வார்த்தைத் தாக்குதலை எதிர்பார்த்திருக்க மாட்டார் போலும். சற்று கலங்கித்தான் போனார். நானோ மனதிலிருந்த மலையை இறக்கி வைத்தாற்போன்ற ஆசுவாசமும் ஆவேசமுமான கலவை உணர்வின் உச்சாணியில் இருந்தேன். வீட்டில் இவர் பல்வலி என்றால் வெளியில் குமரேசன் நீர்க்கடுப்பு. இரு கிழவர்களும் பந்தடித்து விளையாட என் வாழ்க்கையா கிடைத்தது.
Category: இதழ்-329
காலம் எரித்ததும், கணினி மீட்டதும்
அரசியலுக்கு வருவதற்கு முன்னால் ஹிட்லரின் முதல் ஆர்வம் ஓவியம்தான். இரண்டு முறை முயன்றும் அவருக்கு வியென்னா ஓவியப் பள்ளியில் இடம் கிடைக்கவில்லை. பிறகு அவர் ஜெர்மனியின் வேந்தராகி, மில்லியன்களில் யூதர்களையும், இன்னபிற ‘உன்னதமற்ற’ மக்களையும் தீவிரமாக கொன்று குவித்துக் கொண்டிருந்த பொழுதும் இடையிடையே காட்சிகளுக்கு வந்து ஓவியங்களில் திளைப்பதைக் கைவிடவில்லை. அவருடைய ஓவிய ரசனை செவ்வியல் சார்ந்தது
1941-ஆண்டின் குளிர்காலம்
தேர்ந்தெடுப்பின் முதல் கட்டம் ஆங்கிலத்தில் பொது அறிவுப் பரீட்சை. அதற்குத் தயார் செய்யும் வழி அவனுக்குத் தெரியும். மூலைக்கடையில் அவன் வேலை செய்த காலத்தில் பியர்ஸ் சோப் கட்டிகளை அட்டைப்பெட்டியில் இருந்து எடுத்து அடுக்கியபோது அவற்றுடன் வந்த ஒரு வர்ண விளம்பரக் காகிதம். என்சைக்ளோபீடியா பற்றிய விவரங்கள். டிக்ஷனரி தெரியும். அதைப் போன்ற கனமான என்சைக்ளோபீடியா எப்படி இருக்கும்? அதன் உள் அட்டையில் பல நாட்டு கொடிகளின் படங்கள். உள்ளே உலக நாடுகளின் வரை படங்கள்.
நிற(ப்)பிரிகை
வன்முறையும், அழகும் கலந்திருக்கும் இவ்வுலகில் அப்பாவித்தனத்தின் சாத்தியம்/சாத்தியமற்ற தன்மை பற்றிய அவரது புரிதல்களைக் காட்டிய நாவல் என்று 2016ல் மேன்புக்கர் பரிசு பெற்ற அவரது ‘வெஜிடேரியனைச்’ சொல்லலாம். முப்பாகமாக வெளியான இதில், குடும்ப நெறிமுறைகள், பெண் உடல் மீது கட்டவிழ்க்கப்படும் வன்முறைகள், அவளைப் புரிந்து கொள்ளாமல் அவள் மனசிதைவிற்கு ஆளானவள் என்று சிகிச்சை செய்வது போன்றவை காட்சிப்படுத்தப்படுகின்றன
விதைகளின் பயணம்
ஒரு முறை அவளின் தந்தை கூறிய விதைகளின் பயணம் நினைவில் வந்தது. வரண்ட பாலைவனங்கள் மற்றும் வளமான மண், வனப்பகுதிகள் வழியாக, பெருங்கடல்கள் மற்றும் ஆறுகள் வழியாக சென்டிமீட்டர்கள் அல்லது கிலோமீட்டர்கள் கணக்காக அவைகள் பயணிக்கின்றன. ஆனால், எல்லாமும் பிழைப்பதில்லை.
மழைக்காலம்
நெடுஞ்சாலை வாகனங்கள் மோதி
உயிர் விடும்
வழிதவறிய
பட்டாம்பூச்சிகளின்
மரணங்களில்
ஒரு மிடறு அருந்தி
உயிர்க்கிறது
நெருப்பு சிகரெட்டின்
நுனியை தொடும் கணம் போல
யாரும் பறிக்காத
அரளிச்செடியின் வேர்கள்
“அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 1
மூலம் : மார்கெரித் யூர்செனார் தமிழாக்கம் : நா.கிருஷ்ணா குறிப்பு வணக்கத்திற்குரிய நண்பர்களுக்கு, கிரேக்க வரலாற்றின் அடிப்படையில் அதிரியின் நினைவுகள் என்கிற இப்புதினத்தைப் படைத்த மார்கெரித் யூர்செனார் இந்நாவல் உருவாக்கத்திற்கான கூறுகளை ஒன்றிணைக்க எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் பிறவற்ரையும் தமது வாசகர்களுடன் பகிர்ந்துகொணடுள்ளார். தமிழ்வாசகர்களுக்கு பயனளிக்கக் கூடுமென்கிற நம்பிக்கையில், நாவலின் ““அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 1″
நேர்கோணல் – மர்ஸல்துஷா (Marcel Duchamp)
உண்மையான கலைப் படைப்புகள் நேரடியாக சிந்தைக்கே பேசக்கூடியவை என்பதால் அக்கால ஓவியப் படைப்புக்களை “ரெட்டினல் ” (“Retinal “, கண் சார்ந்த) என நிராகரித்தார். ஒரு கலைப் படைப்பின் மகத்துவம் அது நேயர்களிடம் எற்படுத்தும் கேள்விகளிலும், சர்ச்சையிலும் உள்ளது. கேள்விகளே எழுப்பாத ஓவியங்கள் தொங்கும் சுவருடன் சுவராகி மறைந்து போகிறது.
வாழ்க தலைவரே!
செவ்விந்தியர்களின் கசீனோவா? வடக்கு டகோடாவிலா? சரி. எத்தனை செனட்டர்கள்? பதிமூன்று? அவர்கள் நேற்றிரவு அங்கிருந்தார்களா? நீங்கள் சொல்வது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்தானா? அவர் குடித்திருக்கவில்லைதானே? அப்படியா, குடித்திருந்தாரா? சரி, இப்போது தாமதமாகி விட்டது. நான் அதிபரை அழைத்துத் தெரிவிக்கிறேன்.”
ஆக்கன் ஊற்றுப்பட்டை
AlphaGo, நரம்பியல் நெட்வொர்க்குகள் மூலம், ஒரு வீரர் செய்யக்கூடிய அடுத்த நகர்வுகளை முன்னறிவிக்கிறது. இதற்காக, இது ஒவ்வொரு விருப்பத்தையும் ஆராய்வதற்குப் பதிலாக, கொள்கை நெட்வொர்க் மூலம் மிகவும் நம்பிக்கைக்குரிய நகர்வுகளைத் தேர்ந்தெடுக்கும். மேலும், மதிப்பு நெட்வொர்க் மூலம், தற்போதைய போர்டு நிலையை மதிப்பீடு செய்து, AlphaGo க்கு எவ்வளவு சாதகமாக இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்கிறது. AlphaGo, தனது முந்தைய பதிப்புகளுக்கு எதிராக மில்லியன் கணக்கான கேம்களை விளையாடி, கற்றுக் கொண்டு, வலுவூட்டல் கற்றல் என்ற முறையில், அதன் அளவுருக்களை சரிசெய்கிறது
மிளகு அத்தியாயம் எண்பத்தொன்று
சொல்லிக்கொண்டிருக்கும்போதே பஸதி வாசலில் அப்பா அப்பா என்று குழந்தை மஞ்சுநாத் அழைக்கும் ஒலி. மஞ்சு என் குழந்தே வந்துட்டேண்டா என்றபடி இந்த பரமன் வாசலுக்குப் போக அடியெடுத்து வைக்கும்போது காட்சி மறுபடியும் குழம்பி தாதர் ரயில் நிலையத்தில் கூட்டம் குறைந்த ஒரு மழைநாள் காலை. கல்யாண் டோம்பிவிலி லோக்கல் கூட்டமே இல்லாமல் வந்து நிற்கிறது.
ரவி அல்லது கவிதைகள்
தேங்கியவைகளுக்கு
எப்பெயராவது
இருந்துவிட்டுப்
போகட்டும்
கடலாகும்
பயணத்தில்
ஆரன்யக் நாவலை நாம் 21ம் நூற்றாண்டில் ஏன் வாசிக்க வேண்டும்?
சத்யசரண் தான் இருக்கும் காலத்தில் வனத்தின் மீது மையல் கொள்கின்றான். அது தீராக்காதல் இல்லை. வேலை முடிந்து திரும்புகையில் தீரும் காதல்.அதற்குப் பிறகு அசைப்போடும் நினைவாக வாழ்வெங்கும் தங்கும் இடத்தில் அதனை வைத்துக் கொள்கின்றான். மையல் கொண்ட பெண்ணை வர்ணிக்கும் காதலன் போலக் காட்டினை வர்ணிக்கின்றான். அங்குலம் அங்குலமாக ரசிக்கின்றான். அதில் முழுக் கவனம் வைக்கின்றான்.
டால்ஸ்டாய் புக் ஷாப்
அவளை பார்த்த அதிர்ச்சியில் இதயத்தின் துடிப்பு இவனுக்கு அதிகரித்தது. அவளின் அருகில் சென்று சமாதானப்படுத்த முயற்சித்தான்.இரவு பணிகள் முடிந்து பணியாளர்கள் வெளியே வருவதும் பணியாளர்கள் உள்ளே சொல்லுவதுமாக பார்த்தும் பார்க்காதவாறு சென்றுக் கொண்டிருந்தனர். வார்த்தைகள் எதும் பேசாமல் பெரிய துளிகளாய் அவள் கண்ணீரை வடித்தாள்.
சகுனங்களும் சம்பவங்களும்-4
இருவரும் கமிலா கபெலோ என்பவரின் ‘கிரவுன்’ (முடி மகுடம் – Camilla Cabello’s song ‘Crown’ ft. Grey from Bright: The Album – நகாரி இசைத் தயாரிப்பில், கொன்னக்கோல் ரகுநந்தன் இசையைத் தேர்ந்தெடுத்து சட்டென்று ஆடுகிறார்கள். ஒரே பாடல். ஒரே கலாச்சாரம். பரதத்திலும் கதக்கிலும் எவ்வாறு சிறு மாறுபாடுகளும் ஒற்றுமைகளும் இருக்கின்றன என்பதை காட்சி ரூபமாக கதகளியாடுகிறார்கள். இளையராஜா சிம்பனி; ரஹ்மான் நாட்டுப் பாடல்; கதரி கோபால்நாத் ஜாஸ் கேட்பது இன்பம். அது போல் இது ஆட்டத்தில் இன்பம்:
ராகவேனியம் 2024
“இருங்க! கொஞ்சம் விபரமாச் சொல்றேன்” என்று அந்து இளைஞன் ஆரம்பித்தான். “அது டைம் மெஷின் பந்து. மேலே நம்பர்லாம் வெச்சிருக்கும். டாக்டர் கண்டுபிடிச்சது. டெஸ்ட் பண்ணலாம் என்று 2024 தட்டி இங்கே வந்துட்டோம். ராகவேனியம் 277 என்கிற எலிமெண்ட் போல் இதுவும் கணக்குல தப்பியிருக்கும்னு நான் அசால்ட்டா இருந்துட்டேன். ஆனா இது வேலை செஞ்சுடுச்சு.”
தாமஸ் செக்கின் ‘தி கேடலிஸ்ட்’: ஆர்என்ஏ-வும் அதன் அதிதிறன்களும்
The catalyst – RNA and the Quest to Unlock Life’s Deepest Secrets – ஓரு பார்வை DNA என்பது மரபியல் தகவல்களின் களஞ்சியம் மேலும், இது ஒரு உயிரினத்திற்குத் தேவையான அனைத்து புரதங்களையும் குறியாக்கம் செய்யும் மரபணுக்களைக் கொண்டுள்ளது – நமது தசைகள் நகர்வதை “தாமஸ் செக்கின் ‘தி கேடலிஸ்ட்’: ஆர்என்ஏ-வும் அதன் அதிதிறன்களும்”
பட்டியலில் 12வது நபர்
வெள்ளை நிறத்தில் வர்ண பூக்கள் இறைந்து கிடக்கும் காட்டன் சுரிதாரில் ஒரு சுடரென ஒளிர்ந்தாள். அவள் கன்னம் தடவி அம்மா முத்தமிட்டாள். அக்கா இவளை தன்னுடலுடன் அணைத்துக் கொண்டாள். அக்காவின் உடம்பிலிருந்து மிக லேசான செம்பருத்தி வாசம் வீசியது. அக்கா எப்போதும் செம்பருத்தி இதழ்கள் போட்டு காய்ச்சிய தைலத்தைத்தான் பூசுவாள். அதன் நறுமணம் அவள் உடலெங்கும் தங்கியிருக்கும்.
துன்பம் போக்குவதே தூயப்பணி
பனி பொழிந்தால் மீண்டும் அடுத்த சுழற்சியில் புதிய பனி உருவாகும். சக்குரா உதிர்ந்தால் மீண்டும் அடுத்த பருவத்தில் புதிய மொட்டு உருவாகும். ஆனால் முதுமை என்பது தொடர்ச்சியாக நிகழ்வது. எனவே, உண்மையில் உதிர்ந்து கொண்டிருப்பது நாம்தான் என்கிறார் புலவர்.
கருப்பு எஜமானி
இலக்கின்றி நடந்தாள்; தாழ்வாரம், அறைகள், சமையலறை என்று
எங்கும். ..கண்கள் பொறுமையின்றி கேட்டையே பார்த்துக் கொண்டிருந்தன,
அதற்கு அப்பாலும். சூரிய கதிர்கள் நடனமாடுகிற வயல் வெளியிலும்,
அதற்கு அப்பாலும், அவள் மனம் மட்டுமே போகிற இடமாய் ;
சிறுமியின் பாதங்கள் சிறு அடி எடுத்து வைக்கும் நடைபாதைக்கு
அப்பால், வேலிக்கு அப்பால் பரந்திருக்கும் வயல் வெளியில், தொலை
தூரத்தில் தன் மகள் நடந்து வருவதை பார்க்க முடிந்தால் எவ்வளவு
நன்றாக இருக்கும்.
அரா கவிதைகள்
கல்குவாரி சண்டையாடும் இரண்டு மீன்கள்
நிறமிகளைத் தூக்கி எறிய
அதனைப் பிடித்து தொண்டையில் தடவி
வண்ணமயமான மிடற்றொன்றை நீலமும் ஒரு நிறம்
நிறம் பூத்த கழுத்தைக் கொத்தித் தேனெடுக்க வந்த பாம்பை
நாயொன்று துரத்துகிறது
குமார சம்பவம் மஹா காவ்யம்- 13
தாயாரையும் அவள் பாதங்களைத் தொட்டு குமாரன் வணங்கினான். அவளும் மகனை அணைத்து தன் ஆனந்த கண்ணீரால் முழுக்காட்டியவளாக மகிழ்ச்சியுடன் விடை கொடுத்தாள். வீரனை பெற்றவள் மகிழ்வது இயல்பே. மடியில் இருத்திக் கொண்டு, உச்சி முகர்ந்து, ‘சத்ருக்களை வெற்றி கொண்டு, செயல் வீரனாக திரும்பி வா மகனே, என்னை உலகில் மா வீரனைப் பெற்றவள் என்று புகழும்படி செய்’ என்றாள்.
சகுனியாட்டம்
பொருட்டாக
நினைக்காத
முட்டாள் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு
சொன்ன ஒரு சொல்லை எண்ணி மருகுதல்
யாதேவி
ப்ரக்ஞை என்பதில் உணர்ச்சிகள், எண்ணங்கள் அனைத்தும் அடங்கும். ஆனால், அது, அவையல்ல. ப்ரக்ஞையின் உள்ளடக்கங்களாக அவை இருக்கின்றன. இந்த இருமை இருப்பது தான் மாயை என்று இந்தியர்கள் சொல்கிறார்கள்.
வாசகர் கடிதங்கள்
வாசகருக்குப் பஞ்சு மிட்டாயையும் கொடுக்கக் கூடாது, பொருள்விளங்கா உருண்டையையும் கொடுக்கக் கூடாது. எளிதான வாசிப்புள்ளதில் புரதச் சத்து இருந்தால் நல்லது- கேப்பைக் களி, கம்பு அடை போல. கடினமானதில் சுவை அசாதாரணமாக இருக்க வேண்டும். தேங்காய்- இளநீர் போல முயற்சிக்குத் தக்க பலன் வேண்டும்.
ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை
அறிவியல் என்பது புதுமைகளின் களஞ்சியம். உலகம் முழுவதும் நிகழும் அறிவியல் கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை எளிய நடையில் இந்த நெடுவரிசை மூலம் உங்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான ஒரு கன்னி முயற்சி. ஒவ்வொரு செய்தியும் அறிவியல் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில், சுவாரஸ்யமான மற்றும் புரிதலுக்குரிய முறையில் வழங்கப்படும்.
