நேர்கோணல் – மர்ஸல்துஷா (Marcel Duchamp)

உண்மையான கலைப் படைப்புகள் நேரடியாக சிந்தைக்கே பேசக்கூடியவை என்பதால் அக்கால ஓவியப் படைப்புக்களை “ரெட்டினல் ” (“Retinal “, கண் சார்ந்த)  என நிராகரித்தார். ஒரு கலைப் படைப்பின் மகத்துவம் அது நேயர்களிடம்  எற்படுத்தும் கேள்விகளிலும், சர்ச்சையிலும் உள்ளது. கேள்விகளே  எழுப்பாத ஓவியங்கள் தொங்கும் சுவருடன் சுவராகி மறைந்து போகிறது.