அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 1

This entry is part 1 of 10 in the series கணினி நிலாக்காலம்

இன்று, பள்ளி செல்லும் மாணவர்கள் கணினியுடன் விளையாடுகிறார்கள். ஆனால், 1980/90 -களில்,  இதற்கு ஏராளமான கல்வி தேவைப்பட்டதாக எண்ணப்பட்டது. என் பார்வையில், இது ஒரு மிகப் பெரிய அபத்தம். அந்நாளைய கணினி ராஜாவாகிய ஐ.பி.எம். (IBM) இந்த பிம்பத்தை வெற்றிகரமாக அரங்கேற்றி வெற்றி பெற்றது. பெரும்பாலான ஐ.பி.எம். ஆசாமிகள், ஐ.ஐ.டி. -யில் படித்து விட்டு சம்பளப் பட்டுவாடா மற்றும் கணக்குகள் பார்க்கும், உப்பு சப்பில்லாத நிரல்களை எழுதி தேவதூதர்கள் போல உலா வந்தார்கள்.

அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 2

This entry is part 2 of 10 in the series கணினி நிலாக்காலம்

இப்படி உள்ளேற்றப்படும் தரவுகள் ஒரு ஃப்ளாப்பி டிஸ்க் -கில் (floppy disk) பதிவு செய்யப்படும். டிஸ்க் என்றவுடன் ஏராளமான தேக்கம் (storage) இருப்பதாக நினக்காதீர்கள். ஒரு ஃப்ளாப்பி டிஸ்கில் 80 -களின் ஆரம்ப கட்டத்தில் வெறும் 256 KB மட்டுமே சாத்தியம். இந்தத் தரவு உள்வாங்கும் எந்திரங்கள், அவை முற்றிலும் நிரம்பிவிடாமல் பார்த்துக் கொண்டு, வித்தியாசமான ஒலிகள் மூலம் இயக்கியிடம் தொடர்பு வைத்துக் கொள்ளும்.

அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 3

This entry is part 3 of 10 in the series கணினி நிலாக்காலம்

அச்சடிக்கும் எந்திரம், திடீரென்று, பாதியில் நின்றுவிடும். உதாரணத்திற்கு, ஒரு 1,300 பக்கப் பட்டியலில் 780 பக்கம் வரை அச்சடித்து விட்டு நின்று விடும். பல வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நேரத்தில், இவ்வாறு நிகழ்வது கணினி மையத்திற்கு ஒரு மிகப் பெரிய தர்ம சங்கடம் மற்றும் இழப்பு. அந்த நாட்களில், 781 ஆம் பக்கத்திலிருந்து மீண்டும் அச்சடிக்க வசதி இல்லை. ஆரம்பத்திலிருந்து அச்சடித்தால், முழு 1,300 பக்கங்களும் அச்சடித்தது எந்திரம்! காகித மற்றும் நேர விரயம் என்பது கணினி மையத்திற்கு பிடிக்காத விஷயம்

அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 4

This entry is part 4 of 10 in the series கணினி நிலாக்காலம்

நானே பார்க்காத ஒரு கணினியில், இந்த வங்கியின் ஒரு கிளைக்கு வேண்டிய நிரல்களை நான் எழுத வேண்டும். இத்தனைக்கும், அதற்கு முன், அப்படி ஒரு வங்கிக்காக எந்த நிரலையும் நான் எழுதியதில்லை! என் கவனம் எல்லாம், எப்படி இந்த ப்ராஜக்டில் மீண்டு வரப் போகிறோம் என்பது மட்டுமே. ஆனால், மற்றவர்களின் பார்வை வேறு விதமாக இருந்தது.

அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 5

This entry is part 5 of 10 in the series கணினி நிலாக்காலம்

அன்றைய நாளின் கடைசி டென்ஷன் ப்ராஞ்ச் முடிந்த பின் காத்திருந்தது. ஒவ்வொரு நாளும், எல்லா பரிவர்த்தனைகளும் முடிந்த பின், வங்கிக் கணக்குகள் ப்ராஸஸ் செய்து அடுத்த நாளை புதிதாக ஆரம்பிக்க வேண்டும். இந்த நிரலில் ஏதோ கோளாரு இருந்ததால், நாட் கடைசி கணக்குகள் இடித்தன. இதை எப்படியோ சோதனை செய்ய நேரமில்லை. ப்ராஞ்சில், அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டார்கள்.

அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 6

This entry is part 6 of 10 in the series கணினி நிலாக்காலம்

உங்களது உண்மையான நோக்கம். எதற்காக இந்த மென்பொருள் அமைப்பை உருவாக்குகிறீர்கள்? எதற்காக, இத்தனை செலவழிக்கிறிர்கள்? ஒரு டாக்டரிடம் உடல்நிலையைப் பற்றி சொல்வதைப் போல என்னிடம் உங்களது உள்நோக்கத்தைச் சொன்னால், என்னால், உங்களுக்குப் பயன்படும் ஒரு ஸிஸ்டத்தை உருவாக்க முடியும்.

அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 7

This entry is part 7 of 10 in the series கணினி நிலாக்காலம்

மேலே சொன்ன விவரத்தை, வழக்கு தமிழில் நாம் எப்படிச் சொல்கிறோம்? “20,000 வரை தள்ளுபடி இல்லை, 60,000 வரை 2%, 100,000 வரை 5%, அதுக்கு மேல 8%”. இந்த விஷயம் ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் சொன்னால் புரியும், ஆனால், கணினிக்கு, மிகவும் துல்லியமற்ற ஒரு கட்டளை. ஆனால், ஒரு அனலிஸ்ட் கேட்டால், பயனாளர், இவ்வாறுதான் சொல்லுவார். அதை ஒரு பயனுள்ள சட்டமாக கணினி மென்பொருளுக்கு மாற்றுவது ஒரு அனலிஸ்டின் கடமை. 

அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 8

This entry is part 8 of 10 in the series கணினி நிலாக்காலம்

90 -களில், லோடஸ் என்ற நிறுவனம் நோட்ஸ் (Lotus Notes) என்ற மென்பொருளை அறிமுகப் படுத்தியது. இந்த மென்பொருளை நிறுவி நான் வேலை செய்த நிறுவனத்தில் பயனர்களிடம் போராடிய தருணங்கள் இன்று வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அந்த காலத்தில், மிகவும் நொந்து போகும் ஒரு விஷயமாக இருந்தது. இந்த நோட்ஸ் மென்பொருளில், ஒத்துழைப்பு மற்றும் மின்னஞ்சல் போன்ற விஷயங்கள் அடக்கம்.

அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 9

This entry is part 9 of 10 in the series கணினி நிலாக்காலம்

90 -களில் வந்த முக்கிய வியாபாரப் பயன், சின்ன நிறுவனங்கள் தங்களது கணக்கு சார்ந்த தேவைகளை ஒருங்கிணைக்க முடிந்தது. ஒரு பெரிய சர்வர் என்னும் சக்தி வாய்ந்த கணினியுடன், பல்வேறு துறைகளின் பயனாளர்கள் தங்களுடைய மேஜைக் கணினியிலிருந்து தொடர்பு வைத்துக் கொண்டு, சர்வரில் இயங்கும் ஒரு மென்பொருள் பல பயனாளர்களின் தேவைகளையும் நிறைவு செய்யும். இன்று இது மிகச் சர்வ சாதாரணமாக எல்லா நிறுவனங்களில் இயங்கினாலும், ஆரம்ப நாட்களில் நடந்த மனித கூத்துக்கள் மிகவும் சுவாரசியமானவை.

”பலகை, டிவி எல்லாம் வருதுன்னு கேள்விப்பட்டேன்”

This entry is part 10 of 10 in the series கணினி நிலாக்காலம்

கம்ப்யூட்டர் ஒரு மெஷின். அதை சரிவர பயன்படுத்துவது நம் கையில் உள்ளது. அதன் திறனையும், தேவையையும் புரிந்து கொள்வதும் நம் வேலை. உதாரணத்திற்கு, உங்க சர்வீஸ் ஸ்டேஷன்ல, கார்களின் சக்கரங்களை அலைன் செய்வதற்கு இரண்டு மெஷின்கள் உள்ளது. ஒரு ஷிஃப்டில், 10 கார்களை அலைன் செய்ய முடியும் என்று வைத்துக் கொண்டால், இருபது வண்டிகளை மட்டுமே ஒரு நாளில் அலைன் செய்ய முடியும்.