ஈரானிய புராண மரபுப்படி மித்ரா ஒரு அவதாரம். மீண்டும் உலகைப் புத்துயிர் பெறச் செய்யவே கடவுளுக்குக் காவலனாயிருந்த காளையை கடவுள் விருப்பப்படி கொன்றதாக மரபு. சிரோஷீடனும், இறப்பின் தெய்வமான ரஷ்ணுவுடனும் கூட்டாட்சி செய்த மித்ரா, அங்கும் ஒளியின் கடவுள். பகல் தெய்வம். இந்திய சூரியனைப்போல் வெள்ளைக் குதிரை ரதத்தில் பவனி வருபவர். போர் தெய்வமும் மித்ரனே. அகுராவுடன் சேர்த்து உயர்நிலையில் பூஜிக்கப்பட்ட மித்ரா சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவன். பொய்மையை எதிர்த்துப் போராடுபவன்.
Category: இதழ்
பாலழித்தல்
அறுவை நிறைவேற்றப் படும் விதத்தில் வேறுபாடுகள் நிலவியிருக்கின்றன. ஆணுறுப்பையே முழுக்க அறுத்தெறியப் படுவது ஒருவகை என்றால் பீஜக்கொட்டை மட்டும் அகற்றப் படுவதுமுண்டு. தலைநகரில் இருக்கும் மிக பிரமாண்ட அரண்மனை வளாகத்தில் அரசாங்கம் அங்கீகரித்த அறுவை நிபுணர்கள் இருந்தார்கள். அரசாங்க ஊதியம் என்று ஒன்றும் இவர்களுக்குக் கிடையாது. இருப்பினும், இத்தொழிலில் ஈடுபட்டிருந்தோர் அக்காலந்தொட்டே தலைமுறை தலைமுறையாக குடும்பத்தொழிலாகவே செய்தனர். ஒவ்வொரு அறுவைக்கும் அதன் பிறகான சிகிச்சைக்கும் ஆறு பணம் வாங்கினர்.
அண்ணன்களின் பாடகன்
வாசுதேவனின் பாடல்களை எனக்கு நிறைய அறிமுகப்படுத்தியவன் யாரென்று யோசித்துப் பார்த்தால் கணேசண்ணன்தான் நினைவுக்கு வருகிறான். கணேசண்ணன் அப்போது ஐ.டி படித்து முடித்துவிட்டு கண்ணில் படுகிற பெண்களையெல்லாம் காதலித்துக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் எந்த ஒரு புதிய பாடலையும் கணேசண்ணன் குரலில்தான் நாங்கள் முதலில் கேட்போம். ‘முடிவல்ல ஆரம்பம்’ திரைப்படப்பாடலான ‘தென்னங்கீற்றும் தென்றல்காற்றும்’ பாடலில் ‘வண்ணாத்திப் பாறைக்கு வரவேணும் நாளைக்கு’ என்னும் வரியை கணேசண்ணன் யாரையோ நினைத்தபடி ரசித்துப் பாடுவான். ‘கோழி கூவுது’ படத்தின் ‘பூவே இளைய பூவே’ பாடலின் ’காமாட்சி’ என்று துவங்கும் வசனத்திலிருந்தே ஆரம்பித்து விடுவான். அதுவும் ‘தம்பி ராமகிருஷ்ணா, கூச்சப்படாமல் மற்றவைகளையும் படித்துக் காட்டவும்’ என்று சுற்றி அமர்ந்திருக்கும் எங்களில் யாரையாவது பார்த்துச் சொல்லுவான்.
எஸ்.வி.ராமகிருஷ்ணன்
இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு, என் கைபேசியில் இருக்கும் எண்களைச் சரிபார்க்கும் போது எஸ்.வி.ராமகிருஷ்ணன் என்ற பெயர் பார்த்து, “அட இவரிடம் பேசி ரொம்ப நாள் ஆச்சே. பேச வேண்டும்” என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் பேசவில்லை. “பேசியிருக்கலாமே” என்று இனி ஆயுளுக்கும் வருத்தப்படப்போகிறேன். இலக்கியச் சர்ச்சை, மற்ற எழுத்தாளர்களைப் பற்றி தேவையில்லாத விமர்சனம் போன்றவை அவரிடம் கிடையாது. அவருடன் பேசிய சமயங்களில் இதை நான் உணர்ந்திருக்கிறேன். அவருடையவை, தொப்புள் சமாசாரம் இல்லாத இதழ்களில் பெரும்பாலும் கடந்தகால இந்தியாவைச் சித்தரிக்கும் வகைக் கட்டுரைகளும், nostalgia-வையும் சார்ந்தவை.
பழநி முத்தையா பிள்ளை
மான்பூண்டியா பிள்ளையின் சிஷ்யர்களுள், கச்சேரி வித்வானாக தட்சிணாமூர்த்தி பிள்ளைக்குப் பெரும் பெயர் இருந்த போதிலும், லய விவகாரங்களில் தேர்ச்சியைப் பொறுத்த மட்டில் முத்தையா பிள்ளையின் பெயர் சிறந்து விளங்கியது. “எந்த வித்வான் தலையால் போட்ட லய முடிச்சையும் முத்தையா பிள்ளை காலால் அவிழ்த்துவிடுவார். ஆனால் முத்தையா பிள்ளை காலால் போட்ட முடிச்சை தலையால் அவிழ்ப்பதே முடியாத காரியம்”, என்றொரு சொலவடை லய உலகில் இருந்து வந்ததாக எம்.என்.கந்தசாமி பிள்ளை கூறியுள்ளார்.
ஆயிரம் தெய்வங்கள் – 6
பாரசீக ஈரானிய தெய்வக்கதைகளை நுணுகி ஆராய்வோமெனில் தமிழ்நாட்டில் எவற்றையெல்லாம், யாரையெல்லாம் ஆரியம் என்றும் ஆரியர் என்றும் அறியப்பட்டுள்ளதோ அவை அனைத்துமே தவறு என்று எண்ணத்தோன்றும். பண்டைய உலக வரலாற்றின்படி ஆரியர்களின் தளமாயிருந்தது பாரசீகம். பாரசீகப் பேரரசர்கள் டரீயஸ், செர்சஸ் காலத்தில் இந்தியாவின் வடமேற்குப்பகுதி பாரசீக ஆட்சிக்கு உட்பட்டிருக்கலாம்.
போர் – நினைவுகள், சாட்சியங்கள்
என்னைப் பொருத்தவரை இலக்கியமும் கலையும் இறுதியில் மானுடம் குறித்தவை. ஒரு நாவலை நான் எழுதி முடிக்கையில், அதிலிருந்து எதையாவது நான் கற்றுக் கொண்டிருக்க வேண்டும், அல்லது இந்த உலகில் மனிதராய் வாழ்வதன் அர்த்தத்தைக் குறித்து என் மண்டைக்குள் ஏதாவது குடைந்துகொண்டிருக்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதுதான் அறம் என்றால், ‘ஆம்’ என்பதே என் பதில்.
மாதிரிக்கு ஒரு எளிய காக்கநாடன்
ஊட்டியில் வசிக்கும் மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர் நிர்மால்யா மொழிபெயர்த்த உமர் என்ற நாவல் இந்த வருடத்திய சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்புக்கான விருதைப் பெற்றுள்ளது. நிர்மால்யா அவர்களுக்கும், புத்தகத்தை வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்துக்கும் சொல்வனத்தின் வாழ்த்துகள். இச்சமயத்தில் நிர்மால்யா மொழிபெயர்த்த வேறொரு புத்தகத்தின் விமர்சனத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
திக்பந்தனம்
கருமுலைப்புள்ளியில்
ஒருசொட்டுப்பால் சிதறி
சூன்யகர்ப்பம் சூலுறும் மீண்டுமென்று
வெள்ளையனுரைத்தால் பளிங்குண்மை
கருப்பையன் நானுரைத்தால்
சனாதனப் புனைவுச்சுருள்.
இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 6
எழுபதுகளில் இவ்வகைக் கலைஞர்கள் தங்களை அச்சமின்றி வெளிப் படுத்திக் கொண்டனர். “மகிழ்ச்சியே எல்லாம்” என உரத்துக் கூறிய ஆண் கலைஞர்கள் பெண் கலைஞர்களிடமிருந்து மிகவும் மாறுபட்டிருந்தனர். 1980களின் தொடக்கத்திலிருந்து இவர்களின் படைப்புவெளிப்பாடு அதிகரித்தது. ஆனால், அத்துடனேயே மற்றொன்றும் பரவலாகப் பேசப்பட்டது. அதுதான் AIDS என்னும் ஆட்கொல்லி நோய்.
மகரந்தம்
எத்தனையோ தணிக்கைகளையும் மீறி சர்வதேச ஊடகங்கள் வழியே அங்கொன்றும், இங்கொன்றுமாகக் கசியும் இந்த தண்டனைகளை இத்தனை கொடூரமானவை என்றால், வெளியுலகம் அறியாமல் கிராமப் பஞ்சாயத்துகளால் கொலை செய்யப்பட்ட பெண்கள் எத்தனை, எத்தனை!
மீள்பதிப்பு: தொடர்ந்து சுருங்கும் இந்திய எல்லைகள்
அமரர் எஸ்.வி.ராமகிருஷ்ணன் சொல்வனம் இதழ் 6-இல் எழுதிய இக்கட்டுரையை அவர் நினைவாக மீள்பதிப்பு செய்கிறோம்: நடுநிசியில், 12 மணி அடித்து ஆங்கிலக் காலண்டர் பிரகாரம் 15ம் தேதி தொடங்கியவுடன் பிரிவினைக்கப்புறம் மீதியிருந்த நாடு (முழு இந்தியாவில் ஏறக்குறைய முக்கால் பங்கு) இந்தியன் யூனியன் என்றபெயருடன் இன்னொரு நாடாக உதயமாயிற்று. அதற்கு முன் ஜோதிட ரீதியில் நாள் நன்றாக இல்லையாம். பாகிஸ்தான் பிறந்தவேளை மரண யோகம் என்றும் சொன்னார்கள். அடுத்த அறுபத்தியிரண்டு ஆண்டுகால வரலாற்றைத் இன்று திரும்பிப் பார்த்தால் அது சரியாக இருக்கலாம் என்று தோன்றவும் செய்யலாம்.
வாசகர் மறுமொழி
இசைச்சிறப்பிதழ் என்று சொல்லாமலேயே கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி, அமெரிக்க இசை, திரையிசை எனப் பலவகை இசையைப் பற்றியும் சத்தமில்லாமல் ஒரு சிறப்பிதழாக வெளியிட்ட உங்களுக்கு என் நன்றிகள். கட்டுரைகளை ஏனோ தானோவென்று வெளியிடாமல், தேவையான படங்கள், வீடியோக்கள், ஒலித்துணுக்குகள் தந்து ஒரு புதிய அனுபவத்தையே அள்ளித்தரும் உங்கள் சிரத்தையை எத்தனை பாராட்டினாலும் தகும்.
எறும்புகளின் ஜீனோம், யானை டாக்டர், செயற்கைக்கால் யானை
இங்கே கீழே தரப்பட்டிருக்கும் வீடியோவில் சில சுவாரசியங்கள் இருக்கின்றன. சென்ற வாரத்தில், அதீதமான நோயெதிர்ப்பாற்றல் கொண்டிருக்கும் அர்ஜெண்டீனிய எறும்புகளின் ஜீனோம்கள் படிக்கப்பட்டிருக்கின்றன. இதைக்குறித்து Calacadamey-யைச் சேர்ந்த எறும்பு நிபுணர் Dr.ப்ரையன் ஃபிஷர், இந்த எறும்புகளின் ஜீனோம்களைப் புரிந்துகொள்வதன் மூலம் மனிதர்களும் இந்த எறும்புகளைப் போல, தங்கள் வியாதிகளை எதிர்க்கும் “எறும்புகளின் ஜீனோம், யானை டாக்டர், செயற்கைக்கால் யானை”
உயிரின் கதை – 4
கூட்டிக்கழித்துப் பார்த்தால், இந்திய சிந்தனை மரபில் உள்ள ஏறக்குறைய அதே விஷயங்களைத்தான் பிளாட்டோ, பித்தாக்ரஸ், அரிஸ்டாட்டில், ஹிப்போகிரடெஸ் ஆகியோரும் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. தொல் இந்திய நூல்களின் காலம் இவர்களின் காலத்துக்கும் முந்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அப்படியானால் இச்சிந்தனைகள் இந்தியாவில் தோன்றி பிற்காலத்தில் பரவி கிரேக்கத்திற்குச் சென்றவையா என்ன?
ஆர்தர் ஆஸ்போர்னின் ரமணர்
ஆஸ்போர்னின் இப்புத்தகத்தில் எழுதியுள்ள மொழி மிகப் புதிதாய் இன்றும் இருக்கிறது. ஒரு காலமின்மையை (timelessness) எவரும் உணர முடியும். சுத்தானந்த பாரதியின் மொழி இன்றில்லை. இன்று படிக்கும் ஒரு மனிதருக்குச் சலிப்பு தட்டும் நடை. ஆனால், ஆஸ்போர்னைப் படிக்கும் எவரும் அதன் ”இன்றைய” மொழிநடையினால், மிக எளிதாகப் படித்துச் செல்லமுடியும். அதே போல் வாக்கியங்களின் அமைதியும் அவரின் மொழியாளுமைக்குச் சான்று.
World Press Photo போட்டியில் வென்ற ஒளிப்படங்கள்
உலகெங்கும் நன்றாக அறியப்பட்ட இப்போட்டிக்கு ஒரு லட்சத்து சொச்சம் ஒளிப்படங்கள் அனுப்பட்டிருக்கின்றன. அதிலிருந்து வெற்றிபெற்றிருக்கும் அந்த ஒரு படம்தான் எத்தனை விஷயங்களைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறது! இப்போட்டியில் கல்கத்தா நகர வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு படமும் வெற்றிபெற்றிருக்கிறது. படங்களை இங்கே காணலாம்: http://www.boston.com/bigpicture/2011/02/world_press_photo_winners.html
எஸ்.வி.ராமகிருஷ்ணன்
ஹைதராபாதில் வசித்துவந்த எழுத்தாளர் திரு.எஸ்.வி.ராமகிருஷ்ணன் நேற்று (09-02-2011) காலை காலமானார். சுங்க ஆணையளாராக இந்தியாவின் பல பகுதிகளிலும் வேலை பார்த்து ஓய்வு பெற்ற திரு.எஸ்.வி.ராமகிருஷ்ணன் வரலாற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். இந்தியாவின் வரலாற்றை சுவாரசியமான நடையில் தன்னுடைய செறிவான அனுபவத்தோடு பல கட்டுரைகளில் எழுதியிருக்கிறார். சொல்வனத்தின் வளர்ச்சியிலும், தரத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த எஸ்.வி.ராமகிருஷ்ணன் பல “எஸ்.வி.ராமகிருஷ்ணன்”
பீம்சென் ஜோஷி
எனக்கு நினைவு தெரிய முதன்முதலாய் நான் கேட்ட ‘ஹிந்துஸ்தானி’ குரல் பீம்சென் ஜோஷியுடையதாகத்தான் இருக்கும். ‘மிலே ஸுர் மேரா தும்ஹாரா’ என்ற குரலைக் கேட்கும்போதுதான் ஞாயிறு காலை நிகழ்ச்சிகள் ஆரம்பமானதாக அர்த்தம். பல இந்திய மொழிகளும் ஒலிக்கும் அந்தப்பாடலில் தமிழ்ப்பாடலைக் கேட்கும்போது, சுற்றியிருக்கும் எல்லோரிடமும் ஏதோ தாங்களே பாடுவதுபோல ஒரு “பீம்சென் ஜோஷி”
ஆடுகளத்தில் சிதையும் பண்பாடு
இடைவேளை வரை உற்சாகமாகப் பயணிக்கும் படம் இடைவேளைக்குப்பின் படுத்துவிடுகிறது. இடைவேளைப் பகுதியிலேயே இனி என்ன நடக்கும் என்று யூகிக்க அல்ல நிச்சயமாகவே சொல்லிவிடமுடிகிறது. முழுப்படத்திற்கும் காசு கொடுத்துவிட்ட காரணத்தால் அரைப்படத்தில் எழுந்து போகாமல் இருக்க நேரிடுகிறது.
வரலாற்றின் துணையோடு ஒரு பயணம்
பண்டைய இந்தியாவில் புதியவர்களைச் சந்திக்கும்போது `தாங்கள் எந்த நதியுடன் தொடர்புடையவர்?’ எனக் கேட்கும் வழக்கம் இருந்ததாம். தண்ணீரை வணிகமாக மாற்றியதில் அரசுக்கும், பல நாட்டு தொழிற்சாலைக்கும் இருக்கும் தொடர்பை விளக்குகிறார். பல தகவல்களுக்கு நடுவே தினம் 6,350 லட்ச லிட்டர் கங்கை நீர் தொழிற்சாலைகளுக்கு திருப்பப்படுகிறது எனும் தீற்றல் செய்தி திடுக்கடைய வைக்கிறது.
நான் வளர்கிறேனே மம்மி
உள்ளே போனதும், சட்டையைக் கழற்றி, தன் கையை உயர்த்தி, அக்குளைக் காட்டியது. “முடி முளைச்சிருக்கா?” எனக்குப் புரிந்துவிட்டது. வெளியே வந்து, “இவுங்களுக்கும் growing up classes நடக்க ஆரம்பிச்சிருச்சா?” என்றேன் விஜியிடம். “ஆமா, நாலு நாளா ஒரே இம்சை.”
தெலுங்கு மக்கள் மனதில் கே.வி.மகாதேவன்
தெலுங்குக் கவிஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்கள் சாஹித்யதிற்கு மேலும் மெருகூட்டியது, கே.விஸ்வநாத், பாபு போன்ற சிறந்த இயக்குனர்களின் பார்வையைப் புரிந்து கொண்டு அவர்கள் படங்களை தன் இசையால் சிறப்பித்தது, நாட்டார் இசை, மரபிசை இரண்டிலும் சிறந்த பாடல்களைத் தந்தது போன்ற காரணங்களால் கே.வி.மகாதேவன் தெலுங்கு மண்ணில் பெரிதும் கொண்டாடப்பட்டதொரு இசையமைப்பாளராகத் திகழ்ந்தார்.
ப்ளூகிராஸ் இசை – ஓர் அறிமுகம்
இது வெறும் நடன இசை கிடையாது. குறிப்பாக நடன இசை என்று இப்போதெல்லாம் நம்முன் வைக்கப்படும், நாம் வெறும் பழக்கத்தால் தலையசைக்கும், அழுத்தி வாசிக்கப்பட்ட தாள இசை கிடையாது. இது இசைக்கருவியின் அற்புதமான ஒலியையும், அதை வியக்கத்தக்க வகையில் வெளிப்படுத்தும் மேதைமையையும் கூட தாண்டிய ஒன்று. நாள் முழுக்க கடினமான உடலுழைப்பில் உழன்றுவிட்டு, மாலையில் திறந்தவெளியைத் தேடிப்பிடிக்கும் ஆத்மாவின் அக வெளிப்பாடு இந்த இசை.
மத்தியக்கிழக்கில் வேகமாகப் பரவும் கலகம்
துனிஷியா, லெபனான், எகிப்து என்று தொடர்ந்து மக்கள் கலகம் மத்தியக் கிழக்கு நாடுகளில் பரவி வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பிரச்சனை. சுதந்திரம், பொருளாதாரம், மதம், இன்னும். கீழே இந்த மூன்று நாடுகளிலும் நடைபெற்ற கலகத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
கம்யூனிஸ திரைத்தணிக்கை குறித்து கிரிஸ்தாஃப் கீஸ்லாஸ்கி
போலிஷ் திரைப்பட இயக்குநர் கிரிஸ்தாஃப் கீஸ்லாஸ்கி (Krzysztof Kieślowski) தனது திரைப்படங்கள் மூலமாக உலகத்தை கவர்ந்தவர். இவரது வண்ணங்கள்(Colors) திரைத்-தொடர், வெரோனிகாவின் இரட்டை வாழ்க்கை திரைப்படங்களில் அழகியலையும், வாழ்க்கை குறித்த கண்ணோட்டங்களை ஒரு புதிய தளத்திற்கு கொண்டு சென்றவர். கம்யூனிச போலாந்தில் திரைத்துறையினர் சந்தித்த கட்டுப்பாடுகளை அறிந்து கொள்ளும் “கம்யூனிஸ திரைத்தணிக்கை குறித்து கிரிஸ்தாஃப் கீஸ்லாஸ்கி”
விஞ்ஞானக் கணிணி – இறுதிப் பகுதி
1990 களில் விஞ்ஞானிகள் ஜினோம் வரிசைபடுத்தலில் சரித்திரத்தில் முதன் முறையாக ஈடுபட்டு தீவிரமாக உழைத்து வந்தார்கள். மிக அதிகமான கணினி திறன் இதற்கு தேவைப்பட்டது. 15 வருடங்களுக்கு அரசாங்கமும் தனியார் ஆராய்ச்சியாளர்களும் மரபணு வரிசைபடுத்த முக்கிய காரணம், யாரிடம் புத்திசாலித்தனமான மென்பொருள் வழிமுறைகள் (அல்கரிதம்), விசேஷ கணினிகள் மற்றும் சோதனை வசதிகள் உள்ளது என்பதே.
வாசகர் எதிர்வினை
புத்தகத்தைப் பற்றி பேசும் போது, அதன் வடிவமைப்பையும் பற்றி சிலாகிப்பது அவசியமாகிறது. முன் அட்டை முதல் பின் அட்டை வரை நல்ல வடிவமைப்பு. சிரத்தை கண்கூடாக தெரிகிறது. வண்ணதாசன் சாருடைய அணிந்துரை அம்சமானது. ஏக்நாத்தின் ‘ பூடம் ‘ சிறுகதைத் தொகுப்பிற்கு பிறகு, தன் வளமான மொழியை விடுத்து அச்சு அசல் திருநெவேலி தமிழில் அவர் எழுதி தந்திருக்கிற அணிந்துரை இதுவாக தான் இருக்க வேண்டும்.
திருப்பூர் புத்தகக் கண்காட்சி, சுந்தர ராமசாமி விருது – அறிவிப்புகள்
தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது.
பிஸ்கட்டு, பழம்
சாப்பாட்டுக்கு அலைந்து, பிச்சை எடுத்து, திருடி…, போன புதிதில் சேர்க்கை சரியில்லை. வாழ்க்கையில் சாதிக்காமல் ஒரு கடிதம் எழுதவும் மனம் இல்லை. போலிஸில் மாட்டி அப்புறம், ஓரளவுக்கு பயம் தெளிந்து, டில்லியிலிருந்து மும்பை, அங்கிருந்து பங்களூரு என்று வந்து, கூலி வேலை செய்து இன்றைக்கு ஒரு முதலாளியிடம் ஆட்டோ ஓட்டுகிறேன்.
பிறந்த நாள்
குழந்தையின் தாய்மாமனின் மடியில் வைத்து சரட் சரட்டென்று பிஞ்சுத்தலையை மழிக்கத் துவங்கும்போது குழந்தையுடன் சேர்ந்து அருகில் நின்று கொண்டிருக்கும் அதன் தாயும் கண்ணீர் சிந்துவாள். மற்ற உறவினர்கள் காற்று புக இடமில்லாமல் நெருக்கமாக எட்டிப்பார்த்தபடி சூழ்ந்து நிற்பார்கள். ஒருசிலர் கையில் கிலுகிலுப்பை, பலூன், விசில் போன்றவற்றை வாங்கி வந்து அழுது கொண்டிருக்கும் குழந்தையின் முன்னால் வந்து அதன் தாய்மாமனின் காதில் ஊதுவார்கள்.
உயிரின் கதை – 3
“இப்பிரபஞ்சம் என்பதுதான் என்ன?” -என்ற கேள்விக்கு நாம் வைத்திருக்கும் பதிலை அடிப்படையாகக் கொண்டு நம்மைச் சுற்றியுள்ள எந்த விஷயத்தையும் நாம் இரண்டு விதமாகப் புரிந்து கொள்ள முடியும். வரலாற்றுக் காலந்தொட்டு ஒன்றுக்கொன்று எதிரான முற்றிலும் வேறான இரு பதில்கள் இக்கேள்விக்கு விடையாக வைக்கப் பட்டுள்ளன. நம் புலன்களால் அறிய முடிகிற பொருள்களால் ஆகியது என்பது ஒரு பதில். நம் புலன்களால் அறிய முடியாதவற்றால் ஆகியது என்பது இரண்டாவது பதில்.
தட்சிணாமூர்த்தி பிள்ளை
காரைக்குடி பிரதர்ஸ் கச்சேரியில தட்சிணாமூர்த்தி பிள்ளை மிருதங்கம். வர்ணம் முடிஞ்சு, ரெண்டாவது கிருதி வாசிக்கும் போதே மிருதங்கம் மக்கர் பண்ண ஆரம்பிச்சுடுச்சி. பாட்டு வாசிக்கும் போதே பிள்ளை இன்னொரு மிருதங்கத்தை எடுத்து பக்கத்துல நிமிர்த்தி வெச்சு, தபலா மாதிரி தொப்பிக்கு ஒரு வாத்யம், வலந்தலைக்கு ஒரு வாத்யமா வாசிச்சார். காரைக்குடி பிரதர்ஸுக்கு கேட்கக் கேட்க ஒரே ஆனந்தம். பாட்டு முடிஞ்சதும் தீர்மானம் வெச்சு முடிக்கப் போனவரைத் தடுத்து, “பிள்ளைவாள்! அப்படியே ஒரு தனி வாசிக்கணும்”-ன்னார் காரைக்குடி சுப்பராம ஐயர். கணக்கு வழக்குல எல்லாம் நுழையாம, டேக்காவும், குமுக்கியுமா வாசிக்க வாசிக்க கூட்டம் கூத்தாட ஆரம்பிச்சிடுச்சு. அப்படி ஒரு வாசிப்பை ஜென்மத்தில் கேட்டதில்லை.
மகரந்தம்
பர்மா, இலங்கை போன்ற தேசங்கள் கூட இந்தியாவை துளியும் மதிப்பதில்லை. உறுதியற்ற அரசும், சுயநலவாத தலைவர்களும் ஒரு தேசத்திற்கு பெற்று தரும் ஆகப்பெரும் மரியாதை இது. பிற அரசாங்கங்களை விட்டுத்தள்ளுங்கள். ஒரு ஆஸ்திரேலிய இசைக்குழு தனக்கு ”All India Radio” என்று பெயரில் உலவுகிறது. இந்திய அரசின் முக்கியமான அங்கமான, அதன் ஒலிபரப்புத் துறையின் பெயரை தனக்கு சூட்டிக்கொள்ளும் திமிர்த்தனத்தையும், இந்த பெயரை பதிவு செய்து தனக்கான உரிமையை உறுதி செய்யத் தெரியாத இந்திய அதிகார வர்க்கத்தின் அரியாமையையும் எண்ணி எண்ணி வியக்கத்தான் முடியும்.
கமகம்
அசைவோ, இயக்கமோ இல்லாமல் ஒரு ஸ்வரத்தைத் தனித்துத் தட்டையாக இசைப்பதையே சங்கீத பரிபாஷையில் “மொட்டை ஸ்வரம்” என்கிறார்கள். இந்திய மரபிசையில் ஸ்வரங்கள் தனித்தனியான, தட்டையான, வரையறுக்கப்பட்ட அதிர்வெண்ணில் (frequency) ஒலிப்பவை அல்ல. ஒவ்வொரு ஸ்வரத்துக்கும் அது இசைக்கப்படும் ராகத்தையும், அமைப்பையும் பொருத்து அசைவு உண்டு. இந்த அசைவையே ‘கமகம்’ என்று மேலோட்டமாக வரையறை செய்யலாம். முதல்முறையாக இந்திய மரபிசையைக் கேட்கும் மேற்கத்தியக் காதுகளுக்கு எடுத்தவுடனே தனித்துவமாகவும், வித்தியாசமாகவும் தெரிவது நம் மரபிசையின் கமகங்கள்.
சொல்வனம் பிரசுரம் – சுகா, ராமன்ராஜா புத்தகங்கள்
ஏற்கனவே அறிவித்தபடி, இந்த புத்தகக் கண்காட்சியையொட்டி ‘சொல்வனம் பதிப்பகம்’ மூலம் இரண்டு புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். சென்ற சனிக்கிழமையன்று (08-01-2011) இவ்விரு புத்தகங்களும் ‘உடுமலை.காம்’ அரங்குக்கு வந்தன. ஞாயிற்றுக்கிழமை ஒரு நட்பார்ந்த புத்தகவெளியீடு நடந்தது. சொல்வனம் இதழிலும், வார்த்தை சிற்றிதழிலும் சுகா எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘தாயார் சன்னதி’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகியிருக்கிறது. சொல்வனம் இதழில் ராமன் ராஜா எழுதிய கட்டுரைகள் ‘சிலிக்கான் கடவுள்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகிருக்கிறது.
நாஞ்சில் நாடன் – ஒரு கனிந்த தமிழ் இதயம்
நாஞ்சில் நாடன் எழுத்தில் உடனே தென்படுபவை: வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையின் முன் முடிவுகள் அற்ற கூர்மை, கொள்கலனின் கொள்ளளவின் பிரம்மாண்டம், எங்கும் தங்காது எந்த முடிவுப் புதரிலும் சிக்காது இயங்கும் நேர்மை, அனாதைகள், அபலைகளின் மேல் (பிரச்சார, தன்னை ‘இன்னார்’ என்று வெளி உலகுக்கு பறைசாற்ற காட்டிக் கொள்கிற நீச புத்தி அற்ற) உண்மையாக உள்ள அக்கறை, சுவாரஸ்யம், பாதகம் செய்பவரைக் கண்டு அஞ்சாத எள்ளல், எல்லாவற்றுக்கும் மேல் வளமும், எளிமையும், குளிர்ச்சியும், செழுமையும் மிளிரும் தமிழ். காலங்கள் தோறும் இவர் கற்றுக் கொண்டேயிருந்திருக்கிறார். இன்னமும் கற்கிறார். ஒரு தமிழ்ப் பேராசிரியன் செய்ய வேண்டிய வேலையை தன் சொந்தப் பணத்தைச் செலவழித்து செய்து கொண்டேயிருக்கிறார்.
வாசகர் மறுமொழி
சொல்வனத்தில் சென்ற இதழில் பிராந்து சிறுகதை படித்தேன். ஏற்கனவே படித்ததுதான் என்றாலும் மீண்டுமொரு முறை ரசித்துப் படிக்கும்படி தந்ததற்கு நன்றி. இந்த சிறுகதைத் தொகுப்பு புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமா? சொல்வனம் ஆரம்பிக்கப்பட்டபோதிருந்ததைக் காட்டிலும் இப்போதெல்லாம் இலக்கியத்துக்கு நிறைய முக்கியத்துவம் தருவதும் அ.முத்துலிங்கம், நாஞ்சில்நாடன், வெ.சா, ஆ.மாதவன் போன்றவர்களின் படைப்புகளை அடிக்கடி படிக்க முடிவதும் சொல்வனத்தின் தகுதியை வெகுவாக உயர்த்துகிறது.
நியாண்டர்தல் யுக மின் புத்தகங்கள்
தமிழ் சூழலின் ஒரு முக்கிய கலாச்சார நிகழ்வாக தற்போது நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியை நாம் கருதமுடியும். புத்தக விற்பனையை மக்களின் நுகர்வு கலாச்சாரம் பெருமளவில் முடிவு செய்கிறது. அரசியல், சமூகம், வரலாறு உள்ளிட்ட புத்தகங்களுடன் ஒப்பிடுகையில் சமையல், சுயமுன்னேற்றம் குறித்த புத்தகங்களே அதிக அளவில் விற்பனையாகின்றன. தீவிர “நியாண்டர்தல் யுக மின் புத்தகங்கள்”
விஞ்ஞானக் கணினி
நியூட்டனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கக்கூடும் என்று கேட்டவுடன் மயான நிசப்தம் – ஆசிரியர்கள் மீண்டும் நன்றியோடு பார்த்தார்கள். ஒரு மாணவன் தைரியமாக ”நியூட்டனுக்கு கூகிள் தேடல் சேவை இல்லை” என்று ஜோக் அடித்தான். சரி, கூகிள் இருப்பதால் மனித குலத்தை நியூட்டனை விட இரு மடங்கு உன்னால் முன்னேறச் செய்ய முடியுமா என்று கேட்டதற்கு வழியத்தான் செய்தான்.
பாஸ்கலின் பந்தயம்
என் அப்பா சரித்திர ஆசிரியர் என்பதால் எனக்கு வரலாறு விருப்பப்பாடம். பாடத்துக்கு அவசியமில்லாத புத்தகங்களையும் படிப்பது வழக்கம். ஆதிகால இடப்பெயர்ச்சிகளில் ஒட்டகவரிசைகள் பயன்படுத்தப்பட்டன என்று பைபிளில் சொல்லப்படுகிறது. முப்பது நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலத்தில் ஒட்டகங்கள் அந்த அளவுக்கு புழக்கத்தில் இல்லை. ஏப்ரஹாம் எகிப்து சென்றதும் அங்கிருந்து திரும்பியதும் கற்பனை என்றால் பைபிளில் வேறெது சரித்திரத்துக்கு முரண்பாடாக இருக்கும் என்று ஆராய ஆரம்பித்தேன்.
கானாங்குனி
காணாமல் போயிருந்ததது கடல். மீன்கள்
கவலைப்பட்டதாகத் தெரியவில்லை
கூழாங்கற்கண்ணாடிகளில் அழகு பார்த்துக்கொண்டன
டிசம்பர் நாற்காலிகள்-2
சஞ்சய் சுப்ரமணியனின் வாய் மட்டுமில்லாமல் மொத்த உடம்பும் பாட்டுப் பாடுகிறது. குன்னக்குடிக்கு அடுத்தபடி சேஷ்டை மன்னர் என்ற பட்டத்துக்குத் தகுதியானவர். கை, அது பாட்டுக்கு ஏதோ மானசீகமான இயந்திரத்தின் knob-களைத் திருகிக்கொண்டே இருக்கிறது. ஆலாபனையின் போது ததரின்னாவைக் கைவிட்டு ‘டுட்டுட்டுடூ’ என்று கூட ஆரம்பித்துவிடுகிறார்.
இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்- 5
Lianozovo என்பது மாஸ்கோ நகரத்தின் எல்லைப்புறத்தில் அமந்துள்ள ஒரு கிராமம். கலைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் அங்குதான் வசித்தனர். கிராமத்தின் பெயரை தமது குழுவுக்கானதாக அமைத்துக்கொண்டு அவர்கள் மிக வீரியமாகச் செயற்பட்டனர். குழுவில் பலர் அரூபப் பாணி ஓவியங்களைப் படைத்தனர். 1957 இல் அரசின் ‘Thaw’ கொள்கை ருஷ்யாவின் தொன்மையான கலை உத்திகளையும், மேலை நாட்டு புதிய கலைசார்ந்த சோதனைகளையும் பற்றி இளைய தலைமுறை அறிய உதவியது.
மகரந்தம்
ஒளி ஊடுருவும் சிமெண்ட், இது இருந்தால் நிறைய இருட்டு வீடுகள் சென்னையிலும், கல்கத்தாவிலும், பம்பாயிலும் ஒளி வீசும் கட்டிடங்களாகி விடும். எத்தனையோ கோடவுன்கள் இருட்டுக் கல்லறைகளாக இல்லாமல் மனிதர் நடமாடி வேலை செய்யும் இடங்களாகும். இந்த சிமெண்ட் சுவர்கள் வழியே காற்றும் வீசுமானால், என்னவொரு சுகமாக இருக்கும்? கொசுக்களையும், தூசியையும் மட்டும் வடிகட்டி அனுப்பும்படி வடிவமைக்கச் சொல்ல வேண்டும்.
கடவுளின் காதுகளுக்கு
‘கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளும், நிறைந்த மகிழ்ச்சியும் உங்களுக்கு’என்றேன். அவர் உணர்ச்சி வசப்பட்டு கண்களை மூடி தன் நெஞ்சைத் தொட்டு கைகளை மேலே காட்டி ‘உங்கள் உதட்டில் இருந்து கடவுளின் காதுகளுக்கு’ என்றார். சிறிது நேரத்தில் சமநிலை அடைந்து நன்றி என்றார். கைகளை நீட்டி என் கைகளைப் பிடித்து குலுக்கினார். நான் திரும்பி சில அடி வைத்த பிறகு ஏதோ நினைவுக்கு வந்து முழங்கால்கள் ஒன்றையொன்று இடிக்க வேகமாக ஓடி வந்து மோதி என்னைக் கட்டிப்பிடித்து மீண்டும் நன்றி என்றார். என் நெஞ்சு எலும்பு இரண்டு முறிந்தது போலிருந்தது.
உயிர், மாற்று உயிர் – 4
நம் உயிரணு, மரபணுக்களுக்கும் ஆர்செனிக்கென்றால் ரொம்பப் பிடிக்கும். உடனே பாஸ்பரஸை தூக்கிவிட்டு ஆர்சனிக்கை ஒட்டிக்கொள்வோம். அதனால்தான் அது நமக்கு டாக்சின். விஷம். ஒட்டிக்கொண்ட பிறகுதான் விபரீதம். உயிரணு மரபணு வைத்து அடுத்தடுத்து தன்னிச்சையாக நடக்கவேண்டிய, ஜீவிப்பதற்கு உடலுக்கு தேவையான ஆற்றல் உற்பத்திசெய்யவேண்டிய, அனைத்து ரசாயன மாற்றங்களிலும் ஆர்செனிக் குளறுபடிசெய்துவிடும்.
டிராம் வண்டிகள்
டிராம் வண்டிகள் நவீன யுகத்தின் ஒரு முக்கியமான சின்னம். பல நாடுகளிலும் டிராம் வண்டிகள் பல பத்தாண்டுகளாக உபயோகத்தில் உள்ளன. காலத்தோடு அது பல வடிவங்களை அடைந்திருக்கிறது. பயணங்களின் அனுபவங்கள் நீடித்து நிற்பவை. பயணம் செய்த வாகனமும் அவ்வகையில் முக்கியமானவை. இங்கு பல்வேறு காலகட்டங்களில் பல நாடுகளில் உபயோகப்படுத்தப்பட்ட “டிராம் வண்டிகள்”
உயிரின் கதை – 2
உயிர் என்பது, உருண்டை வடிவில் பச்சை நிறத்தில் ஒரு கிலோ எடையில் உள்ள ஒரு பொருள் அல்ல. கால் பந்துக்குள் இருக்கும் காற்று போன்றதும் அல்ல. ’உயிர்’ என்று நாம் அறிவது உயிரியின் ஒரு தனித்த பண்பு அல்லது பண்புகளின் தொகுப்பையே. பிறப்பிற்கு முன்னும், மரணத்திற்குப் பின்னும் உயிர் இருப்பதில்லை. இது நவீன அறிவியல் தரும் விளக்கம்.
புத்தகப் பரிந்துரைகள் – 2011
சென்னையில் வருடந்தோறும் நடைபெறும் புத்தகக்கண்காட்சி இந்தமுறையும் சென்ற வாரம் ஜனவரி 4-ஆம் தேதியிலிருந்து நாளை மறுநாள் 17-ஆம் தேதிவரை நடைபெறுகிறது. கண்காட்சியைச் சுற்றியதிலும், நண்பர்களின் பரிந்துரையின் பேரிலும் கிடைத்த சில குறிப்பிடத்தக்க படைப்புகளின் பட்டியல் இது. கடைசி இரு தினங்களில் கண்காட்சிக்குச் செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த முறை புத்தகக் கண்காட்சியில் மிக மிக நிறைவான விஷயம் தேர்ந்த இலக்கியவாதிகளின் சில புத்தகங்கள் நல்ல முறையில் விற்பது.
