கசடதபற – மின்னூல்கள்

‘கசடதபற’ சிற்றிதழ்களுக்கு முன் ‘கவனம்’ சிற்றிதழின் முழுத்தொகுப்பையும் மின்னாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். பல தமிழ் எழுத்தாளர்களிடம் தொடர்ந்து பேசி அவர்களுடைய புத்தகங்கள் மின் வடிவம் பெறவும் உதவி செய்து வருகிறார். விமலாதித்த மாமல்லனின் இந்தப் பணி நம் போற்றுதலுக்கும் நன்றிக்கும் உரியது.

பிபூதிபூஷணின் மின்னல்

This entry is part 12 of 12 in the series மின்னல் சங்கேதம்

பஞ்சத்தை எப்படியாவது சமாளித்துவிடலாம் என்று நினைத்திருந்த கிராமத்தினர், பட்டினி கிடந்து ஒருவர் செத்தும் போகக்கூடும் என்ற அதிர்ச்சியான உண்மையை நேருக்கு நேர் பார்க்கிறார்கள். அந்தச் சாவுதான் பின் நிகழப்போகவிருக்கும், பெருமழைக்கான, பிரளயத்துக்கான முதல் மின்னல் அறிகுறி.

மின்னல் சங்கேதம் – 2

This entry is part 2 of 12 in the series மின்னல் சங்கேதம்

அரட்டையிலேயே மதியம் கழிந்து குளிர் இருட்டிக்கொண்டு வந்தது. கங்காசரண் எழுந்து நின்றான். “பக்கத்து கிராமத்துக்குப் போய் இன்னும் சில மாணவர்களைச் சேக்கறதைப் பத்திப் பேசனும். எவ்வளவு அதிகம் பசங்க இருக்காங்களோ, அவ்வளவு வசதி.”

மின்னல் சங்கேதம் – 1

This entry is part 1 of 12 in the series மின்னல் சங்கேதம்

டினு டியோர் ஏழெட்டு மீனைப் பிடிச்சான். பிராமண தானமா எனக்கும் ஒண்ணு கொடுத்தான். நல்ல பெரிசு இல்ல? ஓய் பொட்லா, நீ என்ன செஞ்சிக்கிட்டு இருக்க? காலங்காத்தால வீட்டுப்பாடம், படிப்பு எதுவும் இல்லையா?”

என் ப்ரிய வெ.சா…

நான் பழக நேர்ந்த ஆளுமைகளில் படு ரசனையான, குறும்பான ஆசாமிகள் ஒருவர் வெ.சா. அந்தக் கால தில்லி தமிழ் இலக்கிய உலகைக் குறித்து சுவாரசியமாகப் பல விஷயங்கள் சொல்லுவார். குறிப்பாக, தி.ஜானகிராமனைக் குறித்துப் பேசுவதென்றால் பேசும் அவருக்கும் கேட்கும் எனக்கும் அதிவிருப்பம். அவரும், தி.ஜாவும் இன்னபிற நண்பர்களும் காருக்குறிச்சி அருணாசலம், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் இசைத்தட்டுகளின் பின்னணியில் உற்சாகபானத்துடன் பேசியபடி களைகட்டும் கச்சேரிகளைப் பலமுறை வெ.சாவின் வார்த்தைகளில் என் கண் முன்னாலேயே கண்டிருக்கிறேன்…..புத்தகங்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த உற்சாகம் கடைசிவரை குறையவேயில்லை. அதேபோல அவருக்குப் பிடித்த முக்கியமான புத்தகங்களைக் குறித்துத் தவறாமல் எழுதிவிடவும் செய்வார். அத்தனை வயதுக்கு மேல் கம்ப்யூட்டரில் தமிழில் டைப் அடிக்கக் கற்றுக்கொண்டு அதிலும் ஒரு மென்பொருளில் பிரச்சினை வந்தால் அதை நீக்கி இன்னொரு மென்பொருளைப் பயன்படுத்தி எழுதுவதுவரை கற்றுக்கொண்டார். அவர் வயதில் என்னால் அத்தனை புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும் ஆர்வம் இருந்தால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்றே எண்ணிக்கொள்வேன்…..எப்போதுமே உற்சாகமாகப் பேசும் வெ.சாவின் குரலில் தளர்ச்சியை ஒரு சிலமுறைதான் கேட்டிருக்கிறேன். அதில் ஒன்று கவிஞர் ராஜமார்த்தாண்டன் மறைவின்போது. ‘எனக்குப் பிடிச்சவங்கள்லாம் இப்படி ஒவ்வொருத்தரா போய்ட்டே இருக்காங்க’ என்று ஆற்றாமையோடு சொன்னார். …எத்தனையோ எழுத்தாளர்களின் படைப்புகளை மிகக் கறாராக விமர்சித்திருக்கிறார். ஆனால் அவர்களில் பெரும்பாலாரானோடு தனிப்பட்ட முறையில் அவருக்கு நல்ல நட்பு இருந்திருக்கிறது. வாழ்நாள் பூராவும் சண்டை போட்டுக்கொண்டிருந்தாலும் பெரியவர் தி.க.சி அவரைச் சந்திக்க விரும்புகிறார் என்று சுகா மூலம் தெரியவந்ததும் அவரைத் தன் இயலாத உடல்நிலையிலும் இரண்டு வருடங்களுக்கு முன் திருநெல்வேலிக்கே நேரில் சென்று சந்தித்துப் பேசிவிட்டுவந்துவிட்டார். நாஞ்சில்நாடன், பாவண்ணன், பாரதிமணி பாட்டையா என யாரோடு நான் பேச நேரும்போது எங்கள் உரையாடலில் பெரும்பாலும் இடம்பெற்றவர் வெ.சாதான். அதிலும் நாஞ்சில்நாடன் அவர்கள், வெ.சா மீது வைத்திருக்கும் பெருமதிப்பை நான் மிக நன்றாக அறிவேன். நாஞ்சிலுடன் நான் அவர் படைப்புகள், பயணங்களைக் குறித்துப் பேசியதைக் காட்டிலும் வெ.சா குறித்து பேசியதுதான் அதிகம்.

ரமாவும், உமாவும் – திலீப்குமாரின் புதிய புத்தகத்தை முன்வைத்து…

சமகால இலக்கியப்போக்கைக் குறித்து முற்றிலும் பகடியாக, தான் எழுதும் கதையையும் கூட அதில் சேர்த்தி விஷமப்புன்னகையோடு பேசுகிறார் திலீப்குமார். இக்கதை தரங்கம்பாடியில் நடப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. “ரமாவும், உமாவும் பெங்களூருவில் உள்ள சங்கம் ஹவுஸ் அறக்கட்டளையின் சார்பில் ஆகஸ்ட் 2011-இல் தரங்கம்பாடியில் நடத்தப்பட்ட எழுத்தாளர் முகாமில் பங்கேற்றபோது எழுதப்பட்டது,” என்று புத்தக முன்னுரையில் சொல்கிறார் திலீப்குமார். இக்குறுநாவலைப் பற்றிய முக்கியமான குறிப்பாக அதை நான் படிக்கிறேன்.

கலங்கிய நதியும், திரும்பிய விமானமும்

இந்நாவல் இரண்டு அடுக்குகளாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்று ரமேஷ் சொல்லும் கதை. இன்னொன்று அதைத் தொகுக்கும் ரமேஷின் மனைவி சுகன்யாவின் பார்வை. சில இடங்களில் நான் இது சரியாக வரவில்லையே என்று நினைத்ததையெல்லாம் சுகன்யா விமர்சித்துவிடுகிறாள். ஆனால் இந்த உத்தி வெறும் பின்னவீனத்துவ விளையாட்டாக வலிந்து செய்யப்படாமல், நாவலின் இறுதிக்கட்டத்தில் இரண்டு அடுக்குகளும் அர்த்தபூர்வமாக ஒன்று சேர்ந்துவிடுகின்றன.

தி.ஜானகிராமனின் இசையுலகம்

ஜானகிராமனுக்கு நல்ல செவி இருந்தது. ஒருமுறை கேட்டதை அப்படியே பாடிவிடுவார். மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் பாட்டென்றால் எங்கள் இருவருக்குமே மிகவும் பிடிக்கும். அவர் பாடிக் கேட்டதும், அந்தப் பாட்டுமுறையை அப்படியே திருப்பிப் பாடிவிடுவார். பல வித்வான்களோடு ஜானகிராமனுக்கு நல்ல பரிச்சயம் இருந்தது. லால்குடி ஜெயராமன், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் போன்றோருக்கு ஜானகிராமனின் பாட்டென்றால் மிகவும் பிடிக்கும். அவரைப் பாடச்சொல்லிக் கேட்பார்கள். ஜானகிராமன் கச்சேரிகள் செய்வதில்லையென்று அவர்கள் ஆதங்கப்பட்டுக்கொள்வார்கள். லால்குடி ஜெயராமன் ஜானகிராமனின் சங்கீத அனுபூதியை வியந்து போற்றுவார்.

பீம்சென் ஜோஷி

எனக்கு நினைவு தெரிய முதன்முதலாய் நான் கேட்ட ‘ஹிந்துஸ்தானி’ குரல் பீம்சென் ஜோஷியுடையதாகத்தான் இருக்கும். ‘மிலே ஸுர் மேரா தும்ஹாரா’ என்ற குரலைக் கேட்கும்போதுதான் ஞாயிறு காலை நிகழ்ச்சிகள் ஆரம்பமானதாக அர்த்தம். பல இந்திய மொழிகளும் ஒலிக்கும் அந்தப்பாடலில் தமிழ்ப்பாடலைக் கேட்கும்போது, சுற்றியிருக்கும் எல்லோரிடமும் ஏதோ தாங்களே பாடுவதுபோல ஒரு “பீம்சென் ஜோஷி”

விட்ட ஷட்ஜம்

ராமன்ராஜா காட்டும் அறிவியல்சூழல், அச்சூழலோடு நேரடித் தொடர்பில்லாத வாசகர்களுக்குப் புதியதான ஒன்று. அரசுகளுக்கிடையே ஆராய்ச்சிச்சூழலில் நடக்கும் போட்டி, அதன் காரணமாக வெளிவரும் அரைகுறை முடிவுகள், பொய்யான வெற்றிகள், மருத்துவத்துறையின் ஆராய்ச்சிச்சூழல், மருந்துக் கம்பெனிக்காரர்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்கள் ஏற்படுத்தும் செயற்கையான பதற்றம் – இவையெல்லாம் இதற்கு முன் தமிழில் நமக்குப் படிக்கக் கிடைக்காதவை.

கண்கள்

கிட்டத்தட்ட 25 வருடங்களாக இழுத்துக் கொண்டிருந்த வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டதால் ஊடகங்கள் இந்த விஷவாயுக்கசிவை மீண்டும் நினைவு கூர்ந்து பல செய்திப்படங்களையும், ‘இப்போது என்ன செய்ய வேண்டும்?’ என்ற மானுட அக்கறையின் மகத்துவங்களையும் கொட்டிக் கொண்டிருந்தன. அவற்றிலெல்லாம் தவறாமல் இடம்பெற்றிருந்ததொரு புகைப்படம், கழுத்துவரை மூடப்பட்டு, முகம் மட்டும் தெரியும் ஒரு சிறு பெண் குழந்தையின் சடலம்.

எழுத்தாளர்கள் என்னும் மனிதர்கள் – ஜோசே சாரமாகோவை முன்வைத்து

தன்னுடைய ‘பார்வையின்மை’ நாவலை, ‘அடக்குமுறையைப் பற்றிய என் விமர்சனம் இந்த நாவல். பல பணக்கார நாடுகள் ஏழை நாடுகளைச் சுரண்டி மேலும், மேலும் அவர்களை ஏழ்மையாக்குவதைக் குறித்த என் மன வருத்தத்தை என் நாவல் வழியே முன்வைக்கிறேன்” என்கிறார் சாரமாகோ. அப்படிப்பட்டவர் இரண்டு சர்வாதிகாரங்கள் மறைந்து ஒரு ஜனநாயகம் மலர்ந்த தினத்தை ‘இருண்ட நாளாக’ ஏன் பார்க்கிறார்? தான் அதிகாரத்தில் அமர்ந்த ஒரே ஒரு முறை (பத்திரிகையாசிரியர்), கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை ஏன் நெறித்தார்? தான் நம்பும் கொள்கைகளுக்காக எந்தவிதமான சர்வாதிகாரத்தையும் சகித்துக் கொள்ள ஏன் அவர் தயாராக இருந்தார்?

பாகிஸ்தானிய ஆங்கில இலக்கியம் – ஒரு பார்வை

தானியால் முயுனுதீன் மேற்கத்திய மீடியாவில் ஆர்.கே.நாராயணனோடு ஒப்பிடப்படுகிறார். இருவரின் கதைகளிலும் எளிய நகைச்சுவை, அறம் சார்ந்த கேள்விகள் இருக்கும். இருவருமே பெரும் அகச்சிக்கல்களையோ, சமூக அரசியல் குறித்தோ பேசுவதில்லை என்பது குறையாகப் பட்டாலும், இத்தகையான எளிய நேர்மையான எழுத்தே பாகிஸ்தானிய ஆங்கில எழுத்தில் படிக்கக் கிடைப்பதில்லை என்பதால் தானியாலின் எழுத்து முக்கியமான ஒன்றாகிறது. அது மட்டுமில்லாமல், பாகிஸ்தானின் நிலப்பரப்புகளைக் குறித்த நுணுக்கமான வர்ணனைகள் தானியாலின் எழுத்துகளில் படிக்கக் கிடைக்கின்றன.

மார்ட்டின் கார்ட்னர் என்றொரு மாயப்புதிர்

‘சயிண்டிஃபிக் அமெரிக்கன்’ பத்தி ஒரு புரட்சியையே செய்தது எனலாம். அதில் அவர் ஒவ்வொரு இதழிலும் ஒரு புதிரைக் கேட்பார். அப்புதிர் கணிதம் தொடர்பானதாகவோ, ஜியாமெட்ரி தொடர்பானதாகவோ, வார்த்தை விளையாட்டாகவோ இல்லை வித்தியாசமான யோசிப்புமுறையைக் கோருவதாகவோ இருக்கும். அப்புதிருக்கான விடையை அதற்கு அடுத்த இதழில் வாசகர்கள் எழுதி அனுப்புவார்கள். புதிருக்கான விடையை கார்ட்னரும் விளக்கி பதிலெழுதுவார்.

கந்த கானாமுதம்

ஒவ்வொரு ராகமாகக் கையைப் பிடித்து இழுத்து வந்து “இதோ பார்த்துக்கொள்” என்று காட்டும் அனுபவம் எஸ்.ராஜம் அவர்கள் பாடி ஸ்வாதிசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ‘கந்த கானாமுதம்’ என்ற இசைத்தொகுப்பைக் கேட்டால் கிடைக்கிறது. மொத்தம் 72 ராகங்களை இத்தொகுப்பில் ஒரு சிறு ஆலாபனையாகவும், ஒரு எளிய கீர்த்தனையாகவும் பாடியிருக்கிறார் எஸ்.ராஜம். தேர்ந்த ஓவியரும், மிகச்சிறந்த பாடகருமான எஸ்.ராஜம், ஒவ்வொரு ராகத்தைக் குறித்தும் ஒரு தெளிவான, அழுத்தமான சித்திரத்தைத் தன்னுடைய ராக வெளிப்பாட்டில் தருகிறார்.

நூலை மீறும் பொம்மைகள்

தெருவில் கோஷமிட்டபடிச் சென்ற போராளிகள் மீது, காவலர்கள் நாய்களை ஏவிவிட்டு கடிக்க வைப்பது, இரண்டு வெள்ளை இன ஆட்கள் கருப்பினப் பெண்களை உருட்டுக்கட்டையால் தலையில் அடிப்பது போன்ற புகைப்படங்கள் பலத்த அபாயங்களுக்கு நடுவே எடுக்கப்பட்டவை. சில வெள்ளை இன அதிகாரிகள், தங்கள் கல்லூரியில் சேரவிருக்கும் முதல் கருப்பு மாணவரை எப்படித் தாக்குவது என்று சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது மறைந்திருந்து எடுத்த புகைப்படமும் பிரபலமான ஒன்று.

பட்டம்மாள் – ஒரு சமூக நிகழ்வு

பட்டம்மாளின் முயற்சிக்குத் தன் பரிபூரண ஆதரவு உண்டு என்பதைத் தெரிவிக்கும் வகையில் கிருஷ்ணசாமி தீட்சிதரே பட்டம்மாளின் கச்சேரிகளுக்குத் தம்பூராவும் மீட்டினார்! பட்டம்மாள் இறுதிவரை ஒரு பெரும் தேசியவாதியாகவே இருந்தார். 1947-இல் சுதந்திரதினத்தன்று ஆல் இந்தியா ரேடியோவில் அவர் பாரதியாரின் தேசபக்திப்பாடல்களைப் பாடினார். அதற்காக அவருக்குத் தரப்பட்ட சம்பளத்தை வலுக்கட்டாயமாக வாங்க மறுத்து விட்டார். அப்பாடல்களைப் பாடியதைத் தன் தேசக்கடமையாகக் கருதினார் பட்டம்மாள். ஆணாதிக்க சமூகத்திலிருந்து மீண்டெழுந்த பட்டம்மாள் தன் குடும்பத்திலேயே இசைக்கு ஒரு பெரிய குருவாக விளங்கினார். தன் சகோதரர்கள் டி.கே.நாகராஜன், டி.கே.ஜெயராமன் இருவரையும் தேர்ந்த இசைக் கலைஞர்களாக்கினார். பட்டம்மாளின் குரல் நமக்குக் கேட்கக் கிடக்காத ராஜம்மாளின் குரல்; சமையலறைக்குள்ளேயே சிறு முனகலாகவும், ஆலாபனையாகவும் முடங்கிப்போன பெண்களின் குரல்; சமூக மாற்றத்தை முன்வைத்ததொரு தலைமுறையின் எளிய மனிதர்களின் குரல்.

நிழல் நந்தி

எத்தனையோ அழகான காட்சிப்படிமங்களை நாம் வெகு சாதாரணமாகக் கடந்து சென்று விடுகிறோம். சிறப்பான பல கட்டடக்கலை சாதனைகள் நம்மில் சிறு சலனத்தைக் கூட ஏற்படுத்துவதில்லை. தென்னிந்தியாவின் சில கோயில்களில், வருடத்தின் ஒரு சில குறிப்பிட்ட தினங்களில் மட்டும் கோயில் மூலவர் மீது சூரிய ஒளி விழுமாறு வடிவமைத்திருப்பார்கள். சூரியன் இறைவனை பூஜை செய்வதான ஐதீகம் மட்டுமே கவனத்தைக் கவருகிறதே தவிர, வானியல், கணிதம், கட்டடக்கலை சார்ந்த அந்த வடிவமைப்பின் அற்புதம் நம் மனதின் மேற்பரப்பைக் கூடத் தீண்டுவதில்லை. வற்றையெல்லாம் நம் கண்களால் கண்டறிந்து ரசிக்க முடிந்தால் அதுவே சிறந்த மன எழுச்சியைத் தரும். அதைப் புகைப்படமாக்குவதெல்லாம் ஒரு சாதாரண தொழில்நுட்பம் சார்ந்த பின்நிகழ்வுதான். ஒளியையும், கோணங்களையும் ரசிக்க முடியும் மனோபாவமே பிரதானம். அப்படி ஒரு கோணத்தை நாம் கண்டுகொள்ள முடியும்போது, சிற்பத்தின் புன்னகையை ரசிக்க முடியும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த கலைஞர்களின் கலையுணர்வை நம்மால் தரிசிக்க முடிகிறது.

போரும், புகைப்படமும்

வியட்நாம் போரின்போது தீப்புண் காயம்பட்டு அழுதுகொண்டே நிர்வாணமாக ஓடிவந்த சிறுமிக்கு அப்புகைப்படக்காரர் ஓடிச் சென்று வேறெதாவது முதலுதவி தந்திருக்கலாம். ஆனால் உலகையே அதிரவைத்துப் போர்மீது கசப்புணர்வை ஏற்படுத்திய அந்தப் புகைப்படம் நமக்குக் கிடைத்திருக்காது. அதைப்போலவே கேபாவின் புகைப்படமும் சரியானதொரு பிரச்சாரத்தையே முன்வைத்தது. போரில் ஏற்படும் மனித இழப்பைக் குறித்ததொரு அதிர்ச்சியையும், தேசியவாதிகளின் வன்முறையைக் குறித்தொரு விழிப்புணர்வையும் தந்தது.

முகம் சொல்லும் கதை

உலகின் சிறந்த புகைப்படங்களை அறிமுகப்படுத்தும் புதிய தொடர் இது: ஷரபத் குலா ஸ்டீவ் மக்கரியைச் சந்தித்தபோது அவர் தன்னுடைய விருப்பமாகச் சொன்ன ஒரே ஒரு விஷயம், தனக்குக் கிடைக்காமல் போன கல்வி தன் மூன்று பெண் குழந்தைகளுக்காவது கிடைக்க வேண்டும் என்பதுதான். சோவியத் யூனியனின் தாக்குதல்களில் தன் குடும்பத்தை இழந்த குலா, இப்போது பெண்களின் சுதந்திரத்தையும், தேவைகளையும் காலடியில் நசுக்கி வரும் தாலிபான் ஆட்சியில் பழமைவாதிகளின் மத்தியில் வாழ்ந்து வருகிறார். உலகெங்கும் அறியப்படும் இந்தப் பிரபலமான முகம் இப்போது ஆப்கானிஸ்தானின் ஏதோ ஒரு மூலையில் பர்தாவுக்குப் பின் மறைந்திருக்கிறது.

மூதாதையர்களின் தாகம்

ஹம்பியைக் குறித்ததொரு புகைப்படக் கட்டுரையை அதன் வரலாற்றோடு சேர்த்து எழுதினேன். அதை ஒரு பிரபலமான புகைப்படப் பத்திரிகைக்கும் அனுப்பி வைத்தேன். அவர்கள் அந்த வரலாற்றையெல்லாம் நீக்கி விட்டு, புகைப்படத் தொழில்நுட்பத்தைக் குறித்து எழுதித் தருமாறு கேட்டார்கள். ஹம்பியின் வரலாற்றை நீக்கிவிட்டு அந்தக் கட்டுரையைப் பிரசுரிக்கவே தேவையில்லை என்று நிர்தாட்சயண்மாக மறுத்து விட்டேன்.

வெரோனிகாவின் இரட்டை வாழ்க்கை

இருவரும் மிகச்சிறந்த பாடகிகள். இருவருக்கும் இதயக்கோளாறு இருக்கிறது. ஒருவர் இதயக்கோளாறுடனே தொடர்ந்து பாட முயற்சிக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு இறக்கிறார். இன்னொருவர் அதே சமயத்தில் இதயநோயின் காரணமாகப் பாடுவதைக் கைவிட்டு ஒரு இசைப்பள்ளியின் ஆசிரியராகப் போகிறார்.