இயற்கையின் மீதான ஆர்வம், இந்திராகாந்தியின் இளமைப்பருவத்திலேயே துவங்குகிறது. அடிப்படைப் பாடங்கள் தந்தை நேரு தன் மகள் இந்திரா ப்ரியதர்ஷினிக்கு எழுதும் கடிதங்களில் இருந்து துவங்குகின்றன. 1930 ஆம் ஆண்டு, மௌரிஸ் என்பவர் எழுதிய “தேனியின் வாழ்க்கை வரலாறு” புத்தகத்தைப் பரிசாக அனுப்புகிறார். இது போலப் பல புத்தகங்களை அவர் மகளுக்காக அனுப்பிக் கொண்டேயிருக்கிறார். கமலா நேருவின் தம்பியும், இந்திராவின் தாய்மாமனுமான கைலாஸ் நாத் கௌல், ஒரு உயிரியல் ஆய்வாளர்.
ஆசிரியர்: அருண் மதுரா
ரங்கூன் – விஷால் பரத்வாஜின் திரைப் பயணம்
மக்பூல், ஒரு வயதான தாதா, அவனின் இளம் மனைவி, அவளின் காதலன் என மூவரின் கதை. வழக்கமான கதைகளில் வருவது போல, தோற்றம் எழுச்சி, உச்சம் வீழ்ச்சி எனக் கட்டம் கட்டி, கதை சொல்லாமல், நடுவிலிருந்து துவங்கி, முரண்கள் மோதல்கள் வழியே ஒரு காட்டாறு வீழ்ந்து, கரைமீறி உருவாக்கும் அழிவைச் சொல்லும் படம். வழக்கமாக, மூத்திரப் பை தாங்கும் வரை முதல் பாகம், உணர்வெழும் காதை முடிந்ததும் நகைச்சுவை அல்லது பாடல் எனப் பார்த்துப் பழக்கப்பட்ட மனம், இது போன்ற ஒரு திரைக்கதைக்கு மாற சிரமப்பட்டது. படம் பார்த்து முடிந்து அமைதி கவிழ்ந்த சில மணி நேரங்கள் கழிந்த பின் பேச்சில், மகள் மதுரா, படத்தில் கான்ஸ்டபிள்களாக வரும் ஓம்பூரியும், நஸ்ருதீன் ஷாவும், மக்பெத்தில் வரும் சூனியக்காரர்கள் எனக் காட்டித் தந்தாள். அவர்கள் பெயர் – பண்டிட் / புரோகித்.. வெடித்துச் சிரித்தேன். மக்பூலின் ஷேக்ஸ்பியர் அடிப்படை புரியாமல் பார்த்தாலும், அது தன்னளவில் முழுமையான படமாகத்தான் இருக்கும்.
ஓடு மீன் ஓட..
2017 ஆம் ஆண்டு, அனில் அம்பானி, ராகுல் பஜாஜ் போன்ற தொழிலதிபர்களை விடப் பெரிய பணக்காரர் ஒருவர் புதிதாக உருவாகியிருக்கிறார். அவர் ஒரு பலசரக்குக்கடை முதலாளி. மார்ச் மாதம் அவர் குழுமத்தின் பங்குகள் வெற்றிகரமாக பங்குச் சந்தையில் வெளியிடப்பட்டு, முதலீட்டாளர்களுக்கு 100%க்கும் அதிகமான லாபம் ஈட்டித் தந்திருக்கிறது மும்பை டீமார்ட் என்னும் சில்லறை வணிகக் குழுமத்தின் தலைவர் ராதாகிருஷ்ண தமானி தான் அவர்.
ஸஃபாரியின் இறுதி நாள் – ங்கொரொங்கோரொ
சிங்கம் என்னும் பெயருக்குப் பின்னால், கம்பீரமும், பயமும், வேட்டையும் மரணமும் இணைந்திருக்கிறது. ஆனால், உண்மையில் சிங்கம் என்னும் பெரும்பூனையின் வாழ்வு மிகச் சிக்கலானது. அவை தமக்கு எல்லைகளை வகுத்துக் கொண்டு வாழ்கின்றன. அதற்குள்ளாகவே, ஆண் சிங்கங்களுக்கு தந்தைமை உரிமைகள் பற்றிய தகராறுகளில், குட்டிகள் கொல்லப்படுகின்றன. பாதி சிங்கக் குட்டிகள் இரண்டாண்டுகளுக்கு மேல் வாழ்வதில்லை. இதையெல்லாம் தாண்டி, தனது எல்லைக்குள் விலங்குகள் சிக்காமல், பசியில் மரிக்கும் சிங்கங்களுமுண்டு. அப்படியானால், சிங்கம் என்னும் விலங்குக்கு ஏன் மனிதருள் இவ்வளவு மதிப்பு? 10000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதனுக்கு அடுத்தபடியாக அதிகமாக பூமியில் வாழ்ந்த பாலூட்டி சிங்கம் தான்…
ஸெரெங்க்கெட்டி – நாள் ஐந்து
தான்ஸானியா உலகின் மிக அதிகமான யானைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்று. தந்த வேட்டைக்காக, உலகில் அதிக யானைகளை இழந்த நாடு என்றும் சொல்லலாம். 2009 ஆம் ஆண்டு, கிட்டத்தட்ட 1 லட்சம் யானைகள் இருந்தன. இன்று வெறும் 40000 யானைகளே மிஞ்சியுள்ளன என்கின்றன அரசுப் புள்ளி விவரங்கள். இவை பெரும்பாலும் தான்ஸானியாவின் மற்ற 15 தேசியப் பூங்காக்களிலும், வனங்களிலும் அதிக வசிக்கின்றன. சராசரியாக, ஒரு நாளைக்கு 30 யானைகள் தான்ஸானியாவில் தந்தத்துக்காகக் கொல்லப்பட்டிருகின்றன.
ஸெரங்க்கெட்டி நான்காம் நாள்
வண்டி, மீண்டும் சாலையேறி, தட தட தட தட.. பத்து நிமிடங்கள் கழித்து, தூரத்தில் ஒரு ஸஃபாரி வாகனம் நின்று கொண்டிருந்தது.. அதன் மேற்கூரையைத் திறந்து ஒரு சுற்றுலாப்பயணி, தொலைநோக்கியில் பார்த்துக் கொண்டிருந்தார்.. நாங்களும் நிறுத்தி, அண்ணல் நோக்கிய திசையை நோக்கினோம். தொலைவில், அக்கேசியா மரங்களின் குடுமியைக் கொய்து கொண்டிருந்தன சில ஒட்டகச்சிவிங்கிகள்.. முதல் முறை பார்க்கும் போது, ஒரு காட்சிப் பிழையெனத் தோன்றும்.. மரத்தை விட உயரமான விலங்கு
ஸெரங்க்கெட்டியில் மூன்று நாட்கள்
தொலைவிலேயே குன்றுகளென மத்தகங்கள் தென்பட்டன. அந்த இடத்தில் நிலப்பரப்பு கொஞ்சம் சரிந்து, ஒரு நீர்நிலை உருவாகியிருந்தது. 20-25 யானைகள் இருக்கலாம். சாலையில் வாகனம் மெல்லச் சென்றது. சாலையும், அச்சரிவில் இறங்கியது. அந்த நீர்நிலையைத் தாண்டிச் செல்ல ஒரு சிறு பாலம்.. வண்டி மெல்ல இறங்கத் துவங்கியதும், நெடுநெடுவென வளர்ந்திருந்த புல்லின் பின்னால் ஒரு தாய் யானையும் குட்டியும் மேய்ந்து கொண்டிருந்தன. ஒரு வித்தியாசம் – இங்கே பெண்யானைக்குக் கொம்பிருந்தது. கொஞ்சம் சிறிது. வண்டியை நிறுத்தினார் ஜெர்ரி.. புஸ் புஸ் என மூச்சின் ஒலி மிகத் தெளிவாகக் கேட்டது.. குட்டியானை சமத்துச் செல்லமாக சிறு புட்களை மேய்ந்து கொண்டிருந்தது.. இரண்டும் எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை.
பிளவுப் பள்ளத்தாக்கு
மெல்ல மெல்ல வாகனம் மேடேறியது. வெறும் செம்மண் பூமி, மெல்ல அடர்ந்த வனமாகத் துவங்கியது. ஒரு 9:30 மணி வாக்கில் ங்கொரொங்கோரோ க்ரேட்டர் வாயில் தென்பட்டது. அங்கே வாகனத்தை நிறுத்தி, மேலே செல்ல அனுமதிச் சீட்டு வாங்கி வந்தார் ஜெர்ரி. இறங்கி, அந்த அலுவலகத்தைப் பார்வையிட்டோம். மலையேற்றம் துவங்கியது. இடது புறத்தில் ஆழமான பள்ளத் தாக்கு, அதை மூடிய பெரும் மரங்கள் என காட்சி அற்புதம் நம் மேற்குத் தொடர்ச்சி மலைகளை நினைவுபடுத்தியது. பனிமனிதனில், ஜெயமோகன் உருவாக்கிய, பனிமனிதர்கள் வசிக்கும் காடு போல என நினைத்துக் கொண்டேன்.
டமன்யாரா, ஸெரெங்கெட்டி, ங்கொரொங்கோரோ
ஆருஷா தாண்டியதும் சாலையோரத்தில் காஃபித் தோட்டங்கள் பயணத்தினூடே வந்தன. ஆஃப்பிரிக்க காஃபி நல்ல தரமான காஃபி. (எத்தியோப்பியக் காஃபிதான் உலகின் சிறந்த காஃபி எனச் சொல்லுகிறார்கள்.. கொலம்பியர்கள் மறுப்பார்கள்). இன்னும் சற்றுத் தாண்டியதும், சாலையோரம் மாடு மேய்க்கும் மஸாய் மாறா என்னும் மக்கள் தென்பட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கறுப்பு சிவப்பு நிறக்கட்டங்களில் பெரும் போர்வைகள் போன்ற ஆடைகள் அணிந்திருந்தார்கள். கையில் கூர்மையான ஆயுதங்கள், அல்லது குறைந்த பட்சம் கோல்கள். இவர்கள் மாடு மேய்க்கும் யாதவர்கள்.. ஆனால், நம்மூர் பிஹாரி யாதவர்களுக்கும், தமிழ் நாட்டுக் கோனார்களுக்கும் இவர்களுக்கும் ஒரு பெரும் வித்தியாசம் உண்டு. இம்மாடுகள் பால், மற்றும் இறைச்சிக்கும் உபயோகப்படுத்தப் படுவதுதான்.
பக்கிரிப் பிள்ளையும் உப்புப் பருப்பும்
தளவாய்ப்பேட்டையில் வாழ்கையில் புரட்டாசி மாதங்களில் விரதம் இருப்போம். காலையில் சோறு குடிக்காமல் பெருமாபாளையம் பெருமாள் கோவிலுக்குப் போய் வந்த பின்பு மதியச் சோத்துக்கு குழம்புக்குப் பதிலாக பருப்பு இருக்கும். பருப்பு எனில் வெறும் பருப்பல்ல. கடுகு, கறிவேப்பிலை கொண்டு தாளிக்கப்படும் அது “உப்புப் பருப்பு” என அழைக்கப்படும். சுடுசோற்றில் உப்புப் பருப்பையும் நெய்யையும் கலந்து (காலை பட்டினிக்குப் பின்பு) கட்டினால் அது அமிர்தம் என அழைக்கப்படும். அந்த உப்புப் பருப்பு வடித்த நீரில் செய்யப்படும் ரசம் – அமிர்த ரசம்.
”எப்படி இருக்கு?” என்றார் வாசி. “அற்புதம்” என்று சொன்னேன். உணவினூடே அவரின் பாட்டனார் (எள்ளா கொள்ளா தெரியவில்லை) தென் ஆப்பிரிக்கா வந்த கதையைச் சொன்னார். “சின்னப் பயனா இருக்கும் போது அவருக்கு யாரோ இங்க வந்தா மண்ணுல மம்பட்டியப் போட்டுத் தோண்டுனா தங்கம் கிடைக்கும் சொன்னாங்கன்னு வந்தாராம்”. உப்புப் பருப்புக்கப்பறம் இது ரெண்டாவது க்ளூ, நெம்ப ஸ்ட்ராங்கான க்ளூ . இனி பொறுப்பதில்லை தம்பீன்னு அந்தக் கேள்வியைக் கேட்டேன். “உங்க சர் நேம் என்ன?”
“கோவேண்டர்” இதற்கு அடுத்த கேள்வி கேட்பது வேஸ்ட் என்றாலும் கேட்டேன் – “எந்த ஊர்?” – “கோயமுத்தூர் பக்கம். ஆனால், என்ன ஊர் என்பது தெரியாது.”
கல்லறையின் மீதொரு தேசம் – 2
இந்தப் படுகொலை துவங்கிய முதல் ஆறு வாரங்களில் கிட்டத்தட்ட 8 லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். இது நாஜிக்கள் யூதர்களைக் கொன்று குவித்ததை விட ஆறு மடங்கு அதிக வேகம். ஏன் இந்த வேகம்? ஹூட்டு அடிப்படை வாத ரவாண்டா அரசுப் படைகள் (Rawanda Government Forces (RGF)) – பால் ககாமேயின் ரவாண்டா தேச பக்த சக்தியை (Rwanda Patriotic Forces (RPF)) அஞ்சின என்பது ஒரு காரணம். முழுமையான போர்க்களத்தில் ககாமேயின் படைகளை எதிர்த்து வெல்லும் என்னும் நம்பிக்கை RGF தளபதிகளுக்கு இல்லை. எனவே, ககாமே கைப்பற்றும் முன், முடிந்த வரை டூட்ஸிகளைக் கொல்வோம் என்பது ரவாண்டா ராணுவத்தின் நிலையாக இருந்தது. RGF இன் இந்த போர்த் தந்திரத்தை, பால் ககாமே தமக்கு மிகச் சாதகமாக உபயோகித்துக் கொண்டார். RGF டூட்ஸிகளைக் கொல்வதில் மும்முரமாக இருக்க, பால் ககாமே, ரவாண்டாவைக் கைப்பற்றுவதில் மும்முரமாக இருந்தார்.
கல்லறையின் மீதொரு தேசம் – 1
”ஹைதர்”, விஷால் பரத்வாஜின் ஒரு முக்கியமான திரைப்படம். கஷ்மீரிகளின் தனி வாழ்வில், அரசியல் ஊடும் பாவுமாகப் பின்னிச் செல்வதை உணர்வுப் பூர்வமாகச் சொல்லும் திரைப்படம். காதலியின் சகோதரன், சண்டையில் கொஞ்சமும் எதிர்பாராத முறையில், காதலனின் கரங்களால் கோரமாகக் கொல்லப் பட, காதலியின் மனம் பேதலித்துவிடுகிறது. அவள் திண்ணையில் அமர்ந்து, காலமும், இடமும் மறந்து, மனதை உலுக்கும் சோகப் பாடலொன்றைப் பாடத் துவங்குகிறாள். பலநாட்கள் மனத்தை அதிரச் செய்த காட்சி அது. இரண்டு ஆண்டுகள் கழித்து, அக்காட்சியை, நேரில் காண்பேன் எனக் கனவும் கண்டதில்லை.
அரவிந்த் கண் மருத்துவக் குழுமமும், அரசு நிர்வாகமும்
கிராமங்கள் தோறும், கண் சிகிச்சை முகாம்கள் அமைத்து, இந்த தொழில் மாதிரியின் நுகர்வோரான ஏழை மற்றும் கீழ் நடுத்தர மக்களின் கண் திறன் பரிசோதிக்கப் பட்டு, அறுவை சிகிச்சை தேவைப் படும் நோயாளிகள் பிரிக்கப் பட்டு, இலவசமாக, அரவிந்த மருத்துமனைக்கு, ஒப்பந்தப் பேருந்துகளில் அழைத்து வரப்படுகிறார்கள். கிட்டத் தட்ட ஒரு நாளைக்கு 900-1000 அறுவைச் சிகிச்சைகள் நடத்தப் படுகின்றன. ஒரு வருடத்துக்கு கிட்டத் தட்ட 3 லட்சம் அறுவைச் சிகிச்சை செய்கிறார்கள்.
இதன் மிக முக்கியப் பயன் – மிகக் குறைந்த செலவு. அமெரிக்காவில் 1700 டாலர் செலவு பிடிக்கும் இந்த அறுவை சிகிச்சைக்கு (1.15 லட்சம் ரூபாய்), இந்தியாவில் தனியார் மருத்துவமனையில் 25 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும் இந்தச் சிகிச்சைக்கு, அரவிந்த் செலவழிக்கும் தொகை 30 டாலர்கள் (2000 ரூபாய்) மட்டுமே. அதுவும், பணம் செலுத்தும் நுகர்வோரிடம் இருந்து வசூலிக்கப்பட்டு, ஏழை மற்றும் கீழ் நடுத்தர மக்களுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது. இவ்வளவு குறைவான செலவிலும், இலவசத்திலும் சிகிச்சை அளித்த பின்பும் அரவிந்த குழுமம் லாபகரமாக இயங்குகிறது என்பது உலக அதிசயங்களுள் ஒன்றுதான். இவ்வளவு குறைந்த செலவு எனில், தரம் குறைந்த சிகிச்சையோ?
தான்ஸானியாவின் தேர்தல்
அந்த ஞாயிறு தேர்தலின் போதே வன்முறை வெடிக்கும் என்றார்கள். மாலை வரை ஒன்றும் நடக்கவில்லை. கை பேசியில் எல்லோருமே இதை உறுதி செய்தார்கள். பின்னர் திங்கள் முதல் வாக்கு எண்ணிக்கைகள் துவங்கும். திங்கள் மாலையிலிருந்து வன்முறை துவங்கலாம் என்றார்கள். அலுவலகத்தில் மிகவும் பதட்டத்துடன் காத்திருந்தோம். முதல் முடிவுகள் செவ்வாய் மதியவாக்கில் துவங்கியது. சிசிம் முன்னிலை என்றார்கள். மெல்ல மெல்ல முடிவுகள் வரத்துவங்கின. வியாழன் காலை மகுஃபுலி தான் என்று முடிவாகியது. முடிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என, லோவாஸா, அன்று மாலை நான்கு மணிக்கு, தலைநகர் டார் எஸ் ஸலாமில் பெரும் பேரணி நடத்துவார் என்றார்கள். அலுவலகத்தில் பலரும் மதிய உணவுக்குப் பின் கிளம்பி விட்டார்கள். நானும் வீட்டுக்குச் சென்றேன். ஊர்வலம் நடக்கவில்லை. மாலை அருகிலுள்ள சாலையில் அமைந்திருந்த பேக்கரிக்குச் சென்றேன். பெரும் ஊர்வலம். சிசிஎம்மின் வெற்றி ஊர்வலம். சிறு சிறு வண்டிகள், பைக்குகள், ஓட்டை கார்கள் என ஊர்வலம் செல்ல.. பலர் – அதிக அளவில் பெண்கள் உற்சாக நடனமிட்டுச் சென்றார்கள். இம்மக்களின் நடனத்தின் போது, அவர்கள் உடல் மொழியில் வெளிப்படும் உற்சாகமும், சக்தியும் நம்மைத் தொற்றிக் கொள்பவை.. பார்த்துக் கொண்டிருந்த போது…
அந்த மூன்று மாதங்கள் – ஜெய்ராம் ரமேஷின் "To the Brink and Back"
ஏற்கனவே, ராஜீவ் காந்தி, வி.பி சிங் மற்றும் சந்திரசேகர் அரசுகளில் பொருளாதார ஆலோசகராகவும், திட்டக் கமிஷனின் உறுப்பினராகவும் பணியாற்றியிருந்த ஜெய்ராம் ரமேஷ், அன்று பிரதமராகப் பணியேற்ற பி.வி.நரசிம்ம ராவ் அலுவலகத்தில் ஆஃபிஸர் ஆன் ஸ்பெஷல் ட்யூட்டி என்னும் பொறுப்பில் நியமிக்கப் படுகிறார். 1991 ஜூன் மாதத்தில் பணியில் சேரும் அவர், செப்டம்பர் மாதத் துவக்கத்தில் திட்டக் கமிஷனுக்கு அனுப்பப் படுகிறார். சரியான காரணங்களின்றி. ஆனால், அந்த மூன்று மாதங்களில் இந்தியாவின் பொருளாதாரப் பாதையில் திசையே மாறுகிறது. அந்தக் காலகட்டதைப் பற்றிய இந்தப் புத்தகம் ஜெய்ராமின் பார்வையில் இருந்து எழுதப் பட்டிருக்கிறது.
உழுதுண்டு வாழ்வோம்! – பகுதி 2
இன்றைய உலகமயமாக்கல் சூழலில், இந்தியா தனது நலன்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? மிகத் துரதிருஷ்டவசமாக, இந்திய மனநிலையில், அரசு நிறுவனக் கொள்கைகளில், strategic Doctrine என்பது இல்லவே இல்லை. பாதுகாப்பு, வெளியுறவுத் துறைகளின் சிறந்த நிபுணர்களான சுப்ரமணியம் போன்றோர் இதை வலியுறுத்திப் பேசி வந்திருக்கிறார்கள்.
உழுதுண்டு வாழ்வோம்!
புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப் பட்ட கடந்த 24 வருடங்களில், இந்தியாவின் பொருளாதார நிலை, பெருமளவு மாறியுள்ளது. வறுமை குறைந்து, கல்வியறிவு பெருகி, சமூக வளர்ச்சியின் பெரும்பாலான குறியீடுகள் முன்னேற்றப் பாதையில் செல்கின்றன. ஆனால், இந்தக் கால் நூற்றாண்டில் மாறாத ஒரே விஷயம், வேளாண்மைத் தொழிலின் லாப நிலை. பணப்பயிர்களை உழவிட்டு, கடன் பட்டு, கடன் கழுத்தை நெருக்க, சுருக்குக் கயிற்றை நாடும் விவசாயிகளின் எண்ணிக்கை குறையாததே! இதே காலகட்டத்தில், ஒரு முக்கிய வேளாண் பொருளான பாலின் உற்பத்தி 55 மில்லியன் டன்னிலிருந்து, 140 மில்லியன் டன்னை எட்டியுள்ளது (கிட்டத்தட்ட 300%). இதற்கீடான ஒரு உணவு உற்பத்திச் சாதனை உலகில் அதிகம் இல்லை. பால் உற்பத்தியில் நஷ்டமேற்பட்டு, ஒரு உழவர் கூட தற்கொலை செய்துகொண்டதாகச் செய்தியில்லை. பால் உற்பத்தி செய்யும் உழவர்களில் பெரும்பாலோனோர் 2-3 மாடு / எருமைகள் வைத்து பால் உற்பத்தி செய்யும் சிறு விவசாயிகள்தாம்.
இந்த முரண்பாடு எப்படி நிகழ்ந்தது?
இந்தியாவின் மிகப் பெரும் பால்பொருட்கள் உற்பத்தி நிறுவனமான அமுல், இந்த ஆண்டு 20,000 கோடி வியாபாரத்தை எட்டியுள்ளது.
அம்பாஸடர்ஸ் க்ளப் – புத்தக அறிமுகம்
1991 ல் பாரதம் மேற்கொண்ட பொருளாதாரச் சீர்திருத்த காலத்தில், உலகில் பல நாடுகள் இதே போன்ற சிக்கல்களை எதிர்கொண்டன. அர்ஜெண்டினா போன்ற நாடுகள் பெரும் பண வீக்கத்தால் மக்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தின. ரஷ்யா பல சிறு நாடுகளாக வெடித்துச் சிதறி, உணவுப் பற்றாக்குறையைச் சந்தித்தது. ஆனால், இந்தியாவின் பொருளாதாரச் சீர்திருத்தம், மக்களை நேரடியாக அவதிக்குள்ளாக்கவில்லை. படிப்படையாக ஏழ்மை குறைந்து, நாடு வளமுற்றது. இதை ”மத்திமப் பாதை” என்னும் பெயரில், டாவோஸில் நடந்த வருடாந்திரப் பொருளாதார உச்சி மாநாட்டில், உலக நாடுகளின் முன் வைத்தார். அரசின் கட்டுப்பாடுகளில் இருந்து …
ஷ்யாம லீலா
விலை: லிட்டருக்கு 23 ருபாய். மார்க்கெட் விலை – 18 ரூபாய். வாங்கும் அளவு மாதம் 5 லட்சம் லிட்டர். நிறுவனத்துக்கு நஷ்டம் வருடம் : 3 கோடி. (அன்று சென்னை கோட்டூர்புரத்தில், ஒரு கிரவுண்ட் 15 லட்சம் விலை). மும்பை நிறுவனத்துக்கு ஒரு கடிதம் எழுதச் சொன்னார். அடுத்த மாதம் முதல் தேதியில் இருந்து, உங்களிடம் இருந்து வாங்கும் மெழுகெண்ணெயின் கொள்முதல் விலை ரூ.18 என நிர்ணயிக்கப் படுகிறது.
இருக்கையில் இருந்து குதித்தே விட்டேன். “சார், ஸ்டாம்ப் பேப்பரில் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது”, என்று பதறினேன்.
இருக்கும் இடத்தை விட்டு
“மெட்ராஸ்ல நீர் இருக்கும் இடம் கொஞ்சம் மேலே.. இங்கே பரம்பரையாக, கிணறுகளும், ஏரிகளும் தான் நீராதாரம். இப்போ, ஃப்ளாட்டுகள் வந்து, காங்ரீட் போட்டு எல்லாத்தையும் மூடியாச்சு. அதனால, அந்தக் குறைந்த ஆழத்துல கிடைக்கிற நீர நாம எடுக்கறதில்லை. அதை விட ஆழமா ஓட்டை போட்டு, பாறையத் தொளச்சு, அங்கிருக்கற உப்பு நீர எடுக்கறோம்.. இந்த ரிப்போர்ட்ல பார் – 8 அடியில் மணல் இருக்கிறது. அது கிட்டத் தட்ட 30 அடி வரை இருக்கு. அதுக்கப்புறம் – களிமண். அதனால, நான் சொல்றேன் – வெட்டு என்றார்..
The Wolf of Wall Street – திரைப்படம்
ஜோர்டான் பெல்ஃபோர்ட் என்னும் பங்குச் சந்தைத் தரகரின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது இப்படம். கடுமையாக உழைத்து, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு லாபம் ஈட்டி, தனக்கும் பணம் சேர்க்கும் கனவோடு, அனுபவமில்லா இளைஞனாக ஒரு பங்குச் சந்தை நிறுவனத்தில் சேரும் ஜோர்டானுக்கு ஞானஸ்னானம் செய்விக்கிறார் முதலாளி. முதலீட்டாளனை ஏமாற்றி, மேலும் மேலும் பங்குகளை வாங்க, விற்க வைத்து, இரண்டு முறையும் தரகு பெற்றுக் கொள்வதே அடிப்படைப் பாடம். முதலீட்டாளனை, தன் முதலை வெளியே கொண்டு செல்ல விடாமல், மேலும் மேலும் அச்சுழலில் அமிழ்த்துவதே ஒரு பங்குச் சந்தைத் தரகன் செல்வந்தராகும் வழி என்னும் “உண்மையை” எடுத்துச் சொல்லி, தொட்டுக் கொள்ள கோக்கேயினையும் இதர போதைப் பொருட்களையும் பழக்கிவைக்கிறார். தாய் முலையறியும் சேய் போலப் பிடித்துக் கொள்கிறான் ஜோர்டான்.
காட்டோடைகளும் கங்காணிகளும்
என் மகனுக்கு, ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு பெரும் சூப்பர் ஸ்டார். எனவே அவன் பிறந்த நாளுக்கு, வால்டர் ஐசக்ஸன் எழுதிய ஸ்டீவ் ஜாப்சின் சரிதத்தை வாங்கிப் பரிசளித்தேன். அதன் தடிமனைப் பார்த்ததும், ஸ்டீவ் ஜாப்ஸ் ஆக வேண்டுமென்ற ஆசையையே விட்டு விட்டான். எனவே, வாங்கி விட்ட பாவத்துக்குப் படிக்கத் துவங்கினேன். ஆனால், அது ஜெயமோகன யட்சி போலப் பிடித்துக் கொள்ளும் என்று அப்போது தெரியவில்லை.
அன்னாவும், அருணாவும்
இன்றைய கொந்தளிப்பான பொது மனநிலையில், அன்னாவின் தரப்புக்கு மாற்றுத் தரப்பு என்றாலே, “நீ யார்.. உனக்கு என்ன தகுதி” என்ற கேள்விகள் எழுவது இயல்புதான். அதுவும் சோனியா காந்தியின் தலைமையில் அமைந்துள்ள தேசிய ஆலோசனைக்குழுவின் உறுப்பினர் என்னும் போது, காங்கிரஸின் கையாள் என்பது போலத் தோன்றி விடுகிறது. ஊடகங்கள் பலவற்றிலும், அருணா அவ்வாறே சித்தரிக்கப் படுகிறார். இன்று அன்னா வெற்றி பெற்று, எல்லோரும் ஆசுவாசம் கொண்டுள்ள நிலையில், நாம் அருணா ராயைப் பற்றிக் கொஞ்சம் பேசுவது அவசியம்.
அம்மாயி
அம்மாயிக்கு பால் கறக்கும் நேரம் வந்தவுடன் சோகம் எல்லாம் பறந்து விடும். “யார்ளா அது.. போ.. போ நாம் பால் பீச்சோணும்” என்று துரத்தி விட்டு, தன் பொழைப்பைப் பார்க்கப் போய்விடும். சிக்கனத்தின் சின்னம். வருடத்துக்கு 3-4 வெள்ளைச் சேலைகள் மட்டும் தான் அம்மாயியின் அலங்காரம். பால் காசை மிச்சம் பிடித்து, சீட்டுப் போட்டு, ஓட்டு வீடு கட்டி, புள்ளைக்கும், பையனுக்கும் கல்யாணம் பண்ணி வைத்தது.
மேலாளன் என்பான்…
தன் மேலாளனுக்கு வேலை தெரியாது என்று புறம் கூறுவர் சிலர். மேலாளனைவிட தாம் அதிகத் திறன் பெற்றவர் என்று பீற்றிக் கொள்வர் சிலர். சச்சின் டெண்டுல்கர் உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுள் ஒருவர். அவரளவுக்கு, பேட்டிங் திறனும், ஸ்டைலும் அற்றவர் தோனி. ஆனால், தோனிக்கு, சச்சின் டெண்டுல்கரோடு, இன்னும் ஒன்பது பேரைச் சேர்த்து, அதை ஒரு வெல்லும் அணியாக மாற்றும் திறன் உண்டு என்பதை நாம் யாவரும் அறிவோம். சச்சினின் செயல் திறனை, அணிக்குத் தேவையான பயன் திறனாக மாற்றி, இலக்கை எட்டுபவர் தோனி.
மத்தகங்கள் வீழ்ந்த காலம்!
நுகர்வோரைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் விளம்பரப் படுத்தி, சிகரெட் வியாபாரத்தில் கொண்டிருந்த வலிமையை உபயோகித்து, பொருளை எளிதாகச் சந்தைப் படுத்தவும் செய்தது. கார்ட் வீல் பல்டி அடித்து வந்து அன்னையைத் தழுவிக்கொள்ளும் குட்டிப் பையன் விளம்பரம் அன்று மிகப் பிரபலம். 90களின் இறுதியில், ஐ.டிஸி, எண்ணெய்த் தொழிலை, கான் அக்ரா என்னும் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்றது. ஏன்?
அன்புள்ள முதல்வருக்கு..
தமிழகத்தின் பாசன நீர்த் தேவையில் 60 சதத்திற்கும் மேலாக நெல்லுக்கு உபயோகப் படுகிறது. திருந்திய நெற்சாகுபடி என்னும் புது முறையில், ஒரு குத்துக்கு ஒரு நாற்று உபயோகிப்பதும், நீர் நிறுத்திப் பாசனம் செய்யாமல், காய விட்டு, மற்ற பயிர்களைப் போல் நீர் பாய்ச்சுவதும் நல்லதென்று சொல்கிறார்கள். இதனால், தண்ணீர்த்தேவை 50 சதம் குறைகிறதென்றும், மகசூல் 25-40 சதம் அதிகரிக்கிறதென்றும் சொல்கிறார்கள். ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தும் முறை இது – உபரி நீரை அதிக நிலத்தில் பாசனம் செய்ய உபயோகிக்கலாம்.
சந்தை என்னும் கோவில்: நுகர்வோர் என்னும் கடவுள்
குப்புற விழுந்து, மூஞ்சியும் முகரையும் பெயர்ந்த பின்பு, அந்நிறுவனம், தொலைபேசிக் கட்டணம், ஒரு தபால் கார்டை விட மலிவானதாக இருக்க வேண்டுமென்று எங்கப்பாரு சொன்னாருன்னு ஒரு புதுக் கதை சொன்னது.. நுகர்வோருக்கான மாபெரும் சலுகை என்று அலைபேசிக் கருவிகளை ஐந்நூறு ரூபாய்க்குத் தந்தது.. பல ஆயிரம் கோடிகள் நஷ்டம்……தேவைப் பட்டால், விதிமுறைகளையும் அரசாங்கங்களையும் மாற்றும் வல்லமை படைத்தவர்கள். ஆனால், பாவம் பத்து ரூபாய் ப்ரீபெய்ட் வாங்கும் ஒரு சாதாரண நுகர்வோரை வீழ்த்த முடியாமல் போயிற்று.
சந்தை என்னும் கடவுள்
ஒரு ப்ரசெண்டேஷனுக்கு ஆறு கோடியா? சொக்கா என்று நினைத்துக் கொண்டேன். அடுத்த 45 நாட்களுக்குள் 1000 டன்னையும் வாங்கி ஒரு பெரிய எண்ணெய் டாங்கில் சேமித்துவைத்தோம். மே மாதம் துவங்கி, ஊர் எல்லை மைல்கல்லில் காத்திருக்கும் பாரதிராஜாவின் கதாநாயகி போல் ஓணம் வரக் காத்திருந்தேன். ஓணம் முடிந்தபின் விலைகள் எகிறும் என்பதே எங்கள் தாரக மந்திரம். 60 ஆண்டுகளின் புள்ளிவிவரம் எங்களுக்குச் சொன்னது அஃதே. ஓணம் வரை விலை 60லிருந்து 63க்கு எழுந்தது. எங்களுக்கு லேசான பெருமிதம். நாங்க யாரு?
தளவாய்ப்பேட்ட சந்தையும், மேலாண்மை உத்தியும்
ஒரு சின்ன விளையாட்டில் துவங்கி, பேரம் பேசுதலின் பல்வேறு அம்சங்களை விளக்கினார். முதலில் சொன்னது – அடிப்படை உழைப்பு. எந்த ஒரு பொருளை வாங்க வேண்டுமென்றாலும், அதைப் பற்றிய விவரங்கள், அதை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பற்றிய தகவல்களை முதலில் சேகரிக்க வேண்டும் என்றார். இது பால பாடம். பங்கு பெற்ற எல்லோருமே செய்வதாகச் சொன்னார்கள். அதைக் கேட்டு ஜேம்ஸ் பாண்ட் பட வில்லி மாதிரி சிரித்த அவர் அடுத்து ஒரு புள்ளி விவரம் கொடுத்தார்.
ஆர்தர் ஆஸ்போர்னின் ரமணர்
ஆஸ்போர்னின் இப்புத்தகத்தில் எழுதியுள்ள மொழி மிகப் புதிதாய் இன்றும் இருக்கிறது. ஒரு காலமின்மையை (timelessness) எவரும் உணர முடியும். சுத்தானந்த பாரதியின் மொழி இன்றில்லை. இன்று படிக்கும் ஒரு மனிதருக்குச் சலிப்பு தட்டும் நடை. ஆனால், ஆஸ்போர்னைப் படிக்கும் எவரும் அதன் ”இன்றைய” மொழிநடையினால், மிக எளிதாகப் படித்துச் செல்லமுடியும். அதே போல் வாக்கியங்களின் அமைதியும் அவரின் மொழியாளுமைக்குச் சான்று.
நான் வளர்கிறேனே மம்மி
உள்ளே போனதும், சட்டையைக் கழற்றி, தன் கையை உயர்த்தி, அக்குளைக் காட்டியது. “முடி முளைச்சிருக்கா?” எனக்குப் புரிந்துவிட்டது. வெளியே வந்து, “இவுங்களுக்கும் growing up classes நடக்க ஆரம்பிச்சிருச்சா?” என்றேன் விஜியிடம். “ஆமா, நாலு நாளா ஒரே இம்சை.”
நண்பேன்டா..!
கிட்டத்தட்ட அதே போல் இருந்த என்னுடன் முதல் பெஞ்சில் அமர்ந்தான். மேல் காகிதம் பிரிந்ததும் ஒட்டும் self adhesive tape போல இருவரும் ஒட்டிக் கொண்டோம். 200 மீட்டர் தள்ளி இருக்கும் பள்ளிக்கு சைக்கிளில்தான் செல்வேன் என்னும் வீம்பு கொண்ட விடலைப் பருவம். பின்னே எம் குலப் பெண்டிருக்கு முன்னே கால்நடையாகச் செல்வது இழுக்கல்லவா?