ஆஃபன்பர்க் பல்கலைக்கழகம் அங்கிருக்கும் தனித்த முதியோர்களின் நலனைப் பொறுப்பேற்று கொண்டிருந்தது. விருப்பமுள்ள மாணவர்கள் அவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்குத் துணையாக இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டதால் சரண் மழலையர் பள்ளிக்குச் செல்லாமல் சில வார இறுதிகளில் ஏதேனும் ஒரு வீட்டுக்குச் சென்று அங்கிருக்கும் வயதானவர்களுடன் நடைப்பயிற்சிக்கு துணையாகப் பேசிக்கொண்டே செல்வது, சீட்டு விளையாடுவது, தேநீர் தயாரித்து அவர்களுக்குக் கொடுத்து தானும் அருந்திக் கொண்டு இருப்பது என நேரம் செலவழித்தான்.
Category: இதழ்-325
லெமன் சாதம்
என் அண்ணன் நல்ல பெயரெடுப்பதற்காகவே, “நானே சமைக்கிறேன்..அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடுங்கடா..ஓட்டல்லாம் வேணாம்..” என்றான். என் சின்ன அண்ணன் சரி என்பது போல் தலையாட்டினான். எனக்கு கோபம், அழுகை பொத்துக்கொண்டு வந்தது. கோபம் காட்ட இயலாத இடத்தில், அழுகைதானே வரும். என் சின்ன அக்காதான், “நம்ம வேணா வீட்டில சாப்பிட்டுக்கலாம்..பாவம் போத்தி ஓட்டல்ல வாங்கி சாப்பிட்டுக்கிட்டும்” என சொன்னாள்.
மிளகு அத்தியாயம் எழுபத்தேழு
டொக் டொக் என்று கட்டைகளைத் தரையில் மோதினால் வரும் ஒலி. உள்கதவு திறந்து கைத்தடியை ஊன்றியபடி மிளகுராணி ஜெர்ஸுப்பா மகாராணி சென்னபைரதேவி தளர்ந்து நடந்து வந்து கொண்டிருந்தாள். ஒரு வாரத்தில் அவளுடைய தளர்ச்சியும் வயதும் இருமடங்கு அதிகரித்திருந்ததாக பெத்ரோவுக்குப் பட்டது. தன்னையும் முதுமையும் தளர்ச்சியும் தொற்றி, தசை, நாளங்களூடாக பீடித்ததாகத் தோன்றியது.
அருண்பாண்டியன் கவிதைகள்
அச்சத்தில் ஆடை நனைந்து உலராமல் ஊமைவாடையடித்தால்
களைந்து நிர்வாணமாகிவிடுவோம் மரங்களோடு மரங்களாக
ஈச்சம் முட்களைப்போல்
உன் ரோமங்கள்
நீட்டிக்கொள்ளும் அளவிற்கு
என் உதடுகளை உன் கழுத்தில் பதிக்கிறேன்
அன்னம் பூவின் அடிக்கிழங்கைப்போல்
வெளுத்த உன் தேகம்
வெந்து தணியாத காயம் – ஓவியர் ஃப்ரான்சிஸ் பேகன் (Francis Bacon)
பார்க்கும் பார்வை சிந்தைக்குள் ஏற்படுத்தும் தாக்கத்தின் (impression) அடிப்படையில் வரைய தொடங்கினர் சில ஓவியர்கள். வடிவமைப்பிற்கு, தத்ரூபத்திற்கு, உணர்ச்சிகளுக்கு இரண்டாம் இடத்தை கொடுத்து, நிறங்களுக்கும் , நிறங்களினால் ஏற்படும் உணர்ச்சிகளுக்கும், சாமானிய சூழல்களுக்கும், தூரிகை அசைவுகளும் முதலிடம் கொடுத்தனர் இந்த இயக்கத்தினர். இந்த இயக்கத்திற்கு இம்ப்ரெஷசனிசம் (impressionism) என பெயர் சூட்டினர் கலை விமர்சகர்கள்.
மனக்கணக்கு
“எனக்கா தொழில் நுட்பம் தெரியாது? பார்த்தாயா உன் கண் முன்னே வந்து நின்றுவிட்டேன். குவாண்டம் பிணைப்பு இணைப்பை (Quantum Entangled Connection) எனக்கும் பயன்படுத்தத் தெரியுமாக்கும். அதுமட்டுமல்ல, எனக்கும் அறிவியல் புரியும் கண்ணா. அதை நிரூபிக்கத்தான் இப்படி வந்தேன்.. ஹா ..ஹா” என்று இடித்துச் சிரித்தாள் புவனா.
சூஃபி ஷாஹ் இனாயத் ஷஹீத்
ஷாஹ் இனாயத்தின் தியாகத்துக்கு 305 ஆண்டுகள் கடந்துவிட்ட இக்காலப்பகுதியில், சமூக நீதிக்காவும், தீவிர ஜனநாயகத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்த இந்த மண்ணின் மைந்தன் ஷாஹ் இனாயத்தின் மரபுகளை இன்றைய 21 ம் நூற்றாண்டின் இந்திய-பாகிஸ்தானிய புதிய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்வதற்கும், புத்துயிரூட்டுவதற்குமான முயற்சியாக இந்தக் கட்டுரை அமைகிறது.
தூவானமும் வெண்வானமும்
நாணல் தண்டின் ஒரு கணுவின் வெட்டப்பட்ட சிறு பகுதியும் துளிர்த்து வளர்ந்து பரிசலுக்கு நீர்மட்டம் காட்டும் கோலைச் சூழ்ந்து மறைப்பதுபோல் ஓர் இரவு மட்டும் நிகழ்ந்த நமது சந்திப்பு குறுகியதாக இருப்பினும் அந்நினைவுகள் வளர்ந்து வாழ்வில் குறுக்கிடுகின்றன.
கானலின் நீரோ, காட்சிப்பிழையோ?
பார்வையாளனின் மூளை படைப்பை எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும், அதை எப்படி அவருக்குக் கடத்துவது எனத் தனக்கென விதிகளை உருவாக்கிக்கொள்வதனால் நவீன ஓவியர் ஒரு தேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி (Neuroscientist) போலச் சிந்திக்கிறார். எதை வரைவது, எதை விடுப்பது அல்லது சிதைப்பது என்று அவர் கருதும் பொழுது, அந்த விடுதலும் சிதைத்தலும் எப்படிப் பார்வையாளானின் மூளையால் இட்டு நிரப்பப்படும் அல்லது சரிகட்டப்படும் என்று அவர் தீர்மானித்தாக வேண்டும்.
அமானுஷ்யம்
ஒரு சமாதி மேல ஒரு உருவம் ஒன்னு உக்காந்திருக்கு. அலை அலையா தெரியுது. தலை நிறைய பூவு. முகதத்துல மஞ்சள் தடவி அந்த நேரத்துல எப்பிடின்னு எங்களுக்கு லேசா உதர ஆரம்பிக்குது. எங்களுக்கு அதுக்கும் ஒரு பத்தடி நீளம் இருக்கும். அது அங்க நின்னுட்டே அதோட கைய்ய பத்தடிக்கு மேல நீட்டி கண்ணனோட கழுத்த பிடிச்சது. கண்ணன் கத்துறான். எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரில. கண்ணனை பிடிச்சி நாங்க இந்த பக்கம் இழுக்குறோம். ஒரு ரெண்டு நிமிஷம் இந்த போராட்டம் நடந்துருக்கும்.
அதிரியன் நினைவுகள் – 42
எனது தற்கொலைக்கு உதவக்கூடிய ஒரு நல்ல கூட்டாளியைத் தேடினேன். கடந்த கோடையில், தான் இல்லாதபோது எனக்கு மருத்துவம் பார்க்க ஹெர்மோஜேனெஸ் அலெக்ஸாந்திரியாவைச் சேர்ந்த ஓர் இளம் மருத்துவரைத் தெரிவு செய்திருந்தார் ; பெயர் ஐயோலாஸ் ; அவனிடம் முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தேன். அவனும் நானும் அவ்வப்போது கூடிப் பேசுவோம். பொருட்களின் இயல்பு மற்றும் தோற்றம் பற்றிய கருத்தியங்களை இந்த இளம் மருத்துவனிடம் சேர்ந்து கட்டமைப்பதில் எனக்கு உண்மையில் மகிழ்ச்சி. அவனிடமுள்ள துணிச்சலும், கற்பனையும், ஆழமான கண்களில் கனல்போல எரிகிற உற்சாகமும் எனக்கு விருப்பமானவை.
வருணன் கவிதைகள்
யாவரும் உறங்குவதைப் பார்த்துப் பார்த்து
சலித்துப் போயிருந்தது அவ்வீட்டின் இரவுக்கு
மழலையின் சிணுங்கலும் அழுகையும்
கேட்கத் துவங்கிய நாள்
தெய்வநல்லூர் கதைகள் – 20
இன்று இருப்பதுபோல தேர்வானாலும் ஆகாவிட்டாலும் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அனுப்பும் முறை அன்று இல்லை. ஆகவே சில வகுப்புகளில் இருமுறை (சிலர் மூன்று முறை) அமர்ந்து வந்த தகை சால் மாணவர்கள் சிலர் எல்லா வகுப்பிலும் உண்டு. அவ்வாறே உடலால் இளமையும், மனதால் முதுமையும் எய்திய மாண்பமை மாணாக்கரும் உண்டு. இவர்கள் இருவரும் இணைவதால் உருவாகும் அணியே வகுப்புகளில் அதிருப்தி அணி என ஆனது. சரியாக மீசை வளராத வாழைத்தண்டு கால்களோடு எங்கள் குழு போன்ற “நல்மாணாக்கர்” முதல் வரிசைகளில் அமைய முருங்கைக் கம்பளியின் முதுகுமயிர் வரிசையென அமைந்த மீசையும், மயிரடர்ந்த கால்களுமாய் இன்னொரு குழுவும் வகுப்புகளில் அமைந்தன.
மெல்ல மழுங்கடிக்கும் செயற்கை நுண்ணறிவு அபாயம்
செயற்கை நுண்ணறிவுத் துறை சமீப காலமாக, ஜிபிடி போன்ற வஸ்துக்கள் வந்து மேலும் பயத்தை மக்களிடையே உருவாக்கியுள்ளது. எதைக் கேட்டாலும், ஒரு பணிவான உதவியாளரைப் போல உருவாக்கித் தரும் வல்லமையை இந்த மென்பொருட்கள் பெற்று விட்டன. ஏன், கணினி நிரல்களைக் கூட தப்பில்லாமல் உருவாக்குகின்றன. இதன் சக்தி எல்லோரையும் கதி கலங்க வைத்தாலும், செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள், ஊடங்கங்களில் அதைத் திரித்து, சமாளிக்கின்றன
உடைதல்
இருட்டு தைரியத்தில்
நெருங்கினோம்
மின்னலுக்கு திடுக்கிட்டு விலகினோம்
கை நழுவிய தேநீர் கோப்பை
டிட்டினாங்…கென்று
விழுந்து உடைகிறது
இனி
கோப்பை உதவாது
தேநீரும் உதவாது
கானல் குருதி
செல்போன் மணியடித்து விழிக்கும் போது பேருந்து, திண்டுக்கல்லை தாண்டியிருந்தது. அரைத்தூக்கத்தில் போனை எடுத்து பேச காதோரம் வைக்கும் போது “போன் பேசதாடா” என கத்தியபடி போனை பிடுங்கி வீசினான் பக்கத்தில் இருந்தவன். நல்லநேரமாய், போன் சொத்தென வெற்றிலைகூடையில் விழுந்தது, கொஞ்சம் தவறியிருந்தாலும் போன் பணால் ஆகியிருக்கும். விமல் கன்னத்தில் அந்தப் பையனின் நகம் பட்டு லேசான கீறல், தொட்டு பார்த்தான் லேசாய் எரிந்தது.
சகுனங்களும் சம்பவங்களும் – 2
அவர் கங்காரு போலவும், நீர் தெளிப்பான் போலவும் ஆடுகிறார். அந்த ஆட்டத்தை நேரலையில் பார்த்தபோது எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இதைவிடக் கொடுமையான ஆட்டங்களை ஹிந்தி, தெலுங்கு, தமிழப் பட குத்தாட்டங்களில் பார்த்திருக்கிறேன்.
அரக்கனின் கனவு
அந்தக் கனவு மிகவும் சுருக்கமாக இருந்தது. அரக்கன் நிலாப்பூக்கள் நிறைந்த வயலில் ஒடினான், அந்த நிலாப்பூக்களின் காம்புகள் அவனது ரத்த நாளங்கள் போல் தோற்றமளித்தன. அந்தப் புற்களின் ஒவ்வொரு இழையும் அவனது கணுக்காலில் கத்தி போல் கிழிப்பதாகக் கலார் உணர்ந்தாள். காற்றின் பெருமூச்சு அவளுக்குக் கேட்டது. அரக்கனின் உடற்தொகுப்பு முறுக்கிக்கொள்ளும் ஓசையை அவன் பேசுகையில் உணர்ந்தாள்.
என்னைப் போல் ஒருவன்?
நம் அத்வைத வேதாந்தம், உணர்வு என்பது ஒன்றே, பல மனிதர்கள், பல மனதுகள், பல உயிரிகள் என்று கண்டாலும், எல்லாவற்றிலும் இருப்பது ஒரு உணர்வே; அதை ப்ரக்ஞை, சைதன்யம் என்றெல்லாம் பெயரிட்டு நாம் அழைக்கிறோம் எனச் சொல்கிறது. மூளை பௌதீக வடிவம் கொண்ட ஒரு கருவி, மனம் என்பது எங்கும் பயணிக்கும் ஒரு செயல், இவ்விரண்டும் பொருள் என எதால் அறியப்படுகிறதோ அதுவே உணர்வு
கர்மவீரன் நாகுவும் கத்தேமார் மாங்காய் மூட்டையும்
ஒருவேளை தூரத்தில் இருந்து ஆண் ஜாடையாகத் தெரிந்தாலும் அந்தப் பெண் கிட்டப்பார்வையில் சுமாரான அழகாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நம்புவதற்கு முயற்சித்தான். சரி போய்த்தான் பார்ப்போம். யார் கண்டது? எது எப்படிப் போனாலும் சங்கரன் மாமா ஜனாதிபதி மாளிகையில் நல்ல செல்வாக்கோடு திகழ்ந்து அதனால் தனக்கு அலுவலக ரீதியாக ஏதேனும் நல்ல வாய்ப்பும் சவுகரியங்களும் கிடைக்கலாமே என்றும் நினைத்தான்.
தனிமைக்குப் பிரபஞ்சம் என்றும் பொருள்
குடுவைக்கு வெளியே நீந்துபவை
கடல் நட்சத்திரங்களெனக்
காலத்துக்கும் நம்பிடும்
தொட்டி மீன்
கடலையே பார்த்ததில்லை
மாலையும் மாதவிடாய் நாட்களும்
அவன் எப்படியும் வருடா வருடம் மாலையிடத்தான் செய்வான்.தனக்கு எப்படியும் இன்னும் பத்து பதினைந்து வருடங்களுக்கு மாதவிடாய் வரவே செய்யும். உண்மையில் அவளுக்கு அவன் மாலையணிவதில் அவளுக்கு சந்தோசமே .காரணம் காலையில் அவனுக்காக சமைக்க வேண்டியதில்லை . பிள்ளைகளுக்கு மட்டும்தான் அதுவம் சிறிய அளவில். மதியம் கொஞ்சம் கூடுதலாக அப்பளமோ பொரியலோ செய்வதில் அவளுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை.
குமார சம்பவம் மஹா காவ்யம்- 9
சர்வபக்ஷன்- கிடைத்ததை உடனடியாக முழுவதுமாக உண்பவன் என்று அக்னிக்கு பெயர். பகவான் சொன்னார், சர்வபக்ஷ! மிகப் பெரும் செயலை உன்னிடம் ஒப்படைக்கிறேன். என்றார். தேவி மலைமகளோ சபித்தாள். எனக்குரியது என் மகனைப் பெறுவது என்ற செயல், அதைப் பறித்த உன்னை குஷ்டம் வந்து ஸூழட்டும் (புகை அக்னியுடன் இணைந்தே இருப்பது)
மதுக்கூடம்
சார், உங்களுக்கு விஷயம் தெரியாதா? ரெண்டு நாள் முன்னாடி கடையில நடந்த ஒரு சண்டையில அந்த கவுன்சிலர் பையனும் அவனோட கூட்டாளிங்களும் சேர்ந்து தொரக்கண்ணு தலையில பீர் பாட்டிலால அடிச்சிட்டாங்க. மண்ட ஒடஞ்சு ரத்தம் கொட்டுச்சு. ஓனர் உடனே அவன பக்கத்துல இருக்குற நர்சிங் ஹோமில சேத்துட்டார். கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரின்னா கேஸ் ஆயிடும்ல
வாழ்த்துகளும் அறிவிப்புகளும்
சொல்வனம் இதழ்கள் பிரதி மாதம் இரண்டாவது/ நான்காவது ஞாயிறுகளில் வெளியிடப்படுகின்றன. பிரசுர தினத்துக்கு ஆறு நாட்கள் முன்பு எங்களை வந்தடையும் படைப்புகளை மட்டுமே உடனடி இதழுக்குப் பரிசீலிக்கிறோம். அந்த நாளுக்குப் பிறகு எங்களை வந்தடைவன அடுத்த இதழுக்கு ஒத்தி வைக்கப்படும்.
