அக்கரைப் பச்சை

ஆஃபன்பர்க் பல்கலைக்கழகம் அங்கிருக்கும் தனித்த முதியோர்களின் நலனைப் பொறுப்பேற்று கொண்டிருந்தது. விருப்பமுள்ள மாணவர்கள் அவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்குத் துணையாக இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டதால்  சரண் மழலையர் பள்ளிக்குச் செல்லாமல் சில வார இறுதிகளில் ஏதேனும் ஒரு வீட்டுக்குச் சென்று அங்கிருக்கும் வயதானவர்களுடன்   நடைப்பயிற்சிக்கு துணையாகப் பேசிக்கொண்டே செல்வது,  சீட்டு விளையாடுவது, தேநீர் தயாரித்து அவர்களுக்குக் கொடுத்து தானும் அருந்திக் கொண்டு இருப்பது என நேரம் செலவழித்தான்.