ஒரு தூரிகை

ஸியனூக் பதவியிலிருந்து கட்டாயப்படுத்தி அகற்றப்பட்டபோது, அவள் கம்போடியாவை விட்டு நீங்கியிருக்கிறாள், ஒருக்கால் ஸிஐஏ உதவியோடு வெளியேறி இருக்கலாம். அப்போது பௌல் பாட்டின் தலைமையில் கமேயர் ரூ(ஸ்)ஜ் தலைநகரைக் கைப்பற்றி, அதன் இருபது லட்சம் குடிமக்களைக் கிராமப்புறங்களில் கட்டாய உழைப்பு முகாம்களுக்கு அனுப்பத் துவங்கியபோது, அங்கே தனிச் சொத்து இல்லாத கூட்டுச் சமூகங்களில் ‘புது கமேர்களாக’ ஆக அவர்கள் பயிற்சி பெற வேண்டி இருந்தது! சுமார் பத்து லட்சம் பேர்கள் இதில் உயிரிழந்தனர். அதற்கு முந்தைய வருடங்களில் பெனாம் பென் நகரும், அதைச் சூழ்ந்திருந்த கிராமங்களும், அமெரிக்க பி-52 விமானங்களால் திட்டமிட்டுக் குண்டு வீச்சால் தாக்கப்பட்டிருந்தன. அதில் சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்திருந்தனர்.