வெளி மூச்சு – 2

This entry is part 2 of 2 in the series வெளி மூச்சு

நம் மூளைகளைப் பற்றிய ஒரு ஆய்வு நம் கடந்த காலத்தைப் பற்றிய மர்மங்களை விளக்கவில்லை, மாறாக எதிர்காலத்தில் நமக்கு என்ன காத்திருக்கிறது என்று விளக்கியதை சிலர் ஓர் அங்கதமாகக் கருதுகிறார்கள். ஆனால் நாம் கடந்த காலத்தைப் பற்றியும் மதிப்பு மிக்கதாகச் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்றுதான் நான் நினைக்கிறேன். இந்த அண்டம் ஒரு பிரும்மாண்டமான மூச்சுப் பிடிப்பு நிலையில் துவங்கி இருக்கிறது. அது ஏன் என்று யாருக்குத் தெரியும், ஆனால் காரணம் என்னவானாலும், அப்படி நடந்தது பற்றி எனக்கு மகிழ்ச்சிதான், ஏனெனில் என் இருப்புக்கு அதுதான் காரணம்.

வெளி மூச்சு

This entry is part 1 of 2 in the series வெளி மூச்சு

சாவு நேரும் வகையான விபத்துகளில், மண்டை ஓடு உடைந்தால், மூளை தங்கத்தால் ஆன மேகம் போல சீறிப் பாய்கிறது என்பதும், சின்னாபின்னமான சரடுகளையும், தகட்டையும் தவிர பயனுள்ள எதுவும் கிட்டுவதில்லை என்பதும் சராசரி நிகழ்வு. பல பத்தாண்டுகளாக, ஒரு நபரின் அனைத்து அனுபவங்களும் தங்கத் தகடுகளில் பொறிக்கப்படுகின்றன என்ற கருத்துதான் நினைவு சக்தியைப் பற்றிய கோட்பாடாக இருந்தது; விபத்துகளுக்குப் பிறகு காணப்பட்ட துகள்களுக்கு, வெடிப்பால் கிழிக்கப்பட்ட இந்தத் தகடுகளே காரணம். உடற்கூறியலாளர்கள் இந்தத் தங்கத் தகடுகளின் சிறு துகள்களைச் சேகரிப்பார்கள்- அவை அத்தனை மெலிதாக இருப்பதால் ஒளி அவற்றூடே கடந்து போகையில் பச்சையாகத் தெரியும்- பிறகு பல வருடங்கள் செலவழித்து அவற்றைத் திரும்ப இணைக்க முயல்வார்கள்,

பெரும் மௌனம்

அலெக்ஸ் என்ற ஆஃப்ரிக்க சாம்பல் நிறக் கிளி இருந்தது. அந்தக் கிளி அதன் அறிவுத் திறனால் புகழ் பெற்றதாக இருந்தது. அதாவது, மனிதர்களிடையே புகழ்.
ஐரீன் பெப்பர்பெர்க் என்ற மனித ஆய்வாளர் அலைக்ஸை முப்பதாண்டுகள் கவனித்து ஆராய்ந்தவர். அவர் அலெக்ஸுக்கு வடிவங்களுக்கும், நிறங்களுக்கும் உள்ள சொற்கள் தெரிந்திருந்தன என்பதோடு, அவனுக்கு வடிவுகள், நிறங்கள் ஆகியவற்றின் கருத்துருக்களும் புரிந்திருந்தன என்றும் கண்டறிந்திருந்தார்.
ஒரு பறவையால் அரூபமான கருதுகோள்களைப் புரிந்து கொள்ள முடியும் என்பது பற்றிப் பல அறிவியலாளர்கள் ஐயம் கொண்டிருந்தனர். மனிதர்களுக்குத் தாம் ஏதோ தனிச் சிறப்புள்ள உயிரினம் என்று நினைக்கப் பிடிக்கும். ஆனால் இறுதியில் பெப்பர்பர்க் அவர்களை அலெக்ஸ் வெறுமனே சொற்களைத் திருப்பிச் சொல்லவில்லை, அவனுக்குத் தான் என்ன சொல்கிறோம் என்பது புரிந்திருந்தது என்று ஏற்க வைத்தார்.

பெரும் மௌனம்

மனிதர்கள் அரெஸிபோவின் துணைகொண்டு வேற்றுகிரக நூண்ணறிவை தேடுகிறார்கள். தொடர்பை உருவாக்கிக் கொள்ளும் அவர்களுடைய விழைவின் உந்துதல் எவ்வளவு வீரியமானதென்றால் அதற்காக பிரபஞ்சத்தின் குறுக்கே அதை கேட்பதற்கான வல்லமையுடைய செவியை அவர்கள் உருவாக்கியுள்ளார்கள். ஆனால் நானும் என் சக கிளிகளும் இங்கேயே உள்ளோம். எங்களுடைய குரல்களை கேட்பதில் அவர்களுக்கு ஏன் ஆர்வம் இல்லை? மனிதன் அல்லாத இனமான எங்களால் அவர்களுடன் தொடர்பு கொள்ள இயலும். மிகச் சரியாக, எங்களைத் தானே அவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா?

மனித விஞ்ஞானத்தின் பரிணாமம்

மீ-மனிதர்களின் அறிவியலால் விளைந்த பல நன்மைகளை யாரும் மறுக்கவில்லை. ஆயினும், மனித ஆராய்ச்சியாளர்கள் மீது இந்த நிலையின் தாக்கம் வேறு விதமாக இருந்தது. தங்களால் இனி அறிவியலுக்கு எந்த புதிய கண்டுபிடிப்பையும் அளிக்க முடியாது என்று உணர்ந்த அவர்களில் சிலர் ஆராய்ச்சித் துறையை விட்டு விலகினர்.

புரிந்து கொள் – 6

என் பெயரை ரெய்னால்ட்ஸ் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே நான் இத்தனை மாறுதல்களையும் செய்து தயார் நிலையில் இருந்தேன். அவனுடைய அடுத்த வாக்கியம் என் அழிப்புக்கான கட்டளையாகத்தான் இருக்க வேண்டும். இப்போது என் புலன்களின் உள்ளெடுப்பு நூற்றி இருபது மில்லி-வினாடித் தயக்கத்துடன் நேர்கிறது. நான் மனித புத்தி பற்றிய என் முந்தைய ஆராய்வை மறுபடி சோதிக்கிறேன், அவன் சாதித்தது சரியாக இருக்குமா என்று தெளிவாகச் சோதிக்கிறேன்.

புரிந்து கொள் – 5

என் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் ஒருவனுடன் கலந்து பேசுவதும், எனக்குத் தோன்றாத ஒரு புதுக் கருத்தை அவனிடம் பெறுவதும், எனக்குக் கேட்காத சுஸ்வரங்களைக் கேட்கக் கூடியவனைக் காண்பதும் எத்தனை இன்பம் கொடுக்கக் கூடிய அனுபவங்கள்! அவனுமே இதைத் தான் விரும்புகிறான். இந்த அறையை விட்டு இருவரில் ஒருவன்தான் உயிரோடு வெளியே போகப் போகிறோம் என்பது எங்கள் இருவருக்குமே மிகக் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

புரிந்து கொள் – 4

அண்டப் புளுகை அவிழ்த்து விடும் விளம்பரங்கள் மனிதர் அறிவை முடக்கப் பயன்படுத்தும் உத்திகளைப் போன்ற புத்தியைக் கட்டுப்படுத்தும் சக்திகளை நான் வளர்த்துக் கொண்டிருக்கிறேன். முழுக்க உடல் வழியே மட்டும் வெளிப் போகும் அலைவீச்சுகளை நான் கட்டுப் படுத்தி இருப்பதால், பிறரிடம் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி கச்சிதமான மறுவினைகளை உசுப்பி எழுப்ப என்னால் இப்போது முடிகிறது. ஃபெரொமொன்களாலும்(வாசமுள்ள உடல் கசிவுகள்), தசை இறுக்கங்களாலும் என்னால் பிற மனிதரைக் கோபமூட்ட முடியும், பாலுறவுணர்வை அவரிடம் தூண்ட முடியும், பரிவுணர்வை அவரிடம் எழுப்ப முடியும். நண்பர்களாக்கவும், அவர்களை வசப்படுத்தவும் நிச்சயமாகவே முடியும்.

புரிந்து கொள் – 3

ஒரு பயங்கரக் கும்பல் வாஷிங்டன் மாநகரத்து மெட்ரோ ரயில் அமைப்பை வெடி குண்டு வைத்துத் தாக்க்த் திட்டமிட்டிருந்தது சி ஐ ஏ இயக்குநருக்குத் தெரிந்திருந்தது. இருந்தும் அவர் அந்த வெடிகுண்டுத் தாக்குதலை நடக்க விட்டார். அதைச் சாக்காக வைத்து, மிகக் கடுமையான எதிர் நடவடிக்கைகளை அக்கும்பலின் மீது செலுத்த நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறுவது அவர் திட்டம். இறந்த பல பயணிகளில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் இருந்தான்.

புரிந்து கொள் – 2

என்னை சிஐஏ மேன்மேலும் சோதனைகள் நடத்துவதற்குப் பயன்படுத்த விரும்பலாம், மற்ற நோயாளிகளையும் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்து இப்படியே பயன்படுத்த விரும்பும். அதற்குப் பிறகு வெளியாட்களில் தானாக முன்வருபவ்ர்கள் சிலரை சிஐஏ பொறுக்கி எடுத்து, அவர்கள் மூளைகளுக்குப் பிராணவாயு கிட்டாமல் அடைத்து வைத்து சேதமாக்கி, பின் மீட்டு எடுக்க ஹார்மோன் கே சிகிச்சை அளிக்கும். எனக்கு சிஐஏ உடைய சொத்துப் போலாக விருப்பமில்லை.

புரிந்து கொள்

மோசமான கனாக்கள் வருவது நின்ற பின் நான் கொஞ்சம் ஓய்வெடுக்க முடிந்தது. முதல் மாறுதல் நான் கவனித்தது, நான் படிக்கிற வேகமும், படித்ததைப் புரிந்து கொள்கிற வேகமும் மிகவும் கூடியிருந்தன. சீக்கிரம் ஏதோ ஒரு நாளைக்குப் படிக்க வேண்டும் என்று அலமாரியில் நாட்களாய் தொடாமல் வைத்திருந்த புத்தகங்களை எல்லாம், படிக்கக் கடினமாய் மிக டெக்னிகலாக இருந்த புத்தகத்தை எல்லாம் படித்து முடித்திருந்தேன்.