அமெரிக்காவின் உணர்ச்சி நிறைந்த வரலாறு ஒரு நாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள அந்த நாட்டில் வாழ்ந்த அனுபவம் மட்டுமில்லாமல் அதன் வரலாறு, அங்கு நடக்கும் அரசியல், பொது நிகழ்வுகள், வாழ்க்கை முறை, மக்கள் என்று அனைத்தையும் வாசித்தும், கண்டும், கேட்டும் உணர்ந்துகொள்ள வேண்டும். என் குடும்பத்துடன் அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்து கிட்டத்தட்ட கால் “தோல்விகளைக் கடந்து எழுந்த தேசம்”
Tag: சரித்திரம்
மகட்பாற் காஞ்சித் துறைப் பாடல்களில் பொதுமுனைவுக் கருத்து
மக்கள் இனக்குழுச் சமுதாயமாக வாழத் தொடங்கியதன் பிறகு அரசு உருவாக்கம் ஏற்பட்டது. இவ்வாறு உருவான அரசுகள் பல்வேறு இனக்குழுச் சமுதாயங்களைத் தமக்குள் உள்வாங்கிக் கொண்டு விரிவடையத் தொடங்கின. தமிழ்ச் சமுதாயம் எவ்வாறு இனக்குழுச் சமுதாயத்தில் இருந்து வேந்தர்களின் ஆட்சியின் கீழ் வந்ததெனச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது. இனக்குழுத் தலைவனுக்கும் வேந்தனுக்கும் இடையில் நடந்த பூசல்களின் பதிவாகவே மகட்பாற் காஞ்சிப் பாடல்கள் உள்ளன.
’கலையும் காலமும்’ வழங்கிய விட்டல் ராவ்
கேரளத்தின் மரச்சிற்ப அறிவுக்குச் சான்றாக நிற்பது இந்த பைரவ சிற்பமாகும். பைரவரின் சித்தரிப்பு அச்சம் தரக்கூடியதாகஇருக்கிறது. பைரவரின் விழி பிதுங்கிப் பற்கள் தெரிகிறது.கடைவாய் இரண்டிலும் கோரப்பற்கள் வளைந்து காணப்படுகிறது. காது குண்டலங்கள் யானைத்தலைகளாய்த் துதிக்கைகள் மேலோங்கிய சித்தரிப்பு, கழுத்தை அலங்கரிக்கும் ஆபரணங்களுக்குக் கீழாக இரு நாகங்கள் பின்னிப்பிணைந்து பக்கத்திற்கு ஒன்றாக படமெடுத்து ஆடுகின்றன
ஐன்ஸ்டீனுடன் பயணித்தபோது
“ இவர்கள் இருவரையும் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் தமிழில் தோன்றிய பக்தி இலக்கியம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் கணேசா. பக்தி இலக்கியம் ஆரம்பித்தது பல்லவர் காலத்தில் இருந்து தான் என்று நான் நினைக்கிறேன். வேறு எம்மொழியிலும் தமிழில் தோன்றிய அளவு பக்தி இலக்கியம் தோன்றவில்லை. இலக்கியத்தின் மூலம் சமய மறு மலர்ச்சி ஏற்பட்டது. சமண, புத்த மத தாக்கங்களில் இருந்து, சைவ, வைணவ மதத்தை மறுமலர்ச்சி செய்ததில் தமிழ் பக்தி இலக்கியங்கள் முக்கிய பங்கு வகித்தன. அதில் முன்னோடியாக இருந்து ஆரம்பித்து வைத்தவர் அப்பர் என்று அழைக்கப் பட்ட இந்த திருநாவுக்கரசர் சுவாமிகள் தான்.
சிந்தனையின் சுருக்கமான வரலாறு
புத்தகம் அறிவோம்: வாழ்வதற்கான ஒரு தத்துவ வழிகாட்டி அறிமுகம் “சிந்தனையின் சுருக்கமான வரலாறு: வாழ்வதற்கான ஒரு தத்துவ வழிகாட்டி(A Brief History of Thought: A Philosophical Guide to Living (Learning to Live))” என்ற இந்த புத்தகத்தினை சமகால ப்ரெஞ்ச் தத்துவ ஆசிரியர் லூக் பெரி “சிந்தனையின் சுருக்கமான வரலாறு”
கஞ்சா
இரண்டு நாட்களுக்கு முன்பு சர்வதேச செய்திகளில் சிங்கப்பூர் பல்கலைக்கழக மாணவரொருவர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வைத்திருந்தாக கைதுசெய்யபட்டது பேசுபொருளாக இருந்து. போதையூட்டும் தாவரங்கள் குறித்த ஆய்வில் இருப்பதால் நான் அதுகுறித்து மேலும் தேடித்தேடி வாசித்துக்கொண்டிருந்தேன் சிங்கப்பூரில் போதைப்பொருள் சார்ந்த குற்றங்களுக்கு மிகக் கடும் தண்டனைகள் வழங்கப்படும். இந்த மாணவனுக்கு “கஞ்சா”
மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்பது
போன மாதம் பிரார்த்தனை மண்டபத்தை பெரும்பான்மை வைதீக மதத்தினர் அடித்து நொறுக்கி தீர்த்தங்கரரின் நாசியை உடைத்தார்கள். நாம் மௌனமாக இருந்தோம். போன வாரம் புதியதாகக் கட்டப்படும் வசதி முழுக்கக் கட்டாமலிருக்கும்போதே மாமிசத் தாக்குதலை எதிர்கொண்டது. நான்கு தீர்த்தங்கர் சிலாரூபங்கள் மேலும் பசுமாமிசம் விழுந்து தரையில் படிந்து துர்நாற்றத்தைக் கிளப்பி உள்ளே வந்தவர்களை விரட்டுகிறது. அரண்மனைக்கு மிளகு விற்பது தான் குறிக்கோள். போர்த்துகல்லுக்கு எவ்வளவு மிளகு விற்பனையாகுமோ அவ்வளவுக்கு அரசாங்கமும் செழிக்கும்.
அதிரியன் நினைவுகள் – 11
எனது கணிப்புகள் பொய்த்துவிடும் போலிருந்தன. யூத மற்றும் அரேபிய தரப்ப்பினர் போருக்கு விரோதமாக இருந்தனர்; மாகாணச் செலவதர்களான பெரும் நிலவுடமையாளர்கள் தங்கள் பகுதியைத் துருப்புக்கள் கடந்து செல்வதால் ஏற்படும் செலவினங்களால் எரிச்சலுற்றனர்; படையெடுப்பு காரணமாக விதிக்கப்பட்ட புதிய வரிகளை நகரங்களால் சமாளிக்க முடியவில்லை. பேரரசர் திரும்பிய மறுகணம், இவை அனைத்தையும் தெரிவிக்கின்றவகையில் பேரழிவு ஒன்று நிகழ்ந்தது: டிசம்பர் மாத நடுநிசியொன்றில் ஏற்பட்ட நிலநடுக்கம், அந்தியோக்கியாவின் கால்வாசிப் பகுதியை ஒரு சில நிமிடங்களில் நாசமாக்கியது. ஒர் உத்திரமொன்று விழுந்ததில் திராயான் காயமுற்றிருந்தார், இருந்தபோதும் பேரிடரில் காயமுற்ற பிறருக்கு உதவுவதில் அவர் காட்டிய ஆர்வம் போற்றுதலுக்குரிய அபாரமான செயல். மன்னருடன் இருந்தவர்களில் சிலரும் விபத்தில் மாண்டிருந்தனர்
மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு
நானும் கேலடி அரசரின் ஆதரவைத்தான் முதலில் திட்டமிட்டேன்” என்றான் நேமி. ”எல்லாவற்றுக்கும் அவரை அழைத்து வந்து நடுவில் உட்கார வைத்து தலைப்பாகை கட்டுவது அவருக்கு தன்னைப் பற்றி அதிகமாக ஒரு தோற்றம் மனதில் ஏற்பட வைக்கும். கல்யாண வீட்டிலே மாப்பிள்ளை, சாவு வீட்டிலே பிணம் என்று எல்லா இடத்திலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். பில்ஜி அரசர் திம்மாஜியும் கேலடி அரசர் போல் நாயக்கர் வம்சம். இளம் வயது. நமக்குச் சென்று பழக எளியவர். தேவை வந்தால் கேலடி நாயக்கரையும் அழைத்துக் கொள்வோம்
மிளகு அத்தியாயம் இருபத்தைந்து
விஜயநகரம் என்றாலே விருந்து, பண்டிகை, இனிப்புகள், சிற்றுண்டிகள் என்று ஒரே வட்டத்திற்குள் மறுபடி மறுபடி போய் இணைந்து கொள்கிறதை பரமன் கவனித்தார். அவருடைய மனமும் உடலும் பல நூறாண்டுகள் முன்னால் போயிருக்க, சூழல் அவர் இதுவரை அனுபவித்தே இராத காலத்தில் தொங்கிக் கிடக்கிறது. இந்தச் சூழலுக்கு அவர் எப்படியோ வந்திருக்கிறார். தான் இரண்டு பேராக வாழ்கிறதாக மனம் சொல்ல, புத்தி ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
இந்தியத் தொன்மத்தின் மனவெளியில்
அனைத்திற்கும் முன்னே வருவது “மனஸ்”. அதற்கோ தான் இருக்கிறோமா இல்லையா என்பதுகூட தெரியாது. ஆதித்தருணத்தின் கடவுள், அதற்கு முதலில் பெயர் கூட கிடையாது, வெறும் “பிரஜைகளுக்கெல்லாம் அதிபதி” என்ற பட்டம் மட்டுமே. ஆனால் இதைக்கூட இந்திரன் பிற்காலத்தில் அதனிடம் “உங்களைப் போல் நான் ஆவதெப்படி” என்று கேட்கையில்தான் அது உணர்ந்து கொள்கிறது.
“ஆனால் நான் யார் (க)” என்ற கேள்வியுடன் பிரஜாபதி பதிலளிகிறார்.
“அதேதான், தாங்கள் தங்களை எவ்வாறு அழைத்துக் கொள்கிறீர்களோ அதுதான் நீங்கள், நீங்கள்தான் யார் (க) ” இந்திரன் பதிலளிக்கிறான். ஆக, பிரஜாபதி “க” வாகிறார்.
ஔரங்கசீப்பைப் பற்றிய சர்ச்சை
ஔரங்கசீப்பின் குற்ற உணர்வை வேறு மாதிரியாகக் காண்பிப்பதற்காக ஆட்ரி ட்ருஷ்கி செய்ததைப்போல் உண்மைக்குப் புறம்பான சுண்ணாம்புப் பூச்சை நான் செய்ய வேண்டிய அவசியமில்லை. காசி விசுவநாதர் கோயில், கிருஷ்ண ஜென்மபூமி மற்றும் ஆயிரக்கணக்கான கோவில்களை அழித்து அச்சிதிலங்ககளின்மேல் எழுப்பிய மசூதிகள் இன்றும் அவனது உருவ வழிபாட்டு எதிர்ப்புக்குச் சாட்சியாக நிற்கின்றன.
இந்தியாவுடன் பேசுவது
A Selection of English Language Broadcasts to India. Edited and with an Introduction by George Orwell. – நூலில் இருந்து சில புகைப்படங்கள்
மிளகு
சென்னபைரதேவி நாற்பத்து நான்கு வருஷங்களாக அரசாங்கம் நடத்தி வந்தாலும், ஆட்சியிலும் வாழ்க்கையிலும் சகல வெற்றியும் பெற்ற ஒரு அரசியாக இருந்தாலும், ஒரு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று விருப்பம் ஏனோ தோன்றியதில்லை. பெண்ணாகப் பிறந்தவள் பதினாறு வயதில் மண மண்டபத்தில் அக்னி வளர்த்துக் கைப்பிடிக்கக் காத்திருப்பவனோடு புது வாழ்க்கை தொடங்குவது எங்கும் வழக்கமாக இருக்க, சென்னா பதினாறு வயதில் அரசாள ஆரம்பித்து விட்டாள்.
நஞ்சை வாயிலே கொணர்ந்து!
அந்த சிறையறையில் கூடியிருந்தவர்கள் அனைவரும் மெளனமாகவும் துக்கத்தை கட்டுப்படுத்தியபடியும் இருந்தனர். அப்போதுதான் குளித்து விட்டு புத்துணர்வுடன் வந்த, இன்னும் சற்று நேரத்தில் விஷமருந்தி இறக்கப்போகும் அந்த மரணதண்டனைக் கைதி மட்டும் முகமலர்ச்சியுடன் இருந்தார். சிறைக்காவலரின் ஆணை கிடைத்ததும். அன்றைய கொலைத்தண்டனையின் உதவியாளனாக இருந்த அடிமை சிறுவன் உள்ளே சென்று “நஞ்சை வாயிலே கொணர்ந்து!”
பரதேவதையின் நிஜ ரூப தரிசனம்
தலைப்பைப் பார்த்தவுடன் இது அம்பாளைப்பற்றிய கட்டுரை என நினைக்கலாம். ஆனால் இது அம்பாளை போற்றும் ஒரு ஸ்துதியைப் பற்றிய கட்டுரை. அம்பாளை துதிக்க பல வழிகள் உண்டு. ஸ்தோத்திரங்கள் சொல்லி வழிபடலாம். ஒரு கோவிலில் அவளை ஆவாஹனம் செய்து துதிக்கலாம். மனதில் அவளை த்யானம் செய்யலாம். இவற்றையெல்லாம் விட “பரதேவதையின் நிஜ ரூப தரிசனம்”
வங்காள வரலாறு
750-1144 பாலா (Pala) வம்சத்து அரசினர் பல காலம் வங்காளத்தை ஆண்டனர். தர்மபாலா (770-810), தேவபாலா (810-850) ஆண்ட கால கட்டத்தில் அவர்களின் ஆட்சிப்பகுதி மேற்கில் மைய கங்கை பள்ளத்தாக்கிலிருந்து கிழக்கில் அஸ்ஸாம் வரை விரிந்தது. மஹாயான பௌத்தம், தாந்திரிகத்தை நோக்கி நகர்ந்தது. தர்மபாலா, பகர்பூரில் (Paharpur) சோமபுரா மஹாவிஹாரைக் கட்டினார். வங்காள தேசத்தில், ராஜ்ஷாஹி (Rajshahi) என்ற இடத்திலும் இந்த மஹாவிஹாரைக் கட்டியவர்
கல்வியும் தமிழ் பிராமணர்களும் – பத்தொன்பதாம் நூற்றாண்டு
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் திராவிடப் பேரறிஞர்களால் சொல்லப்படுவது இது: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழன் கல்வியறிவு பெற்று உலகம் முழுவதற்கும் பாடம் எடுக்கும் திறன் பெற்றிருந்தான். தமிழ்நாட்டில் பிராமணர்கள் நுழைந்து தமிழர் கல்வித் திறனைச் சீர் குலைத்தனர். பிராமணர் அல்லாதாரை படிக்கவிடாமல் தடுத்தனர். இன்றும் பல்வகைச் சூழ்ச்சிகளைச் செய்து “கல்வியும் தமிழ் பிராமணர்களும் – பத்தொன்பதாம் நூற்றாண்டு”
அமெரிக்கா உண்மையில் உலகில் எவ்வளவு நல்லது செய்திருக்கிறது?
கத்தோலிக்கக் கிறித்தவர்களும், கத்தோலிக்கக் கொள்கையை மறுத்துப் பிரிந்துசென்று போப்பாண்டவரின் ஆட்சிக்கு எதிரான கொள்கையைப் பின்பற்றுகிற பிராடஸ்டன்டுகளும் உடன்படிக்கையில் கையெழுத்திடுகிறார்கள். குண்டு வெடிப்புகளும் தீவிரவாத அச்சுறுத்தல்களும் மறைந்து அரசியல் போட்டி உருவாகிறது.
உயிர் பெற்றெழும் மறைந்த மொழிகள்
இந்தக் குழுவின் இறுதி இலக்கு என்பது, பல்லாண்டுகளாக மொழியியலாளர்களுக்கு வசப்படாத தொலைந்த மொழிகளைச் சில ஆயிரம் சொற்களைக்கொண்டு கட்டமைக்க முயல்வதுதான்.
சிலப்பதிகாரத்தின் காலம்
சிலப்பதிகாரம் ஒரு முழுமையான கட்டுக்கதை என்று சொல்லிவிட இயலாது. சிலப்பதிகாரக் கதைக்கு அடிப்படையான சில நிகழ்வுகள் உண்மையில் நிகழ்ந்தேறி இருக்கவேண்டும். பூம்புகாரைச் சேர்ந்த கண்ணகி என்ற வணிகர் குலப்பெண் ஒட்டுமொத்தத் தமிழ்ப் பெண் இனத்தின் அடையாளமாக உருவாகி இருக்கிறாள். கற்பின் அடையாளமாகவும், பத்தினித் தன்மையின் அடையாளமாகவும் அவளை முன்னிறுத்துகிற காவியமே சிலப்பதிகாரம் ஆகும்.
ஆஷ்விட்ஸை நோக்கி
எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலி நாட்டின் ஃப்ளோரென்ஸ் நகரத்தில் இருந்து நிர்மூலமாக அழிக்கப்படுவதற்காக ஆஷ்விட்ஸ் நகரத்திற்கு யூதர்கள் அனுப்பப்பட்டார்கள். அந்த நிகழ்வை மறக்கக் கூடாது என்பதற்காக இத்தாலிய அரசாங்கம் வருடந்தோறும் அதே ரயில் பயணத்தை நடத்துகிறது. இத்தாலிய மாணவன் இந்த வருடம் அந்தத் தொடர்வண்டியில் பயணித்து வரலாற்றின் சுவடுகளைப் “ஆஷ்விட்ஸை நோக்கி”
