போதும், கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னா, அழுகை. மேல படிக்கணும்னு. எட்டாவது முடிச்சோன்னயே, படிப்பை நிறுத்திட்டு கல்யாணம் பண்ணிடலாம் சொன்னேன். வேணாம்னு சொல்லிடாக. இப்ப பாருங்க. மாப்பிள தேடினா கிடைக்க மாட்டேங்குது. மளிகை கடை வச்சிருக்க நம்ம சொந்தகார பையனை முடிச்சிடலாம்னு பாத்தா, படிச்ச புள்ள மளிகை கடையில உக்காராதுனு என்கிட்டயே சொல்றான்.”
Tag: ஆக்கம்
கனவின் நீரோடை
கனவுகள் போல தாவரங்கள்
கரையின் இரு பக்கங்களிலும்
ரகசியக் குறிப்புகளோடு
தவமிருந்த மரங்களை இறுகப் பற்றியபடி
கனவுகள் போல தாவரங்கள்
கரையின் இரு பக்கங்களிலும்
ரகசியக் குறிப்புகளோடு
தவமிருந்த மரங்களை இறுகப் பற்றியபடி
அகர்ஷனா கவிதைகள்
பாதம் அழுத்தாமல் அடியெடுத்து
பாம்பு வால் ஆட்டி
நிமிர்ந்த காதுகளை கூர் சீவி
கெண்டைக் காலில் வந்துரசுகிறது
செங்காவி வண்ணம் என்னுள்
பாய்ச்ச முயற்சிக்கும் முனைப்பில்.
உணவு, உடை, உறையுள், … – 2
இத்தனை ஆண்டுகள் கழித்து எப்படி நேர்ந்தது என்று தெரியவில்லை. ‘ஸ்பெல்டா’வின் வளர்ச்சிக்கு நான் வரைந்த திட்டம் பயனில்லாமல் போகுமோ என்கிற அச்சம், ‘எரேஸ்’ துண்டுகளைப் பயன்படுத்துவோரின் கவனக்குறைவால் நேர்ந்த சில விபத்துகளை வைத்து பல மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வக்கீல்கள் தொடுத்த வழக்கு, கவலை இல்லாத எதிர்காலத்துக்கு வழி காட்டியதால் வந்த நன்றி உணர்வு, பழைய நினைவுகளின் தாக்கம், இவை அனைத்தும் கலந்து எனக்குக் கொடுத்த மனக்குழப்பம். அதில் இன்னொன்றையும் சேர்த்துவிட்டேன்.
அனாயாசம்
அம்மா மௌனமாக யோசித்தாள். ஒரு பெருமூச்சுக்குப் பின் பேச ஆரம்பித்தாள். ‘’மனுஷாள் எல்லாருமே சாவைக் கண்டு பயப்படறா. ஏன்னா சொந்த பந்தங்களோட இருக்கறதயும் லௌகிக சந்தோஷங்கள்ல மூழ்கியிருக்கறதலயும் மட்டுமே வாழ்க்கைன்னு நம்பறா. அப்படிப் பட்டவாளுக்கு சாவுன்னு சொன்னா பயம் வந்துடுது. சாவுக்கு அப்பறம் நாம என்ன ஆவோம்னு தெரியலயேங்கற பயம். அடுத்த ஜென்மம் பத்தி பயம்.
உச்சி
” இந்தா பாரும்மா, உனக்கு அந்த certificate கிடைக்காது. வீணா அலையாதே. கேட்டியா?” என்றார் பாஸ்கரன்.
தலையாரியின் கண்கள் கலங்கின.
வேதி எப்போதும் அது கிடைக்கும் என் நம்பியதில்லை. தலையாரி வலிந்து உதவியதால் மட்டுமே விண்ணப்பித்திருந்தாள். வேதி வெறித்த கண்களுடன் அலுவலரை பார்த்துக்கொண்டிருந்தாள். எதுவும் பேசவில்லை.
தலையாரி “ஐயா இது மகா பாவமுங்க” என்றார்.
பாஸ்கரன் “எனக்கு பாவ புண்ணியம் லாம் கணக்கில்ல பாத்துக்க?, என் கையெழுத்து இல்லாம ஒன்னும் முடியாது” என்றார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்
காடும்..
கூடும்..
பெருந்தேடலானதால்
பறத்தல் மறந்து
போயிருந்தது
நினைவில்
காடுள்ள பறவைக்கு
வெண்ணெய்த் தாழி
யமுனாவுக்கு குடைராட்டினம்தான் பிடிக்கும். சிங்கம் குதிரை அன்னபட்சி னு எல்லோரும் போட்டி போட்டாலும் இரட்டை நாற்காலிலதான் ஏறுவாள்.. கொஞ்சம் கொஞ்சமா வேகமெடுத்தவுடன் காற்றில் ஜிவ்வுனு பறக்கற மாதிரி இருக்கும்.
அமுதம்
வீட்டின் பின்னால் முருங்கைக்காய் பறிக்கச் சென்ற பார்வதி அரவம் கேட்டு ஓடிவந்து, “டேய்…உன்னப்பெத்தவடா நானு. நாரத்தண்ணியகுடிச்சா பெத்தவக்கூட பொம்பளையா மட்டுந்தான் தெரிவாளா…அவதான் என்னிய வயல்ல கொண்டு போய் போட்டுருங்கன்னா. அதுக்கு உங்கப்பன ஏண்டா அடிச்ச…அவரு எங்கூட இருக்காம உங்களுக்கே பண்ணையாளு வேல செஞ்சுக்கிட்டு வயல்லயே கிடக்கனுமா…” என்று அவன் சட்டையைப் பிடித்தாள்.
மீச்சிறு துளி
சம்பத், எப்போதுமே அவன் செய்யும் வேலைகளை ஈடுபாட்டோடு ரசித்து செய்பவன். ஆனால் தொழில் வெற்றிகரமாக தொடர்வதற்கு அதுமட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. நேரம் என்று பொதுவாகச் சொன்னாலும் காலம்தான் இவன் தொழிலை நலிவடையச் செய்தது. சைக்கிளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து தானியங்கி வாகனமாக மாறியது காலத்தின் மாற்றம்தானே. இவனும் காற்றடிப்பது, பஞ்சர் போடுவது என அவற்றின் வேலைகளையும் பார்த்தாலும் பழுது பார்த்தல் இவனால் இயலாததாகிவிட்டது.
வான்பார்த்தல்
அவள் ஐந்தாம் வகுப்பு படித்தாள். ‘அவளைவிட எனக்கு அறிவு மிகுதி’ என்று உணர்ந்திருந்தேன். ‘அவளைவிட எனக்கு அழகு மிகுதி’ என்று நினைத்திருந்தேன். ‘அவளைவிட எனக்கு வலிமை மிகுதி’ என்று உறுதியாக நம்பியிருந்தேன். ஆனால், அஞ்சனா தன்னுடைய அறிவையும் அழகையும் வலிமையையும் மறைத்து வைத்திருந்தாள். இந்த விஷயம் எனக்கு அவளுடன் பழக பழகத்தான் சிறுக சிறுகத் தெரிய வந்தது. ‘பெரும்பான்மையான பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்’ என்பது, எனக்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் புரிந்தது.
காதல்
அப்படி இல்லை. திமிர்த்தனம் மீதான என் பார்வை வேறு. அறிவு இருக்கும் இடத்தில் செருக்கு இருக்கும். ஆனால், இந்த செருக்கு தான் ஒரு கடிவாளம் போல செயல்படும். உன் விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. நீ இத்தனை காலமும் கைபடாத ரோஜாவாக இருக்கிறாயெனில் அதற்குக் காரணம் அந்தக் கடிவாளம் தான். எனக்கு விர்ஜின் பயல்களைப் பிடிக்கும். தவிரவும், உன் போன்ற அதிபுத்திசாலிகளைக் கண்டால் இப்படியெல்லாம் நடந்து கொள்ளும் அளவிற்குப் பிடிக்கும். விளைவுகளைப் பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லை. தவிரவும், இன்னும் முப்பது வருடம் நாம் ஒன்றாக பயணிக்க இருக்கிறோம். உனக்கும் என்னை விட்டால் வேறு மார்க்கமில்லை. பேசாமல் காதலிக்கலாமே?” என்றாள் காமினி தொடர்ந்து