ஏராளமான அண்மைக் காட்சிகள், Medium Shot-கள். தேவைப்பட்டாலொழிய, சட்டகத்தின் தெளிக்குவி நடுவத்தில் ஏனைய கதாபாத்திரங்கள் காட்டப்படுவதில்லை. பிரதான கதை மாந்தர்களுடனான உரையாடலின் போது கூட துணைக் கதாபாத்திரங்கள் மங்கலான குவியத்திலேயே (Shallow Focus) விலக்கி வைக்கப்படுகிறார்கள். இசைவான தொலைவிலிருந்து கொண்டு இயங்குகிறார்கள். காமெரா நகர்வுகளில் மந்தமான செயலூக்கமின்மை நிறைந்திருந்தாலும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்கையில் அது முனைப்பு கொள்கிறது. அத்தகைய தருணங்களில் மட்டும் அவர்களது உருத்தோற்றங்கள் தெளிவு பெறுகின்றன.