தெய்வீகமும், ஒழுக்கமும் சூசாவின் இயல்பில் இல்லை. கிறிஸ்துவப் பள்ளியின் ஒழுங்குமுறையும், கட்டுப்படும் அவருக்கு கசப்பான அனுபவமாக இருந்தது. ஆபாசப் படங்களைக் கழிவறையில் வரைந்ததிற்காகப் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பதினாறாம் வயதில் கலைக்கல்லூரியில் சேர்ந்த சூசா, “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் பங்கெடுத்தற்காக மீண்டும் வெளியேற்றப்பட்டார். அதே தினம் தன் முதல் ஓவியத்தைக் காய்கறி நறுக்கும் பலகையின் மேல் நீல நிறத்தில் வரைகத்தியினால் தீட்டினர்.
