ஓய்வில் மனம்

இவனுடைய குடும்பம் பற்றி ஏதாவது கேட்டிருக்கலாமோ என்று தோன்றியது.   பழுது பார்ப்பவன் வரும் வேலையில்லை என்றால் இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாம்.  இல்லை இவ்வளவு பேசியதே போதும்.  ஒரு நிறைவு இருக்கும்போது மேலும் ஏன் பேசவேண்டும்.  பூக்கடையில் செருப்பை மாட்டும்போது ஏன் அவன் கோவிலில் மேலும் சிறிது நேரம் இருப்பதாக சொன்னான் என்று யோசித்தேன்.