முட்டை போண்டா

நான் முதன் முதலாக சண்முகராஜனின் பெட்டியைத் திறந்த போதே அதனுள் ஒரு பத்து ரூபாய் கட்டு கிடந்ததைக் கண்டு கொண்டேன். பெரிய தொகையை எடுத்தால் அவன் கண்டுபிடித்து வார்டனிடம் புகார் சொல்லக் கூடும் என்பதால் வெறும் பத்து ரூபாயை மட்டும் எடுத்தேன். ஏற்கெனவே விடுதியில் பணம் திருடு போன புகார்கள் நிறைய இருந்தன.