மிதவை

ஆனால் அடுக்கத்தில் கதவைத் திறந்து வராந்தாவில் கூட நிற்கக் கூடாது. எவரையும் உற்றுப் பார்க்கக்கூடாது. எதையும் சத்தமாகப் பேசக் கூடாது. அதோடு இன்னொரு சங்கடமும் இருந்தது. பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக் கொள்ளும்போது இவர் இருக்கும் பக்கம் ஒருமுறை பார்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் பேசுவது இவருக்கு கேட்காததுபோலவே இருக்க முயன்றாலும் முகம் காட்டிக் கொடுத்து விடுகிறது.

உயிர்த்தாம்பு

எதற்காகவும் இயல்பான மரபணு மாற்றத்தை குறைக்கும்விதமாக மேல் அதிகாரத்தை மனிதன் உருவாக்கும் மருந்துகள் உருவாக்ககூடாது என்பது தான் அவரது ஆய்வின் அடிப்படை. லிவர் மறு உருவாக்கத்திற்கு முக்கியமான பங்களிப்பை அளிப்பது காமா உயிரணுக்கள். செயற்கையாக உருவாக்கப்படும் காமா உயிரணுக்கள் இயற்கையாக உடலில் உருவாக்கப்படும் காமா செல்களை செயலிழக்கச் செய்யும் என்பது உயிரி இயற்பியலின் அடிப்படை. அவரது ஆய்வகத்தில் செய்யப்படும் சோதனைகளின் முக்கியமான விதியாக இது இருந்துள்ளது.

மேபெல்

அதிருஷ்டவசமாக மறுநாள் ஒரு ஃபிரெஞ்சுக் கப்பல்  சைகோனுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தது. அவன் அதில் ஏறிக்கொண்டான். சைகோனில் பத்திரமாக இருக்கலாம்; அவன் அங்கே போகக்கூடும் என்று அவளுக்கு ஒருபோதும் தோன்றாது. அப்படித் தோன்றியிருந்தால் நிச்சயமாக இதற்குள் மோப்பம் பிடித்திருப்பாள். பாங்காக்கிலிருந்து சைகோன் செல்ல ஐந்து நாட்கள் பயணம் செய்தாக வேண்டும். செல்வதற்கான படகுகளும் அழுக்காகவும் கூட்ட நெரிசலோடும் அசௌகரியமாகவும்தான் இருக்கும். 

வெற்றிடம்

நீ இல்லாம பொண்ண எப்புடி வளர்த்துருவான்னு பாத்துரலாம் என்று சொன்ன அவனது அக்கா, அவளது குடும்பத்தோடு சந்தோஷமாகத்தானே இருக்கிறாள். இவங்க பேச்சக் கேட்டு நான் தான் தனியா நிக்குறேன். வெறும் ஏழு வருச நினைவுகளோட. நிலா தொட்டு வெளையாடின பொம்மைகளோட.. அந்தரத்துல.. இந்தப் பத்தாவது மாடியில..”  என்று எண்ணிக்கொண்டே அடுத்த மாத்திரையை விழுங்கினான்.

ஆயன்

உண்டிக்கோலும் கதிரருவாளுமில்லாமல் சோமன் மேய்ச்சல் விட வருவதில்லை. சிறு சிறு கற்களைப்பொறுக்கி சேமித்துக்கொண்டான். அதுநாள் வரை சாமியை கும்பிட வேண்டும் என்பதனால் ஒரு வணக்கம் போட்டு வைப்பான். ஆனால் இப்பொழுதெல்லாம் அவரிடம் பாதுகாப்பை தைரியத்தை கோர வேண்டிய அவசியம் உருவாகி விட்டது. வாரத்திற்கு ஒரு முறை எலுமிச்சையோ பூக்களோ என்ன முடிகிறதோ அதை பறித்து வந்து உண்டியல் முன் வைத்துவிடுவான். மேய்ச்சலுக்கு அருகிலேயே கல்லில் புடைத்து நிற்கும் வீரன் சிலை ஒன்றிருந்தது. தினமும் ஒரு எலுமிச்சையை வீரனுக்கு காணிக்கையாக வைத்துவிட்டுத்தான் தன் பாறைக்குடைக்கு திரும்புவான்.

பேரழகி ப்யூ

ஹாட்டெ, ஹோன்ஸ்,லெரிஷ், தங்கக் கடிகாரம் அணிந்த வியாபாரிகள், செல்வம் மிகுந்த பயணிகள், விடுமுறையில் வந்திருந்த போர்வீரர்கள், ஷெரிஃப் அலுவலக எழுத்தர்கள் என வெவ்வேறு சமூக அமைப்பைச் சார்ந்த ஆண்கள் எங்கள் தெரு வழியே கால் கடுக்க நடப்பதைக் காண முடியும். சீரான சிகை அலங்காரத்துடன் அன்ன நடையிடும் அந்தப் பேரழகு “தையல் கலைஞர்” நாநாவிடம் அவர்கள் தங்களுடன் நடனமாட, மாலைப் பொழுதைக் கழிக்க என அழைப்பதைக் காண முடியும்.

வீதித்தாய்களும் பத்துதர்மக்காரியும்

ஒரு நாள், ராசாத்தி காய்கறி வாங்கிக்கொண்டு உள்ளே வந்தபோது, “டெய்லி, அவ கூட என்னடி பேச்சு? அவங்களைத்தான வேண்டாத குடும்பம், ஆகாத குடும்பம், அசிங்கமான குடும்பம், போலீஸ்ல புகார் சொல்லுவோம்”-ன்னு சொல்லிச்சொல்லி செத்திங்களே, சாவடிச்சிங்களே. இப்ப எதுக்கு அப்படி பேசறே? பழகறே,  ஒன்னுமே புரியல, எனக்கு

ராமு

தகுதியிருக்கோ இல்லையோ ஒரு சம்பந்தம் “முறிந்தது” என்றவுடனேயே  அரிவாளை தீட்டும் இன்றைய உலகில், பெண்ணும் ஆணும் சம்மதித்து நெருங்கிய உறவினர்களான இரு வீட்டார் சம்மதித்து, கடைசியில் ஒரு வாழைப்பழத்தால் ஒரு கல்யாணம் நின்று போயிற்று.

ஆதரவு

நான் பதவி ஓய்வு பெற்றேன். சொந்தமாக வீடு கட்டினேன். பென்ஷன் வந்தது. பொருளாதார ரீதியாகக் குறை ஒன்றுமில்லை. அந்தச் சூழ்நிலையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தவள் ரமணி. வீட்டுக்கு வருபவர்களுக்கு பதில் சொல்வது, பணியாளர்களை வேலை வாங்குவது, வீட்டைச் சுத்தம் செய்து அடுக்கி வைப்பது, கடையிலிருந்து சாமான்கள் வாங்கி வருவது, மின்சார பில் கட்டுவது என்று வீட்டுப் பொறுப்புகள் எல்லாம் அவளே பார்த்துக் கொண்டாள்

1954 – Y2K பிரச்சினை

This entry is part 5 of 5 in the series 1950 களின் கதைகள்

அப்பா அவனை சைக்கிள் முன்னால் வைத்து அழைத்து வந்தார். அவனுக்குத் தெரிந்து ஆஸ்பத்திரிக்குப் போவது அது தான் முதல் தடவை. டாக்டர் மார்பில் ஸ்டெதஸ்கோப்பை நகர்த்தி ஏதோ கேட்டிருக்கிறார். வாயை ஆஆஆவென்று திறக்கச்சொல்லி விளக்கில் உற்றுப் பார்த்திருக்கிறார். அதெல்லாம் கொஞ்ச நேரம்.

செல்லா, ஜீனா?

மரபணுத் தொடர் செய்திகளை உபயோகிக்கும் விதத்தில், எவ்விதம் செல்கள் தங்களை ஒருங்கமைக்கின்றன என்ற கேள்விக்கு நம்மிடம் விடையில்லை. ஆனால், கருவினை ஒத்த செல்களை ஆய்வகத்தில் ஆராய முடிகிறது. ஆர்கனாய்ட்ஸ் இருக்கின்றன. ஆர்கனாய்ட்ஸ் என்பவை முப்பரிமாணத்தில் உருவாக்கப்படும் உறுப்பு அல்லது திசு. ஸ்டெம் சாத்தியக் கூறுள்ள செல்கள், சுயமாக ஒருங்கமைத்துக் கொண்டு, முப்பரிமாணத்தில் செல் நிறைகளாக ஆய்வகங்களில் காணக் கிடைக்கும்.

பசுமை ஆற்றல் – பகிராத மறுபக்கம்

பசுமைப் பாதையை நோக்கிய பந்தயத்தில் வெற்றி, தோல்வி கண்டவர்கள். இப்புத்தகத்தின் அடித்தளம், கடந்த பத்து ஆண்டுகளாக இடைவிடாத பேசும் பொருளாகக் கருதப்படும் லித்தியம் அயான் பேட்டரியை (LIB)ப் பற்றியது.  இப்புத்தகம் முதல் இருபது பக்கங்களில் இதன் வளர்ச்சியை மேல்நோக்காகக் குறிப்பிட்டாலும், இருநூறு ஆண்டுகளுக்குக்கும் மேற்பட்ட வரலாறு கொண்ட இக்கருவியை அல்லது மின்கலத்தை விவரிப்பது இப்புத்தகத்தின் நோக்கமில்லை. 

குமார சம்பவம் மஹா காவ்யம் – 4

வளைந்த வில்லை சீராக்கி கொண்டு, கால் முட்டியில் வைத்துக் கொண்டு, வசந்தனைப் பார்த்து, பின் என்னையும் பார்த்து சிரித்தாயே, அது கண் முன் நிற்கிறது. உனக்காக பூக்களைத் தொடுத்து வில்லை செய்து கொடுத்து அனவரதமும் உடன் இருக்கும் வசந்தன், அவனையும் காணோமே,  பிரிய சகா, உன்னை பிரியமுடியாமல் உடன் வந்து விட்டானா? 

துள்ளிவரும் வெள்ளலையே!

நதியின் ஓட்டத்தில் எதிர்ப்படும் பாறை நதியின் பாதையை இரண்டாகப் பிரித்தாலும் பாறையைத் தாண்டியபின் ஒன்றாகக் கூடுவதைப்போல் இப்போது பிரிவை எதிர்கொள்ளும் நாமும் பின்னர் ஒன்று சேர்வோம்.

சாய்ந்து அழ ஒரு தோள்

குழந்தைப் பருவத்தில் இருந்த
என் அன்னையை இன்னொரு உலகில் சந்தித்தேன்.
கை கோர்த்து கடற்கரையில் நடந்தோம்.
உலகில் அவள் நேசித்த
அத்தனை விசயங்களையும் ஆர்வத்துடன் பேசினாள்.
ஆயிரம் அங்கதங்கள்

ச. சக்தி அழகு – கவிதைகள்

அரசமர நிழல்
தனிமையில்
விளையாடிக் கொண்டிருக்கும்
குழந்தையின் நிழல்
ஆசைகளற்ற ஒரு புத்தனின் சாயல்

ஆர். வத்ஸலா கவிதைகள்

என்ன சாக்கு சொல்வது
எண்ணெய்க் குப்பியுடன்
எனக்கு அம்மாவாகி
எதிரில் நிற்கும்
எனது ஐம்பது வயது ‌மகளிடம்

தமிழ்மணி கவிதைகள்

பட்டினியான நாட்களை அடிக்கடி
கடந்து விரைபவன் அவன்
அன்றைக்குத்தான் புதிதாக பசியை உணர்ந்த ஒருவர் கைகளை நீட்டினார்
தற்போதைக்கு பசியாற்றும் தேநீரை
வாங்கிக்கொண்டு வந்தவனைப் பார்த்து
உன்னைப் போன்ற நல்லவர்கள் இருப்பதால் தான் தம்பி
இந்த உலகம்
அழகாய் இருக்கிறது என்றார்

மிளகு – அத்தியாயம் எழுபத்திரண்டு

சென்னாக் கிழவி உறங்கும்போது அவளுடைய முடிக்கற்றை ஒன்றையோ நகத்துணுக்கை வெட்டியோ கொண்டு வந்தால் சீன மந்திரவாதம் செய்து அவள் சீக்கிரம் செத்தொழிய வழிசெய்கிறேன் என்றான் ஆப்பிரிக்க மந்திரவாதி வெகுமுன்பு. மயிருக்காக ராத்திரி கோட்டைச் சுவரேறிக் குதிக்க ஆளைப் போட்டு காசு கொடுத்து கோட்டைக்குள் அனுப்பினோம். மயிர் பெறாத வேலை அது. கிழவி தூங்காமல் எழுந்து உட்கார்ந்து கெடுத்தாள். 

அதிரியன் நினைவுகள் – 37

This entry is part 36 of 48 in the series அதிரியன் நினைவுகள்

இராணுவத் தலைமை அதிகாரிகளோடு, ஏற்பாடு செய்திருந்த கலந்தாய்வுக் கூட்டமொன்றில் என் மூக்கில் இரத்தம் கசிந்தது ; ஆரம்பத்தில் அவ்வளவாக நான் அதைப் பெரிதுபடுத்தவில்லை, ஆனால் இரவு உணவின்போதும் தொடர்ந்து ஒழுகியது ; அன்றிரவு கண்விழித்தபோது இரத்தத்தில் நனைந்திருந்தேன். அருகிலிருந்த கூடாரத்தில்  செலெர் படுத்திருந்தான், அவனை அழைத்தேன்; அவன் என்னுடைய மருத்துவர் ஹெர்மோஜேனெஸிடம் உடனடியாக இப்பிரச்சினையைக் கொண்டுபோனான்,

இன்னும் இன்னும் என்ன செய்யப் போகிறாய்?

நுண் அறுவை சிகிச்சைகளில் துல்லியமாகச் செயல்படுதல் மிகவும் தேவையான ஒன்று. சோளக் கொண்டையில் இருக்கும் முத்துக்களின் மீது இருக்கும் மெல்லிய ஜவ்வு போன்ற படலத்தை சோனியின் ரோபோ மிகத் துல்லியமாகப் பிரித்து பின்னர் அறுவை சிகிச்சை நடந்த இடத்தையும் திறமையாகத் தையல் போட்டு இணைப்பதையும் காட்டும் காணொலியைப் பார்க்கும் போது ஆச்சர்யத்தில் மூழ்கிவிடுவோம்.