வெம்மை இருந்தாலும் கவிகள் மழையை விடுவதே இல்லை. மேலிருந்து வீழும் மழைக்கு போட்டியாக கவிஞர்களும் கவிதைகளை மேலே அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். ஊரில் நம்ம வீட்டில் இருக்கிற கதவு, கைப்பிடி கிரிலில் நாம பாத்திருக்கலாம் – மழை பெய்யும் போதோ, இல்ல அது நின்ற கொஞ்ச நேரத்திற்கு பிறகோ, நிறைய துளிகள் ஒரு நத்தையோட முதுகு போல உண்டாகிருப்பதை, அதை தொட்டால் உடைந்துவிடும்.
