துக்கம்

பிரதிபா தன் தாயை இழந்துவிட்டாள் என்ற இந்தச் செய்தி, ஒருவருக்கு உடல் நலம் நன்றாக இருக்கிறது என்றோ, சுமாராக உள்ளதென்றோ அற்பமான செய்திகளைப் பரிமாறிக் கொள்வதைப் போன்றதுதானா? அதற்குரிய மதிப்பு இவ்வளவுதானா? மேலும் இப்படி ஒரு வித்தியாசமான சூழ்நிலையில், அவள் மட்டும் தனியாக இருக்கும்போதுதானா அம்மா போய்விட்டாள் என்ற செய்தியை அவள் அறிந்துகொள்ள வேண்டும். இந்தக் கடிதம் பத்து நிமிடங்களுக்கு முன்னால் வந்திருக்கக்கூடாதா?

ஒரு கடிதம்

ஆனால் உன் அப்பா எனக்கு எந்த வழியையும் விட்டுவைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் அவரது வார்த்தையாலும் நடத்தையாலும் கொடுமையாலும் என்னைச் சித்திரவதை செய்கிறார்.

ஒரு கொலை பற்றிய செய்தி

பிபாவின் உதடுகள் நடுங்க ஆரம்பித்தன. அவள் வெளியே சென்று பால்கனியில் இருந்து சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அக்கம்பக்கத்தினரும், தெருவில் உள்ளவர்களும் அவளைப் பார்க்கட்டும். அவள் கொலை செய்யப்படவில்லை, அவளுக்கு யாருடனும் எந்த உறவும் இல்லை. அவளுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ‘நீங்கள் நல்லா என்னைப் பார்க்க முடியும், முழுசா நான் இங்குதான் இருக்கிறேன்,’ என்று முணுமுணுத்தாள் அவள்.

ஊர்மி

ரிசீவரைக் கீழே வைத்தேன். யார் இந்த ஆள்? ஊர்மிக்கும் இவனுக்கும் என்ன உறவு? நான் தெரிந்து கொண்டது, ஷியாமல் என்பவரை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைத்தான். ஆனால் ஊர்மி ஏன் ஷியாமலைச் சந்திக்கச் சென்றாள்?

நவாப் சாகிப்

ரஃகாப்தார் நேர்த்தியான மேற்கத்திய ஆடைகளை அணிந்து, சரளமாக ஆங்கிலத்தில் பேசினார். அவர் வெளிநாட்டில் வாழ்ந்திருந்ததாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. முகலாய், பதான், ஆங்கிலம், பிரஞ்சு, இத்தாலியன், கோவன், ஜெர்மன், சீன – என பலவிதமான உணவு வகைகளில் நிபுணராக இருந்தார். அவரது சம்பளம் மாதம் ஐநூறு ரூபாய்.

“நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள்

“ஆனால் பூஷண் ஸாஹ் புது நாகரிகத்தைச் சேர்ந்தவன் இங்கிலீஷ் படித்து வெகு சுத்தமாகப் பேசுவான், துரைமார் சேரிகளில் செருப்புப் போட்டுக்கொண்டே நுழைவான். அத்துடன் தாடியும் வளர்த்தான். இதனால் துரைமார் இவனைக் கர்வியென்று சொல்லி இவனுக்கு யாதொரு நன்மையும் செய்யமாட்டார்கள். அவனைப் பார்த்தால் உடனே தெரியும், இவன் புது வழியைச் சேர்ந்த வங்காளி யென்று. வீட்டிலேயும் அவனுக்கொரு ஸங்கடம். அவன் பெண்டாட்டி அழகாக இருப்பாள், காலேஜ் படிப்பு ஒரு புறம், அழகுப் பெண்டாட்டி மற்றொரு புறம்; புராதன ஆசார அனுஷ்டானங்கள் அவன் வீட்டிலே நிற்க இடமுண்டா ?”

கற்பனையின் சொகுசு

“தெரியல. ஏதோ போராட்டத்துல கலந்துக்கறானாம். நாம கூலிக்கு ஏத்த சம்பளம் தரதில்லையாம்” என்று சற்றே ஓருக்களித்தவாறு பதிலளித்தாள்.

ஆத்மஜன்

சிற்றுண்டி நேரத்தில் நான் கேரம் ஆடிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் ஆபீஸ் நேரத்துக்குப்பின் பொழுதுபோக்கு அறைக்குள் நுழைவது சாத்தியமில்லாமல் போயிருந்தது. சற்றே தாமதமாய் வீடு சென்றாலும் சுப்தி நச்சரிப்பாள்- நான் இந்த வீட்டில் ஒரு கைதி போலிருக்கிறேன், நீங்கள் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்…

பத்து ரூபாய் மட்டும்

எப்போதும்போல நாள்கள் ஒடின. ஒரு வாரம் கழிந்தது. பிதுபாபு ஒருநாள் காலை மீண்டும் நிகில்பாபுவின் வரவேற்பறையில் தலைகாட்டினார். மூன்று மாதங்களுக்குமுன், பிதுபாபு பத்து ரூபாய் அவனுக்குக் கடன் கொடுத்தார், “நாளை பணத்தை திருப்பி தருகிறேன்” என்று அவன் வாக்குக் கொடுத்திருந்தார்.

ஹீங்க் கொச்சூரி

குஸும் தினம் மாலையில் அழகாக உடுத்து, நெற்றியில் திலகமிட்டுக் கொண்டு, முகத்தில் மாவு போன்ற ஏதோ பொடியையும் பூசிக் கொள்வாள். சிகையலங்காரமும் அவளுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் என்னை அறையில் இருக்க அனுமதிக்கமாட்டாள். ’வீட்டுக்குப் போ.. என் பாபு வர நேரம் இது’ என்பாள்.

தொலைந்துபோன புயல்

மனிதனின் ஆவி அவனைவிட்டுப் பிரிந்ததும் புவியீர்ப்பு அவன் நகர்வைக் கட்டுப்படுத்தவதில்லை. சிலரின் கூற்றுப்படி, மரணம்கூட மனிதனை இப்புவியிலிருந்து விடுவிக்க முடியாது, ஏனெனில் ஆவிகள்கூட பிரம்மஞான சபையின் கட்டளைகளுக்குட்பட்டுத்தான் அலைய முடியும்.

ரூபா

உங்களுக்கு என்மீது எரிச்சலாக இருக்கும். ஒரு மனிதன் உங்கள் அனுதியைப் பெறாமலே தனது கதையைக் கொட்ட ஆரம்பித்தால் அப்படி இருப்பது இயல்புதான். ஆனால் என்ன பிரச்சினை என்பது உங்களுக்குத் தெரியுமா?

தன்னிரங்கல்

அபினாஷ் வழக்கமாக ரொட்டியையும் உருளைக்கிழங்கு கறியையும் தன் காலையுணவாக எடுத்துக் கொள்வார்; அவருடைய மகன்கள் பூரியும் இனிப்பும் உண்பார்கள்; அவருடைய பேத்திகளால் பெரிய பூரியை வேகமாகச் சாப்பிட முடியாது, அதனால் அவர்களுக்கு விழுங்குவதற்குச் சுலபமானவை எதையாவது கொடுக்க வேண்டியிருக்கும்.

படகோட்டி தரிணி

தரிணி சொன்னது சரிதான். மயூராக்ஷி தனது வேகமான நீரோட்டத்திற்குப் பெயர் போனவள். ஓர் ஆண்டில் ஏழு ,எட்டு மாதங்கள் அந்த ஆறு ஒரு பாலைவனம்தான்— ஒன்று ஒன்றரை மைல் வரை கரைக்குக் கரை மண் பரவிக் கிடக்கும். ஆனால் மழை வந்துவிட்டால் அவள் அசுர பலம் பெற்று நான்கு, ஐந்து மைல் வரை விரிந்து, ஆழமான சாம்பல் நிற நீரால் எல்லாவற்றையும் மூழ்கடித்து விடுவாள்.

நான் கிருஷ்ணாவின் காதலன்

கீழ்மாடியில் இருந்த என் வீட்டில் முன்பு குடியிருந்தவன். நான்கு மாத வாடகையைப் பாக்கி வைத்ததோடு, என் மனைவியையும் அவனுடன் இழுத்துக்கொண்டு போய்விட்டான். அதுவும் சகல நகை நட்டுகளுடன். போதாக்குறைக்கு, அலமாரியில் இருந்த நாற்பதாயிரம் ரொக்கத்தையும் வழிச் செலவுக்காக எடுத்துக்கொண்டான்.

காதலும் அந்த பைத்தியக்காரனும்

அந்தப் பெண் மல்லி சித்தப்பாவிடம் அவர் அனைத்துப் பறவைகளையும் விடுவித்தால்தான் அவரைத் திருமணம் செய்து கொள்வேன் எனச் சொல்லியிருந்தாள். அவரிடம் நான்கு காதற்கிளிகள் மட்டுமே எஞ்சி இருந்தன. மூன்று மஞ்சள் ஒரு நீலம். ஆனால் இதைப் படத்திலிருந்து உங்களால் சொல்ல முடியாது. அவை எல்லாம் கருப்பு வெள்ளை.

ரத்தப் பாசம்

அவர்களோடு வந்த மூத்தவரான ஷிவ்ஷங்கர் “நீங்களே டாக்டர்ங்கறதாலே உங்க மகனை இங்கே கொண்டுவரச் சொன்னேன். ரொம்ப மோசமாக அடிப்பட்டிருக்கான். மற்ற ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லும் வழியில் போலீஸ் பார்த்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்…” என்றார்.

அமைதியின் அழிப்பு

“அழிப்புன்னா, என்ன அர்த்தத்துல?”
“அதைச் சூறையாடறதா. கொள்ளை அடிக்கிறதா புரிஞ்சுக்கணும். அதை ஒரு கவிதையில படிச்சேன். நம் தலைமுறை எப்படி ‘அமைதியின் சூறையாடலை,தேவாலயங்கள் வெறுமையாவதை, குதிரைப்படை கடந்ததை, உணர்ச்சிக் குழப்பத்தோடு பார்த்தோம்.’ …….
“ஊருக்குள்ளே குதிரைகள் இருந்ததெல்லாம் எனக்கு நினைவு இருக்கு.”
“ஆ, எனக்கும்தான் நினைவு இருக்கு. வண்டிகளை இழுத்துப் போகும் குதிரைகள். காலில் நிறைய முடியோடிருக்கும் க்ளைட்ஸ்டேல் குதிரைகள். எப்போதும் ஜோடிகளாகவே இருக்கும். … எல்லா உற்பத்தியும் தொழில் மயமாவதற்கு முன்பு நாம் எத்தனை நல்ல காலத்தை அனுபவித்தோம்.”

அமிழ்தல்

அக்கா, முன்பு நீ தேடிக்கொண்டிருந்த சுட்டுப் பெயர்; உன் புத்தியிலிருந்து மறைந்துவிட்டதாகத் தோன்றுகின்றவற்றில் அதுவும் ஒன்று. நீ வார்த்தைகளைப் பெறப் போராடுகிறாய்; ஆனால் அந்த அமிழ்த்தி உனக்குக் கொடுப்பவை எல்லாம் நடுவாந்திரமாக, தொடர்பறுந்த வகைச் சுட்டுப் பெயர்களாகவே உள்ளன, அவற்றில் ஒன்று உனக்கு உள்ளுணர்வால் உடனே தெரிகிறது, தவறான சொல் என்று – அதை வெளிதேசத்தவரும், அன்னியரும்தான் இந்த மாதிரிச் சூழல்களில் பயன்படுத்துவார்கள். “அக்கா,” நீ அந்தச் சுட்டுப்பெயரை, இறுதியில், திரும்பச் சொல்கிறாய், ஏனெனில் உனக்கு வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை.

பலகை அடித்த ஜன்னல்

மர்லாக், மர வீட்டைக் கட்டி முடித்தபின், வலிமையுடன் மரங்களைக் கோடரியால் வெட்டி வீழ்த்திப் பயிரிடும் நிலத்தை உருவாக்கிக் கொண்டான்- துணைக் கருவியாகத் துப்பாக்கியும் வைத்திருந்தான். அப்போது அவன் இளமையும் கட்டுடலும் நம்பிக்கை மிக்க எதிர்பார்ப்பும் கொண்டிருந்தான். கிழக்கு தேசத்திலிருந்து வந்தபோதே அவ்வூர் வழக்கப்படி அவனுக்குத் திருமணம் ஆகிவிட்டது.

இருபத்தாறு ஆண்களும் ஒரு பெண்ணும்

நாங்கள் வெளியில் இருந்து வரும்போது எங்கள் கால்களில் ஒட்டிக் கொண்டு வரும் தூசியும் புழுதியும் பிஸ்கெட் தயாரிக்க பயன்படுத்தும் மாவோடு சேர்ந்து நாற்றமெடுக்கும். அந்த நாற்றத்தோடு சூடாக இருக்கும் அந்த குறுகிய பேஸ்மெண்ட்டில் நாங்கள் மாவை இழுத்துப் பிசைந்து பிஸ்கட் வடிவில் வெட்டுவோம். எங்கள் வியர்வை கூட அதோடு சேர்ந்து வடிவமைக்கும். எங்களுக்கு அந்த வேலை மீது எத்தனை வெறுப்பு, அசிங்கம் என்றால், எங்கள் கையால் செய்த அந்த பிஸ்கட்டுகளை நாங்கள் ருசி பார்ப்பதற்காகக் கூட தின்ன மாட்டோம்.

போர்ஹெஸ்ஸின் செயலாளர்

எங்களது விளையாட்டு எப்போதும் பேசப்படாததாகவும் மௌனம் சாதிப்பதாகவும் எந்தப் புள்ளியிலும் அதை விளையாடுவதாக நாங்கள் ஒத்துக் கொள்ளாததாகவும் இருந்தது. வரும் நாட்களில் எனது கட்டுரைகளில் சிறப்பான மாற்றங்களை அவள் ஏற்படுத்துவாள் என்ற நம்பிக்கையில் நான் அவளைப் போல பொறுமையாகக் காத்திருக்க முடிவு செய்தேன். இருந்தபோதிலும் அவள் உணர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.

தபால் பெட்டி

பாட்டி மாற்றமில்லாமல் வெண்ணிற ஆடைகளையே அணிந்தார். வயதான பெண்களிடம் சிவப்புச் சேலைகள் இருக்காதா என்று என்னை நானே அடிக்கடி கேட்டுக் கொள்வேன். ஒருநாள் பாட்டியின் பெட்டியைத் திறந்து அதன் உள்ளடக்கத்தை ஆராய்ந்தேன். அதில் வெண்ணிற ஆடைகளைத் தவிர வேறெதுவும் இல்லை. வெண்ணிற ஆடைகள் மிகத் தூய்மையானவையாகத் தோற்றமளிக்கின்றன. அந்நாளில் மக்கள் எவ்வாறு தூய்மையைப் பேணிக் காத்தனர் என்பது அற்புதமான விஷயம்.

பித்தலாட்டக்காரன்

எப்படிப்பட்ட மனிதன் இத்தகைய ஒரு போலித்தனம் நிறைந்த இறுதிச் சடங்கென்ற பேரில் ஒரு கேலிக்கூத்தை உருவகித்து, நடிக்க முடியும் – ஒரு வெறியனா? துக்கத்தால் வாடுபவனா? பைத்தியக்காரனா? ஒரு இழிவான வஞ்சகனா? என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்.

சுதந்திர பூமியில்… (In the Land of the Free)

“பொழுது விடிந்துவிட்டது. போய்க் குழந்தையை அழைச்சுட்டு வா” என்றாள். கூறுவதற்குள் அவளுக்குத் தொண்டையை அடைத்தது….
“இன்னும் நேரம் ஆகவில்லை” என்றவன் மீண்டும் படுக்கையில் தலையைச் சாய்த்தான்.
“இன்னும் நேரம் ஆகலையா? ஐயோ…! நேற்றுவரை நான் வாழ்ந்த நேரம் எல்லாம் சேர்த்தால்கூட நான் பெற்ற பிள்ளையை என்னிடமிருந்து பிரித்து எடுத்துச்சென்ற நேரம் இருக்காது.” லேசூ முகத்தை மூடிக்கொண்டு கட்டில் அருகில் கீழே அமர்ந்தாள்.

என்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு

மீண்டும் லின்னைப் பார்த்தபோது அவர் காதில் ஏதோ கிசுகிசுத்தபடி ஓர் ஆர்வலர் மட்டும் இருந்தார். அதன்பின் அவரும் வெளியே கூடத்தில் இங்கும் அங்குமாய் நின்றுகொண்டிருந்த தன் தோழர்களைத் தேடிப் போனார். தான் உயிருடன் இல்லை என்பது லின்னுக்குத் தெரிந்திருந்தது என்பது அந்தக் கணத்தில் எனக்குத் தெரிந்துவிட்டது. என் இதயம் என்னைக் கைவிட்டுவிட்டது, என்றார். அது இப்போது இல்லாமல் போய்விட்டது. இங்கு ஏதோ சரியில்லை என்று எனக்குப் பட்டது. லின் புற்று நோயால் இறந்தார்; மாரடைப்பால் அல்ல. அதீத கனம் என் மேல் கவிவதை உணர்ந்தேன்.

சென்சினி

இச்சிறிய எழுத்துலகம் ஆபத்தானது, அதே நேரத்தில் அபத்தமானது என்று எழுதியிருந்தார். கூடுதலாக அவர் சொன்னார், ஒருவரின் கதை ஒரே நீதிபதி முன் இருமுறை வந்தாலும் அதில் ஆபத்து குறைவுதான். ஏனென்றால், அவர்கள் வரும் கதைகளைப் பொதுவாகப் படிப்பதில்லை அல்லது மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள். மேலும் “குதிரை வீரர்கள்” கதையும், “கவலைகள் இல்லை” கதையும் வெவ்வேறு அல்ல என்பதை யார்தான் சொல்லக்கூடும், தலைப்புகளிலேயே அதன் தனித்தன்மைகள் தெளிவாக உறைந்திருக்கும்போது? ஒற்றுமைகள் உண்டு, அதிக ஒற்றுமைகள் உண்டுதான், ஆனாலும் அவை வெவ்வேறு.

ஜெயில் பறவைகள்

தொடக்கத்தில் நான் அதிகாரத்தை எதிர்ப்பவர்களுடனும், தீவிர பெண்ணியவாதிகளுடனும் சுற்றிக் கொண்டிருந்தேன். அதனால் நான் படித்த புத்தகங்களும், அவர்களது சிபாரிசை ஒத்தே இருந்தன. ‘ஹெகலின் மீது துப்புவோம்’ என்பது அப்படிப்பட்ட ஒரு புத்தகம், அதை எழுதியது ஒரு இத்தாலிய பெண்ணியல்வாதி. ஒரு நாள் மதியம் அதை சோஃபியாவுக்கு இரவல் கொடுத்தேன். நன்றாக இருக்கும், படித்துப் பார் என்றேன். அடுத்த நாள் சோஃபியா நல்ல மனநிலையில் இருந்தாள்; அந்தப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்த போது, ஒரு அறிவியல் புனைவாக அது நல்ல புத்தகம் தான், ஆனால் அதைத் தவிர அதில் சொல்லிக் கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை என்றாள்.

விழிப்பு (The Awakening) – ஆர்தர் சி. கிளார்க்

“நான் வேண்டுமானால் இன்னுமொரு நூறாண்டுகள் காத்திருக்கிறேன். அதுவரை தொந்தரவு இல்லாத ஓரிடத்தைத் தேர்வு செய்து என்னை உறக்கத்தில் ஆழ்த்தி உறைய வைத்தோ அல்லது ஏதாவது ஒரு வகையில் பாதுகாத்து வைத்திருங்கள். அதை உங்களால் செய்ய முடியும் என்பதை அறிவேன்” என்றார்.

தர்ம சங்கடம்

“அம்மா காலைத் தொட்டு வணங்கறப்ப அஞ்சு ரூபா காணிக்கை வைத்தும் கூட விளக்கமா ஏதும் சொல்லலே. ‘இருள்-வெளிச்சம் இரண்டும் சேர்த்து நெய்யப்படுகிறது மானுடர்களின் எதிர்காலம் என்ற மாயத் திரை. இருந்தாலும் இருட்டின் உபாதையிலிருந்து தப்பித்துக் கொள்ள வழியும் உண்டு,’ அப்படீன்னாரு.”

காயம்

பணீஷ்வர்நாத் ரேணு / தமிழாக்கம்: ரமேஷ் குமார் பணீஷ்வர்  பீகாரிலுள்ள  அரரியா மாவட்டத்தில் உள்ள ஃபாபிஸ்கஞ்ச்  அருகில் உள்ள ஔராஹி ஹிங்னா எனும் கிராமத்தில் 4 மார்ச் 192l அன்று பிறந்தார் . இப்போது அந்தக் கிராமம் பூர்னியா மாவட்டத்தில் உள்ளது . அவர் இந்தியாவிலும நேபாளிலும் பயின்றார். “காயம்”

சென்டிமென்ட்

யாராவது தலைவர்களோ தலைசிறந்த மனிதர்களோ இறந்து விட்டால் பள்ளியையும் ஆபீஸையும் மூடிவிட்டு என்ன சாதிக்கப் போகின்றது அரசாங்கம்? ….
இந்த விடுமுறை நாளில் இவர்கள் செய்வதெல்லாம் இது போன்ற பயனற்ற சினிமாக்கள் பார்ப்பதும் பகலில் உறங்கி சோம்பேறித்தனத்தை வளர்த்துக் கொள்வதும்தான். எந்த மனிதரின் இறப்பால் இந்த விடுமுறை கிடைத்ததோ அவரைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் அவருடைய ஆதர்சமான கொள்கைக்கு விரோதமான செயல்களையே தொண்ணூறு சதவிகிதம் மக்கள் செய்கிறார்கள். அதற்கு பதில் இரண்டு நிமிடம் மௌனம் வகித்து

நோயாளி எண் பூஜ்யம்- 2

This entry is part 2 of 2 in the series நோயாளி எண் பூஜ்யம்

தேசத்தந்தை, உயிரிகள் பாதுகாப்பு அமைச்சகத்தை உருவாக்கிய பிறகு, தேசக் கணக்கெடுப்பில் பதிவு செய்து கொள்ள இதயமின்பதிவுத் தொழில்நுட்பம் தேவை. யாரும் கார்பன் உணர்விகளைத் தம் உடலில் பொதிந்து கொள்ள அச்சப்படவில்லை, அவை இதயத்தின் மின் அதிர்வுகளை வரைபடமாகக் கொடுத்து அவற்றைத் தகவல் மையங்களுக்கும் ஒலிபரப்பின. அவற்றை உடலில் பொருத்துவது சுலபம், ஆனால் மூளைப் புரணிகள் அவற்றை அவ்வளவுத் திறமையாக ஏற்றுக் கொண்டு விடுவதால், அகற்றுவது கடினமாகி விடுகிறது. என்னுடைய அந்த நுண்கருவிகளை அகற்ற வேண்டும் என்று எனக்குத் தோன்றியே இருக்காது. ஃபாங்கின் இருப்பிடத்தில் இருந்த ‘ஸ்டோன் ஆஃப் மேட்னெஸ்’ ஓவியம் என் நினைவில் எழும்பியது, அந்த ஓவியம் இப்போது எனக்கு சதி வேலையாகத் தெரிந்தது.

நோயாளி எண் பூஜ்யம் -1

This entry is part 1 of 2 in the series நோயாளி எண் பூஜ்யம்

“நீங்கள் நம்பாத மூலப்பொருள் எது?”
“சிலிக்கான் தான், வேறென்ன! பிராணவாயுவிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் இருப்பதும் அதுதான்; அது இல்லையெனில் ட்ரான்ஸிஸ்டர்களோ, ட்ரான்ஸ்ஃபார்மர்களோ இருக்காது. அது புதுவகைக் களிமண், செயல்பாட்டுக்குத் தக்கபடி உரு மாற்றப்படக் கூடிய பொருள். இன்று ஒரு மதம் கொண்டுவரப்பட்டால், அதில் கடவுள் சிலிக்கானிலிருந்து மனிதர்களைப் படைத்தார் என்று சொல்வார்கள்.”

சின்ன உயிர் நோகாதா

சொல்கிறேன் டாக்டர்! அவன் ரொம்ப சுயநலக்காரன். எங்களுக்குத் திருமணமாகி மூன்று வருடம் ஆகிறது. இரண்டு பேரும் சாப்ட்வேரில் பணிபுரிகிறோம். அவர்கள் வீட்டில் ஆண்கள் வீட்டு வேலை செய்ய மாட்டார்களாம். அப்படியே வளர்ந்து விட்டான். எப்போது பார்த்தாலும் தன் வேலை, தன் சம்பளம், தன் பொழுதுபோக்கு, தன் நண்பர்கள்… அவ்வளவுதான்! அவனுடைய தேவைக்காக நான்! வீட்டு வேலை எதிலும் பொறுப்பெடுத்துக் கொள்ள மாட்டான்…

நண்பன்

என்னைக் கேட்டால் அலெக்ஸியேவிச் வகை அ-புனைவு படிப்பதற்கு புனைவு அளவுக்கே நன்றாக இருக்கும் படைப்புகளைத் தருகிறதா இல்லையா என்பதுதான் கேள்வி. உண்மையைக் கண்டடைய கற்பனை நன்கு உதவி செய்கிறது என்று நினைத்த டோரிஸ் லெஸ்ஸிங் போன்றவர்கள் சொல்வதுதான் என்னளவில் சம்மதமாக இருக்கிறது. யதார்த்தத்தை விவரிக்கும் சக்தி புனைவுக்கு இல்லாமல் போய் விட்டது என்று சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

முறைப்படியான ஒரு பதில்: பாகம்-2

கான்லன், நாங்கள் எல்லாரும் ரகசியமாக சான் ஃப்ரான்ஸிஸ்கோவுக்குப் போய் விடலாம், அவர் மட்டும் தனியே அந்த ஊரில் இருந்து விமானச் செலவுக்குப் பணத்துக்குத் திண்டாடி எப்படியாவது வரட்டும் என்று யோசனை சொன்னார். அப்படி ஏதும் எங்களால் செய்ய முடியவில்லை. அவர் செத்துப் போயிருந்தால் கூட, அவருடைய சாம்பலை நாங்கள் திரும்ப எடுத்து வர வேண்டி இருந்திருக்கும்; ஏனெனில் அவர் அமெரிக்காவில் பின்னே தங்கினால் அவர் அமெரிக்காவிற்குத் தாவி விட்டார் [3] என்று சீன அரசு கருதும், அவருடைய உள்நோக்கங்களைக் கணிக்காததற்கும், அவருக்கு இந்தப் பயணம் இப்படித் தாவ வாய்ப்பளிக்கும் என்பதை அறியாததற்கும் எங்களைக் கண்டிக்கும்.

முறைப்படியான ஒரு பதில்

போகுமுன், கதவுப் பிடியில் கை வைத்தபடி, அவர் சொன்னார், “உனக்கு இங்கிலிஷ் பிடிக்கவில்லை என்று எனக்குத் தெரியும், ஆனால் இதைப் பற்றி யோசி: நம் கல்லூரியில் போதிக்கும் எந்தத் துறை உனக்கு மேலான தொழில் வாழ்க்கையை அளிக்கும்? சென்ற வருடம் நம் மாணவர்கள் இரண்டு பேர் பரீட்சைகளில் தேறி, ஆஃப்ரிக்காவுக்கு மொழிபெயர்ப்பாளர்களாகப் போனார்கள். அவர்கள் யூரோப்புக்கும், ஆஃப்ரிக்காவுக்கும் இடையே நிறைய தடவை பயணம் போகிறார்கள், …. ..எல்லாரும் முக்கியமான பதவிகளில் இருக்கிறார்கள். நீ இன்னும் இளைஞன். பலவகையான வாய்ப்புகள் உன் வாழ்க்கையில் கிட்டும். நீ அவற்றுக்கு உன்னைத் தயாராக்கிக் கொள்ளவில்லை என்றால், அவை எவற்றையும் கைப்பற்ற உனக்கு இயலாது. இப்போது இங்கிலிஷை ஆளக் கற்பதுதான் உன்னை நன்கு தயார் செய்து கொள்ள இருக்கும் ஒரே வழி, நீ அதை அறிகிறாயா?”

வால்டிமர் ஏட்டர்டே

இந்நகருக்கு இப்பேரழிவைக் கொண்டுவந்திருக்கும் அவனா, அதே மனிதன் தானா இனிய வார்த்தைகளில் மென்மையாக அவளிடம் கொஞ்சியவன். அவனை சந்திக்கவா முந்தைய இரவு தனது தந்தையின் சாவியைத் திருடி ரகசியமாக நகரக் கதவை திறந்தாள்? பொற்கொல்லப் பயிற்சி மாணவனாக இருந்த தனது ஆடவனைக் கண்ட போது, அவனுக்கு பின்புறம் கையில் வாளுடன் போர் வீரன் ஒருவனும் இரும்பு கேடயமேந்திய ஒருவனும் நின்றுகொண்டிருந்தனர், அப்போது அவள் என்ன நினைத்திருப்பாள்? அவள் திறந்துவிட்ட கதவு வழியாக இரும்பு ஆறு அலையலையாக சென்றதைப் பார்த்த போது பிச்சியானாளா அவள்?

ஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2

நான் உன்ன கேலி பண்றேன்னு நெனச்சுக்காதே. உடல்சார்ந்த விசயத்தில் உன் தைரியத்தின் மீது எனக்கு உண்மையிலேயே நிறைய மதிப்புண்டு. எனக்கோ அது சுத்தமா கிடையாது. உன் நண்பன் ஜெத்ரோ கூறினான், தேவதைக் கதையில் வர பையனப் போல பயத்தையோ கூச்சத்தையோ உன்னால உணரக்கூட முடியாதுன்னு. நான் அதுக்கு நெரெதிர். சில சமயத்துல, பார்க்கப்படுவதை, டார்லீனால் பார்க்கப்படுவதைக்கூட என்னால் சகிச்சிக்க முடியாது. இரண்டு இடது பாதங்கள், பத்து கட்டை விரல்களை வைத்துக் கொண்டு நாட்டியக்காரியாக ஆனது எனக்கு எப்படிப்பட்ட திருப்புமுனையாக இருந்திருக்கும்னு யோசிச்சுப் பாரு

ஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா-1

“ஆனா அது நார்த் கரோலினா. இதுவோ நியூ யார்க். நகரத்துலேந்து ரெண்டு பஸ்சுங்கள நிரப்பற அளவுக்கு விமர்சகர்கள் வரப் போறாங்க. கொடியெரிப்பெல்லாம் அந்தக் கூட்டத்துக்கு ஒரு பிரச்சனையே அல்ல. இங்க லிபெரல்கள் அதிகம், அவங்களுக்கு இம்மாதிரியான அத்துமீறல்கள் வெல்லக்கட்டி போல. முதல் சட்டத் திருத்தமோ, இரண்டாவதோ இரண்டில் ஏதொவொன்று அளிக்கும் உரிமையை அமல்படுத்திக் கொள்வதாக அவங்க இத அர்த்தப்படுத்திக்குவாங்க. மேலும் மீள்-நிகழ்த்தல்களுக்கும் இவை பொருத்தமா இருக்கும். சொல்லப் போனால், பாம்புகளைக் காட்டிலும் பொருத்தமா இருக்கும். இந்தப் போரில் இந்தியர்களே ஜெயித்தார்கள்.

இசைக்கலைஞன்

அங்கு கிடந்த தேவதாருகளின் பெரிய வேர்கள் அசைந்து தன்னை அச்சுறுத்துகின்றனவோ என்ற மாயம் அவனுக்குத் தோன்றியது. “ஜாக்கிரதை, நீர் தேவனை விட நீ திறமையானவன் என்று உன்னை நினைக்கிறாயா!” என்று அவை சொல்லவருவது போல இருந்தது.

பேராசிரியர் பரப்பிய வைரஸ்

சீனாவில் தற்போது கோவிட்-19 என்று பெரும் வைரஸ் தொல்லை. இந்த மாதிரி வியாதிகள் எல்லாம் எப்படி ஆரம்பிக்கின்றன, யாரால் பரவுகின்றன ? இதைப் பற்றி 1996 வாக்கிலேயே தீர்க்க தரிசனமாக ஒரு கதை எழுதியிருக்கிறார் ஹா ஜின். ஒரு அப்பாவிக் குடிமகனுக்கு நீதி நியாயக் குறைவு ஏற்படும்போது இந்த மாதிரியெல்லாம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அம்மா

அவளோட நகைச்சுவை கூட பயங்கரமாத்தான் இருந்தது. இத்தனை வருசங்கள்லேயும் அவ எழுதின தற்கொலை அறிவிப்புகள் எல்லாம், அதை எல்லாம் எனக்குத்தான் எழுதினா, வழக்கமா அதெல்லாம் ஜோக் போலத்தான் இருந்தது. தன் மணிக்கட்டுங்களை அறுத்துகிட்டாளே, அவ அந்தக் குறிப்பில ‘ப்ளடி மேரி’ன்னு கையெழுத்திட்டிருந்தா. அதிகமா தூக்க மாத்திரை சாப்பிட்டாளே அப்ப எழுதினா, அவள் தூக்கு போட்டுகிடத்தான் பார்த்தாளாம், ஆனா அப்டி தொங்கல்லெ விடறதுக்கு அவளுக்கு முடியல்லேன்னு எழுதினா.

தத்தாரிகள்

‘எல் ஸாப்போ’ (என்றழைக்கப்பட்டவர்) சுவாவா நாய் வகைகளை எப்படி வளர்ப்பது என்று உரை ஒன்றை நிகழ்த்தினார், அது கேட்கவே அசிங்கமாக இருந்தது. ஸெக்சி இருபத்து மூன்றாவது விவிலியப் பாடலைப் பாடிய வண்ணம் இருந்தாள். அவள் அதன் சொற்களை வருடி வருடிப் பாடிய விதம் சிறிது ஆபாசமாக இருந்ததால் எல்லாரும் சிரித்தார்கள், அவளுடைய உணர்வுகள் புண்பட்டன.

கா-மென் – ரேச்செல் ஹெங்

This entry is part 2 of 2 in the series கா மென்

“கா மனிதர்கள் கடற்கரையோரம் நிலத்தை மீட்டுப் பயன்பாட்டுக்குக் கொணர புதிய, ஊக்கம் நிறைந்ததோர் திட்டத்தை முன்வைத்திருக்கிறார்கள். அது வடக்குக் கடற்கரையில் அறுபது சதவீதத்தைக் கையிலெடுக்கும். அதை முடிக்கப் பத்து வருடங்கள் போலாகும். இந்தப் புதுத் திட்டம் மக்களவையில் வரும் வாரம் வாக்களிப்புக்கு வரும்,” திரையில் இருந்த செய்தியாளர் சொல்கிறார்.

கொக்கு மனைவி – சி.ஜே. ஹௌஸர்

பிறரிடம் எதிர்பார்க்கும் தன்மை என்பது நம் பலவீனம் என்ற புரிதலுடன்தான் நான் என் முப்பதுகளுக்குள் வந்தேன். பலருக்கு இது பொருந்தும் என்றாலும் பெண்களுக்கு இது மிகவும் பொருந்துகிறது. ஆண்களின் விருப்பம் ‘திண்மை’யானது என்றும், அது நிறைவேறாத சந்தர்ப்பங்களில் அது ‘கைகூடவில்லை’ என்றும், அவர்களின் ஆசைகள் அல்லது தேவைகள் ‘நிராகரிக்கப்பட்டுள்ளன’ என்றும் அக்காரணம் தொட்டே அவர்களின் நடத்தை அமைகிறது என்றும் சொல்பவர்கள், பெண்களின் விருப்பங்களைத் ‘தேவைகளால் ஆனவை’ என்று முத்திரை குத்திவிடுகிறார்கள். ‘கிடைத்ததைக் கொண்டு வாழும் கடப்பாடு அவளுக்கு மட்டுமே!

கா மென் – ரேச்செல் ஹெங்

This entry is part 1 of 2 in the series கா மென்

சந்தேகமின்றி அவர்கள் இங்கிலிஷில் பேசுவார்கள். இங்கிலிஷை நன்கு தெரிந்து கொண்டிராமல் கா-மனிதராக ஒருவர் ஆக முடியாது என்பது நன்கு தெரிந்த விஷயம். ஆ பூனால் இங்கிலிஷை நன்றாகப் பேச முடியாது. அவன் சீனப் பள்ளியில் படித்தான், கா மனிதர்களுக்கு எதிர்ப்புப் போராட்டம் நடத்திய பள்ளிகளில் அது ஒன்று, அப்படி வந்த அவர்கள் தங்கத்தான் போகிறார்கள் என்பது அப்போது தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை. இடை நிலைப் பள்ளியில் படிக்கையில் ஆ பூனும் சக மாணவர்களுடன் கரம் கோர்த்துக் கொண்டு பஸ் நிலையங்களின் முன்னால், அரசுக் கட்டடங்களின் முன்னே நின்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறான். கா மனிதர்கள் அந்த ரகளையில் ஈடுபட்டவர்களைக் கலைக்கப் பயன்படுத்திய சக்தி மிக்க தண்ணீர் பீரங்கிகளால் அடித்துக் கீழே தள்ளப்பட்டிருக்கிறான்.

வெள்ளைப் புள்ளி

“நுரையீரல்களைப் பார்,” அப்பா சொன்னார். “ஆரோக்கியமான நுரையீரல்கள் நெகிழக் கூடியவை. நாம் மூச்சை இழுக்கும்போது, அவை விரியும், விடும்போது சுருங்கும். சில நோய்கள் தாக்கினால் அவை இந்த நெகிழும் குணத்தை இழந்து விடுகின்றன. அவை அளவுக்கு அதிகமாக உப்பும். இங்கே இதயம் எத்தனை குறுகித் தெரிகிறது பார். தட்டையாக, கீழே போய்விட்ட உதர விதானத் திரையைப் பார்க்கலாம். இங்கே நுரையீரல்கள் ரொம்பப் பெரிசாகவும், ரொம்பக் கருப்பாகவும் இருக்கின்றன. நான் சொன்னேனில்லையா, காற்று இங்கே சிறைப்பட்டிருக்கிறதென்று. இங்கே ரத்தத்தில் போதுமான அளவு பிராண வாயு இல்லை. இந்த நபருக்குக் காற்றடைப்பு நோய் இருக்கிறது.”