வால்டிமர் ஏட்டர்டே

இந்நகருக்கு இப்பேரழிவைக் கொண்டுவந்திருக்கும் அவனா, அதே மனிதன் தானா இனிய வார்த்தைகளில் மென்மையாக அவளிடம் கொஞ்சியவன். அவனை சந்திக்கவா முந்தைய இரவு தனது தந்தையின் சாவியைத் திருடி ரகசியமாக நகரக் கதவை திறந்தாள்? பொற்கொல்லப் பயிற்சி மாணவனாக இருந்த தனது ஆடவனைக் கண்ட போது, அவனுக்கு பின்புறம் கையில் வாளுடன் போர் வீரன் ஒருவனும் இரும்பு கேடயமேந்திய ஒருவனும் நின்றுகொண்டிருந்தனர், அப்போது அவள் என்ன நினைத்திருப்பாள்? அவள் திறந்துவிட்ட கதவு வழியாக இரும்பு ஆறு அலையலையாக சென்றதைப் பார்த்த போது பிச்சியானாளா அவள்?

இசைக்கலைஞன்

அங்கு கிடந்த தேவதாருகளின் பெரிய வேர்கள் அசைந்து தன்னை அச்சுறுத்துகின்றனவோ என்ற மாயம் அவனுக்குத் தோன்றியது. “ஜாக்கிரதை, நீர் தேவனை விட நீ திறமையானவன் என்று உன்னை நினைக்கிறாயா!” என்று அவை சொல்லவருவது போல இருந்தது.