இற்றைத் திங்கள் அந்நிலவில் -1

This entry is part 1 of 2 in the series கவிதாயினி

காவற்பெண்டு பாடிய பாடலில் ‘புலி சேர்ந்து போகிய கல்லளை’  என்ற வரி தேர்வுகளில் கேள்விகளாக கேட்கப்படும். ‘புலி இருந்து சென்ற கல்குகை போன்று, அவன் இருந்த வயிறு இங்கே இருக்கிறது..  அவன் போருக்கு சென்றுள்ளான்’ என்று புறநானூற்று தலைவி சொல்கிறாள். இது போன்று சங்கப்பாடல்கள்  இளம்வயதில் அறிமுகமாகியிருந்தாலும்,சிறவயதில் அதை நாம் உள்வாங்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. சங்கப்பாடல்களை வாசிக்கும் போது அதில் எதாவது ஒருவரி மனதில் படிந்து தித்திக்கும்  அல்லது வெறுமையைப் படரவிடும்.

ஒரே ஒரு முத்தம்

உங்கள் அப்பாவை நீங்கள் முத்தமிட்டது உண்டா? இதென்ன அசட்டுத்தனமான ஒரு கேள்வி என்று தோன்றலாம். குழந்தைப் பிராயத்தில் உண்டு என்பது நாம் தரக்கூடிய சிறுபிள்ளைத்தனமான பதிலாக இருக்கலாம். எனவே கேள்வியை இன்னும் சற்று தெளிவாக்கலாம்…உங்கள் பால்யத்திற்குப் பின் எப்போதேனும் அப்பாவை முத்தமிட்டுருக்கிறீர்களா? நான் ஏன் இக்கேள்வியை கேட்கிறேன் என்பதை விளக்குவதற்கு முன், உங்கள் தந்தை இப்போது உங்களுடன் இருந்தால் உடனே சென்று முத்தமிட்டு வாருங்கள்.

உள்ளிருத்தல்

‘கல்யாணத் தரகு விசுவநாதன் இருக்கானே அவன்தான் போற போக்குல சொல்லிட்டு போனான் ‘என்ன சோம சுந்தரம்.. ராஜா வீட்டு கல்யாணத்துக்கும் நானே புடவ குடுக்குறேன்னு கேக்க வேண்டிதானே’ ன்னு, அன்னக்கி ராத்திரி எனக்கு தூக்கமில்ல. பொரண்டு பொரண்டு படுக்குறேன். காலைல விடியிறப்ப முடிவு பண்ணேன் ‘போயி கேட்டுர்ரதுன்னு. என்ன நடக்கும். விதி பெருசா ஓடிட்டு இருக்கு. யார எங்க தள்ளும் யாருக்குத் தெரியும்.  பாறைல மோதுமா இல்ல அப்டியே தூக்கி கரைல போடுமா யாருக்குத் தெரியும். காலைல குளிச்சு கோயிலுக்குப் போய் அப்பா காசி விசுவநாதா நீதான் கதீன்னு கும்பிடு போட்டு நேரா அரண்மனைக்கு நடந்தேன். இப்ப வேணா அவங்க ராஜாவ இல்லாம நாட்ட ஆளாம இருக்கலாம். ஆனாலும் ராஜ வம்சம் தானே. பணிவா போய் நிக்கிறேன். நல்ல ஆஜானுபாகுவான தோற்றம் அவருக்கு. தயங்கித் தய்ங்கி கேக்குறேன். கேட்டா நம்ப மாட்ட மணி. உடனே ஒத்துக்கிட்டார். அறுபத்திரெண்டு புடவ வேணும்னு சொல்றார்.

ஊர்வசி காதலில் கண்விழித்தாள்!

மூலத்தில் காண்பதுபோல் ஸ்ரீ அரவிந்தரின் கவிதையில் தேர்ப்பாகன் இல்லை; புரூரவஸே தேரைச் செலுத்துகிறான். வெளிப்படையாக பாகனைப் பற்றிய பேச்சில்லை! அவனைக் கண்ட கேசி, தான் வெல்லப்படுவோம் என உணர்ந்து, ஊர்வசியைப் பனியின்மீது போட்டுவிட்டு ஓடோடி மறைகிறான். உணர்விழந்து கிடக்கும் அவளை அள்ளியெடுத்துத் தேரில் இருத்திக்கொண்டு புரூரவஸ் விரைகிறான். அத்தனை பேரழகை அருகாமையில் கண்டவனின் உள்ளம்…

மிளகு  அத்தியாயம்   நாற்பத்தெட்டு   

மறுபடி தண்ணீர்க் குளியல். அடுத்து புது மஞ்சளை விழுதாக அரைத்துப் பூசி மஞ்சள் அபிஷேகம். சுத்தமான நீரால் திருமஞ்சனம் செய்வித்தல் அடுத்தது. ஸ்ரீகோவிலும் பிரகாரமும் சந்தன வாசத்தில் மூழ்கி இருக்க, களப அபிஷேகம் அடுத்து, தொடர்ந்து தூய்மையான தண்ணீரால் மஞ்சனம். அடுத்து மல்லிகை, ஜவந்தி, முல்லை, கனகாம்பரம், ரோஜா மலர்கள் கூடை கூடையாக உயர்த்திச் சொரிந்து ஸ்ரீகோவிலையே பூவிதழ்களாலும் நல்ல மலர் மணத்தாலும் மூழ்கியிருக்கச் செய்து புஷ்பாபிஷேகம். 

தெய்வநல்லூர் கதைகள் – 5

This entry is part 5 of 10 in the series தெய்வநல்லூர் கதைகள்

காலாண்டுத் தேர்வு முடிந்து ஒரு திங்களன்று நாங்கள் வகுப்புக்குள் நுழைந்தபோது எங்களுக்கு முதல் அதிர்ச்சி தாக்கியது. அங்கு அறிஞர் அண்ணா அணி என்ற பெயரில் இரண்டு காலண்டர் அட்டைகளை மூங்கில் வரிச்சால் பின்பக்கமாக இணைத்து நீளமாக ஆக்கி முழுவதும் வெள்ளைத்தாளால் ஒட்டப்பட்டு ஒரு பதாகை இருந்தது. அதுவரை வகுப்பில் மூன்று அணிகளே உண்டு. பெண்கள் தரப்பிலிருந்து “ஜான்சிராணி” அணி, பையன்கள் அணியிலிருந்து நாங்களே உருவாக்கி எங்கள் துணை அணியாக நடத்திக்கொண்டிருக்கும் “தமிழன்னை” அணி. முக்கியமான ஆளும் அணியாக எவ்வித எதிர்ப்புமின்றி அதுவரை செயல்பட்டுக்கொண்டிருந்தது எங்களது குழுவான “ஆசியஜோதி நேரு” அணி.

லாவண்யா கவிதைகள்

செய்தித்தாள் படிக்கும் பாவனையில்
இரவரும் அருகமர்ந்து உரசிக்கொண்டு
அருந்தும் காபியின் சுவை, மணம்
தனியளாய் இருக்கையில் தெரியவில்லை.
மஞ்சள் மாலை கருக்கும் சமயம்

அதிரியன் நினைவுகள் – 16

This entry is part 16 of 22 in the series அதிரியன் நினைவுகள்

வெயில் காயும் நேரத்தில், வீதியொன்றின் திருப்பத்தில் நின்று கிரேக்கர்களின் மலைக்கோட்டையைக் காணும்போதெல்லாம், மிகக் கச்சித்தமாகவும் நேர்த்தியாகவும் அதனுள் கட்டி எழுப்பப்பட்ட   நகரம்  ஒரு பூத்த மலர்போலவும், அந்நகரத்துடன் இணைந்திருக்கும் மலை தண்டுடன் கூடிய புல்லிவட்டம் போலவும் தோற்றம் தரும். இழப்பீடற்ற அச் செடியை வரையறுக்க ‘ பூரணம்’ என்ற வார்த்தைமட்டுமே பொருத்தமானது. அப்பழுக்கற்ற  அவ்வடிவம் பெருவெளியின் ஒரு குறிப்பிட்ட புள்ளியில், கால அளவின் ஒரு குறிப்பிட்டத் தருணத்தில்…

ராகஜலதி என்ற நாவல்

உப்புப் படகை விட்டு படிப்பதற்காக ராஜமுந்திரி சென்றபோது சூரியாவோடு சேர்ந்து அவனுடைய அறையில் தங்கினான். சூரியாவின் தாய் கனகாங்கியின் ஆதரவைப்  பெற்றான். சூரியா தன் தாயை ஏன் வெறுக்கிறான் என்று அவள் மூலமாகவே தெரிந்து கொண்டான். அவனுடைய வாழ்க்கை அதுவரைதான். திருமணமான மீனாட்சியுடனான சூரியாவின் சிநேகம், அவளோடு வீட்டை விட்டு வெளியே போவதில் தொடங்கி, சூரியாவின் வாழ்க்கையில் வந்த மாற்றங்களின் கதையாக வளர்ந்த இந்த நாவலின் கதையம்சத்தில் மீனாட்சியின் தம்பி நடராஜனின் வாழ்க்கைப் பரிணாமங்கள் முக்கியமான பகுதியை நிரப்புகின்றன. ஆரணிக்கு சூரியாவிடம் சந்தேகமில்லாத நட்பு இருந்ததால் அவன் பார்த்தோ அல்லது அவன் கூறிக் கேட்டோ அறிந்த விவரங்களோடு சூரியாவைப் பற்றி கூற முடியும். கூறினான் கூட

போர்

டெக்ஸாஸில் இருந்து கரடுமுரடாக வாஷிங்டனுக்கு வந்த ஜான்சனுக்கு முதலில் தன் படிப்பு, பின்புலம் சார்ந்து தாழ்வுமனப்பான்மை இருந்தது. பல இடங்களில் அது நெருடல்களாகவும், தெளிவின்மையின் சிக்கல்களும் வெளிப்படுவதை முதலில் ரேபரனும் அவர் மூலமாக ரஸ்ஸலும் அறிந்தனர். இருவருக்குமே ஜான்சனை பிடித்துப்போக முக்கியக் காரணம் அவர் தெக்கத்திக்காரன் என்பதே, மற்றபடி தேர்தல் அரசியலில் தொடர்வதற்கு தேவையான அனைத்துத் தகுதிகளும் அவரிடம் ஏற்கனவே இருந்தது. ரஸ்ஸலும், ரேபரனும் ஜான்சனுக்கு எந்த இடத்தில் உண்மையான அதிகாரமும், செல்வாக்கும் இருக்கிறது என்பதை காண்பித்துக் கொடுத்தவர்கள்.

உபநதிகள் – ஒன்பது

This entry is part 9 of 15 in the series உபநதிகள்

அமெரிக்க புறநகர் தனித்துவம் இல்லாத இடம். அதில் வேர் விடாத போராட்டங்கள், கொள்கை இல்லாத மனிதர்கள், ஆழமில்லாத உணர்ச்சிகள். அப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த நான் அதன் எல்லைகளைத் தாண்டி கற்பனை செய்ய மிகவும் சிரமப்பட்டேன். நீயும் உன் எண்ணங்களின் கட்டை அவிழ்த்து அவற்றை மேலே பறக்கவிட வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத எத்தனையோ பெண் வயதுக்கு வரும் கதைகளில் இதுவும் ஒன்றாக ஆகிவிடும். கலாவதி வளர்ந்தது நமக்குத் தெரிந்த ப்ரென்ட்வுட் இல்லை. இலங்கைத் தமிழர்கள் ஒருவித பாசப்பிணைப்புடன் அமைத்துக்கொண்ட சமுதாயம். அதை நீ கதையில் கொண்டுவர வேண்டும்.

பேசுகிறான் ஆப்பிரிக்க அமெரிக்கன் நதிகளைப் பற்றி

அறிவேன் நான் நதிகளை:
அறிவேன் நான் நதிகளை இவ்வுலகைப் போன்று பழமை வாய்ந்த, மனித நரம்புகளில் மனித இரத்தத்தின் பாய்ச்சலை விடவும் வயதானவற்றை.
எனது ஆன்மா வளர்ந்துள்ளது ஆழமாக அந்நதிகளைப் போன்று.
யூஃப்ரேட்டிஸ் நதியில் குளித்திருக்கிறேன் அதிகாலைப் பொழுதுகளில்.
எனது குடிசையை காங்கோ நதிக்கரையில் கட்டியிருக்கிறேன், நதி என்னைத் தாலாட்டித் தூங்கச் செய்துள்ளது.

மார்க் தெரு கொலைகள்-  இறுதிப் பகுதி

This entry is part 5 of 5 in the series மார்க் தெரு கொலைகள்

அவர் இந்தியத் தீவுக் கூட்டங்களுக்கு பயணம் செய்தார்; அவரையும் சேர்த்து அவருடன் வந்த சில கடலோடிகள், போர்னியோ தீவின் உட்பகுதிக்கு உல்லாசமாகச் சென்றனர். அவரும், அவரது நண்பரும் அங்கே ஒரு ஓராங்-ஓட்டானைப் பிடித்தனர். அந்த நண்பர் இறந்து போனார்; இந்தக் குரங்கு இவரது ஏகபோக உடைமையாகியது. வழிப்படுத்த முடியாத முரட்டுத் தனங்கள் நிறைந்த அந்த விலங்கை பல இடர்களுக்கிடையில், பாரிசில், தன் வீட்டில் பாதுகாப்பாக பூட்டி வைத்தார். அண்டை அயலார் சற்று விலக்கமாகப் பார்க்கக்கூடும் என்பதால் தனியாகவே வைத்திருந்தார்.

பப்பைரஸ்

ஆனால் கிமு  3ம் நூற்றாண்டில் கிளியோபாட்ராவின் முன்னோடிகளான எகிப்தின் மன்னர்கள்,  உலகின் ஒவ்வொரு பகுதியிலும் அதுவரை எழுதப்பட்ட ஒவ்வொரு நூலையும் கண்டுபிடித்து மொழிமாற்றுவது, வாங்குவது  அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றபோது,  திருடுவதை கூட செய்தார்கள். இந்த பட்டியலில்  எஸ்கிலாஸ், சோபோகிளிஸ் மற்றும் யூரிபிடிஸ் ஆகியோர் இருந்தனர்.

சைத்ரீகன் கவிதைகள்

ஆகாயஒளி தேடி படர்ந்தக்கொடியில்
நட்சத்திரங்கள் முட்களாய் பூக்கத் தொடங்கின
பச்சையாக கனத்த ஈரம் காய்ந்துபோக
எங்கும் வியாபித்திருந்தன
நட்சத்திர முட்கள்

பாவப்பட்டவன்

‘என் சர்வீசிலே நான் எவ்வளவோ பார்த்துட்டேன் சார்…திருச்சில நான் இருந்தபோது இப்படிச் சொல்லிட்டிருந்த ஒரு மானேஜரை, அவர் வயலூருக்கு டூ வீலர்லே போகறச்சே இடை மறிச்சு அடி பின்னி எடுத்துட்டாங்க சார்…அந்த நிகழ்வுக்குப் பிறகு அவர் ஆபீசுக்கே வரலை. அப்டியே லீவைப் போட்டுட்டுப் போனவர்தான். மெட்ராஸ் போயிட்டார் ஒரேயடியா…! இவுங்கல்லாம் ரொம்ப வருஷமா தொடர்ந்து நம்ம ப்ராஜக்ட் ஒர்க் பார்த்திட்டிருக்கிறவங்க சார்…ஆளுகளைக் கூட மாத்த முடியாது…யாரையும் எதுத்துக்கவும் முடியாது. அவுங்களால எந்தப் பிரச்னையும் வராது. ஏன்னா எந்தச் சிக்கல்னாலும் அவுங்களே சமாளிச்சிக்குவாங்க…நாளைக்கு ஆடிட்ல பிரச்னை வந்தாலும் கையைக் காண்பிச்சு விட்டாப் போதும்..

குறுங்கவிதைகள்

விழித்து நோக்கும்
எறும்பின் விழிகளுக்குள்
முறிந்து விழுந்து
தெரிந்திருக்குமோ
நெடுமரம்?

கிரிஸ்ஸோபதேசம்

முதலீடுகளில்  பலவகை  உண்டு.  அந்த காலம் மாதிரி  மனைவியின் தாலியை  அடகு வைத்து, உனது கார்  கொட்டகையில் புத்தொழில்  தொடங்க முடியும். சில சமயம்  அது வெற்றி பெற்று ஒரு கோடி ஈட்டி ஒற்றைக் கொம்பு (unicorn) நிறுவனமாக வளரலாம்.  இல்லாவிடில்  மக்களிடம் முறையிட்டு கூட்ட நிதி சேர்க்கலாம். அடுத்த வழி  தேவதை முதலீட்டார்களை (angel  investors ) முதல் சுற்று முதலீடு கேட்பது.  பெரிய தொகையானால் முதலீட்டார்கள் கூட்டமைப்பை (syndicate )  அணுகலாம். அந்த மாதிரி பல கூட்டமைப்புகள் குழுமத்துக்கு நான்  தலைவன். 

மூன்று கோடு நோட்டு

நிழலையே தலையணையாக
வைத்துத் தூங்கிக்கொண்டிருக்கிறான்
நடைபாதைப் பிச்சைக்காரன்.

ஓ மீ மக்காய் -சிண்டுவின் சிறு குறிப்புகள்

கொழுக்கட்டையின்  கண்கள், விரிந்து சுருங்கி, கொழுக்கட்டை குறும்புக்கு தயார் என்று சொல்லின.  சின்ன இதழ்கள் குவித்து  “ஊஊ அய்” என்று சத்தம் எழுப்பியது. அம்மா சிரித்தாள். கொழுக்கட்டை அம்மாவின் முட்டியைப்  பிடித்து மடியில் ஏறியது. கழுத்தைக் கைகளால் சுற்றியது. கழுத்தை அவள் தோள்களில் சாய்த்தது. அம்மா தட்டிக் கொடுத்தாள். வலது கையால் கொழுக்கட்டையின் கழுத்தில் கை வைத்துத் தூக்கிக் கீழே விட்டு, இடது கையால் கட்டிலின் தலைப் பகுதியில் இருந்த கூடையைத் திறந்து ஒரு அரக்கு நிற சட்டையை எடுத்து வலது தோளில் போட்டுக்கொண்டு, கழுத்தைச் சாய்த்து, அச்சட்டையைப் பிடித்துக்கொண்டு, கொழுக்கட்டையின் ஈரச் சட்டையை இரண்டு கைகளால் கழற்றி எடுத்து

சொல்லாத காதல் எல்லாம்

உயர்ந்து வளர்ந்த மூங்கில் காட்டினிடையே வளரும் களைகள் எளிதாக மறைந்து கொள்வதைப் போன்றதன்று காதல். யாரிடமும் சொல்லாவிட்டாலும் காதலர் மீதான அன்பின் மிகுதியால் வெட்கம் அல்லது பசலை ஆகியவற்றால் எப்படியாவது வெளிப்பட்டுவிடுகிறது. எனக்கு ஏன் உன்மீது இத்தனை காதல் பொங்கி வழிகிறது?

உறுதி

அவர்கள் ஒருவரையொருவர் முடிவும் முதலும் இல்லாது எப்போதும் கேவலப்படுத்திக்கொண்டு எவ்வளவு தீவிரமாக வெறுத்துக்கொண்டு இருந்தார்கள் என்றால், இரண்டு பக்கத்தவர்களும்  அவரவர் பெயர்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று வெகுகாலம் முன்பே முடிவுசெய்து இருந்தார்கள். ஆனால் ஏன் மாற்றிக்கொண்டிருக்கவில்லை என்றால், அவர்கள் முதலில் மாற்றிக்கொள்ளட்டும்  என்று இவர்களும் இவர்கள் முதலில் மாற்றிக்கொள்ளட்டும் என்று அவர்களும் காத்துக்கொண்டிருந்தார்கள். அப்படியாக அந்த இரண்டு  குடும்பத்தாருக்கும் இன்னும் அப்பண்ணன் என்ற பெயரே ஒட்டிக்கொண்டு இருந்தது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவனுக்கு இன்னொரு குடும்பம் என்றால் அசிங்கம், அருவருப்பு.